Thursday, May 04, 2006

தேர்தல் - 2060.

ஆராய்ச்சியாளர்கள் பெட்டியை தோண்டி எடுக்கிறார்கள். உள்ளே இருந்து வெளிவருகின்றனர் துக்ளக்கும் பதூதாவும்.

ஆராய்ச்சியாளர்கள்:
ஆகா, ஆகா, துக்ளக் கிடைத்து விட்டார்!!!!!.
துக்ளக்: நீங்கள் எங்களை தோண்டி எடுப்பீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
எப்படி தெரியும்?
ஒரு விஷயம் நடந்த பின்னர், இது எனக்கு முன்னாடியே தெரியும் என்று கூறுவது நான் கடைபிடிக்கும் வழக்கம். எனது மந்திரிகளை கூப்பிடுங்கள்.

உங்கள் மந்திரிகளா?. ஐயா, இது இப்போது ஜனநாயக நாடு. இப்போது பல கட்சிகள் இருக்கு. எல்லாரும் சேர்ந்து ஒரெ ஒரு கூட்டணி அமைத்து விட்டார்கள். அவர்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்கம் அமைப்பார்கள். இது தான் ஜனநாயகம்.

ஜனநாயகம் என்றால் மக்கள் அல்லவா தேர்ந்த்தெடுக்க வேண்டும்?

அதெல்லாம் ரொம்ப பழைய கதை. அதுனால கட்சிகள் ரொம்ப சிரம பட்டு போயிட்டாங்க. கட்சியாட்கள திருப்தி படுத்தணும். ஜாதி பார்த்து ஆளை நிறுத்தணும். வோட்டு போடவே வராத மக்கள் வேற் இருக்காங்க. வோட்டு போடுற ஆட்கள திருப்தி படுத்தணும். சினிமா காரங்க பின்னாடி ஒடணும். இதேல்லாம் ஒவ்வோரு தேர்தலுக்கும் பண்ணணும். கடைசிலா பார்த்த லாபம் கம்மியா போச்சு எல்லாருக்கும். அதனால் ஈஸ்பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மாதிரி கூட்டணி அமைச்சு சட்ட திட்டத்தை மாற்றி விட்டார்கள்.

என்னவென்று?

இனிமே எல்லா கட்சி தலைவர்களும் சேர்ந்து சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.அது தான் தேர்தல். அது தான் இப்ப நடக்க போவுது?


இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

எங்க சார், அவங்களே நிறைய பேர் ஜாதி, மதம் சண்டை போட்டுகிட்டு இருக்காங்க. முன்னேறினவுங்க மத்தவுங்கள பத்தி கவலை படறது இல்லை. எல்லாத்துக்கும் மேல ரொம்பவும் ஒண்ணும் வித்தியாசம் இல்ல. அவங்க முன்னாடி ஒட்டு போட்டாங்க. இப்ப அதுவும் இல்லை. நிறைய பேருக்கு வேலை இல்லாம போச்சு. தலைவர்களும் ஊரு ஊரா சுத்தாம நிம்மதியா ஓய்வு எடுத்து கிட்டு இருக்காங்க. உள்ளுர் பிரச்சினை, அயல்நாட்டு பிரச்சினை இது எதுலயும் எந்த கருத்தும் சொல்றது கிடையாது.

-என்னது நாங்க தேர்தல்ல போட்டி இடலாம், பிரதமராக ஆகிடலாம்னு பார்த்தா அது முடியாது போல இருக்கே..

என்ன சார் நீங்க, இன்னமும் எந்த காலத்திலயோ இருக்கிங்க.

இதை நான் மாற்ற வேண்டும். மாற்றுவேன்.பதூதா, உடனடியாக ஏதேனும் யோசனை கூறு?

அரசே , ரொம்ப எளிது. இந்த தலைவர்களும்,மக்களும் புகழ்ச்சிக்கு மயங்கும் முட்டாள்கள். ஒவ்வொரு கட்சி தலைவரிடமும் சென்று , நீங்கள் தனியாகவே வெற்றி பெறலாம். நீங்கள் யாரையும் நம்மி இல்லை. 2006 தேர்தல் முறையை கொண்டு வந்து நீங்கள் மட்டும் ஆட்சியில் இருங்கள் என்று கூறுங்கள். இதை எல்லா தலைவரும் நம்புவார்கள். இதை சில நடிகர்களும் நம்புவார்கள். 2006 முறை திரும்ப வரும்.


2006 முறை திரும்ப வரும்.ஆனால் நாம் வெற்றி பெறுவோமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று கூறுங்கள்.

மக்கள் அதனை நம்ப மாட்டார்கள். மேலும் நம்மை முட்டாள் என்று கூறுவார்கள்.

1 ரூபாய்க்கு பெட்ரோல், 50 பைசாவிற்கு அரிசி, எல்லாருக்கும் இலவச செல்போன், படித்தவர்களுக்கு வேலை, படிக்காதவர்களுக்கும் வேலை, பெண்கள் , ஆண்கள் , அனைத்து ஜாதி மக்களுக்கும் இட ஒதுக்கீடு என்று கூறலாம்.

நன்றாக உள்ளது. ஆனால் இது போதாது. அதிரடியாக இருக்க வேண்டும். என்ன செய்யலாம்?
100 கோடி மக்களையும் வெளிநாட்டுக்கு அனுப்புவேன். எல்லாரும் வெளிநாட்டுக்கு போய் நிம்மதியாக இருங்கள் என்று வாக்குறுதி கொடுக்கலாம். மக்கள் இதை நம்புவார்கள்.

கொஞ்சம் பரவாயில்லை. இன்னமும் நிறைய அழுத்தமாக சொல்.
எல்லா பெண்களுக்கும் பட்டு சேலை, 10 பவுன் நகை என்று அறிக்கை விடுங்கள்.

துக்ளக் வென்று ஆட்சி அமைக்கிறார்.

5 comments:

Sivabalan said...

// லாபம் கம்மியா போச்சு எல்லாருக்கும் // Good.

Good blog!! Keep up!!

Very Interesting to read!!

நாமக்கல் சிபி said...

நல்ல கற்பனை பாலசந்தர் கணேஷ்!
பாராட்டுக்கள்!

:))

குசும்பன் said...

//என் ப்லொக்கிற்கு வருகை தந்ததற்கு நன்றி. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது நானும் என் நண்பர்களும் நடத்தி வந்த மாத பத்திரிக்கை. இப்பொது வெப் வடிவம் பெற்றுள்ளது.//

ஆமாம் உங்க நண்பர்கள் யார் யார்? காணவேயில்லியே? ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக நீரே கலக்குறீரே ;-)

குசும்பன் said...

என்னா சிபி ஸார்,

பின்னூட்ட நகல் தகவலைக் காணோம்! ஆமாம் நீங்க போலி சிலி இல்லைதன்னே...

அட ஒரு கன்பர்மேஷன் சாரே!

நாமக்கல் சிபி said...

ஒரிஜினல் சிபிதான்.

இன்னும் போலி உருவாகவில்லை. அவருக்கும் நமக்கும் எந்த நேரடி சண்டையும் இல்லை. அதனால் அந்த அச்சம்(!?) எனக்கு இல்லை.

தவிர போலியாரின் எழுத்து நடையை வைத்து மக்களே புரிந்து கொள்கிறார்கள்.எனவே நகல் எல்லாம் தேவையா இனி?