Sunday, May 08, 2011

உதவியாக இருந்தவை இந்த போதனைகள்.

வாழ்க்கையில் கற்று கொள்ள நிறையவே இருக்கிறது. காலம் காலமாக நல்லவை நம்மிடம் சொல்ல பட்டாலும் தவறுகள்
செய்து பலன்களை அனுபவித்த பின்னரே நாம் திருத்தி கொள்கிறோம். நான் கற்று கொண்ட சில பாடங்களை உங்கள் முன்னர்
வைக்கிறேன். நான் முக்கியமாக கற்று கொண்ட பாடங்கள் விவேகானந்தர் போதனை மற்றும் பைபிள் போதனைகள் இருந்து
கற்றவை

உன்னை போலவே பிறரையும் நேசி
நீ எவ்வாறு அளக்கிறாயோ அவ்வாறே உனக்கு அளக்கபடும்
எதிரிகளை சிநேகிதி. சபிக்கிறவர்களை ஆசிர்வாதம் செய்
நிந்தனை செய்பவர்களுக்கும் துன்பபடுத்தியவர்களுக்கும் பிரார்த்தனை செய்

நீ என்ன வேலை செய்தாலும் உன் உடல் மனம் ஆத்மா முன்றையும் அர்ப்பணித்து செய்.

கடந்த காலத்தில் நானும் நிறைய தவறுகள் செய்து இருக்கிறேன். அவற்றில் இருந்து நான் விடுபட உதவியாக
இருந்தவை இந்த போதனைகள்.

Wednesday, March 03, 2010

ஒவர் ரியாக்ஷன்

ஒரு புத்தம் புதிய டெம்ப்ளேட் பயன் படுத்தி மீண்டும் எழுத வந்துள்ளேன். முந்தா நாள் இரவு முதல் நித்தியானந்தாவ் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவருடைய ஆசிரமங்கள் தாக்க பட்டு உள்ளன. அவருடைய போஸ்டர்கள் கிழிக்கபட்டு , கொளுத்த பட்டு ,செருப்பால் அடிக்க பட்டுள்ளன.
இந்த செய்தி வெளிவந்ததில் இருந்து நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் இருவருக்கிடையே நெருக்கம் இருந்தால் அதனால் என்ன தவறு.தேவையே இல்லாமல் இந்த நிகழ்ச்சி பெரிது படுத்த படுகிறது.

Sunday, April 26, 2009

வெகு நாட்கள் கழித்து மீண்டும்

வெகு நாட்கள் கழித்து மீண்டும் எழுத வந்துள்ளேன். உண்மையில் சொல்ல போனால் சென்னை வந்த பின்னர் நிறைய எழுத முடியும் என்று நினைத்தேன். ஆனால் நடந்தது அதற்கு முற்றிலும் மாறானது.


இந்த இரண்டு கால இடைவெளியில் பதிவர் உலகம் மிகவும் விரிவடைந்துள்ளது. முன்னர் அதிகமாக விவாதிக்கபட்ட குழலி, முத்து தமிழினி, முகமூடி, மாயவரத்தான், கடற்புரத்தான் போன்றவர்கள் எழுதுவதை மிகவுமே குறைத்து விட்டனர். டோண்டு இன்னமும் பீக் ஃபார்மில் இருக்கிறார்.காசியிடமிருந்து தமிழ்மண நிர்வாகம் கை மாறியுள்ளது.


புதியவர்கள் நிறையவே உள்ளனர். பழைய பதிவர்களில் எத்தனை பேருக்கு என்னை நினைவிருக்கும் என்று தெரியவில்லை. புதியவர்களுக்கோ என்னை சுத்தமாக தெரிந்திருக்காது.


என்னுடைய பல பதிவுகளின் அளவை பற்றி பலர் கிண்டலடித்ததுண்டு. சும்மா ரீவைண்டு பண்ணி இரு பதிவுகளின் இணைப்பை கொடுத்துள்ளேன்.

http://bunksparty.blogspot.com/2006/03/blog-post_08.html

http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_09.html

போன சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்மணம் மிக பரபரப்பாக காணப்பட்டது. நானும் அப்போது ரெகுலராக எழுதி கொண்டிருந்தேன். தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழ்நிலையில் மீண்டும் தொடங்குகிறேன். இனிமேல் வாரவிடுமுறையின் போது எழுத திட்டமிட்டுள்ளேன்.

Wednesday, April 15, 2009

தமிழ்மண டெம்ப்ளேட்

சோதனை பதிவு . தமிழ்மணத்தோடு இணைக்க முயற்சி செய்கிறேன்.

Test Link for template changes.

சோதனை பதிவு . தமிழ்மணத்தோடு இணைக்க முயற்சி செய்கிறேன்.

Sunday, September 09, 2007

Datawarehousing professionals required

Hi All,
I do have urgent openings for datawarehousing (Informatica,Webfocus, BO or any other tool) with 2-7 years of experience. Please share the news with as many people as you can. Please send the resume to balachandarg@hotmail.com



Thanks and Regards
Balachandar Ganesan.

Saturday, June 16, 2007

ஜாவா டெவலப்பர்கள் தேவை.

ஜாவா டெவலப்பர்கள் உடனடியாக தேவை( 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு அனுபவம் தேவை. உடனடியாக ஜாயின் பண்ண வேண்டும். சிறந்த சம்பளம் + தற்சமய கம்பேனியுடன் ஏதேனும் உடன்பாடு இருந்தக்ல் அதுவும் சமன் செய்யபடும்.

Please contact me at balachandarg@hotmail.com

Friday, May 18, 2007

சென்னைக்கு குடியேறுகிறேன்.

1995 - முதல் 1998 வரை சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் படித்த பின்னர், பெங்களுர் வந்து விட்டேன். கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் சென்னையில் குடியேறுகிறேன். பெற்றோர்களுடன் இனிமேல் நிறைய நேரம் இருக்க முடியும். அது மட்டும் இல்லாமல் பதிவுகளும் இனிமேல் நிறைய எழுத முடியும்.

வாழ்க்கையில் நமக்காக எவ்வளவோ செய்த பெற்றோர்களுக்கு, நாம் என்ன திருப்பி செய்கிறோம் என்பது ஒவ்வொருவரும் எண்ணி பார்க்க வேண்டிய ஒன்று. நானே மிக தாமதமாக முடிவெடுத்தாகவே கருதுகிறேன். வாழ்க்கையில் எதிர்காலத்தை பற்றி நிறையவே ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். பணம் , வேலை, சொத்து சேர்ப்பது மட்டுமில்லாமல், பெற்றோர்களை பற்றியும் ஒவ்வொருவரும் திட்டமிட வேண்டும்.