Saturday, January 07, 2006

குல கல்வி திட்டம்.

ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அழித்து நாசமாக்கியிருக்கும் இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு திராவிட இயக்கங்கள்,சுயமரியாதை இயக்கங்கள் முக்கிய காரணம். துவக்க பட்ட நோக்கத்தில் இருந்து இன்று இந்த இயககங்கள் வெகு தூரம் சென்று விட்டாலும் இம்மாதிரி சமுதாயத்தில் மக்களை அடிமையாகவே வைத்த்ருக்கும் திட்டங்கள் முறியடிக்க பட்டதற்கு திராவிட இயக்கங்கள் மிக முக்கிய காரணங்கள். சுதந்திர நாட்டில் மக்களை இழிவு படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இந்த திட்டங்கள் தோல்வி அடைந்ததற்கு தமிழகம் திராவிட இயக்கங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இப்படி இழிவு படுத்த பட வேண்டிய இராசாசி(சீ), இன்றும் போற்ற படுவது வேதனைக்குரியது.

4 comments:

ENNAR said...

//"மாணவ_மாணவிகளுக்கு தினம் அரை வேளைதான் படிப்பு. மீதி அரை நேரம், ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும்" என்பதே ராஜாஜியின் கல்வித்திட்டம்.

2 ஷிப்டுகளில் பள்ளிக்கூடம் நடத்தி, அதிகமானவர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார்.

"என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா?" என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர்.

"அப்பா செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்றுக்கொள்ளலாம்" என்று ராஜாஜி பதிலளித்தார்.//
கற்றுக் கொள்ளலாம் என்று தான் சொன்னார் அதையே தொடர்ந்து செய்யச் சொல்ல வில்லை. அரசியலில் ஆதாயம் பெற மாற்றுக் கட்சியினரால் இதை பெரிது படுத்தி பூதாகாரமாக்கினர்.
ராஜாஜி அன்று சொன்னது இன்றும் நடக்கிறது கட்சித்தலைவர் மகன் அவருக்கு பின் அந்த கட்சித் தலைவர் , நடிகர் மகன் நடிகர், மந்திரி மகன் மந்திரி கிட்டத்தட்ட இதுவும் குலத்தொழில் மாதிரி அன்று எதிர்த்தவர்கள் 'நான் அன்று எதிர்த்தேன் இன்று எனது மகனுக்கு மந்திரி பதவி வேண்டாம்' என யாரும் கூறவில்லை டாக்டர் மகன் டாக்டர் தான். எஞ்சினியர் மகன் எஞ்சினியர் தான் அவர் என்ன சொன்னார் பாதி நேரம் ஏதாவது தொழில் கற்றுக்கொள்ளுங்கள் என்றார் இவர்கள் கேட்டதற்கு தந்தையுடன் கூட இருந்து உதவிசெய்யட்டும் அதை கத்துக்கொள்ளட்டும் என்றார் COLLECTOR வேலைக்குப் போக வேண்டாம் என்றா சொன்னார்?, அதாவது ஒன்று கிராமத்தில் சொல்லவார்கள் ஆகாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என. இதை பெரியார் சொல்லியிருந்தால் ஆகா ஓகொ என புகழ்ந்திருப்பார்கள் சொன்னவர் பார்ப்பணர் என்ற ஒரே காரணத்தால் அன்று எதிர்த்தனர். பார்பணிசியம் என்பது வேறு அதில் எனக்கு உடன்பாடு கிடையாது அதை இதோடு இணைக்கக்கூடாது. சொன்னதை சொன்ன கருத்து நல்ல கருத்து என்றால் யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ராஜாஜி சொல்வதற்கு முன்னமே நாம் அந்த வேலையைத்தான் செய்தோம் பள்ளிகூடம் விட்டது வயலுக்கு போனோம், ஒவ்வொருவரும் அப்டித்தான்.
ஒரு மாணவன் 6 மணிநேரம் தொடர்ந்து படிக்க முடியாது 4 மணிநேரம் படித்து விட்டு மீதி நேரம் ஏதாவது தொழில் கத்துக்கொள்ளட்டும் என்பது நல்ல திட்டம்தான்.

dondu(#11168674346665545885) said...

ராஜாஜி அவர்களின் சீர்திருத்தக் கல்வித் திட்டத்தைப் பற்றி நான் போட்ட இப்பதிவே உங்களுக்கு நான் இடும் பின்னூட்டம்.

மலர் மன்னன் அவர்கள் திண்ணையில் எழுதியதையும் பாருங்கள். அக்காலக் கட்டத்தில் அவர் நிருபராகப் பணியாற்றியவர்.

என்னுடைய இப்பின்னூட்டம் என்னுடைய இதற்கானப் பிரத்தியேகப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மலர் மன்னன் என்பவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். காரணம் அவர் ஒரு பார்ப்பனர். தவிர அவருக்கு இஸ்லாமைக் கண்டால் பிடிக்காது. அவர் திண்ணையில் இஸ்லாமியர்களை கண்டபடி எழுதுவதை தினமும் படித்து வருகிறேன்.

Amar said...

"குல கல்வி" திட்டம் என்பது எதிர்க்கபட வேண்டிய ஒன்று.

அனால் உன்மையில் ராஜாஜி என்ன சொன்னார், எதை நினைத்து சொன்னார் என்பது எனக்கு தெரியவில்லை.

இதே ராஜாஜி சாதி விசயங்களில் என்ன பேசியுள்ளார் என்று நாம் படித்து பார்த்தால் அவரின் நோக்கம் நமக்கு தெளிவாக புரியும் என்று நினைக்கிறேன்.

திராவிட இயக்கங்கள் வழி மாறி சென்று வருடங்கள் பல ஆகிவிட்டது.

அன்னா ஒரு வேளை இந்த "திராவிடம்" என்ற போலி identityஐ சமுக சீர்திருத்தங்களுகாக கையில் எடுத்தாரோ என்றும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.