என் ப்லொக்கிற்கு வருகை தந்ததற்கு நன்றி. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது நானும் என் நண்பர்களும் நடத்தி வந்த மாத பத்திரிக்கை. இப்பொது வெப் வடிவம் பெற்றுள்ளது.
Saturday, January 21, 2006
புதிய வடிவத்தில் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு.
மாற்றங்கள் மனதிற்கு உற்சாகத்தை தருகின்றன. அதனால் பிரச்சனைகள் வந்தாலும் ஒட்டுமொத்தமாக இலாபமே அடைகிறோம். சிறு குழந்தை பருவத்திலிருந்தே மாற்றங்களை நாம் விரும்புவதில்லை. ஒவ்வொரு முறையும் பள்ளி மாறும் போதும், புதிய ஊர் செல்லும் போதும் சிரமங்கள் இருந்த போதிலும், இறுதியில் அவை வலிமை ஊட்டுகின்றன.
எந்த ஒரு மாற்றத்தையும் தவிர்ப்பதை விட , தானாக முன்வந்து ஏற்று கொள்வது பெரும்பாலும் பயன் தருவதாகவே உள்ளது. மாற்றங்கள் பற்றிய மனிதன் பயங்கள் வெறும் பிரமைகள். ஏனெனில் உங்கள் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நீங்கள் பயந்த நிறைய விஷயங்கள் நடந்தே இருக்காது.
மாற்றங்களை நீங்கள் உருவாக்க ஆரம்பித்தால், அது உங்களை மற்றவர்களை விட பல அடி தூரம் முன்னே நகர்த்தும். எனவே ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுவில் நீங்கள் பல மாறுதல்களை காண்பீர்கள்.
கவிழ்கிறது காங்கிரசு ஆட்சி.
இப்போது தேவகவுடா கட்சியை உடைத்து தனி பெரும்பான்மை பெற முயன்றார்கள். எச்சரிக்கையான தேவகவுடா இப்போது மகனுடன் சேர்ந்து ஒரு நாடகம் ஆடுகிறார். காங்கிரசு அரசாங்கம் கர்நாடாகாவில் கவிழ்ந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாகவே தென் இந்தியாவில் அரசுகள் இவ்வாறு கவிழ்வது என்பது அரிதாகவே நடந்துள்ளது. பொதுவாகவே தென் இந்தியாவில் தேர்தல் முடிவுகள் தெளிவான ஆதரவாக அமையும். இந்த முறை அது நடக்கவில்லை. விளைவு தான் இந்த குழப்பங்கள். தரம்சிங் ஆட்சி மிக மட்டமாகவே இருந்தது என்பதால் , இந்த ஆட்சி கவிழ்வது பற்றி பொது மக்களிடம் ஒரு அதிருப்தியும் இருக்காது. கொஞ்சம் முயற்சி செய்தால் கூட குமாரசாமி இந்த அரசாங்கத்தை விட நல்ல பெயர் எடுத்து விடலாம்.
இதில் மிக பெரிய வேடிக்கை, காங்கிரஸ் தலைவர்கள் தேவகவுடாவை குடும்ப அரசியல் நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுவது. அது சரி எதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது தானே ஜனநாயகம்.
Friday, January 20, 2006
லயோலா கல்லூரி கருத்து கணிப்பு.
ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும், பொதுவாகவே ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்கள் திருப்தி அடைந்துள்ளார்கள் என்றும், விஜயகாந்த் ஜெயலலிதா கூட்டணி அமைந்தால் அது தி.மு.க வை பெரிதும் பாதிக்கும் என்றும் லயோலா கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
இவர்கள் சென்ற தேர்தலின் போது தெரிவித்த கணிப்புகள் தவறாகவே அமைந்தன. போன சட்டமன்ற தேர்தலில் இவர்கள் மட்டுமல்ல , அனைத்து பிரபல பத்திரிக்கைகளும் தவறாகவே கணித்திருந்தன.
முதலில் கருத்து கணிப்பு மூலம் விஜயகாந்த் கட்சியின் செல்வாக்கினை கண்டறிவது மிக கடினமானது. பாரம்பரியமாக கட்சி அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும் வாக்களித்து வருகின்ற மக்களிடம் புதியதாக ஒரு கட்சி எடுபடும் என்பது நடைமுறையில் சாத்தியமாகாத ஒன்று என்பது என் கருத்து.
தி.மு.க கூட்டணி போன முறை எடுபட்டதற்கான காரணங்களில் ஒன்று தொகுதி பங்குபாடு எளிதாகவே முடிந்தது. இந்த முறை அதிலே நிறைய சிக்கல் வரும். பா.ம.க, காங்கிரசு போன்றவை நிறைய எதிர்பார்த்தாலும் கலைஞர் அதை சமாளித்து விடுவார்.ஆனால் ம.தி.மு.க மிகவே முரண்டு பிடிக்கும் என்றே தோன்றுகிறது.இத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று தெரியாத நிலையிலேயே, ம.தி.மு.க பேச்சாளர்கள் மிக கடுமையாக கலைஞரை தாக்குகிறார்கள். கூட்டணியில் இருந்து வெளியேற இவர்கள் காரணங்கள் உருவாக்கிறார்கள் என தோன்றுகிறது.
ம.தி.மு.க வெளியேறினால் அது தி.மு.கவுக்கு உண்டாக்குகிற பிரச்சினைகளை விட அனுகூலமாகவே இருக்கும் என தோன்றுகிறது. ஏனெனில் போனமுறை போல அல்லாமல் இந்த முறை பா.ம.க, காங்கிரசு, கம்யூனிஸ்ட் தி.மு.க அணியில் உள்ளன.எனவே தி.மு.க , வைகோவை விட்டு விட்டால் சுமை குறையும், பலம் கூடும் என்றே தோன்றுகிறது.
Thursday, January 19, 2006
மீண்டும் அகதிகள் வரவு.
1984 -இல் இலங்கை தமிழர்களுக்கு இருந்த ஆதரவு மிக வலிமையானது. தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர்களுக்காக போரட்டமும் நிதி உதவி திரட்டுவதும் நடை பெற்றன.ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. அகதிகள் உயிர் மீது உள்ள பயத்தினால் இங்கே ஒடி வந்துள்ளனர். ராஜீவ் படுகொலைக்கு பின்னர் இங்கே ஆர்வம் குறைந்த நிலையில் இவர்களுக்கு என்ன உதவி கிடைக்கும் என்று தெரியவில்லை.
இரு இனங்களுக்கு இடையே வருகின்ற வெறுப்பு காலம் காலமாக இரு தரப்பு மக்களாலும் வளர்க்க பட்டு வருகிறது. இலங்கையில் இனிமேல் அமைதி என்பது வெறும் கனவாக இருந்து விடுமா?
மறுமுறை ஒரு முறை காண்போமா? என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு பாடலின் வரி நெஞ்சத்தில் தாங்க முடியாத ஒரு வலியை உண்டு பண்ணுகிறது. தாங்க முடியாத துயரம் என்பது பிரிவானால் வரும் வலி என்று ஒரு கவிஞன் சொன்னது நினைவுக்கு வருகிறது.
இங்கே நான் பார்க்கும் இலங்கை தமிழர்களிடம் அந்த வேதனை கண்களில் தெரிகிறது.
தமிழ்மண அனுபவங்கள்.
1.என்னுடைய பதிவுகளை பற்றிய மற்றவர்கள் கருத்து சொல்வது , பின்னோட்டம் இடுவது கலந்துரையாடலுக்கு இணையாக உள்ளது.
2. பதிவுகளின் அளவு பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ஜோ கடுமையாக எதிர்த்தாலும் அதை பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். பதிவு பல பக்கங்கள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் ஜோ சொல்லி காட்டியது இது இல்லை. அதை நான் நன்றாக புரிந்து கொண்டேன். ஜோ சுருக்கமாக இருந்தாலும் சரக்கு இருக்க வேண்டும் என்று கூறுவது நியாயமே. பதிவுகள் பல வடிவங்களில் இருக்கலாம் என்பது அவர் உணர வேண்டும்.
3. எதிர்பாராதது போலி டோண்டுவின் அறிமுகம். அவர் எனது ப்லாகில் பின்னோட்டம் இட்டது எனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.
4. கசப்பானது இணையத்தில் நடக்கும் ஜாதி சண்டை. ஜாதியை சமுகம் நீர் ஊற்றி வளர்க்கிறது. அதனால் தான் அதன் முள்கள் இணையம் வரை தொடர்கின்றன.
5. மிக பெரிய மகிழ்ச்சி : பல்வேறு திசைகளிலும் பதிவாளர்கள் தமிழை எடுத்து செல்வது. சினிமா, பத்திரிக்கை, மீடியா என்று அனைவரும் தமிழை சீரழிக்கும் போது, பதிவாளர்கள் தமிழ் காக்க வந்த் இரட்சகர்களகாவே தெரிகிறார்கள்.
Wednesday, January 18, 2006
போலி டோண்டு அவர்களுக்கு ஒரு கடிதம்.
மிக முக்கியமாக நீங்கள் யாரென்ற உண்மையை நான் வெளியிடும் போது தமிழ்மணம் அதிர்ச்சி அடையும்.
Tuesday, January 17, 2006
டோண்டு ராகவன் மற்றும் என்னார் அவர்களுக்கு ஒரு கடிதம்.
http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_113665559232878088.html
அதற்கு டோன்டு என்னார் அவர்களுடைய பதில்கள்.
http://www.blogger.com/comment.g?blogID=9191030&postID=113665559232878088
தனிப்பட்ட முறையில் நான் டோன்டு அவர்கள் மீது மிக்க மரியாதை வைத்துள்ளேன். சிறந்த வலைபதிவர்கள் என்றைய என்னுடைய பதிவில் அவருடைய பேரும் உண்டு.
இப்போது குலகல்வி திட்டம் பற்றி என்னுடைய பதில்.
உண்மையில் பிள்ளைகள் அதுவும் ஏழை பிள்ளைகள்,பல ஜாதியிலிருந்தும் உள்ள ஏழை பிள்ளைகள் பள்ளி கூடம் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.
அதனில் ஒன்று தான் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது. இதைதான் காமராஜர் செய்தார்.(மதிய உணவு திட்டம்). பின்னர் எம்.ஜி.ஆர் விரிவாக்கினார்(சத்துணவு திட்டம்). இந்த திட்டங்கள் பெரிய வெற்றி பெற்றன என்பதும் நிறைய பிள்ளைகள் பயன்பெற்றனர் என்பதும் வரலாறு.
இது போன்று ஒன்றும் செய்யாமல் எதற்கு ஜாதி அடிப்படையில் தொழில் கல்வி கொண்டு வர வேண்டும்? இதில் என்னார் வேறு சொல்கிறார். டாக்டர் பையன் டாக்டராகிறார், வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது என்று எடுத்துகாட்டு வேறு. என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து. டாக்டர் பையன் டாக்டராக இருப்பது வெற்றியே... வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது வெற்றியே.
ஆனால் செருப்பு தைப்பவர் பையன் செருப்பு தைப்பனாகவே இருப்பது வெற்றியா?.
மேலும் டாக்டர் பையன் டாக்டராக வருவது குல தொழிலாக அல்ல. ஏனெனில் எல்லா ஜாதியிலும் டாக்டர்கள் இருக்கிறார்கள். அதை குடும்பத் தொழில் என்று கூறுங்கள்.
ஆக்க பூர்வமான எடுத்த காமராஜரையோ, எம்.ஜி.ஆரையோ யாரும் குறை கூறி எழுதுவதில்லை என்றும் இராஜாஜி இதை செய்திருந்தால் அவரையும் சமுகம் பாராட்டியிருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.
வெள்ளை அறிக்கை.
எனக்கு தெரிந்த வரை யாரும் வெள்ளை அறிக்கை விடவில்லை. இப்போது சில சந்தேகங்கள்.
1. வெள்ளை அறிக்கை - உள்ளதை உள்ளபடி சொல்வது... அப்படி என்றால் மீதி அறிக்கை இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறதே?
2. எதிர்கட்சியாக இருக்கும் போது கேட்பவர்கள், அதை ஆளுங்கட்சியாக இருக்கும் போது விட வேண்டியது தானே!!!
கவுன் பனேகா குரோர்பதி...
போட்டியாளர்கள் எஸ்.ம்.எஸ் அனுப்ப ஒரு முறை 6.50 ரூபாய் கட்ட வேண்டியுள்ளது.இதை பற்றி ஜூனியர் விகடன் முழு விப்ரம் வெளியிட்டுள்ளது.
யாராவார் கோடிஸ்வரன். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள்.
மோதல் முற்றுகிறது....
1. பாராளுமன்றம் நீதி மன்றத்தினை அலட்சியம் செய்தால்(அவர்களுக்கு அதிகாரம் இருப்பினும்) அது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எந்த காரணத்தை கொண்டும் நீதி மன்றம் அலட்சிய படுத்தபா கூடாது.
2. நீதிமன்றத்தில் விளக்கம் கொடுப்பதை அல்லது தங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என்று எடுத்து சொல்வதை பாராளுமன்றம் கடமையாக கருத வேண்டும். கொளரவ குறைச்சலாக எடுக்க கூடாது.
வைகோ வின் சந்தேகங்கள்.
1. கருணாநிதி இந்த முறை எத்தனை இடம் கொடுப்பார்?
2. அதில் எத்தனை இடங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்?
3. கூட்டணி மாறி ஜெயலலிதாவிடம் போனால் நிறைய கிடைக்கும். ஆனால் வெற்றி வாய்ப்பு இருக்குமா?
திட்டங்கள்.
1. கட்சிகாரனை விட்டு கருணாநிதியை திட்டி அ.தி.மு.க, தி.மு.க இரண்டு பேருக்கும் சிக்னல் கொடுக்கலாம் -சீட் நிறைய வேணும் இல்லாவிட்டா ஒடிருவேன்.2. பல்ல கடிச்சுகிட்டு கருணாநிதியொடு இருந்திரலாம். பின்னாடி தி.மு.க தொண்டர்கள் பயன்படுவார்கள்.
பா.ஜ.க இந்த தேர்தலில் என்ன ஆகும்.
2. இந்த முறை இவர்களுக்கு ஒரு சில தொகுதிகளிலாவது டெபாசிட் கிடைக்குமா?
3. இந்த தேர்தலின் சிறந்த "எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்" அவார்டு பா.ஜ.க விற்கே.
தி.மு.க , விஜயகாந்த் மோதல் காரணம் ஏன்?
2. விஜயகாந்த் மண்டபம் இடிபட போகிறது. தி.மு.க நினைத்திருந்தால் தவிர்த்திருந்திருக்கலாம். ஆனால் அதை தி.மு.க. செய்யவில்லை.
இதோ ஆரம்ப்பித்து விட்டது சண்டை.
இனிமேல் கீ௯ழ்கண்ட விஷயங்கள் நடக்கும்.
1.சன் TV மெல்ல விஜயகாந்த் திரைபடங்களை மட்டம் தட்டும்.(ஆனால் படம் ஒடி விட்டால் உடனே உரிமைகள் வாங்கி திரையிடும்)2.விஜயகாந்தை திட்டி தி.மு.க பேச்சாளர்கள் அறிக்கை விடுவார்கள்.3.விஜயகாந்த் MPக்களை மட்டுமே திட்டுவார். மாநில அளவினால விஷயங்களுக்கு மாநில அரசு முதற் பொறுப்பு என்பது அவருக்கு மறந்து விடும்.
நல்ல தமிழ் எடிட்டர் ஏது?
தமிழில் நல்ல எடிட்டர்கள் உள்ளனவா?. ஏதெனும் ஒப்பன் சோர்ஸ் எடிட்டர் இருக்கிறதா?தகவல் கூறுங்கள்..
எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்!!!
தமிழ்நாடு தியேட்டர் இல்லை. வாழ்க்கை என்பது சினிமா இல்லை, தமிழர்கள் அனைவரும் அவருடைய இரசிகர்கள் என்பதை விஜயகாந்த் அவர்களுக்கு காலம் உணர்த்தும்.
அறிவு ஜீவிகளின் அராஜகம்.
இலக்கிய கும்பல் என்று சொல்லி கொண்டு திரியும் இவர்களின் நூல்களை படிப்பவர்கள் 4 ஆட்டோவில் ஏற்றி விடலாம். எண்ணிக்கையை மட்டும் நான் கணக்கில் எடுக்க போவதில்லை. ஆனால் தரம்...
எப்போதும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக தாக்கி கொண்டும் , மாற்றி மாற்றி அறிக்கை விட்டு கொண்டும் .. அரசியல் மேடைகள் போலவே இவர்கள் காட்சி அளிக்கிறார்கள்.
இதையெல்லாம் விட மற்ற ஊடகங்களயும் , வடிவங்களையும் இவர்கள் தாக்குவது முக்கியமாக இவர்கள் அவற்றை விட என்ன உயர்வாக சாதித்து விட்டார்கள்.
சினிமாவிற்கு வசனம் எழுதுவது பற்றி ஏகப்பட்ட ஏளனம் வேறு. இது உண்மையில் அறிவி ஜீவி அராஜகம். சினிமாவுக்கு எழுதுபவர்கள் எழுத்து வியாபாரிகளாம்... இவர்கள் மட்டும் இலவசமாகவா எழுதுகிறார்கள்.
கற்பனை வளவும், இயற்கை தன்மையும் இருக்கின்ற எந்த வடிவவும் நல்ல இலக்கியமே..
தி.க. வீரமணி யிடம் இருக்கும் பதவிகள்.
President
Dravidar Kazhagam (A Leading Social Revolutionary Movement)
Periyar Maniammai Institute of Science and Technology- A Public Charitable Trust. Secretary
The Periyar Self-Respect Propaganda Institution (Periyar Trust - A Public Charitable Society, registered in 1952), Chennai.Patron
Tamil Nadu Rationalist Forum. Executive Director
International Institute of Periyar’s Philosophy and Ideology.Founder and Chairperson
Periyar Maniammai Free Clinics at Chennai, Vallam (Thanjavur), Salem, Trichy and Sholinganallur.Founder Member
Periyar Organization for Women Empowerment and Renaissance- POWER (a Public Charitable Trust)Founder
Founder Member and a Trustee of the Lawyers’ Forum for Social Justice. (Regd. Office, New Delhi)
Periyar Centenary Polytechnic College, Vallam - Thanjavur.
Periyar College of Pharmaceutical Sciences for Girls - Trichy.
Periyar I.A.S. & I.P.S. Coaching Centre, Chennai.
Periyar Maniammai College of Technology for Women, Vallam - Thanjavur (The first Engineering College exclusively for Women in the World).
Periyar Community College of Continuing Education, Vallam - Thanjavur.
Periyar Centenary Memorial Matriculation Higher Secondary School, Trichy.
Periyar Computer Research Academy, Chennai.
Periyar College of Advanced Computer Education, Trichy.
Periyar Centre, New Delhi.
Periyar Organisation for Bio-Technic and Eco-System, Thanjavur.
Periyar Renewable Energy Training Institute.
Periyar Centre for Energy and Environment Management.
Periyarism Seminary.
Innovative Maestro Periyar Rural Entrepreneur Service Scheme - IMPRESS.
Periyar Centre for Cancer Detection and Prevention.
Periyar Club of Organ Donors.
MEMBER
International Humanist and Ethical Union.
British Humanist Society, England.
மேலும் விப்ரஙகளுக்கு
http://periyar.org/html/dk_veeramani_eng.asp
தமிழ்மணத்தின் வெற்றி.
1. தொடரபடுகிற எந்த ஒரு முயற்சியும் பயனை கொடுத்தே தீரும்.
2. மேலும் மேலும் சிறப்பான அம்சங்கள் ஒரு முயற்சியோடு இணையும் போது அது வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
பத்திரிக்கைகள், திரைபடம்,தொலைகாட்சி என்று அனைவராலும் அழிக்க படும் தமிழ் உண்மையில் தமிழ் ப்லொகுகளில் நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறது. சின்ன சின்னதாக ஆங்காங்கே காணபடும் சிறு குறைபாடுகளை மறந்து விடலாம்.
காசி தன்னுடைய வாழ்நாள் சாதனியாக தமிழ்மணத்தை கருதலாம். புது வடிவம் பெற்று மேலும் சிறப்பாக இருக்கும் தமிழ்மணத்திற்கும் , காசியின் தமிழ் மனதிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ்மணத்தின் வெற்றி - காசியின் தமிழ் மனதின் வெற்றி...
குமுதம் விகடன் தாழ்ந்தது ஏன்?
1. தொடர்கதைகள் காணமல் போனது ஏன்?. நல்ல கதைகள் வந்தால் மக்கள் கண்டிப்பாக படிப்பார்கள்.2. ஒரு சில பக்கங்களே இரண்டு பத்திரிக்கைகளிலும் தேறுகின்றன.
உண்மையில் சொல்ல போனால் இப்போது நான் தமிழ்மண ப்லொகுகள் படிப்பதை நிறையவே விரும்ப்புகிறேன். தமிழ் பத்திரிக்கைகள் சரக்கு காலியாகி விட்டதா?
சோ ராமசாமியின் கருத்துக்கள்...
ஆனால் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா ஒரளவு நன்றாகவே ஆட்சி தர முயன்றார். அவர் தொடரவேண்டும் என்பது சோவின் ஆசை. அது அவரை தடுமாற வைக்கிறது.
தொடர்ச்சியாக இரண்டு வாய்ப்பு இரண்டு பேரில் யாருக்கு கொடுத்தாலும் அது அபாயகரமானதாகவே முடியும். மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் ஜெயலலிதா தனது சுயரூபத்தை காட்டுவார்.
5 ஆண்டுக்கு ஒருமுறை கேரளா ஸ்டைலில் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
தமிழில் படித்து மகிழ நல்ல வெப்சைட்டுகள்.
உங்களுக்கு தெரிந்த வெப்சைட் முக்வரி கூறுங்கள். இந்த பதிவினை நான் தொடர்ந்து புதிப்பித்து கொண்டு இருப்பேன்.
செய்திகள்.
www.thatstamil.com
www.dinamalar.com
பத்திரிக்கைகள்
www.vikatan.com
www.kumudam.com
கட்சிகள்
www.thedmk.org
சினிமா
www.cinesouth.com
www.tamilcinema.com
குமுதத்தில் சிவாஜியின் கதை....
இறுதியில் ரஜினி சம்பாதித்த அனைத்தையும் மக்களுக்கு எழுதிவைத்து விட்டு ஒரு ரூபாய் மட்டுமே எடுத்து கொள்கிறார். இது தான் கதை என்று குமுதம் சொல்கிறது.
நான் எழுதிய கதை எவ்வளவோ மேல் என்றே எனக்கு தோன்றுகிறது.
தவமாய் தவமிருந்து , ஆட்டோகிராப் போன்ற படங்களை வெற்றி கொள்ள செய்த மக்கள் இதையும் ஒட வைப்பார்கள்.
ட்ராவிடும் சேவாகும் தொடர்ந்து துவக்க ஆட்டம் ஆடலாமா?
நல்ல துவக்க ஆட்டகாரர்கள் கிடைக்காத பட்சத்தில் திராவிட் ஆட்டத்தை துவங்கினால் என்ன?. தொடர்ச்சியாக ஆட்டத்தை துவக்கினால் அவர் அதில் வெற்றி பெறுவார் என்றே நான் கருதுகிறேன். இது நம்முடைய அணிக்கும் மேலும் ஒரு பேட்ஸ்மன் அல்லது பந்து வீச்சாளரை கொண்டு வர உதவியாக இருக்கும். எனவே இது தொடரவேண்டும்.
துவக்க ஆட்டகாரராக களமிறங்கிய திராவிடுக்கு ஜே...
பதவி நீக்கம் செய்தது சரியா?
1. இதையடுத்து , சபாநாயகர் பதிலளிக்க மறுத்தால் அது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும்.2. பாராளுமன்ற முடிவை விசாரிக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு இருக்கிறாதா?
அறிந்தவர்கள் எழுதினால் உபயோகமாக இருக்கும். பதவி நீக்கம் செய்யபட்ட போது அதை ஆதரித்த மீடியா இப்போதும் அதனை வலியுறுத்தி எழுத வேண்டும். சிறிய தண்டனை என்ற போதிலும் இது ஒருவ் வித பயத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
Monday, January 16, 2006
பரத் - ப.சிதம்பரம் கூட்டணி.
தி.மு.க. , அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றாக முன்றாவது அணியை உருவாக்க சிதம்பரம் வெகுகாலாமாக முயன்று வருவது அனைவரும் அறிந்ததே.
ஒரு பக்கம் அரசியல் மாற்றத்தை பரத் விரும்பினாலும், தனது சுதந்திரத்தையோ அல்லது இரசிகர்களின் உழைப்பையோ இழக்க பரத் விரும்ப்பவில்லை என்றே அவருடன் பாய்சு படத்தில் இணைந்து நடித்த மணிகண்டன் கூறுகிறார்.
பரத் வெகு விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று சிதம்பரமும் , பரத்தின் இரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
0+15 < 25 கணக்கு சரியா?
3. ஆக மொத்தமாக தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் இணைந்து பெற்ற தொகுதிகள் 15. மற்ற கட்சிகள் வசம் உள்ள் தொகுதிகள் 25. இது தான் இந்த கட்சிகளின் பலமா?.கண்டிப்பாக இல்லை.
4. பெரும்பான்மையானவர்கள் நினைப்பே ஜனநாயகம் என்றால் இந்த நிலை உண்மையான ஜனநாயகமா?. இங்கே சிறு கட்சிகள் அல்லவா கூடுதல் பலம் பெற்றுள்ளனவே?
அடிப்படையிலேயே எங்கோ தவறு நடந்து விட்டது. அதை கண்டுபிடிக்கும் வழி சொல்லுங்கள். இந்த குளறுபாடுகளின் காரணமாகத்தான் இராமதாசு போன்றவர்களை, வைகோ போன்றவர்களை எல்லாம் நாம் சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியல் வோட்டு வேட்டையிலுருந்து மாறி உண்மையான ஆதரவை பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
(ஒரு சிறு குறிப்பு).உண்மையில் தி.மு.க , அ.தி.மு.க இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு(20+20) செய்து கொண்டால் , 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். அது இரண்டு கட்சிகளுக்கும் இப்போது இருக்கிற பாராளுமன்ற தொகுதிகளை விட அதிகமே...
இந்த இரண்டு கட்சிகளும் உடன்பட்டால், எளிதாகவே தமிழக அரசியல் அசிங்கங்களான ம.தி.மு.க,பா.ம.க, காங்கிரசு அனைத்தையும் காலி பண்ணிவிடும்.
சுதந்திர நாட்டின் அடிமை மக்கள்
1.தான் சார்ந்த சாதி அமைப்புகளை வலிமை படுத்தி அரசியலில் நுழைந்தவர்கள் இருவரும்.
2. அரசியலில் நுழைந்த பொழுது யாருமே அறிவிக்காத சத்தியங்களை ராமதாசு செய்தார். அதை முற்றிலுமாக கடைபிடித்தார். உண்மையிலேயே பொது வாழ்வில், பா.ம.க. கட்சி ஒரு வித்தியாசமாக காட்சி அளித்தது. அதே போன்று, திருமா வளவன் மாவட்டம் தோறும் தாழ்த்த பட்ட மக்களுக்காக போரட்டம் நடத்தினார். அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கின்ற சலுகைகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தினார். அவர்கள் சாணி அள்ளுவதற்கும் மலம் அள்ளுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்கள் மனித உரிமைகள் பற்றியும் கல்வி அறிவு பற்றியும் அறிந்து கொள்ள வைத்தார். இந்த மாதிரி நல்ல நடைமுறைகளை பயன்படுத்திய போது அவர்கள் வெற்றி பெறவில்லை.
3.இந்த இரண்டு பேரையும் குறை கூறுகிற மக்கள் அனைவரும் கவனிக்காத ஒன்று. இவர்கள் இருவரும் கொள்கையாவது கொளுக்கட்டையாவது என்று அனைத்தையும் புறக்கணித்து விட்டு, சுயநலமாக செயல் பட ஆரம்பித்த பின்னர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.ராமதாசு அனைத்து சத்தியங்களையும் தாரை வார்த்தார். இன்று பா.ம.க. ஒரு தவிர்க்க முடியாத( தவிர்க்க பட வேண்டிய கட்சியாக இருந்தாலும்) கட்சியாக மாறிவிட்டது. உருப்படியாக எத்தனையோ காரியங்கள் திருமா செய்த போது வராத கூட்டம் , இன்று அவர் தமிழக பெண்கள் கற்பை குஷ்பூ வீட்டு காக்கா தூக்கி விட்டு சென்று விட்டது என்று குரல் கொடுக்கிறார். தனக்கு எந்த பிரயோஜனமும் கிடைக்காது என்பதை உணராமல் இந்த கூட்டம் விளக்குமாறு எடுத்து கொண்டு ஒடுகிறது.
அரசியல் வாதிகளை மற்றும் குறை சொல்லி பயனில்லை. மக்கள் தலைவனுக்கு அடிமையாக இருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த கூட்டம் சுயமாக சிந்திக்க வக்கில்லாமல் அடிமையாக வளரும் கூட்டம். அதனால் தான் காலில் விழுவது, பச்சை குத்துவது, போஸ்டர் அடிப்பது என்று தமிழக அரசியல் சாக்கடை ஆகிவிட்டது. அ.தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதா என்று பெயர் சொல்ல முடியாது. தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதி என்று பெயர் சொல்ல முடியாது.அ.தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதியை ஒற்றை கண்ணன் என்று சொல்லலாம். தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதாவை இதை காட்டிலும் மிக கேவலமாக விமர்சிக்கலாம்.ஜெயலலிதா கட்சியில் இருப்பவர்களை அடிமைகளை விட கேவலமாக நடத்துவார். கருணாநிதி தன் வாரிசுகளுக்கு இணையாக யாரையும் வளர விட மாட்டார். இது இப்போது ராமதாசுக்கும் பொறுந்தும்.ஆனால் இதையெல்லாம் உணராத இந்தகூட்டம் இவர்கள் என்ன சொன்னாலும் தலையாட்டி கொண்டிருக்கிறது.இவர்களோடு கூத்தாடி பயல்களுக்கு போஸ்டர் அடிப்பவர்களையும் சேர்த்து கொள்ளலாம். வாய்ப்பு கிடைத்தால் இந்த கூத்தாடி பயல்கள் அரசியல் வாதிகளை விட மோசமாக ஆட்சி செய்வார்கள்.
தனக்கு என்று ஒரு சுய புத்தியில்லாமல் கட்சி தலைவன் என்ன செய்தாலும் அதை குருட்டு தனமாக பின் பற்றும் மக்கள், சுதந்திரமான நாட்டினிலும் அடிமைகளாகவே இருப்பார்கள்.
இப்படி அடிமையாக இருப்பது விசுவாசமகவே கருத படுகிறது. நான் தான் பெரிய அடிமை, என்னை காட்டிலும் பெரிய அடிமை யாருமில்லை என்று காட்ட ஒவ்வொரு கட்சியிலும் ஒரு போராட்டமே நடைபெறுகிறது. இந்த அடிமை புத்தி சுதந்திரம் வாங்கியதை அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது.
என்ன பிட்சோ, என்ன மாட்சோ?.
பதவியை இராஜினாமா செய்வது எப்படி.
இந்த முறை அவர் தாவாத குறையை அவர் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றியிறுக்கிறார்கள். இன்னும் 4 அல்லது 6 மாதங்களே இருக்கும் போது அவர்கள் தாவியிருக்கிறார்கள். என்ன காரணம் ?. அதற்கா பஞ்சம்? தாவுதல் ஸ்பெஷலிஷ்ட் கட்சியில் இருந்த அவர்களுக்கு தாவுவதற்கு காரணம் கண்டு பிடிக்க முடியாதா?
காரணம் கூறுகிறார்கள் பாருங்கள். பா.ம.க வில் தாழ்த்த பட்டவர்களுக்கு முக்கியத்துவம் இல்லையாம். அவர்கள் புறக்கணிக்க படுகிறார்களாம். அப்படி பார்த்தால் இவர்களுக்கு இந்த பதவி எப்படி கிடைத்தது? புறக்கணிப்பது என்றால் பதவி கொடுக்காமல் அல்லவா புறக்கணிக்கத்திறுக்க வேண்டும். ஏன் சட்ட மன்ற உறுப்பினர் பதவி கொடுத்து புறக்கணிக்க வேன்டும்?இதற்கு மேல் இந்த காரணத்தை ஆராய்வது வீண்.
பதவி இன்னும் கொஞ்ச நாளில் அதுவாகவே காலி ஆகி விடும் என்ற நிலையில் இவர்கள் கட்சி தாவியிருக்கிறார்கள். இராசினாமா செய்து விட்டோம் என்று பெருமை வேறு.
இவர்கள் இராஜினாமா செய்யவிட்டால் பதவி கட்சி தாவல் தடை சட்ட படி காலியாகி விடும். அது தான் இவர்கள் இராஜினமா செய்ததற்கு காரணம்.
பதவியை எப்படி இராஜினாமா செய்ய வேண்டும் என்று இவர்கள் எடுத்து காட்டியிருக்கிறார்கள்...
இராமதாசு சத்தியத்தை கடைப்பிடிப்பது எப்படி என்று காட்டினார். மகனுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை சத்தியத்தை கடைபிடித்தவர் , வாய்ப்பு வந்தவுடன் சத்தியத்தை தாரைவார்த்தார். அது போல இவர்கள் பதவியை இராஜினாமா செய்வது எப்படி என்று காட்டியிருக்கிறார்கள்.
இன்னமும் தேர்தல் அறிவிப்பே வரவில்லை. அதற்குள் இப்படி... இன்னும் என்ன காட்சிகள் காத்திருக்கின்றனவோ?
யார் கண்டார், இராமதாசு கூட தாவ மாட்டார் என்று சொல்ல முடியாது(!!!!!!!!!)
தமிழின் சிறந்த பதிவாளர்கள்.
1.சிரிகாந் மீனாக்ஷி.
2.முகமூடி.
3.ராகவன் ஸ்ரினிவாசன்
4. குழலி.
5. கொசப் பேட்டை குப்புசாமி.
முறையே அவர்களுடைய பதிவுகளின் கவரி.
http://kurangu.blogspot.com/
http://www.mugamoodi.blogspot.com/
http://dondu.blogspot.com/
http://kuzhali.blogspot.com/
http://kosappettai.blogspot.com/
Sunday, January 15, 2006
கார்த்திக் தலைவராகிறார்.
அ.தி.மு.க வோடு கூட்டணி வைத்து சட்ட மன்ற உறுப்பினர் ஆகி விடலாம் என்ற கணக்கு போட்டிறுக்கிறார் கார்த்திக். எல்லா படமும் பொட்டியில் கிடப்பதினால் வேறு வழியில்லாமல் மக்கள் சேவை.
முந்தி, முந்தி விநாயகரே, முப்பத்து முக்கோடி தேவர்களே... என்பார்கள்.கார்த்திக் நம்புவது விநாயகரை இல்லை, தேவர்களை ....
பாரதியார் புகழ பட வேண்டிய கவிஞனா?
2.தன் மனைவியை அவமான பட விட்டுவிட்டு பெண் உரிமையை பற்றி பேசுவது அதைக்காட்டிலும் பெரிய கூத்து.
பாரதி ஒரு அந்த கால சிதம்பரத்தில் ஒரு அப்புசாமி. இன்றைய கவிஞர்கள் பலர் அவரை தாண்டி வெகு தூரம் சென்று விட்டார்கள்.
குட்டி ரேவதி என்ற பெயரில் என்ன இருக்கிறது?.
உண்மையில் அப்படி கண்டணம் தெரிவிக்கும் வண்ணம் அந்த வசனம் அத்து மீறலாக கூட காட்சி அளிக்கவில்லை. இதில் மிக பெரிய ஆச்சரியம்,உள்நோக்கம் உண்டு என்று தெளிவாக தெரியாத நிலையிலேயே இதற்கு ஒரு கண்டண கூட்டம் வேறு.
அத்து மீறியவர் ராமகிருஷ்ணன் இல்லை. இல்லாத ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கும் இந்த பெண் கவிஞர்களும், அதை ஆதரிக்கும் அனைவரும். ராமகிரிஷ்ணன் பற்றி கீழ்தரமாக இவர்கள் இமர்சிப்பதனால் அவருடைய புகழுக்கு இழுக்கு வரபோவதில்லை.
அப்படியே இவர்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் இராமகிருஷ்ணன் இவ்வாறு குட்டி ரேவதியை தாக்கி எழுத வேண்டிய நோக்கம்(motive) என்ன?. அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்சினை?. உண்மையில் அவ்வாறு ஏதுமில்லை.
இராமகிருஷ்ணனை தாக்குபவர்கள் இதற்கு விளக்கம் அளிக்கட்டும். நன்றாக எழுத முடியாவிட்டாலும் பரவாயில்லை, நல்ல எழுத்தாளனை தொந்தரவு செய்யாமல் இருங்கள்.
பிரச்சினை குட்டி ரேவதி என்ற வசனத்தில் இல்லை. அந்த பெண் கவிஞரிடத்தில் உள்ளது.
அடுத்த ரஜினி யார்?.

கண்டிப்பாக விஜய் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் சொல்ல போனால், விஜய் ரஜினியை விட ஒரு படி மேலே(கீழே) செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. விஜயின் படங்கள் வரவர ரஜினியின் படங்களை விட படு மட்டமாக இருக்கின்றன. ஆனாலும் படு ஒட்டம் ஒடுகின்றன. ஏன் என்றே புரியவில்லை.
சமீபமாக, மன்மோகன் சிங் தபால்தலை வெளியிட , விஜய அதை பெற்று கொண்டார். இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க படும் அளவுக்கு விஜய் என்ன செய்திறுக்கிறார். தமிழில் எவ்வளவோ எழுத்தாளர்கள், கவிஞர்கள், தேசிய விருது பெற்றவர்கள் , சாதனையாளர்கள், அறிவாளிகள் இருக்கிறார்கள். சினிமாதுறையிலும், பலர் உலக சாதனை புரிந்தவர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கெல்லாம் கிடைக்காத பெருமை இவருக்கு ஏன்?
தயாநிதி மாறனும், விஜயின் தந்தையும் நெருங்கி வருவதை பார்க்கும் போது, இன்னும் 10 வருஷத்தில் விஜய், ஒரு மைக் பிடித்து கொண்டு, யாருக்கு ஒட்டு போடவேண்டும் என்று பேட்டியளிப்பார். அதை கேட்டு கொண்டு இரசிகர்களும் வேலைசெய்வார்கள்.
எல்லாம் தமிழனின் தலையெழுத்து... ரஜினி மாதிரி ஒரு குப்பை போவதற்குள் அடுத்த குப்பை வருவது...
ஜெயலலிதா கனவு காண்கிறார்.
கலைஞர் கனவு காண்கிறார்
பாசக்கிளிகள் படம் ஆதி,பரமசிவன் ஆகிய படங்களை விட அதிக பரபரப்புடன் ஒடுகிறது. சந்திரமுகி பட ரெக்கார்டை ஒரே வாரத்தில் முறியடிக்கிறது. கூட்டணியிலிருந்து மற்ற கட்சிகள் , தி.மு.க. எத்தனை இடங்கள் கொடுத்தாலும் மறுபேச்சு பேசாமல் வாங்கி கொள்கின்றன. தயாநிதிமாறனை அகில இந்திய அளவில் அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. பில்கேட்ஸ் கலைஞரின் கொள்கைகளால் கவர பட்டு தி.மு.க. வில் உறுப்பினராக சேருகிறார். தேர்தலில் தி.மு.க. 150 இடங்களில் போட்டியிட்டு 150 லில் வெற்றி பெறுகின்றது.ஆனால் கூட்டணி கட்சிகள் அனைத்தும் மீதி இடங்களில் தோல்வி அடைகின்றன. ஆனால் அ.தி.மு.க வும் அனைத்து இடங்களையும் தோல்வி அடைகிறது. 84 சுயேட்சைகள் வெற்றி பெறுகிறார்கள். அவர்களும் தி.மு.க. வில் இணைகிறார்கள்.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார். அதை தொடர்ந்து அனைத்து தமிழக கட்சிகளும் கலைக்க படுகின்றன. அனைத்து கட்சிதலைவர்களும் தி.மு.க. வில் இணைகிறார்கள்.
தினமலரில் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு.
http://www.dinamalar.com/2005dec01/flash.asp
அனைவரின் ஆதரவுக்கு நன்றி.
Friday, January 13, 2006
2006 தேர்தல் எப்படி இருக்கும்?.
2. தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
3. கலைஞர் மீண்டும் ஒரு முறை முதல்வராவார். அல்லது அன்பழகனுக்கு அந்த வாய்ப்பு அளிக்க படும்.
4. ராமதாஸ் மற்றும் வைகோ கூட்டணியிலிருந்து பிரிய மாட்டார்கள்.
5. திராவிட கழங்களின் பிடியிலிருந்து மெல்ல தமிழகம் நழுவுகின்றது.
6. அரசு ஊழியர்கள் இந்த தேர்தலின் நிர்ணய சக்திகளாக இருப்பர்.
7. சிறுபான்மையினரின் ஒட்டு கருணாநிதியின் கனவை நனவாக்கி விடுவார்கள்.
8. சலுகைகள் வாரி இறைக்க படுவதாக தோன்றினாலும் அவை மக்களை ரீச் பண்ணவில்லை.
9. வைகோ , ம.தி.மு.க இரண்டையும் இந்த தேர்தல் அழித்து விடும்.
10. பா,ம.க வுக்கும் இந்த தேர்தல் ஏமாற்றத்தையே தரும்.
ஆதி மற்றும் பரமசிவன்....
2. விஜய் அடுத்த ரஜினியாக உருவாகிறார். அதில் சந்தேகமே இல்லை.
3. அஜித்தின் இந்த படமும் தோல்வியாகவே அமையும். அது அந்த படத்தின் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.
4. சரவணன் சிம்புவுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.
5. புதுப்பேட்டை செல்வராகவனை ஒரு படி மேலே உயர்த்தும்.
6. பாசகிளிகள் - தி,மு,க,வின் வெற்றி வாய்ப்பை கூட பாதிக்கும்.
Thursday, January 12, 2006
நான் ஒரு தடவை சொன்னா?
Wednesday, January 11, 2006
படிக்காமல் வாங்கிய பட்டம்
யாரும் எதிர்பாராதது சுஜாதா மற்றும் பாலசந்தர் பேசியது. இன பெருமைகளை இவர்கள் பேசியது இவர்களின் எக்கச் சக்கமான இரசிகர்களின் மனதில் உண்மையான அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கும். சுஜாதா வெளிப்படையாக காட்டி கொள்ள விட்டாலும், தனது இனபாசம் அவருடைய எழுத்துக்களில் வெளிப் பற்றிறுகிறது. ஆனால் பாலசந்தரின் பேச்சு எனக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது. பாலசந்தரின் திரைப்பட வீச்சுகளினால் , எனக்கு அந்த பெயரை வைத்தார்கள். பாலசந்தர் மாநாட்டில் இதுவரை கலந்து கொள்ளாது பற்றி மிக்க வருத்தம் தெரிவித்தார்.
ஆனால் ஜாதியின் வேர்கள் மிக ஆழமானவை. சமுகமும் அரசியலும் அதற்கு காலம் காலமாக நீர் ஊற்றி வருகின்றன. இப்போது அதற்கு அசைக்க முடியாத பலம் வந்து விட்டது. கூடி வாழும் சமுகத்தில் மற்றவர்களால் ஒதுக்கி வைக்க படுவோமா என்ற பயத்திலேயே ஒவ்வொருவரும் ஜாதியின் பிடியிலிருந்து மீள முடியுமால் தவிக்கிறார்கள்.
ஜாதி படிச்சு வாங்கின பட்டமா என்று வேதம் புதிது படத்தில் ஒரு கேள்வி வரும்?. அதை எழுதியவற்கு தெரியவில்லை- ஜாதி படிக்காமேலேயே , பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் சமுகத்தால் வழங்கபடும் பட்டம் என்று.
Sunday, January 08, 2006
மூன்றாவது அணியும் கூத்தாடி பயல்களும்.
1. 1996-யில் ரஜினியின் பங்கு மிக பரபரப்பாக பேச பட்டது. ஆனால் ஜெயலலிதா எதிர்ப்பு அலையை உருவாக்கியது ரஜினியோ, கருணாநிதியோ மூப்பனாரோ இல்லை. அதை உருவாக்கியது ஜெயலலிதா மற்றும் சசிகலா.
2. ரஜினியே ஜெயலலிதாவை எதிர்த்து தனது இமேஜை உயர்த்தி கொண்டார். ஆனாலும் கூட 1996 இல் மூப்பனாரும் ரஜினியும் சேர்ந்து நின்றிருந்தால் கூட அது தனியாக ஆட்சியை பிடித்திருக்காது. மாறாக அது ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கும்.மேலும் அன்று நரசிம்மராவுக்கு பதில் ராஜீவோ,சோனியாவோ இருந்திருந்தால் மூப்பனார் தனி கட்சி ஆரம்ப்பித்து இருப்பாரா என்பது சந்தேகமே.
3. மாறி மாறி கருணாநிதியோடும் ஜெயலலிதாவோடும் கூட்டணி வைத்து பிழைப்பு நடத்தும் மற்ற கட்சிகள் உண்மையில் இரண்டையும் விட மோசமனவை. இவர்களுக்கு ஜெயலலிதாவும் கருணாநிதியும் எவ்வளவோ மேல்.
4. எம்.ஜி.ரை தவிர தனிப்பட்ட செல்வாக்கு (அரசியல் ரீதியான) யாருக்கும் இல்லை.
5. ஒரு தனி மனிதனை தெயவத்திற்கு இணையாக ஒப்பிடுகிற இரசிகர்கள் கூட்டம், அரசியல் கட்சியாக மாறினால் எப்படி இருக்கும். விஜயகாந்த் ஆரம்பித்திருக்கும் கட்சி( இதை கட்சி என்று கூற முடியுமா?)யின் சட்ட திட்டம் என்ன தெரியுமா?. அவர் வைத்ததே சட்டம்.இதனால் தான் கட்சிக்கு அங்கிகாரம் மறுத்திறுக்கிறது தேர்தல் கமிஷன். இப்படி தன் கட்சிக்காக உழைக்கிறவர்களுக்கு கூட கருத்து சொல்லும் உரிமை மறுக்கிற தலைவன் நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்பானா?. எதற்காக இப்படி ஒரு சிந்தனை ஒரு தலைவனுக்கு. தன்னுடைய சர்வாதிகாரம் காத்து கொள்ள விதி அமைக்கும் தலைவன் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் மாற்றா?
6. விஜயகாந்தின் நிர்வாக திறமை மற்றும் தைரியம் பற்றி பல பத்திரிக்கைகள் புகழுகின்றன.(புளுகின்றன). நடிகர் சஙகத்தினை திறமையாக நிர்வாகித்தார். ரஜினியை போல் குழப்பாமல் தைரியமாக கட்சி ஆரம்ப்பித்து இருக்கிறார் என்று கூறும் பத்திரிக்கைகள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். சு.சாமி, பாக்கியராஜ், ராஜேந்தர் போன்றவர்களும் இதை செய்திருக்கிறார்கள். எத்தனையோ சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். உண்மையில் ஒரு அரசியல் தலைவரை பாரட்ட வேண்டுமான்றால் ராமதாசை பாரட்ட வேண்டும். ஜெயலலிதா அராஜக ஆட்சி நடத்திய போது அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் அவர். உண்மையில் சமுக அக்கறை இருந்தால் விஜயகாந்த் 1996இல் ஜெயலலிதாவிற்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த அளவுக்கு மிக மட்டமான, கொடுங்கோல் ஆட்சி அது. கருணாநிதியை விட மிக மோசமான தலைவராக இருக்க முடியும் என்று ஜெயலலிதா நிருபீத்த காலம் அது. அப்போது ஏன் விஜய காந்த் ஒன்றும் பேசவில்லை. இவர் எதிர்க்கிற ஊழல், லஞ்சம்,வன்முறை, சமுக அநீதி என்று எல்லாமே நிறைந்த ஆட்சி அது.
இறுதி கருத்து.மூன்றாவது அணிகள் தி.மு.க, அ.தி,மு.க இரண்டையும் விட மோசமானவை. எங்கே நிறைய சீட் கிடைக்கும் என்று நினைக்கிற இவர்கள் மக்கள் நலனில் ஒரு போதும் அவர்களை விட கூடுதல் அக்கறை காட்ட போவதில்லை.
கூத்தாடி பயல்கள் தன்னுடைய படங்கள் நன்கு ஒடும் போது அல்லது டாப் 5 ஹீரோவாக இருக்கும் போது மக்களை பற்றி கவலை படுவதில்லை. தான் சினிமா ஃபீல்டிலிருந்து ரிடையர் ஆகும் போது தான் மக்கள் பற்றிய அக்க்றை அவர்களுக்கு வருகிறது.
இவர்கள் இருவரையும் நிராகரிப்போம். மாற்றி மாற்றி இருவருக்கும் வாய்ப்பு கொடுத்து என்னதை கண்டீர்கள் என்று கேட்கும் விஜயகாந்தோ , முன்றாவது அணியோ இவர்களை காட்டிலும் மோசம் என்பது என்னுடைய கருத்து.
Saturday, January 07, 2006
சாமியார்கள் சமுதாயத்கிற்கு தேவையா?
1. சாமியார்கள் கூட்டம் மொத்தத்தையும் கொண்டு போய் மிலிட்டரி செர்விஸ் செய்ய சொல்ல வேண்டும். அல்லது விவசாயம் செய்ய சொல்ல வேண்டும்.
2. அரசியல் வாதிகள் தொண்டர்களை சுய நலனுக்காக அழிப்பதை போல, நடிகர்கள் ரசிகர்களை பயன்படுத்துவதை போல இந்த சாமியார்கள் பக்தர்களை பயன்படுத்துகிறார்கள்.
தனி மனிதனுக்கு இரசிகர்கள் இருப்பது. அவர்கள் சாதனையாளர்களாக பாரட்ட படுவது போன்றவற்றை நான் எதிர்கவில்லை. ஆனால் அவர்கள் தெயவத்திற்கு இணையாக புகழ படுவது மிக அநியாயம்.
குல கல்வி திட்டம்.
மேலதிகாரிகளிடம் மோதல் வந்தால்.
Written By Steve waugh.
Friday, January 06, 2006
பாலாஜி புறக்கணிக்க படுகிறாரா?
பாகிஸ்தானில் இந்தியா- எனது கணிப்பு.
கணிப்பு தோல்வி அடைந்தால் சந்தோஷமே...
இந்தியா தனது கடைசி 5 போட்டிகளை சாதரணமான டீம்களுக்கு எதிராகவே ஆடியிருக்கிறது. இந்தியா அணி மிக அசாதரணமான வலிமையுடன் காணப் பட்டது எதிரணியின் வலிமையற்ற தன்மையினாலேயே....ஆனால் மாறாக பாகிஸ்தான் வரிசையாக நல்ல அணிகளையே எதிர்த்து ஆடியிருக்கிறது. இதுவே இந்த தொடரினை டிசைட் செய்யும் என்பது என்னுடைய கணிப்பு.
சிறந்த தமிழ் படங்கள்.
1. குருதி புனல்.
2. மகா நதி
3. ரோஜா
4. அஞ்ஞலி.
5. மொளனராகம்.
6. உள்ளத்தை அள்ளி தா
7. கரகாட்டகாரன்.
8.அச்சமில்லை அச்சமில்லை
9.காக்க காக்க
10.பதினாறு வயதினிலே.
உங்களுக்கு பிடித்த தமிழ் படங்களை குறிப்பிடுங்கள்.
ஞானி-தெளிவான கருத்துக்கள்.
சமுகத்திற்கு தேவையான, அவசியமான, எதிர்கால நலனுக்கு முக்கியமான விஷயங்களை மற்றுமே தேடி கண்டுபிடித்து எழுதுபவர் ஞானி. அவருடைய கண்ணியம் ஒட்டு மொத்த மீடியாவும் கடை பிடிக்க வேண்டிய விஷயம்.
-ஞானி எழுதிய சில கட்டுரைகள் வெப்-இல் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கான இணைப்புகள் இங்கே உள்ளன.
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/sivakumar1.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani6.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani4.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani3.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani2.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani1.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani5.html
கேட்க கூடாத கேள்விகள்.
2. காங்கிரஸ் தலைவர்களிடம்: சுதந்திரத்திற்காக போரடிய கட்சி, அன்னியரை தலைவராக வைத்திருக்கலாமா?.
3.குஷ்பு: தமிழக பெண்கள் கற்பு பற்றி கருத்து?
4. அத்வானி: ஜின்னா மத சார்பற்றவரா?
5. கிரண் மோரே: கங்குலியை தேர்ந்தெடுக்க காரணம் பவாரா?
6. வைகோ: உங்களுக்கு எத்தனை சீட் கொடுப்பார் கருணாநிதி?
7.கங்குலி: இன்னோரு சான்சு கிடைச்சா , சாப்பலை ரெகமண்ட் பண்ணுவீங்களா?
8. ஏ.சி.சண்முகம்: மெரினா பீச்சில் இடம் இருக்கே, காலேஜ் கட்டுவிங்களா?
9. கராத்தே தியாகராஜன்: சென்னைக்கு எப்ப வருவீங்க?
10.காஞ்சி பெரியவர்: அம்மா ஆட்சி எப்படி இருக்கு?
போலியன் said...
ரஜினியிடம்:- நீங்க எப்ப அரசியலுக்கு வருவீங்க?
டிஆரிடம்:- இப்ப உங்க கட்சி பேரு என்ன?
சு.சாமியிடம்:- உங்க கட்சியில எத்தனை உறுப்பினர்கள்?
கருணாநிதியிடம்:- ஹிந்தி படிச்சா (மந்திரி)வேலை கிடைக்குமா?
ஜெவிடம்:- மகனை தத்தெடுப்பது பத்தி என்ன நினைக்குறீங்க?
சோவிடம்:- முடி முளைக்க என்ன செய்யலாம்?
டெண்டுல்கரை விரட்டும் பான்டிங்.
சச்சின் ரசிகர்கள் கோபப் பட்டாலும், அவர் தன்னுடைய ஆட்டகாலத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். அவரால் லாராவின் அதிக ரன் சாதனையை நெருங்க முடியுமா என்பது சந்தேகமே.
Thursday, January 05, 2006
யாருக்கு தலைவர்கள்.?
1. தொண்டர்கள் யாருமே இல்லை. யாருக்கு தலைவராக இவர்கள் இந்த சண்டை போடுகிறார்கள்?. ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துர என்று ஒரு படத்தில் விவெக் காமெடி காட்டுவது ஞாபகம் வருகிறது.2. எப்போதும் சட்டையை கிழிப்பதற்கு பதிலாக,கிழிந்த சட்டையை போட்டுக் கோண்டு கூட்டத்திற்கு வரலாமே?. புதிய சட்டையை ஏழை எளிய மக்களுக்காவது கொடுக்கலாம்.
தமிழக காங்கிரஸ் கோஷ்டி சண்டைகளை ஒழிக்க வேண்டுமா?. கட்சியை நாலு நாள் ஜெயலலிதா கையில் கொடுக்க வேண்டும்.
Wednesday, January 04, 2006
சிவாஜி கதை என்ன முழு விபரம்: Full Details
ரஜினியின் பெரும்பாலான படங்களின் கதை இந்த மாதிரியாக தான் அமைந்திருக்கிறது.
1. ரஜினி ஒரு சூப்பர் ஹீரோ. அவர் கெட்டவர்களை தண்டிப்பார்.
2. ஒரு ரஜினி ஆன்மிகவாதி.அவர் வாழ்க்கையை விட்டு ஒதுங்குவார். இன்னோரு ரஜினி ஒரு சூப்பர் ஹீரோ. அவர் கெட்டவர்களை தண்டிப்பார்.
ஷங்கரின் பெரும்பாலான கதைகள் இந்த மாதிரியாக அமைந்திருக்கின்றன.
1.ஹிரோ சாதாரணமானவர். அவர் கெட்டவர்களை தண்டிப்பார் (ஜென்டில் மேன், இந்தியன்,முதல்வன்)
2.ஹிரோ சாதாரணமானவர். அவர் கெட்டவர்களை தண்டிப்பார். அது அவருக்கே தெரியாது(அன்னியன்)
இப்போது, காமன் மினிமம் ப்ரொகிராம் படி இரண்டு கதை அமைப்புகளுக்கும் பொதுவான கதையை உருவாக்க வேண்டும்.( ரஜினி ,ஷங்கர் ரெண்டு பேரும் கதையை மினிமம் ஆக ஒரு ஃபார்மாலிட்டிக்காக வைத்து படம் எடுப்பவர்கள். இருவரும் இணைவதால் எவ்வளவு கஷ்டம் பாருங்கள்).
ரஜினி ஒரு சூப்பர் ஹீரோ அவர் கெட்டவர்களை தண்டிக்கிறார். ( இது ரஜினி ரசிகர்களுக்காக).இத்தோடு கதையை முடிக்க முடியாது. ஷங்கர் சுஜாதா போன்றவர்கள் புத்திசாலிகளாக காட்டப் பட வேண்டும். எனவே கதையை விரிவு படுத்த வேண்டும்.
சுதந்திர போராட்ட தியாகியான ரஜினி தன்னுடைய உறவினர்களால் பாதிக்க பட்டு, ஆன்மிக பாதையில் செல்கிறார். அவருடைய பையன் ரஜினி அப்பளம் போட்டு விற்பவர். வில்லன் மக்ள் ஷ்ரேயாவை காதலிக்கும் ரஜினி அவருக்கு பொடுகு இருப்பதை கண்டு பிடித்து அதை குணப் படுத்த அப்பா ரஜினியை அழைக்கிறார். அப்பா ரஜினி ஷ்ரேயாவின் பொடுகுகளை மந்திரம் சொல்லி நீக்கி விட , பையன் ரஜினி , 500 கோடி திருடிய 5 மத்திய மந்திரிகள் ,5 பைசா திருடிய 5 வயசு பையன்கள் 5 பேர் அனைவரையும் ரோட்டில் வைத்து கட்டி போடுகிறார்.
5 வயசுல 5 பைசா திருடறவன் தான் 50 வயசுல 500 கோடி திருடுவான். இவங்க எல்லாத்தையும் சுட்டாதான் நாடு உருப்படும் என்று கூறி அனைவரையும் சுட்டுதள்ளி விடுகிறார்,
இவ்வாறாக ரஜினியை ஒரு சூப்பர் ஹீரோ, ஆன்மிக வாதி, அனைவரையும் தண்டிப்பவராக காட்டி விடலாம். 5 பைசா திருடுபவனை தண்டிப்பதால் படத்திற்கு சங்கர் டச் வந்து விடுகிறது. எல்லாவகை பொடுகளை பற்றி 5 நிமிட டயலாக் போட்டு சுஜாதா தன்னுடைய அறிவியல் மேதாவி தனத்தை காட்டி கொள்ளலாம்.
இன்னும் டெவலப் பண்ணுவேன் கதையை...
உங்களில் ஒருவன்.
உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் அப்பா மாதிரி கடிதம் எழுத ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். அப்பா அளவுக்கு தலைமை பண்பு, உழைப்பு போன்று எதுவுமே இல்லாவிட்டாலும் , ஸ்டாலின் மேற்கொண்டு தி.மு.க.வில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவரால் கருணாநிதி இல்லாமல் செயல் பட முடியுமா என்பது சந்தேகமே....
தி.மு.க வின் தலைமை பொறுப்பை அவர் ஏற்றால் , வைகோவிற்கு அது சாதகமாக முடியும். தி.மு.க. , அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் வோட்டு வங்கிகளை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகின்றன.இரண்டு கட்சிகளும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியவில்லை.
2006 தேர்தலை பற்றி அனைவரும் ஆவலாக பேசும் போது, என்னுடைய முதற்கட்ட கணிப்பு 2006 திராவிட கட்சிகளின் தனிப்பட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாக அமையும்.
Tuesday, January 03, 2006
Management Skills -IIM Guys.
What it takes to deliver successfully?
Some say hard work, commitment, focus, initiative. In my opinion , Motivation is the only factor that can make the real difference.
I have seen in places where IIM guys lead and still every thing remains unorganized. But I have seen excellent demonstration of management skills by non-IIM guys. The best example is jothi Narayan one of my bunks party members. ( I leave it to you find an Example for an IIM guy
who is poorly managing his team. You need not search for long. I am sure there would be one in your company as well).
If enough motivation is there then delivery will be successful.That said, this is not to IIM guys are not required. What one company should look at is the motivation level of a candidate and if he is from IIM or not.
Monday, January 02, 2006
பங்க்சு பார்ட்டியும் தமிழக தலைவர்களும்
பங்க்சு: ஐயா,வணக்கம், ஓண்ணும் ஓண்ணும் ரெண்டுல உங்கள பத்தி எழுதினேன். படிச்சிங்களா?.
ராமதாசு: எந்த பத்திரிக்கையையும் நம்பி நான் இல்ல. (தொண்டர்களை பார்த்து) இனிமே,இந்த பத்திரிக்கை படிக்காதிங்க...
பங்க்சு: தலைவர்கள் எல்லாம் தொண்டர்களுக்கு நல்லது செய்வாங்க. ஆனா நம்மூர்ல மட்டும் தான் இதை படிக்காத , அதை படிக்காத அப்படின்னு அறிவுரை(?) சொல்றிங்களே ஏன்?
ராமதாசு: எல்லாரும் படிச்சுட்டா, என் பேரன், பேத்தி எல்லாம் மத்திய மந்திரி ஆக முடியாது.
பங்க்சு: ஐயா சூப்பருங்க!!, உங்களுக்கு இருக்கிற விஷனே தனி. ஏன் ஐயா சினிமா காரங்களை தாக்குறீங்க?
ராமதாசு: நாளைக்கு தேவப்படும்போது கலாட்ட பண்ண தெரியனும். அதுக்கான ட்ரைனிங் தான் இந்த ஸ்டண்ட்.
பங்க்சு: அப்படின்னா மக்கள் நலனுக்கு 2006 ல எதுவும் திட்டம் உண்டா?
ராமதாசு: இந்த தடவை தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு பேரோடையும் கூட்டணி வைக்கலாம்னு இருக்கேன். இங்க ஒரு 30, அங்க ஒரு 30, யாரு ஜெயித்தாலும் 6 மந்திரி பதவி. இது தான் ரேட்.
பங்க்சு: சூப்பர்யா, உங்களுக்கு எதிர்காலம் பிரமாதம்.
அடுத்து ஜெயலலிதா,
பங்க்சு: அம்மா, உதவிதொகை அளிக்கிறேன்னு ஒரு 50 பேரை போட்டு தள்ளிடிங்களே?
ஜெயலலிதா:உதவிதொகை கொடுத்து நான் பேர் வாங்கிருவேன்னு, கருணாநிதி 50 பொணத்தை கொண்டு வந்து போட்டுடார். ஜெயா TV பார்த்தா உண்மை தெரியும்.
பங்க்சு:பொறுப்பான பதில். அடுத்து என்ன இலவச திட்டம் வைச்சுருக்கிங்க?ஜெயலலிதா: மக்கள் இனிமே எந்த கடையிலும்போய் எதை வேணும்னாலும் எடுத்துக்கலாம்னு ஒரு திட்டம் வருகிறது.
பங்க்சு: நன்றிம்மா, நன்றி
அடுத்த படியாக கருணாநிதி.
பங்க்சு: ஐயா வணக்கம்.கருணாநிதி: பேரன்பு மிக்க உடன்பிறப்பே, இப்படி வெறுங்கையோடு வந்திருக்கிறாயா?
பங்க்சு: ஐயா புத்தாண்டு வாழ்த்துக்களோடு தான் வந்திருக்கிறேன்.
கருணாநிதி: அது யாருக்கு வேணும்? எனக்கு நிதி தான் வேணும்.
பங்க்சு: ஐயா, புத்தகம், முரசொலி,சினிமா கதை வசனம் எழுதி தமிழனை கொல்றது மட்டுமில்லாமல்,பில் கேட்சுக்கும் புத்தகம் கொடுத்திட்டங்களே,
கருணாநிதி: ஆமாம். விக்காத ரெண்டு புக்க அவருக்கு கொடுத்தேன். காசு நிறைய கொடுப்பார்னு பார்த்தேன். பெரிய பணக்காரர்னு சொன்னாங்க... ஆனா அவரு ஒண்ணும் கொடுக்காம போயிட்டார்.பில் கேட்சு சந்திப்பு பற்றி புத்தகம் எழுதி காசு பாக்கணும்
பங்க்சு: ஐயா, எனக்கு ஏதாவது அன்பளிப்பு உண்டா?
கருணாநிதி: என்னுடைய நெஞ்சத்தில் இடம் கொடுக்கிறேன்.
அடுத்த படியாக வைகோ.பங்க்சு:வைகோ அவர்களே வணக்கம்.
வைகோ: பொறுதடக்கை வாளெங்கே, மணிமார்பெங்கே,பறுவயிரத்தோளெங்கே என்று கேட்டவளை கலிங்கத்து பரணியில் பார்த்திருப்பீர்கள். அத்தகைய தோள்களை நான் பங்க்சு பார்ட்டி நண்பர்களிடம் காண்கிறேன்.
பங்க்சு: கலைஞர பார்த்தாலே கட்டி பிடிச்சு அழுகிறிங்களே ஏன்?
வைகோ: எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு தேர்தல் வரும் போது மட்டும் தான் பிரியும். மற்ற எப்பவும் மாறாதது.
பங்க்சு: இலஙகை தமிழனுக்குன்னு மீண்டும் குரல் கொடுக்கிறீர்களே, தமிழக தமிழன் ஏன் மறந்து விட்டீர்கள்.
வைகோ: இலஙகை தமிழன் காசு கொடுக்கிறான். நம்மூர் தமிழனுக்கு குரல் கொடுத்தா பிரயோஜனம் இல்லை.
பங்க்சு: சூப்பர் வைகோ அவர்களே
Friday, December 30, 2005
நல்வாழ்த்துக்கள்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு- பங்க்சு பார்ட்டி சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.....
சுதந்திர நாட்டின் அடிமை மக்கள்
1.தான் சார்ந்த சாதி அமைப்புகளை வலிமை படுத்தி அரசியலில் நுழைந்தவர்கள் இருவரும்.
2. அரசியலில் நுழைந்த பொழுது யாருமே அறிவிக்காத சத்தியங்களை ராமதாசு செய்தார். அதை முற்றிலுமாக கடைபிடித்தார். உண்மையிலேயே பொது வாழ்வில், பா.ம.க. கட்சி ஒரு வித்தியாசமாக காட்சி அளித்தது. அதே போன்று, திருமா வளவன் மாவட்டம் தோறும் தாழ்த்த பட்ட மக்களுக்காக போரட்டம் நடத்தினார். அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கின்ற சலுகைகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தினார். அவர்கள் சாணி அள்ளுவதற்கும் மலம் அள்ளுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்கள் மனித உரிமைகள் பற்றியும் கல்வி அறிவு பற்றியும் அறிந்து கொள்ள வைத்தார். இந்த மாதிரி நல்ல நடைமுறைகளை பயன்படுத்திய போது அவர்கள் வெற்றி பெறவில்லை.
3.இந்த இரண்டு பேரையும் குறை கூறுகிற மக்கள் அனைவரும் கவனிக்காத ஒன்று. இவர்கள் இருவரும் கொள்கையாவது கொளுக்கட்டையாவது என்று அனைத்தையும் புறக்கணித்து விட்டு, சுயநலமாக செயல் பட ஆரம்பித்த பின்னர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.ராமதாசு அனைத்து சத்தியங்களையும் தாரை வார்த்தார். இன்று பா.ம.க. ஒரு தவிர்க்க முடியாத( தவிர்க்க பட வேண்டிய கட்சியாக இருந்தாலும்) கட்சியாக மாறிவிட்டது. உருப்படியாக எத்தனையோ காரியங்கள் திருமா செய்த போது வராத கூட்டம் , இன்று அவர் தமிழக பெண்கள் கற்பை குஷ்பூ வீட்டு காக்கா தூக்கி விட்டு சென்று விட்டது என்று குரல் கொடுக்கிறார். தனக்கு எந்த பிரயோஜனமும் கிடைக்காது என்பதை உணராமல் இந்த கூட்டம் விளக்குமாறு எடுத்து கொண்டு ஒடுகிறது.
அரசியல் வாதிகளை மற்றும் குறை சொல்லி பயனில்லை. மக்கள் தலைவனுக்கு அடிமையாக இருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த கூட்டம் சுயமாக சிந்திக்க வக்கில்லாமல் அடிமையாக வளரும் கூட்டம். அதனால் தான் காலில் விழுவது, பச்சை குத்துவது, போஸ்டர் அடிப்பது என்று தமிழக அரசியல் சாக்கடை ஆகிவிட்டது. அ.தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதா என்று பெயர் சொல்ல முடியாது. தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதி என்று பெயர் சொல்ல முடியாது.அ.தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதியை ஒற்றை கண்ணன் என்று சொல்லலாம். தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதாவை இதை காட்டிலும் மிக கேவலமாக விமர்சிக்கலாம்.ஜெயலலிதா கட்சியில் இருப்பவர்களை அடிமைகளை விட கேவலமாக நடத்துவார். கருணாநிதி தன் வாரிசுகளுக்கு இணையாக யாரையும் வளர விட மாட்டார். இது இப்போது ராமதாசுக்கும் பொறுந்தும்.ஆனால் இதையெல்லாம் உணராத இந்தகூட்டம் இவர்கள் என்ன சொன்னாலும் தலையாட்டி கொண்டிருக்கிறது.இவர்களோடு கூத்தாடி பயல்களுக்கு போஸ்டர் அடிப்பவர்களையும் சேர்த்து கொள்ளலாம். வாய்ப்பு கிடைத்தால் இந்த கூத்தாடி பயல்கள் அரசியல் வாதிகளை விட மோசமாக ஆட்சி செய்வார்கள்.
தனக்கு என்று ஒரு சுய புத்தியில்லாமல் கட்சி தலைவன் என்ன செய்தாலும் அதை குருட்டு தனமாக பின் பற்றும் மக்கள், சுதந்திரமான நாட்டினிலும் அடிமைகளாகவே இருப்பார்கள்.
இப்படி அடிமையாக இருப்பது விசுவாசமகவே கருத படுகிறது. நான் தான் பெரிய அடிமை, என்னை காட்டிலும் பெரிய அடிமை யாருமில்லை என்று காட்ட ஒவ்வொரு கட்சியிலும் ஒரு போராட்டமே நடைபெறுகிறது. இந்த அடிமை புத்தி சுதந்திரம் வாங்கியதை அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது.
Wednesday, December 28, 2005
தண்டனை மிக குறைவு
பில்கேட்ஸ் வருகை மர்மம் என்ன..? - ஞாநி
டெல்லியில் பில்கேட்ஸ் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்திய தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் பேசியதை மீடியாக்கள் பெரிய அளவில் சித்திரிக்கவில்லை. இந்தியாவுக்கு பில்கேட்ஸை விட முக்கியமானவர் பஜாஜ். டூவீலர், த்ரீ&வீலர் (ஆட்டோ) துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பஜாஜ், பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஓர் இந்திய நிறுவனம் வெற்றிகரமாக இயங்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். பஜாஜ் இந்தக் கூட்டத்தில் பில்கேட்ஸை கலாய்த்தார். ‘‘இன்னும் ஐயாயிரம் பேருக்கு வேலை, இத்தனை கோடி ரூபாய் முதலீடு என்பதெல்லாம் சரி, ஆனால் இந்தியாவின் ஜி.டி.பி&யில் (கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் & மொத்த உள்நாட்டு உற்பத்தி) அது என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது? ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வியில் பொறியியல் நிர்வாகம் ஆகியவற்றை கற்பிப்பதில் நாம் பெரும் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஆரம்பக் கல்வியும் பள்ளிக்கல்வியும் படுமோசமான நிலையில் இருக்கும்போது, ஒரு சில உயர்மட்ட நிறுவனங்களின் சாதனையால் பெருவாரியான மக்களுக்கு என்ன லாபம்?’’ என்று நறுக்குத் தெரித்தாற்போல் கேட்டார் பஜாஜ். அவர் மட்டுமல்ல பல பொருளாதார அறிஞர்கள் & நோபல் வென்ற அமர்த்தியா சென் உட்பட & சுட்டிக் காட்டுவது, தேசத்தில் பொருட்களின் உற்பத்தி பெருகினால் தான் நிஜமான செல்வப் பெருக்கம் (வெல்த்) ஏற்பட முடியும் என்பதாகும். கம்ப்யூட்டர் துறையை பொறுத்தமட்டில் இன்னமும் அதன் பயன்பாடு சுமார் 20% அளவில்தான் தயாரிப்புத் துறைக்கு இருக்கிறது. 80 சதவிகித பயன்பாடு சேவைத்துறையில்தான். எடுத்துக்காட்டு, ரயில் டிக்கெட் பதிவு, டெலிபோன் பில் போன்றவை. கம்ப்யூட்டரின் பயனைத் தயாரிப்புத் துறைக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் விதத்தில் முதலீடுகள் செய்யப்படுவதில்லை. சேவைத் துறையில் கூட ஒயிட் காலர் சேவைகளில் மட்டுமே கருவிகளும், கம்ப்யூட்டர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன. நகர சாக்கடைகளின் கழிவுகளை அகற்றுவது, சுத்தப்படுத்துவது போன்ற அழுக்கான சேவைப் பணிகளில் இயந்திரங்கள், கம்ப்யூட்டர்கள் பங்களிப்பு இல்லை. இப்படிப்பட்ட சூழலில் பில்கேட்ஸ் இந்தியாவில் செய்யப்போகும் முதலீட்டின் நடைமுறை விளைவுகள் என்ன? அவரே சொன்னது போல் புத்திசாலியான நிறைய கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களைத் தங்களுக்குப் பயன்படும் விதத்தில் உருவாக்குவது. அவர் சொல்லாதது மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தயாரிக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் மென்பொருளை இன்னும் அதிகமாக விற்பது. இதற்கான ஒரு வியாபார உத்தியாகத்தான் தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் கிராமப்புறங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர மைக்ரோ சாஃப்ட் முன் வந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் எம்.எஸ் மென்பொருளை ரூபாய் 1200/& விலையில் விற்கவும் முன் வந்திருக்கிறது. இந்தத் திட்டத்தை அரசாங்கத்துறை மூலம் செய்ய முற்படுவதன் உள்நோக்கம் என்ன? இதே கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்ட மென்பொருளான லினக்ஸ் (Linux), இலவச மென்பொருளாகும். இதனை பல அரசாங்கங்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. அரசின் பொதுத் துறையிலும், கல்வித்துறையிலும் லினக்ஸ் வேரூன்றி விட்டால் அங்கே மைக்ரோ சாஃப்ட் மார்க்கெட்டை இழந்துவிடும். எனவே, லினக்ஸ் பரவும் முன்பாக மைக்ரோ சாஃப்ட் நுழைய விரும்புகிறது. உலக அளவில் இதுவரை மைக்ரோ சாஃப்ட், தன் வர்த்தக போட்டியாளர்களை பல வகைகளில் வீழ்த்தி இருக்கிறது. ஆனாலும் அதன் பிரதான விற்பனைப்பொருள் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் தான். விண்டோஸின் உதவி இல்லாமலே பல கணிணி செயல்பாடுகளைச் செய்து விட முடியுமெனில் விண்டோஸ் அடி வாங்கத் தொடங்கும். இந்த ஆபத்தும் இப்போது வந்துவிட்டது. இணையத்தில் பிரதான தேடல் வாகனமான (சேர்ச் இன்ஜின்) கூகிள், தன் பிகாசா மென்பொருள் மூலம் விண்டோஸ் இல்லாமலே பல செயல்களை இணையத்தில் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. கணிணியே தேவைப்படாமல் செல்போன், டெலிபோன், கீ&போர்ட் மட்டும் கொண்டு பல இணைய வேலைகளைச் செய்துவிடும் அளவிற்கு கூகிள் வளர்ந்துவிட்டது. கூகிளின் மென்பொருள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இன்று இணையத்தின் தேடல் கருவிகளில் முதலிடத்தில் இருக்கும் கூகிள், இப்படி மென்பொருள் துறையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால் பதித்ததில், மைக்ரோ சாஃப்டின் வியாபரத்திற்கு சிக்கல் வந்துவிட்டது. கூகிளை முறியடிக்க தானும் ஒரு தேடல் வாகனத்தை களத்தில் இறக்கலாம் என்று கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ‘அன்டர் டாக்’ என்ற பெயரில் மைக்ரோ சாஃப்ட் அறிமுகப்படுத்தியது. ஆனால் இது வெற்றிபெறவில்லை. இப்போது புரிகிறதா பில்கேட்ஸ் சென்னை வருகையின் மர்மம்?
Sunday, December 18, 2005
என்ன மாறி என்ன?
ஒரள்வு நன்கே ஆடிய சவுரவ் நீக்கம் செய்யப் பட்டார். அஜித் அகர்கர் தொடருகிறார். வாசிம் ஜாபருக்கு மீண்டும் வாய்ப்பு. விட்டால் வினோத் காம்ப்ளி வருவார் போலிருக்கிறது. பாலாஜி , சடகோபன் ரமேஷ் போன்றவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஒரு முன்னாள் கேப்டன் திட்டமிட்டு அவமான படுத்த படுகிறார். ஆயிரம் குறை கூறினாலும், இன்றைய டீமின் முக்கிய வீரர்கள் அனைவரையும் உருவாக்கியவர் அவரே. சேவாக், பதான்,ஜகீர்கான், கைஃப், யுவராஜ் என்று ஒரு புதிய அணியை உருவாக்கிய பங்கு அவருக்கு உண்டு. சித்து, மஞ்ரேகர், அசார், ராபின் சிங், ஜடேஜா என்ற முந்தைய அணியை விட இப்போதைய அணி எவ்வளவோ வலிமை மிக்கது என்பதில் சந்தேகமில்லை.
நடக்கின்ற காரியங்கள் யாவும் இந்திய கிரிக்கெட் பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தை உருவாக்கவில்லை.
Sunday, December 11, 2005
சச்சின் சாதனை
Monday, December 05, 2005
ஜெயா TVயில் தோன்றுவது எப்படி...
1. உங்களுடைய அம்மாவை புகழுங்கள். கண்டிப்பாக அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும்.
2. உங்கள் பையனுடய குறைகளை சொல்லுங்கள். முக்கியமாக பையன் என்று சொல்லாமல், சன் என்று சொல்லுங்கள்.
ஜெயா TV காரர்கள் பொதுமக்கள், அம்மாவை புகழ்ந்தும், சன் TV யை குறை சொல்லியும் பேட்டி அளிக்கிறார்கள் என்று போடுவர்.
தமிழ் கக்கூசு கட்டுங்கள்...
1. அறிவியல் படிப்பதற்கு அல்லது எந்த ஒரு புதிய தொழில் படிப்பு படிப்பதற்கோ தமிழ் தகுதி இழந்து விட்டது. கலை சொற்கள் என்ற பெயரில் செல் போனுக்கு தமிழ் சொல் உருவாக்குவது வீண். இதை மக்களிடம் கொண்டு சென்றால் எந்த வரவேற்பும் கிட்டாது. இந்த உண்மையை உணர அறிவு தேவை
2. இலக்கியம் என்றாலே புரியாத படி எழுதுவது, யாருக்கும் தெரியாத அயல் நாட்டு எழுத்தாளரை புகழ்வது என்று ஒரு கூட்டம் கிளம்பி மக்களிடம் இருந்து இலக்கியத்தை அப்புற படுத்தி விட்டது. மக்களிடம் செல்லாத எந்த ஒரு வடிவமும் இலக்கியம் ஆகாது. மக்கள் ஆதரித்தால் அது இலக்கியம் ஆகாது என்பது ஒரு வித அறிவு(?)ஜீவி மிரட்டலாகி விட்டது. இந்த கூட்டம் தான் பாரதியாரை இன்னமும் புகழ்ந்து கொண்டிருக்கிறது. விடுதலையை பற்றி எழுதி விட்டதனால் பாரதியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகி விட மாட்டார். கலைஞரும் வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான்,மீரா, போன்றவர்கள் பாரதியை கடந்து வெகு தூரம் சென்று விட்டார்கள். (கலைஞர் எழுதியது இலக்கியமே இல்லை என்று இன்றைய இலக்கிய வாதிகள் கூறலாம். அது வடிகட்டிய பொய். தங்கள் எழுத்து விற்க வில்லை என்கிற ஆதங்கம்).
3. எல்லாவற்றிகும் மேலாக அரசியல். தமிழ் , தமிழ் என்று மேடயில் முழங்கும் அரசியல் வாதிகள், BEST KANNA BEST , SUN TV, JEYA TV,KTV என்று பட்டைய கிளப்புவதும், அவர்கள் பிள்ளைகள் கான்வென்டில் படிப்பதும், மொழியின் அவசியத்தை நேர்மையாக வழியிருத்துகிறவர்களயும் சேர்ந்தே பாதிக்கிறது.ஊருக்கு தான் உபதேசம் என்கிற எந்த ஒரு கொள்கையும் எடுபடாது. இந்த அரசியல் வாதிகளிம் கடைந்தெடுத்த இரட்டை வேடம் , உண்மையா மொழியை நேசிக்கிற, வளர்க்க விரும்புகிற தமிழர்களை வெகுவாக பாதிக்கிறது. தமிழ் வளர்ச்சி என்றாலே மக்கள் ஒடுவதற்கு நேர்மையற்ற பிரசாரம் காரணம்.
தமிழை அறிவு பூர்வமாக நேசிக்கலாம்.அது நமது தாய் மொழி.
Monday, November 28, 2005
டாஸ் .....
தற்போது முடிந்த ஒரு நாள் போட்டிகளில் அனைத்து போட்டியுலும் டாஸ் ஜெயித்த அணி வெற்றி பெற்றுள்ளது. முந்தியெல்லாம் டாஸ் யார் முதலில் ஆடுவார்கள் என்பதை டிசைட் செய்த்து. இப்போழுது யார் ஜெயிப்பார்கள் என்பதையே டிசைட் செய்கிறது. ஏனெனில் இப்போது முதலில் ஆடுகிற அணி தோறு விடுகிறது.
என்னை தொடர்பு கொள்ளுங்கள்...
Sunday, November 27, 2005
உங்கள் உதவியை எதிர்பார்க்கும் மக்களுக்கு
தமிழ் நண்பர்களே,
கடும் மழையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உள்ளதா?. கடுமையான பாதிப்புக்குள்ளாயிர்க்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். இது மிக அவசரம். அவசியமும் கூட.
contact me at balachandarg@hotmail.com
Friday, November 25, 2005
உதவும் விருப்பம் உண்டா?என்னை தொடர்பு கொள்ளவும்.
அம்மா பாட்டுக்கு இலவசமா வாரி இரைக்க, இன்னைக்கு நிவாரணம் கொடுக்க நிதி இல்லை.உண்மையிலேயே சமுகத்தில் கீழ் நிலைமையில் இருப்பவர்களின் நிலைமை ரொம்ப மோசம். இயற்கை சீறும் போது அதை கொஞ்சம் கூட பாதுகாப்பின்றி மேற்கொள்பவர்கள் பற்றி சமூகம் கொன்Jஅம் கூட அக்கறையின்றி இருப்பது வருத்ததிற்குரியது.
கூத்தாடி பயல்கள் பின்னாடியும், ஜாதி காரர்கள் பின்னாடியும் ஓடினாதல் வந்த வினை இது. ஒருவனுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஊரே எதிர்த்து நிற்கும் ஓற்றுமை வந்தால் இந்த அவலம் போகும். வெப் பிலாக் செய்யும் மக்களே, உங்களுக்கு உதவும் எண்ணம் இருந்தால்
balachandarg@hotmail.com தொடர்பு கொள்ளவும்.
இந்தியாவின் வெற்றி தொடருமா
1. தென் ஆப்பிரிக்காவின் பலமான பந்து வீச்சிற்கு எதிராக ஆடும் அளவுக்கு இர்ஃபான் நல்ல ஆட்டக் காரரா?
2. ப்ரதாப் சிங் 4 ஒவர் மட்டுமே வீசினார்.ஏன்?
3.சூழ்நிலைக்கு தக்கவாறு சில முடிவுகள் மாற்றப் படலாம். ஆனால் அதற்காக இந்த அளவுக்கு மாற்றங்கள் தேவையா?.விட்டால் சாப்பல் அவரே ஒப்பன் பண்ணுவார் போலிருக்கு?
நான் ஏற்கனவே எழுதிய ப்லொக் பார்க்கவும்.
http://bunksparty.blogspot.com/2005/11/blog-post_18.html
Thursday, November 24, 2005
ஒரு வேளை வாயை மூடியிருந்தால்...
இந்த அளவுக்கு நிலைமை மோசமாக போனதற்கு கங்குலி மிக முக்கிய காரணம். ஒரு வேளை ஜிம்பாப்வேயில் அவர் வாயை மூடியிருந்தால், இன்னமும் கூட அவர் பதவியில் நீடித்திருந்திருக்கலாம்.அவர் இடம், பதவி இரண்டையும் இழந்ததற்கு இந்த பிரச்சினையே காரணம். (மோசமான ஆட்டம் காரணம் என்றால் அவர் எப்பொழுதோ இவற்றை இழந்திருக்க வேண்டும்.) தேவையே இல்லாமல் பிரச்சினையை கிளறி விட்டு , இப்போது அவஸ்தை படுகிறார்.
Tuesday, November 22, 2005
இது தான் அரசியல்.
லாலு தோத்ததில , அவரை எதிர்த்து நின்ன B.J.P ய விட, அவர் கூட கூட்டணி வைச்சிருக்க காங்கிரசுக்கு ரொம்ப குஷி... இது தான் சூப்பர் அரசியல்....
Sunday, November 20, 2005
சொன்னாலும் சொல்வார்கள்......
இந்தியன் எக்ஸ்ப்ரஸ், ஹிந்து பத்திரிக்கைகள் தமிழில் வெளியிட பட வேண்டும். தமிழன் செய்தியை தமிழில் சொன்னால் படிக்க மாட்டானா?.(ராமதாசு).
அம்மாவின் உயர்ந்த குணத்தினால் தான் இன்று இந்தியா தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து நன்றாக ஆட முடிகிறது.(பொன்னையன்).
சென்னை நகர் தண்ணிரீல் மூழ்கி சீரழிவதை தடுக்கும் யோசனைகளை நிபுணர்களுடன் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அது முடிந்தவுடன் சென்னை திரும்புவேன்.(கராத்தே தியாகராஜன்).
நான் குஷ்புவை தான் ஆதரித்தேன். குஷ்புவின் கருத்தையல்ல. தமிழர்களின் கருத்தை தான் எதிர்த்தேன் தமிழர்களை அல்ல.(சுகாசினி).
நூறு கோடி மக்களையும் சோதித்து பார்த்து அதிலிருந்து சிறந்த வீரர்களை கொண்டு 2007 உலக கோப்பை அணியை உருவாக்க வேண்டும்.(சாப்பல்)
மழை நிறைய பெய்ததால் மட்டும் ஊர் நிறையவில்லை. மக்கள் கண்ணீரினால் நிறைந்திருக்கிறது என்பதை இந்த அரசு அறியுமா.(கருணாநிதி).
Saturday, November 19, 2005
சிவகாசியின் மிக பெரிய வெற்றி
இன்னும் 10,15 வருடங்களில் விஜய் டிவியில் எந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று அறிவுரை கூறி ஆதரவு தெரிவிப்பர். சொந்த புத்தியில்லாத ரசிகர்களும் அதை கேட்டுக் கொண்டு நாயாக அலைந்து பிரசாரம் செய்வார்கள். இல்லாவிட்டால் விஜயே ஒரு கட்சி அமைப்பார். அதில் சங்கவி, திரிஷா மற்றும் அசின் பிரசார பீரங்கிகளாக மாறி தமிழ் நாட்டை இன்னும் சீரழிப்பார்கள்.
தமிழ் நாட்டின் மோசமான ஒரு அம்சம், கலைஞர், ஜெயலலிதா விட்டால் நாதி இல்லை என்பது.முற்றிலும் ஒழிக்கல் பட வேண்டிய அம்சங்கள் பா,ம.க., ம.தி,மு.க.
இந்த ரெண்டு கட்சிகளை விட விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் ரொம்பவே பெட்டர்.
மாற வேண்டிய குணங்கள்.
1. கூத்தாடி பயல்களுக்கு கொடுக்க ப்படும் அதிகப் படியான முக்கியத்துவம்.
2. இளிச்ச வாயனை போட்டு மிதிப்பது.
3. தவற்றை கண்டிக்கும் குணம் அற்று இருப்பது.
4. தி.மு.க வை இன்னும் நம்புவது.
5. அ.தி.மு.க. வை இன்னும் நம்புவது.
6. சற்றும் மறையாத ஜாதி வெறி.
7. தனி மனித ஆராதனை.
8. இன்னும் மாறாத அரசியல் கலாச்சாரம்.
தைரியமா சிந்திக்க வேண்டும்.
குஷ்பு மேல 25 கேசு. சுகாசினி மேல இப்ப புதுசா ஒரு கேசு. விஜய்,ரத்னம்,அசின்(?) மேல கேசு.நாட்டுல ஏற்கனவே இருக்குற கேசு பத்தாதுண்ணு புதுசா இத்தனை கேசு, ஜனநாயக நாட்டில இளிச்சவாயனைத்தான் எல்லாரும் விரட்டுவாங்க என்பதற்கு இது எல்லாம் எடுத்துக் காட்டு.
இதே கருத்தை கருணாநிதி , ஜெயலலிதா சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பாங்க.. எல்லாரும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருந்திருப்பாங்க... கூத்தாடி பயல்கள கோயில் கட்டி கொண்டாடுவதும் தப்பு. இந்த மாதிரி ஊரே ஒண்ணா சேந்து அடிக்கிறதும் தப்பு.
உங்க ஊருக்கு எந்த நல்லதும் பண்ணாத சட்ட மன்ற உறுப்பினரையோ. நாடளு மன்ற உறுப்பினரையோ கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கா? எவ்வளவோ நல்லது செஞ்ச உறுப்பினர் செழியனை விட்டுட்டு ஒரு கூத்தாடி பொம்பளைய (வைஜயந்திமாலா) அனுப்பிச்ச ஊர் தான் இது.மண்டையில் மூளை இல்லாத தமிழனை இந்த ஜென்மத்துக்கும் மாத்த முடியாது... இனிமேயாவது தமிழன் தைரியமா சிந்திக்க கத்துக்க வேண்டும்.
Friday, November 18, 2005
இந்தியாவின் வெற்றி தொடருமா?
முதல் ஆட்டத்தில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா எளிதாகவே வென்றது. இந்த தொடர் இந்தியாவின் உண்மையான பலத்தை வெளியெ கொண்டு வரும். நிறைய வீரர்கள் இருப்பது மிக நன்றாக ஆடியிருப்பது உண்மை என்றாலும் கூட, இந்தியா தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எல்லாரையும் போல எப்பவும் அதிகப் படியாக கருத்துக்கள் உருவாக்க நான் தயாராக இல்லை. இந்த வீரியம் எல்லா நாட்டிற்கு எதிராக வெளிப் பட வ்
கங்குலி மீண்டும் அணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
Thursday, November 17, 2005
அது ஒரு "அறுவை" காலம்
ஹலோ!, நான் மருதம் கதை சொல்லவில்லை, இது நம்ம பாலு மகேந்திரா சாரோட கதை. தனுஸ் ஏற்கனவே தனக்கு தானே குழியை தோண்டி மூடிகொண்டவர் என்பது தெரியும், இப்படத்தின் மூலம் பாலு மூடின குழியின் மேல் ஒரு பாரங்கல்லை வைத்து விடுகிறார்.
தியேட்டரில் என்னோட சேத்து 4 பேரு இருந்தார்கள்! (நாலாவது ஆளின் கையில் டார்ச் லைட் இருந்தது!).
இந்த கதைய கேட்டுட்டு குஜால் படம் என்று நினைபவர்களுக்கு. அந்த 7 நாளும் என்ன நடந்ததுன்னு இப்ப, இப்ப சொல்கிறேன்!
பாரா 4
======
முதல் நாள் காலையில் 7 மணிக்கு காலிங் பெல் அடிக்கிறது, பிரியா மணி கதவை திறந்து பாலை எடுக்கிறார். கதவை திரும்பவும் சாத்துகிறார், மெதுவாக கிட்சனுக்கு செல்கிறார். கேஸ் பற்ற வைக்கிறார். சட்டியில் பாலை ஊத்துகிறார். ஹாலுக்கு வந்து தனுஷ் தூங்கும் அலங்கோலத்தை பார்கிறார். புன்னகை பூத்தபடி தனுஷின் அழுக்கு ஜீன்சை எடுக்கிறார். அழுக்கு டி-ஷர்ட்டை எடுத்து முகர்ந்து பார்கிறார். திடீரென்று பால் கொதிப்பது ஞாபகம் வருகிறது (வீட்டில் பால் கொதிக்க எவ்வளவு நேரம் ஆகுமொ, அதெ நேரம் படத்திலும் ஆகிறது!). ஓடி சென்று பாலை அப்படியெ தூக்கிகிறார். கை சுட்டு விடுகிறது. தன்ஷ் ஓடி வந்து பர்னால் போடுகிறார். இருவரும் காபி குடிக்கிறார்கள்.காலை டிபன் தோசை சாப்பிடுகிறார்கள்., மதியம் முருங்கை காய் சாம்பார் சாதம் சாபிடுகிறார்கள். சாயங்காலம் திரும்பவும் காபி குடிகிறார்கள், டின்னருக்கு காலையில் செய்த தோசையை, மதியம் செய்த முருங்கை காய் சாம்பாரில் தொட்டு சாப்பிடுகிறார்கள். இப்படியாக நைட் நைட் லாம்ப் போடும் வரை செல்கிறது முதல் நாள்.
அதற்குபின் விளக்கமாக "காட்டி" இருந்தால் பரவாயில்லை. திரும்பவும் மறுநாள் காலிங் பெல் அடிக்கிறது. இதன் பிறகு நான் சொன்னால் என்னை அடி போடுவீர்கள் என்பதால் ஒரு ப்ரொக்ராம் போட்டு விடுகிறேன்.
for i = 1 to 7
read பாரா 4
next
இந்த ப்ரொக்ராம் எக்ஸிக்கியூட் ஆகி முடியும் போது எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த இடை வேலை வந்து விடுகிறது. தியேட்டரில் இருந்த 4 பேரில் இரண்டு பேரை காண வில்லை!
இடைவேளைக்கு பிறகு தனுஷ் காதலியை தேடி ஊட்டிக்கு போகிறார்... போகிறார்... போயிகிட்டே இருக்கார்...... ஊட்டி ரோடு மேப் உங்ககிட்ட இல்லாட்டி இந்த படத்தை பாருங்க. ஊட்டிக்கு உங்கள நடந்தே அலைச்சிகிட்டு போறாங்க.அதற்குபின் வரும் அபத்தமான கிளைமாக்ஸ் பற்றி சொல்ல விரும்பவில்லை.
முடிவில் ஒரு விசயம். பாலு சார்,
நீங்க மூன்றாம் பிறை, மூடுபனி போன்ற அருமையான படங்களை எடுத்தவர் தான்.
"அது ஒரு பொற்காலம்".
ஆனால் இப்போதெல்லாம் முதல் இரண்டு ரீலிலேயெ ஹீரோ ஹீரோயினுக்கு
கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்து, கிளைமேக்ஸில் அப்பனும் மகனும்
சேந்து வில்லனை அடிக்கிறார்கள்.
இது ஒரு "பாஸ்ட் புட்" காலம்.
ஒங்களை குறை சொல்லவில்லை, ரசிகர்கள் மாறி விட்டர்கள்,
அது திரையுலகின் "போறாத" காலம்.
தலைப்பிற்கேற்ப, ரசிகர்கள் தியேட்டரில் தூங்கிவிடுவதால்
அது ஒரு "கனா" காலம்
எதற்கும் அஞ்சாத சிங்கம் மா பெரும் மேதை சோ ராமசாமி.
எல்லா விஷயத்திலும் நன்கு அறிவு பூர்வமாக செயல்படும் ,வாதம் புரியும் சிலர், சோ ராமசாமி விஷயத்தில் மிக பெரிய தவறுகள் செய்கிறார்கள். இந்த அளவுக்கு சமூக பொறுப்புணர்ச்சி உள்ள பத்திரிக்கையாளர் இந்த நாட்டில் மிக குறைவு. கோயங்கா, சோ போன்றவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய பங்கு மிக பெரிது. ஜனநாயத்தின் மிக பெரிய தூண் என்று தன்னை தானே அழைத்துக் கொண்டு சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் மீடியா உலகில் சோ போன்றவர்கள் கொள்கை உணர்ச்சியோடு சீரிய முறையில் நடத்தி வருகிறார்கள்.
ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் என்றொ, அல்லது மக்கள் புத்திசாலித் தனமாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை. ஜன நாயகத்தின் ஒரு பெரிய குறை பாடுகளில் இதும் ஓன்று.
காரணம் எதுவும் இன்றி எதிர்ப்பது தவறு.(காரணம் இன்றி ஆதரிப்பதும் தவறு.) என்னுடைய ஆதரவுக்கு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். எதிர்ப்பவர்களால் ஆணித் தரமாக விமர்சிக்க முடிந்தால்(முடியுமா?), அதை ஏற்றுக் கொள்ள நான் தயாரகவே இருக்கிறேன்.
Tuesday, November 15, 2005
"வெடி" காசி
இப்படத்தினால் தீபாவளி பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கபட்டதாம்! ஏனென்றால் இப்படத்தின் CD'யை புல் வால்யும் வைத்து கேட்டாலெ ஒரு 10000 வாலா வெடித்த எபெக்ட் கிடைக்கிறதாம்,. அப்படி இறைச்சலில் நம்மை செவிடாக்குகிறார் தேவாவின் புதல்வர்.
உலக திரைபட வரிசையிலேயெ முதன் முறையாக, கதானயகனை காட்டும் முன்பெ அவன் செய்யும் தொழில் தெரிந்து விடுகிறது. கதானயகன் ஷ்ட்டரை வெல்டிங் கன் மூலமாக அறுத்து கொன்டு வெளிவருகிறார்!
டைரக்டர் பழமைவாதி என்பதற்காக "மனோகரா" லெவெலுக்கு போயிருக்க தேவையில்லை. படத்தின் பல காட்சிகள் 1978ஐ நினைவு படுத்துகின்றன. சில காட்சிகள் 1977ஐ நினைவு படுத்துகின்றன. பிரகாசமான ராஜ் அவர்கள் நன்றி கடனுக்காக பன்றியை விட கேவலமாக உபயோகபடுத்தபட்டுள்ளார்.
வழக்கம்போல ஒரு "எழுச்சி" ஊட்டும் டைட்டில் சாங்.(பாதி பேரு எழுந்து போய் விட்டதால்!). அட்லீஸ்ட் அதை இப்படி மாத்தி இருந்தால் மக்கள் உட்கார்ந்து பாத்து இருப்பார்கள்!
வாடா வாடா வாடா வாடா தோழா!
வந்து படத்த பாரு படத்த பாரு ரசிகா!
நீயும் கூட என் படத்த பாக்காட்டி
வேற எந்த நாயும் பாக்காதுடா ரசிகா!
ஒன்னோட உயர்வுக்கு ஒன்னொட வேர்வை
என்னோட உயர்வுக்கு "எங்கப்பனோட" வேர்வை
நம்ப எல்லாரோட வியர்வையும் ஒன்னா சேர்ந்தா...!
ஹை
ஹை
ஹை...
நாத்தம் தாங்காதுடா... மூக்க பொத்துங்கடா....
கோரஸ் : நாத்தம் தாங்காதுடா... மூக்க பொத்துங்கடா....
நீங்களும் T.ராஜேந்தர் மாதிரி கவிதை எழுதலாம்.
நான் சோத்துல போடுவேன் உப்பு.
..பண்ண மாட்டேன் தப்பு.
என் பையன் பேரு சிம்பு...
அவனுக்கு இருக்கு தெம்பு...
எங்கிட்ட வேணாம் வம்பு...
மாட்டுக்கு ரெண்டு கொம்பு..
நான் மட்டும் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு..
ஏ டண்டனக்கர டணக்குனக்கர...
ஏ டண்டனக்கர டணக்குனக்கர...
Monday, November 14, 2005
சன் TVயில் உங்கள் பேட்டி வர வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி.
1. உங்கள் வீட்டு குப்பையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் வெளியில் கொட்டுங்கள்.2. பக்கத்து வீட்ட்க்காரர்களையும் அவ்வாறே செய்யச் சொல்லுங்கள்.3. அதையெல்லாம் கொளுத்தி விட்டு "குஷ்பு ஓழிக , சுகாசினி ஒழிக" என்று கத்துங்கள்.3. சன் TV உடனடியாக வந்து அதை வீடியோ எடுத்துக் கொண்டு போய் TV யில் போடுவார்கள். " கொடும் பாவி கொளுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்ற தலைப்போடு.
வெகு விரைவில் ஜெயா TVயில் தோன்றுவது எப்படி என்ற கட்டுரை வரும்....
விடாது கருத்து...
பிரச்சினையெல்லாம் ஆரிப்போன பின்னாடி திருப்பி கிளப்பி விட்டிருக்காங்க ரெண்டு அம்மணிகளும். இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் வேற. மொத்ததுல எல்லாம் பக்கா சினிமா ஸ்டண்ட். முந்தில்லாம் இது மாதிரி எல்லாம் சினிமாவில மட்டும் தான் நடக்கும். இப்ப எல்லாம் நிஜத்திலயே நடக்குது.
தமிழன் ஒரு சிறந்த கலாரசிகன். அவனுக்குத்தான் உயர்ந்த (கூத்தாடி பயல்களையெல்லாம் ஆட்சியில் அமரவைக்கும் அளவுக்கு ரசனை உண்டு. கலையின் விலை அறிந்தவன்(300 ரூபா கொடுத்து படம் பார்க்கும் இளிச்சவாயன்) என்று அறிக்கை விட்டால் பிரச்சினை முடிந்து விடும்.
Sunday, November 13, 2005
Saturday, November 12, 2005
பிடிச்சுட்டாங்க....
இதுல புரியாத ஒண்ணு என்னன்னா வேற வழியில்லாததுனால விசாரணை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே மரண தண்டனை கிடையாதுங்குற உறுதி மொழிய கொடுக்க வேண்டியிருக்கு. இப்ப ஒரு போர்ச்சுகல் குடிமகன் இந்தியாவுக்கு குண்டு போட்டு மாட்டுகிட்டா மரண தண்டனை கிடைக்கலாம். அவன காப்பாத்த போர்ச்சுகல் நாடால முடியாது. ஆனா அபு சலீம் மாதிரி இந்திய குடிமகன் குண்டு போட்டுட்டு இந்தியாவில் இருந்து போர்ச்சுகல் ஒடிட்டா அவன போர்ச்சுகல் நாடு மனித உரிமைய காரணம் காட்டி காப்பாத்திரும். செத்து போன அப்பாவி மக்களுக்கெல்லாம் மனித உரிமை கிடையாதா? இந்தியாவில இந்தியன் பண்ண குற்றத்துக்கு என்ன தண்டனை அப்படின்னு நிபந்தனை விதிக்க போர்சுகலுக்கு உரிமை உண்டா?. இந்த மாதிரி நிபந்தனையினால போர்சுகல் தன்ன ஒரு மனித உரிமை டுங்கியா காட்டிக்க பயன் படுமே தவிர ஒரு பிரயோஜனமும் கிடையாது.
Friday, November 11, 2005
Thursday, November 10, 2005
அன்னியன் - கலைஞர்.....
Tuesday, November 08, 2005
பழைய பேப்பர் கடை..

1. அம்மா நடத்திய கின்னஸ் கல்யாணம்.
கின்னஸ் பத்திரிக்கையிலிருந்து சில வரிகள்- "Jayalalitha Jayaram, a movie star and former chief minister of Tamil Nadu, India, hosted and paid for a luncheon for over 150,000 guests at the wedding of her foster son, V.N.Sudhakaran to N.Sathyalakshmi. The banquet was served by the coast in the state capital, Chennai, on 7 Sept 1995. "
இந்த விஷயம் ஒரு கின்னஸ் ரெக்கார்டு என்பது ஒரு பெரிய கொடுமை. ஆதக் காட்டிலும் பெரிய கொடுமை இந்த விஷயம் ஒரு கின்னஸ் ரெக்கார்டு என்பது ஒரு பெரிய கொடுமை. ஆதக் காட்டிலும் பெரிய கொடுமை
http://www.prideofindia.net/guiness.html வெப்சைட் இதை இந்தியாவின் பெருமையாக கருதுவது.
2.கலைஞரின் படங்களில் சரியான பாப்புலர் படம்.

3.அம்மா அய்யருக்கு வைச்ச ஆப்பு..."தைரியம் இருந்தா இங்க சொல்லுடா.."
ஸ்டேட்மென்ட் கலெக்க்ஷன்.
1. ஜெயலலிதா மேல கேசா?(உலக்ஸ் ஊருக்கு சொன்னது)
2. ஒரு தனிப்பட்ட மனிதனை பற்றி அநாகரிமாக எந்த நாயும் சொல்லக்கூடாது(ராமசாமி ராமதாஸ் பற்றி)
3. நாங்கள் தனியாக நின்று ஜெயிக்க் கூடிய தொகுதிகள் 25. எங்கள் ஆதரவோடு ஜெயிக்க கூடிய தொகுதிகள் 40. மொத்ததில் 65 தொகுதிகளில் நாங்கள் தான் டிசைடிங் ஃவாக்டர். எனவே அ.தி.மு.க எங்களுக்கு 2 சீட் கொடுக்க வேண்டும்.(லத்திஃப் அ.தி.மு.க கூட்டணி பற்றி)
4. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அது கட்சியுனடைய கருத்தல்ல.(எல்லா கட்சிகளும்).
5. எனக்கும் பின்லாடனுக்கும் தொடர்பு இருக்கிறது.(வீரப்பனோடு தொடர்பு உண்டு என்ற ஜெயலலிதா குற்றச்சாட்டிற்கு கலைஞரின் பதில்).
6. நான் என்ன அவங்களோட வளர்ப்பு மகனா?(ஜெயலலிதாவுடன் இருப்பது தனிப்பட்ட விரோதமா? என்ற கேள்விக்கு கலைஞரின் பதில்)
Monday, November 07, 2005
சாணி அடிப்பவர்கள் இங்கே அடிக்கவும்.
உங்களுக்கும் எழுதுவதற்கு ஆசையாக இடுந்தால் களத்தில் குதியுங்கள். எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். உஙக்ளுக்கு ஒரு ஐடி உருவாக்கி தருகிறேன்.
விரைந்து வாருங்கள்.
நான் ஒரு முட்டாளுங்க
ப்ரொஜெக்ட பன்னாம ஊர்வம்பு பேசிக்கிட்டு
ஆணவத்தில் ஆடிக்கிட்டு அடிகுரலில் பேசிக்கிட்டு
அடுத்தவனை எல்லாம் அடிமட்டம் தடிக்கிட்டு
ஊருக்குல்ல பலபேரு திரியிரானுன்க, வெரும்
ஓபீ அடிச்சே பொலைக்கிரானுன்க
தானா எதயும் கிழிக்கமாட்டனுக
அட தள்ளியும் கூட படுக்கமாட்டனுக்
அடுத்தவன் ஏதாவது ஐடியா சொன்னா
அதுலஆயிரும் குறை கண்டுபிடிபானுன்க
அவிஙகிட்ட நாம ஏதும் உதவி கெட்டா சும்மா
அடியில ஒன்ன போட்டெ மிதிப்பானுன்க
இவனுஙக மத்தியில இத்தனகாலம் நான்
இருக்கிறதே பெரிய சாதனை தானுங்க
இவனுன்கெல்லாம் பெரிய புத்திசாலின்னா..............!!!!
.
.
.
.
.
.
நான் ஒரு முட்டாளுங்க!
என்ன ஆச்சு ஆயிரம் கோடி?
கடல் நீரை குடி நீரா மாத்துர திட்டம்னு ஒண்ணு போட்டாங்க... நம்மாளு கணக்குப்பிள்ளை சிதம்பரம் ஆயிரம் கோடி அறிவிச்சாரு.... கலைஞரும் அறிக்கை விட்டாரு நான் தான் காரணமுன்னு.. எங்கய்யா வந்துச்சு காசு?...
அம்மா ஆட்சி நடக்கிற வரைக்கும் ஸ்டேட் கவர்மெண்ட் திட்டத்துக்கு எல்லாம் காசு கொடுக்க வேணாம்னு தமிழர் தலைவர் சொல்லிட்டார்.
அதுனாலதான் சேது சமுத்திர திட்டம் மட்டும் தொடங்கிருச்சு. மத்த திட்டமெல்லாம் சும்மா கிடக்கு..இப்படியா தமிழனுக்கு நல்லது பண்ணாறாரு மஞ்ச துண்டு..
ஊரெல்லாம் மழையில முங்க சன் டீவிகு பயங்கர சந்தோஷம்.. இது தான் சாக்குண்ணு எல்லாத்தையும் வீடியொ எடுத்துட்டு அம்மா ஆட்சியில எல்லாம் முங்கிருச்சுண்ணு பில்ம் காட்டுது.இன்னும் கொஞ்சம் நாசம போயிருந்தா , இன்னும் நல்லா அம்மா ஆட்சிய திட்டலாமுன்னு இன்னும் கொஞ்சம் பெய்யாதன்னு பாத்திட்டு இருக்காங்க போல...
இந்த நல்ல ம்னுஷங்க பண்ணுரது போதாதுண்ணு தன் பங்குக்கு சேது சமுத்திர திட்டத்துக்கு என்வ்ரிரான்மெண்ட் க்ளியரென்ஸ் நிறுத்தி வைச்சிருக்கு பச்ச சேலை..
இப்படி ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு தமிழனுக்கு நல்லது பண்றாங்க..
இவ்வளவுக்கும் நடுவில தமிழன் கோகிலா எங்க போறான்னு பாத்துகிட்டு இருக்கான் ரொம்ப பொறுமையா.
Saturday, November 05, 2005
எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்?

நம்ம ஆட்கள் இலங்கைய போட்டு சட்னி ஆக்கிட்டு இருக்கும் போது பழய கேப்டன் கங்குலி ஜிம்பாப்வே போர்டு ப்ரெஸிடண்ட் டீமுக்கு எதிரா ஈஸ்ட் ஸோன் டீமை லீட் பண்ணுகிறார்...
நம்ம ஆட்கள் இலங்கைய போட்டு சட்னி ஆக்கிட்டு இருக்கும் போது பழய கேப்டன் கங்குலி ஜிம்பாப்வே போர்டு ப்ரெஸிடண்ட் டீமுக்கு எதிரா ஈஸ்ட் ஸோன் டீமை லீட் பண்ணுகிறார்...
எதிராளி நோஞ்சானா இருந்தான்னா தூக்கிப் போட்டு மிதிக்கிரது அதுவே நல்ல டீமா இருந்தா வாலை சுருட்டிக்கிட்டு பெவிலியன்ல போய் உக்கார்ரது... எலய் புதுசா எதவது பண்ணுங்கப்பா.
நட்வர் சிங் காசு அடிச்சுட்டாரு.... பதவிய விட்டு தூக்கு.. அப்படிண்ணு ராகம் பாடுது பி.ஜே.பி.. இவங்காளு கை நீட்டி காசு வாங்கினது வீடியாவில் வந்துச்சே ... அப்ப ஏன் இந்த ஆக்க்ஷன் எடுக்கல?
எல்லாம் ஏமாத்திர கூட்டம்... பேசாம திருப்பதி உண்டியல திறந்து நாட்டு ஏழை மக்களுக்கு அர்ப்பணம் செஞ்சிறன்ணும்...
Tuesday, November 01, 2005
என்ன நடக்கும் அடுத்த எலெக்ஷனில்?
தமிழ் நாட்டுல இப்ப அம்மா புண்ணியதுல எல்லாம் இலவச மயம். எல்லாம் தேர்தல் வரைக்கும்னு நமக்கு தெரியாதா?. ஆனா இந்த தடவை அம்மாவுக்கு எதிரா கூட்டணி பலமா இருக்கிற மாதிரி தோணுனாலும் ம்.ஜி.ர் ஜெயிச்சதை மறக்ககூடாது.
கூட்டணியை தக்க வச்சா கருணா நிதி ச்டாலினை முதல்வர் ஆக்குவாரு... இப்ப இந்த எலெக்க்ஷனை விட எதிர்காலம் அம்மாவுக்கு சாதகமா இருக்கு...
கலைஞருக்கு அப்புறமா வைகோவோ , ச்டாலினோ, வாசனோ அரசியல் பண்ண முடியாது.இவனுகளுக்கு மக்கள் ஆதரவு கிடையாது.
நாடு இருக்கிறா நிலமையில கூ த்தாடிபயல்க கூட ஜெயிக்கலாம்.
ஒரு புரட்சியும் பண்ணாம தலைவராகிற இந்த தருதலை பயல்கள்... இவனுகலடோ ரசிகர்கள் ஆட்சி அமைச்சா தமிழ் நாடு சட்டசபைல இன்டெர்வல் போட்டு முறுக்கு விக்கிறது எல்லாம் நடக்கும்.
திருப்பி ஆராம்பிச்சாச்சு...
ந்ம்முர் மேட்டர் : புதுசா ஒரு கூத்தாடி பய கட்சி ஆரம்பிச்சானா.. மக்களுக்கு நல்லது பண்ணப் போறானாம்... ஏலய் நீங்க ஒண்ணும் ... டுஙக வேணாம்... சினிமா எடுக்காம இருஙக... நாடு தானா உருப்படும்.
பங்க்சு மக்களே...உங்களை இனிமே ப்லாக் மூலமா அறுக்கிறேன்.
Life In Montreal
Sunday, August 14, 2005
Australian Team Performance
would be first captain to loose the ashes after a long time. Top order not doing well, Inconsistent performance of Lee, Very poor performance of Gillespie besides poor fielding have remained big problems for Australia. That said Australia defeated England in the first test and gave England a run for their money in the second.
With doubts raised over the dismissal of Kasprowiz(Replays showed that Kasprowiz was not out indeed),England got the decision in their favour. Weather that luck would stay with them till the end of the series remains to be seen.
Because , Australians still have the talent to come back. But the recent reports that there are conflicts with in the team is doing no good for them either. Immediate denials have from Mcgrath, Gilgrist while Ponting and Warne are yet to respond, Clearly indicating that there were bitter incidents if not major disputes.
Sunday, March 13, 2005
Yet Another Election::::::
2.Womens's day was celebrated. While being neutral, At this rate if we start celebrating .... there would be no need for sunday,monday,tuesday.... All days will have some unique identifier...Womens'day,Men'sday, Doctor's day, Patients day, Nurses day ... and so on.


