Friday, July 28, 2006

இது ஒரு சோதனை பதிவு-விகடன் ஃபான்டுக்காக

Mèì¡ ç𣡆 கொ‡´ ‘â¿îŠð†ì ðFவு Þ¶. ‘âîŸè£è Mèì¡ ç𣡆, ãŸèù«õ »Qகோ† ï¡ø£èˆî£«ù Þ¼è£ø¶, தே´õ »Qகோ† ù Cø‰î¶ ‘â¡ø Gò£òñ£ù ‘â‡íƒèœ õரô£‹. Ýù£™ Mèì¡ ç𣡆 𣘊ð மிèவு‹ ï¡ø£è ޼裡ø¶. ‘âù«õ Üî¡ மி¶ å¼ è£î™. ÜîŸè£èˆî£¡ Þ‰î «ð£ó£†ì‹. ‘â™ô£ ‘⿈¶‚‚ளாÞ»‹ தே® கொ‡´ õ‰¶ ªð£¼ˆ¶‹ «õ¬ô Þ¡ùº‹ º®òM™¬ô. Ýù£™ ªõŸறி èரñ£è ï쉶 கொ‡®¼è£ø¶.

Thursday, July 27, 2006

விகடன் ஃபான்ட் கொண்டு எழுதப்பட்டது.

இந்த வரி வழக்கம் போல யுனிகோட் கொண்டு எழுதப்பட்டது.
கழுகார் உள்ளே
கீழே உள்ள வரி விகடன் ஃபான்ட் கொண்டு எழுதப்பட்டது.

è¿è£˜ àœ«÷

எனக்கு பிடித்த திறந்த மூலங்கள்-இலவச மென்பொருட்கள்.

எனக்கு பிடித்த திறந்த மூலங்கள்-இலவச மென்பொருட்கள்.

எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்ற சில மென்பொருட்களின் தொகுப்பு. இவற்றை பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் எனக்கு இரண்டு ஆள் பலம் வந்து விட்டது. அவ்வளவு சிறப்பாக உள்ளன. அது மட்டுமின்றி இவையனைத்தும் திறந்த மூலம்/இலவசம் வகை சார்ந்தவை.

1. வின்மெர்ஜ்-WinMerge
இது இரண்டு ஃபைல்களை ஒப்பிட்டு பார்க்க பயன்படுத்தும் ஒரு திறந்த மூலம். மிக வேகமாக செயல்படுகிறது. ஒப்பிட்டு பார்க்கும் போது -ஏதேனும் மாற்றங்களை நீங்கள் செய்தால் ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்கிறது.

கிடைக்கும் இடம்:http://winmerge.sourceforge.net/

2. மைஜெனரேஷன்.-MyGeneration
நான் பார்த்ததிலேயே ஒரு மிக சிறந்த கோட் ஜெனரேட்டர். பொதுவாக கோட் ஜெனரேஷன் வகை டூல்கள் தங்களுக்குள் முன்னதாக டிஃபைன் பண்ண பட்டிருக்கும் லாஜிக் படி மொத்தமாக கோட் ஜெனரேட் பண்ணும். சில கமெர்ஷியல் ப்ராடக்ட்கள் ஒரு சில டிஎல் எல் ஃபைல்களை ரெஃபர் பண்ணி கோட் ஜெனரேட் பண்ணும். அதாவது பேஸ் க்ளாஸ் கோட் அந்த டி எல் எல் ஃபைல்களில் இருக்கும். அந்த கோட் என்ன என்பது நமக்கு தெரியாது. அந்த பேஸ் கிளாஸ்களை இவர்கள் இன் ஹேரிட் செய்து கோட் எழுதுவார்கள். இதனால் நீங்கள் ஒரு தேர்ட்பார்ட்டி டிஎல் எல்லை பயன்படுத்த வேண்டிய கட்டயாத்திற்கு உள்ளாக்க படுவீர்கள். ஆனால் இந்த இலவச மென்பொருள் டெம்ப்ளெட் பயன்படுத்தி கோட் ஜெனேரட் செய்கிறது. உங்கள் தோதுக்கு கோட் ஜெனெரேட் பண்ணலாம். ப்ளாக்கர் டெம்ப்ளேட்கள் நிறைய கிடைப்பது போல, இங்கும் நிறைய மாடல் டெம்ப்ளேட்கள் உள்ளன. எளிதாக பயன்படுத்தி மின்னல் வேகத்தில் ஆயிரக்கணக்கான லைன்களை ஜெனெரேட் பண்ணலாம். கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய டூல்.

கிடைக்கும் இடம்:http://www.mygenerationsoftware.com/portal/default.aspx

3. ஆரெஸெஸ் பாப்பர்-RSS Popper
அவுட்லுக் பயன்படுத்துபவர்களுக்கான இலவச ஆர்ஸெஸ் ரீடர்.
கிடைக்கும் இடம்:http://rsspopper.blogspot.com/

4. ஸ்லிக்ரன்-SlickRun
இதை பற்றி விரிவாக ஏற்கனவே எழுதியுள்ளேன். மீண்டும் சில வரிகள். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்கள், ஃபைல்கள், எக்ஸிக்யூட்டபிள்கள் அனைத்தையும் கீ-வேர்ட் பயன்படுத்தி லான்ஞ் பண்ண உதவும் டூல். பலவற்றை ஒரே கீ-வேர்ட் வைத்து திறக்கலாம். உதாரணமாக நான் காலையில் அலுவலகம் வந்த உடன் இதில் ஃப்ராஜக்ட் என்று அடிப்பேன். உடனடியாக டோட் (ஆரகிள் டூல்), அவுட்லுக், டெஸ்ட் டைரக்டர் , எக்ஸ்ப்ளோரர், கம்பெனி இன்ட்ரானெட் அனைத்தும் லான்ச்சாகி விடும்.

கிடைக்கும் இடம்.http://www.bayden.com/SlickRun/


5.டு-டூ லிஸ்ட்-ToDo List
நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிட ஒரு எளிமையான டூல். திறந்த மென்பொருள் வகை சார்ந்தது.
கிடைக்கும் இடம்:http://www.abstractspoon.com/

பயன்படுத்தி பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்!!!!

Wednesday, July 26, 2006

குழலியை கிண்டல் பண்ணுகிறார் மாயவரத்தான்

http://kuzhali.blogspot.com/2006/07/blog-post_24.html

http://mayavarathaan.blogspot.com/2006/07/369.html

குழலியை கிண்டல் பண்ணுகிறார் மாயவரத்தான்(அதாவது அப்படின்னு நினைத்து கொண்டிருக்கிறார்.)

ஏன் இப்படி கூட கிண்டல் அடிங்களேன்,
பஸ்ஸில்,
இந்த சீட்ல உக்காராதீங்க
ஏங்க,
இது டிரைவர் சீட்,
டிரைவருக்கு மட்டும் தனி சீட்டா? என்னய்யா அநியாயம் இது... எல்லாருக்கும் டிரைவர் சீட் கொடுங்க


அப்படின்னு!!!

வெறுமனே மரபுகள் கடைப்பிடிக்க பட்டால் என்ன ஆகியிருக்கும் என்பது குழலியின் பதிவில் வெளிப்படுகிறது. சரியில்லாத மரபுகள் மாற்றபட வேண்டியவே என்பதில் சந்தேகமில்லை. அதை தான் குழலி வலியிறுத்தி உள்ளார். மாயவரத்தான் அதனை கிண்டலடிக்க இன்னமும் சிறந்த வழி கண்டு பிடிக்க வேண்டும். ( அதாவது அவரால் முடிந்தால்)


இது மாயவரத்தான் பதிவில் பின்னூட்டமாகவும் இடபட்டுள்ளது. மற்றவர்களின் பின்னூட்டம் பார்த்தேன். கடற்புரத்தான் அதனை நியாயமாக விமர்சனம் செய்துள்ளார் . ஜயராமன் , எஸ்கே பாராட்டி உள்ளனர் எதிர்பார்த்தது போலவே. தமிழ்பதிவர்களில் பலர் பதிவிற்காக பின்னூட்டம் இடுகிறார்களா அல்லது பதிவர்களுக்காக பின்னூட்டம் இடுகிறார்களா.ப்ரிடிக்டபிளாகவே உள்ளது பலரின் கருத்துக்களும் பின்னூட்டங்களும். சர்ச்சை சண்டை தவிர்க்க விரும்பினாலும் சில இடங்களில் இந்த மாதிரி பின்னூட்டங்களையும் , பதிவுகளையும் நான் இட வேண்டியுள்ளது.

அரசு சர்வாதிகார முகத்தை தொடங்கியுள்ளது.(???)

இவ்வாறாக வர்ணித்துள்ளது ஜூனியர் விகடன். எதை தெரியுமா?. சற்றே முன்னர் வலைபதிவுகள் தடை செய்யபட்டதை. முதலில் வலைப்பதிவுகள் தடை என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அது தற்காலிகமானது. மேலும் ஒரு சில வலைபதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து தடை செய்வதில் இருந்த நடைமுறை பிரச்சினைகளை மனதில் கொள்ளாமல் இவ்வாறு விமர்சனம் செய்வது சரியா?
வலைபதிவுகள் என்பது இன்னமும் ஒரு சில பிரிவினரால் மட்டுமே பார்க்கபடுகிற, ஒரு சிலர் மட்டிமே கலந்து கொள்கின்ற ஒன்று. பல தேசநலன் கருதிய காரணங்களுக்காக இணையத்தில் கட்டுபாடு எடுக்க அரசு முயலும் போது, சில விஷயங்கள் சற்றே அதிகப்படியாக அமையலாம். நோக்கத்தை மனதில் கொண்டு மக்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
நாட்டின் நலன் கருதி செய்யபடுகின்ற காரியங்களை , சற்றே சிரமங்கள் இருந்தாலும் மக்கள் அதனை பொருட்படுத்த கூடாது. இவ்வாறு கூப்பாடு போடுகின்ற பத்திரிக்கைகள் உண்மையில் அடிப்ப்டையான உரிமைகள் சமூகத்தின் பல பிரிவினருக்கு வழங்கபடாத போது எங்கே போயின?
வலைப்பதிவுகள் சில நாட்கள் தடுக்கபட்டதால் என்ன கெட்டது நேர்ந்து விட்டது? ஒரு சில வசதி குறைவை தவிர வேறு ஏதுவும் பெரிதாக நடந்து விடவில்லையே. எல்லாவற்றையும் விட இது சர்வாதிகாரம் என்று அழைப்பது சரியா?
நடுவர் மன்றம் தீர்ப்பை மதிக்காத அரசாங்கம் இங்கு இல்லையா?. இந்த அரசாங்கங்கள் இவ்வாறு கண்டிக்க பட்டனவா? தமிழ் தொலைக்காட்சி சானல்கள் தடுக்கபடவில்லையா? அப்போது இந்த வார்த்தைகள் வரவில்லையே? பெருந்தலைவர்கள் கைது செய்யபடும்போதோ அல்லது பெருந்தலைவர்கள் மறைந்த போதோ சமூகமே பாதிக்கபட்டதே.. அப்போது இந்த வார்த்தைகள் வரவில்லையே!!
ஒரு தனி மனிதனின் சுதந்திரம் என்பது சமூக நலனுக்கு கட்டுபட்டதே. நாட்டிற்காக நாம் சில சமயங்களில் அதை தியாகம் செய்தவதை பொருட்படுத்த கூடாது. பெருந்தவறுகளை கண்டும் காணாதது போல இருந்து விட்டு, அல்லது அடுத்த வீட்டுகாரரிடம் , எதிர்த்து வீட்டு காரரிடம் விவாதித்து விட்டு, பதிவில் கிண்டலடித்து விடுவதையே நாம் சமுக பொறுப்பாக கருதுகிறோமா?
பெரிய தவறுகளுக்கு வாய் திறக்காமல் , சும்மா ஒண்ணும் இல்லாத பிரச்சினைக்கு ஒரு வாய்ஸ் கொடுத்து விட்டு, உதார் விட்டு திரியும் வாய்ச்சொல் வீரர்களாகி விட்டோமா நாம்...
ஐ.டி. தொழில் ஒரு பணக்கார, சமூக அக்கறை இல்லாத கூட்டத்தை உருவாக்குகிறது என்று எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.நாட்டின் நலன் கருதி பதிவுகள் தடை செய்யபட்டதற்கு வருகின்ற ஒவர் ரியாக்ஷன்கள் எரிச்சலையே உண்டு பண்ணுகின்றன. அதுவும் ஒரு பிரபல பத்திரிக்கை இவ்வாறு இதனை சித்தரித்திருப்பது இவர்கள் மற்ற விஷயங்களை எவ்வாறு விவரிக்கிறார்கள் என்பதற்கு எடுத்து காட்டாக அமைந்திருக்கிறது.

Monday, July 24, 2006

கோபத்தை இ-மெயிலில் வெளிப்படுத்துவது நல்லதா?.

கோபத்தை இ-மெயிலில் வெளிப்படுத்துவது நல்லதா?. சர்ச்சைகளை நேரில் பேசி தீர்ப்பதற்கும் அல்லது தொலைபேசியில் பேசி தீர்ப்பதற்கும், இ-மெயிலில் வார்த்தகளை கொட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளதா?
இருக்கின்றது என்று தான் எனக்கு தோன்றுகிறது. எவ்வளவோ வசதியாக இருந்தாலும் இ-மெயில் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த தோதுவாக உள்ளதா என்பதில் சந்தேகம் இருக்கிறது. வார்த்தைகளில் உணர்வுகளை கொண்டுவந்து விடலாம். ஆனால் அது விரும்புகிற விளைவுகளை தான் ஏற்படுத்துகிறதா என்பதை முன்கூட்டியே ஆன்டிசிபேட் செய்ய வேண்டும்.
பிரச்சினைகளை தீர்த்து கொள்ள, அல்லது எனது அதிருப்தியை தெரிவிக்க தொலைபேசியை பயன்படுத்துவது உண்டு. ஆனால் மிக உறுதியாக எச்சரிக்கை விட விரும்பினால் அல்லது எனது கருத்தை அடித்து சொல்ல விரும்பினால் நான் தயக்கமே இல்லாமல் இ-மெயிலை பயன்படுத்துவேன். முன்னர் கூறியது போல அது சரியான விளைவுகளை ஏற்படுத்துமா என்கின்ற கண்ணோடு நமது இ-மெயிலை நாம் பார்க்க வேண்டும்.என்னுடைய கோபத்தை காட்டவோ , எச்சரிக்கை விடவோ அல்லது நான் தைரியமாக எதிர்த்து நிற்பேன் என்று காட்டவோ மிக கவனமாக நான் கடுமையான சொற்களை பயன்படுத்துவேன். இன்னமும் சொல்ல போனால் இந்த மாதிரி இ-மெயில்களில் அடுத்த ஆளின் மண்டை கனத்தை மட்டம் தட்டும் வரிகள் இடம் பெறும்.
இவ்வாறு நான் செய்வதை என் நண்பர்கள் பலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். அப்போது நான் சொன்ன பதில்: நம் மீது தவறு இல்லாதவாறு நாம் பார்த்து கொள்ளவேண்டும். நமது அடிப்படை குணங்கள் நன்றாக இருக்க வேண்டும். முக்கியமாக , நேரத்தை வீணடிக்காமல் இருப்பது, கடமை உணர்ச்சி போன்ற விஷயங்களில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய அடிப்படை குணங்கள் நன்றாக இருந்தால் நாம் எதற்காகவும் பயப்பட வேண்டியது இல்லை. நான் என்னுடைய மேலதிகாரிகளை எல்லாம் விட்டு வெளுத்திருக்கிறேன் இ-மெயிலில். அவர்கள் தான் அடங்கி போனார்களே ஒழிய நான் சிறிது கூட சமரசம் செய்த்ததில்லை. எனவே இ-மெயிலில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். ஆனால் எழுத்தில் ஒரு விஷயம் கொடுக்க படும் போது அது உங்களை சரியான முறையில் வெளிப்படுத்துகிறது என்பதில் மிக எச்சரிக்கையோடு இருங்கள். அவ்வாறு முடியாத பட்சத்தில் இ-மெயிலை தவிர்த்து விடுங்கள்.
என்னுடைய தனிப்பட்ட அனுபவம் ஒன்றை கூறுகிறேன். ஒரு மேலதிகாரி என்னிடம் மிக தவறாக நடந்து கொண்டார். நான் அவருக்கு கீழ்கண்ட வரிகளை அனுப்பினேன். அந்த மெயிலில் மற்ற மேலதிகாரிகள் காப்பி செய்யபட்டிருந்தார்கள்:
என்னை காட்டிலும் மிகுந்த அதிகாரம் கொண்ட தாங்கள் உங்கள் காரியதரிசி செய்கின்ற அளவு வேலையாத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் என்னை விட பல மடங்கு அனுபவம் வாய்த்தவர்களை விட கூடுதல் வேலை செய்து கொண்டிருக்கிறேன், நீங்கள் செய்கின்ற வேலையை செய்ய இந்த அலுவலகத்திற்கு பலர் கிடைப்பார்கள். ஆனால் நான் செய்வதை செய்கின்ற ஆளை கண்டுபிடிக்க இந்த அலுவலகம் நிறையவே சிரமபடும் .
இந்த மெயிலுக்கு தக்க பலன் கிடைத்தது. அதற்கு பின்னர் அந்த மேலதிகாரி யாருடனும் வாலட்டுவதில்லை.
எப்படி இருக்கிறது என்னுடைய எடுத்து காட்டு?

Thursday, July 20, 2006

கொஞ்சம் சுவாரசியம் கூடுகிறது.

1.சட்டமன்ற இருக்கை அமைப்பு விஷயத்தை பற்றி எதிர்கட்சிகளிடம் ஆலோசனை கேட்கபடவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறார்.
2. சசிகலா வந்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்தாரே. அப்போது எதிர்கட்சிகளிடம் ஆலோசனை கேட்கபட்டதா என்று வழக்கம் போல நீங்கள் மட்டும் ஒழுங்கா என்ற ரீதீயில் -ஞாபகதிறனை வைத்து கலைஞர் பதில் கொடுத்தார். அ.தி.மு.க அடங்கி விடும் என்று தான் எதிர்பார்த்தேன்.
3. ஜெயலலிதா அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இப்போது தி.மு.க வில் இருக்கும் சேடபட்டி முத்தையா செய்த காரியம் அது என்று குத்தலாக கூறியுள்ளார். மேலும் தான் நினைத்தால் சசிகலாவை சட்ட சபையில் அமர்த்த முடியும் என்று சூழுரைத்துள்ளார்.
வழக்கமாக ஜெயலலிதா அறிக்கையில் ஒரு மண்ணும் இருக்காது. ஆனால் இந்த முறை எதிர்கட்சியானதிலிருந்து கொஞ்சம் சுவாரசியம் கூடியிருக்கிறது.ஆனால் வெட்டியாக எல்லா விஷயத்திலும் சண்டை போடுவது என்பதை தி.மு.க, அ.தி.மு.க இருவரும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறார்கள்.
இனி அடுத்த படியாக சேடபட்டி முத்தையா அறிக்கை விடுவார் என எதிர்பார்க்கலாம்.

Saturday, July 15, 2006

என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு


என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு,
உங்களுடைய வலைப்பூவை என்னால் பார்க்கவே முடிவதில்லை. எப்போது பார்வையிட முயன்றாலும் இந்த எர்ரர் மெஸேஜ் தான் வருகின்றது? என்ன பிரச்சினை?

Friday, July 14, 2006

தமிழ்மண பட்டிமன்றம் - 1

இன்று காலையில் சொன்னது போல , சூடு தணிக்கவே இந்த பதிவு. தய்வு செய்து சீரியசாக எடுத்து கொள்ளாதீர்கள்.

தலைப்பு: பதிவிற்கு பின்னூட்டம் போடுவது கடினமா, அல்லது பின்னூட்டத்திற்கு பதிவு போடுவது கடினமா


நடுவர் திண்டுக்கல் லியோனி:

அந்த காலத்தில எங்களுக்கெல்லாம் புது புத்தகம் கூட கிடைக்காது. எங்க அப்பா அவரோட அண்ணன் புத்தகத்தை வைச்சி படிச்சாரு. நான் அவர் புத்தகத்த வைச்சு தான் படிச்சேன். பாருங்க எந்த அளவுக்கு கவர்மெண்ட் லேட்டஸ் சிலபஸ் வைச்சு சொல்லி கொடுக்க்குதுன்னு.. இதில பெரிய காமெடி என்னன்னா , நான், எங்கப்பா, என் பெரியப்பா எல்லாரும் ஒரே வாத்தியார்ட்ட தான் படிச்சோம். படிச்சோம்னா என்ன . ஸ்கூலுக்கு போவாம் காலையில, ஒரு சிலேட்டு, குச்சி, உள்ள எங்க பெரியப்பா எல்லாரும் யூஸ் பண்ண புத்தகம். போய் நின்னா, வாத்தியார் வருவாரு. வந்தவுன்னே இரண்டு பேரை போட்டு அடிப்பாரு. அதுக்கப்புறம் தான் அவர் அட்டெண்டன்ஸே எடுப்பாரு.

அதுக்கடுத்து டீச்சர் வரும். டீச்சர் வந்த உடனே அடுத்த கிளாஸ் டீச்சர்ரும் வந்துரும். இரண்டு பெரும் பேச ஆரம்பிச்சிரும். நடுல நடுல " டேய் யாரும் பேசகூடாது" என்று சவுண்டு. நொந்து நூலாயிடுவோம். இந்த லட்சணம் தான் படிப்பு. படிச்சு முடிச்சு வேலைக்கு வந்தா, நாங்கள்ளாம் எழுத முடியுமா, என்னத்த எழுத, எழுதி எங்க கொண்டு போய் காட்ட.

அது தான் அன்னைய நிலைமை. ஆனா இன்னைக்கு பாருங்க, பிள்ளைக்கு பர்த் சர்டிஃபிகேட் வாங்குறதுக்கு முன்னாடியே, டொமைன் நேம் வாங்கிற்றான். பதிவில்ல இன்னைக்கு போட ஒரு நியுஸ் வந்துருச்சு அப்படின்னு அவனுக முகத்துல அப்படி ஒரு குஷி.

என்னடா இப்படி குதிக்கிறானேன்னு பார்த்தா, இவர் பதிவு போட்டா, எப்படியும் ஒரு 30 பின்னூட்டம் வரும். அத 40 இல இருந்து 60 ஆக்கிறலாம். அதுல என் பிள்ளைக்கு நியூமரலாஜி பார்க்கமா தான் பேர் வைப்பேன் அப்படின்னு ஒரு வரி போட்டா அதுக்காக ஒரு இரண்டு எக்ஸ்ட்ராவா வரும் அப்படின்னு கணக்கு போடுறான். யோசிக்கிறான் பாருங்க அப்பாடி அப்படி ஒரு யோசனை. தீவிரவாததை தடுத்து நிறுத்த வழி கண்டு பிடிக்கிற மாறி ஒரு யோசனை.

அப்புறம் கண்டு பிடிக்கிறான் பாருங்க வழி.. தமிழில் தான் சினிமாவிற்கு பேர் வைக்க வேண்டும் என்கின்ற தலைவர்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வெளிநாட்டினர் பேர், சம்ஸ்கிருதத்தில் பேர் வைக்கிறார்கள். நான் அவர்களை போல அல்ல அப்படின்னு ஒரு லைன் சேத்திரணும்னு.

குஷின்னா குஷி. ஒரு நல்ல சூப்பர் ஹிட் சண்டை வந்துரும்டா இன்னைக்கு. எப்படியும் ஒரு பின்னூட்டம் வரும் நான் கிண்டலடிச்சதை பாராட்டி, அங்கிட்டு உண்மை தெரியாமல் உளராதீர்கள் என்று இன்னோனு வரும் எப்படியும் இன்னைக்கு விடிய விடிய பின்னூட்டம் வரும் அப்படின்னு ஒரு சந்தோஷம். பார்க்குறவங்க, பாருயா மனுஷனா பிள்ளை பொறந்தவுன்னே என்னா குஷியாகிட்டாரு. உடனே குழந்தைன்னா சாதாரணமா , என்னயா கொண்ட்டாட்டும்யா அப்படின்னு ஒருத்தர். அவர் மேட்டர் தெரியாம உளராறு. இவர் அவரை ஆமாதிக்கிறாரு. இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் யாரு எப்ப எங்க பின்னூட்டம் விடுவாங்க அப்படின்னு பாத்துக்கிட்டு ஒரு கோஷ்டி.இவங்க நேர போறது பின்னூட்டத்துக்கு தான். என்னடா பதிவையே பார்க்க மாட்டேங்குறன்னா, ... அவன் முறைப்பான் பாரு ஒரு முறைப்பு...என்னாத்துக்கு...

இவங்க யார் மாதிரி தெரியுமா, ஊர்ல இருப்பங்கா இரண்டு பேரு. எல்லா படத்தையும் திட்டுவான், ஏலே பாத்திட்டியாடா படத்தை அப்படின்னு கேட்டா , இதெயெல்லாம் பார்த்துட்டு தான் பேசுனுமா, பார்த்தவுக சொன்னக ... எல்லா பத்திரிக்கையும் குறை சொல்லுவான், ஏலே படிச்சிட்டுயாடா, அப்படின்னா இதையெல்லாம் படிக்கணுமா, சொன்னாங்க அப்படிம்பாம்.

அந்த மாதிரி செட்கள் தான் இன்னைக்கு நேரா பின்னூட்டம் போகுது. யார் என்ன சொல்றாங்க அப்படின்னு பார்த்துட்டு ஒரு பதிவே போட்டுறும். இதை பற்றி இவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் அப்படின்னு லிங்க் அது ஒரு நாலு. அதுக்கு கீழ விகடன் குமுதத்துக்கு 2 லிங்க். அப்படியே பக்கத்தில இங்கே நமீதா படம் சூப்பர் அப்படின்னு ஒரு சிறு குறிப்பு. மேல இரண்டு வரி எப்படியாவது எழுத வேண்டியது. என்னடா பதிவு எழுதிட்டான் அப்படின்னு நமக்கு ஒரு குழப்பமே வந்துரும். அங்கே இங்கே கட் பண்ணான் , பேஸ்ட் பண்ணான். கடைசியில பதிவுங்கிறானே. இது எடுபடுமா அப்படின்னு எட்டி பாப்போம். அங்க பாருங்க கடைசியில ஒரு வேலை பண்ணுறான்.

பதிவர்களை எந்த அளவுக்கு நல்லா புரிஞ்சு வச்சிருக்கான் பாருங்க. தலைப்பு கொடுக்கிறான். திரிஷா ரசிகர்களுக்கு கண் குருடா அப்படின்னு.
ஆரம்பிக்குது பாருங்க சண்டை.


முத பின்னூட்டம் என்ன எழுதுறாங்க பாருஙக: முதல்ல நீ உனக்கு கண் இருக்குன்னு நிருபிய்யா. அப்புறம் பேசு அடுத்தவன் கண்ணை பத்தி. அங்கே இருந்து ஒருத்தன் ஒடி வாரான் அடுத்க பின்னூட்டம் போட, தனி மனிதர்களை தாக்குவது தவிர்க்க பட வேண்டும். வேற்று கருத்துக்கள் இருந்தால் மென்மையாக எழுத வேண்டும் . அப்படின்னு எழுதிட்டு ஒடிர்ரான். இன்னொருத்தான் வாரான் , திரிஷா ரசிகர்களை பற்றி எழுதிய் நீங்கள் ஏன் மற்ற நடிகைகளை பற்றி எழுதவில்லை?. அதுக்கப்புறம் பாருங்க சூப்பர் காமேடி. தமிழ் பெண்கள் க்ற்பை பற்றி பேசிய குஷ்புவை விட திரிஷா மேல். அதை தாண்டி இன்னோனு தங்கர் பச்சான் பேசியது மட்டும் கரெக்டா அப்படின்ன் .. ஒரு ஆறு மாசத்துக்கு சண்டை நடக்கும்..

இன்னோரு செட் இருக்கு பதிவிற்கு தலைப்பு கிடைக்காவிட்டால், வலை பதிவர்களே சந்திப்போம் என்று கிளம்பும் . அதை வைச்சு இரண்டு பதிவு. சந்திச்சிட்டு இரண்டு பதிவு. அதை பார்த்துட்டு இன்னமும் இரண்டும் கோஷ்டி நாங்களும் சந்திக்கிறொம் அப்படின்னு கிளம்பும். என்ன பதியறதுக்கு ஒண்ணமும் கிடைக்கல்...

இடையில் இன்னொரு சமாசாரம்.. யாராவது ஒருத்தர் எனக்கு பிடிச்ச நாலு டீ கடை, நாலு பஜ்ஜி கடை அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டுட்டு ஒரு நாலு பேரை கூப்பிட்டு இந்த மாதிரி லிஸ்ட் போடுங்க அப்படின்னு. 4,16 ஆகி,16 64,ஆகி கடைசியில ஒருத்தர் கூப்பிட பதிவர் இல்லாம, மாமா, மச்சான் , சித்தப்பா, பெரியப்பா எல்லாருக்கும் தந்தி அடிச்சு வலைபதிவு ஆரம்பிக்க சொல்லிட்டாரு. என்னா இவர்கிட்ட எழுத மேட்டருல்ல.ஆனா லிஸ்ட் இருக்கு. பாருங்க கடைசியில அது போயி முடியுதுன்னு..

இந்த நிலைமையில் நாம இங்க பேச போறோம். பதிவிற்கு பின்னூட்டம் போடுவது கடினமா, அல்லது பின்னூட்டத்திற்கு பதிவு போடுவது கடினமா அப்படின்னு

தொடரும்.

தமிழ்மணம் சிறு நாட்களாக சற்றே சூடாக உள்ளது.

தமிழ்மணம் கடந்த சிறு நாட்களாக சற்றே சூடாக உள்ளது. கொஞ்சம் கவனம் திருப்ப இந்த பதிவு. மிக, மிக, அவசரமாக எழுத பட்டது. பிடித்த தமிழ் வரிகளை இங்கே தந்துள்ளேன்.
1. குரங்கென்று அதன் வாலில் தீ வைத்தானே

அது கொளுத்தியதோ அவன் ஆண்ட தீவைத்தானே,
2. கலவரம் அது இங்கே தினம் வரும்
அது வரும்போதெல்லாம் வெறுமனே

நிற்கும் சிலைகளின்
உயிரும் பிடுங்கப்படும்"
3. நினைக்கத் தெரிந்த மனமே

உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே -
உனக்கு விலகத் தெரியாதா?
4 . காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால்போல் சிரிப்பதில் பிள்ளை

பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை -
அவள் கவிஞனாக்கினாள் என்னை
5. செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

இதே போன்று உங்களுக்கு பிடித்த வரிகளின் தொகுப்பை வெளியிட்டு கொஞ்சம் தமிழ்மணம் பரப்பும் படி அனைத்து பதிவர்களையும் கேட்டு கொள்கிறேன். குறிப்பாக
1. முத்து தமிழினி.

2. குழலி.
3. பெனாத்தல் சுரேஷ்
4. கடற்புரத்தான் ஜோ.
5. தமிழ் சசி.
6. கோவி. கண்ணன்
7. மாயவரத்தான்.
மேற்சொன்ன 7 பேரையும்.

எல்லாரையும் அழைத்து விட்டு எதற்கு 7 பேர் மட்டும் தனியாக என்று நீங்கள் நினைக்கலாம். பொதுப்ப்டையான அழைப்பு அனைவராலும் மறக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே தான் இந்த 7 பேரையும் தனியாக குறிப்பிட்டுள்ளேன். சூடு தணிந்தால் சரி.

Saturday, July 08, 2006

திரையில் பிடித்த ஆறு காட்சிகள்

இது ஆறு திரைப்படங்களின் லிஸ்ட் இல்லை. மனதில் நின்ற திரைப்படஙகளின் தொகுப்பு அல்ல. ஆனால் அழுத்தமாக பதிந்த 6 காட்சிகளின் தொகுப்பு.

1. சண்டை கோழி: அண்ணே, நீங்க பையனை ஒண்ணும் கை வைச்சிரலில என்று மதுரையில் இருந்து பதில் வரும் இடம்.

2. தேவர் மகன்: போங்கடா, போய் விவசாயத்தை பாருங்கடா என்று கமல் கண்ணீர் வழிய ஊர் மக்களுக்கு அறிவுரை கூறும் இறுதி கட்டம்

3. குருதி புனல்: டி. ஐ.ஜி. நாராயணசாமி என்று பொய்யான பெயரை நாசரிடம் சொல்லி விட்டு, கமல் தடுமாறும் காட்சி. உண்மையில் பார்க்க பாவமாக இருக்கும் இந்த காட்சியில் கமலை பார்ப்பதற்கு.

4. பாட்ஷா: ரஜினி உண்மையை சொல்லும் இடம்.

5.சித்திரம் பேசுதடி: க்ளைமாக்ஸில் வரும் ஃப்ளாஷ் பேக்.

6.காக்க காக்க: ஸ்கூல் மாணவி மீது ஆசிட் ஊத்த போவதாக , ஐந்தாறு பேர் கலாட்ட பண்ண, பின்னாலிருந்து வரும் சூர்யா துப்பாக்கி காட்டி மிரட்டும் இடம். துப்பாக்கி காட்டிய மறு நிமிடம் அந்த ரவுடி அலறுகிற அலறல்!!!. படு அதிரடியான காட்சி.

Thursday, July 06, 2006

ஆறு

ஆறு போட அழைத்த கடற்புரத்தான் ஜோ அவர்களுக்கும் எனது கல்லூரி சீனியர் கால்கேரி சிவா அவர்களுக்கும் எனது நன்றி. இதோ எனது ஆறு.
பிடித்த பேச்சாளர்கள்.
1. கலைஞர் கருணாநிதி.

2. ப.சிதம்பரம்

3. நாவலர் நெடுஞ்செழியன்.

4. திண்டுக்கல் ஐ. லியோனி

5. ஞாநி.

6. அருண் ஜெயிட்லி.


பிடித்த நடிகர்கள்/நடிகைகள்.
1. சிவாகி கணேசன்

2. கமல்

3. நாகேஷ்

4. ஊர்வசி.

5. மனோரமா

6. எம்.ஆர்.ராதா.


பிடித்த இசை/பாடகர்கள்.
1. இளையராஜா

2. ரஹ்மான்.

3. ஜானகி.

4. பாலசுப்ரமணியம்.

5. ஹரிஹரன்.

6. சுஜாதா.


படித்ததில் பிடித்தது.
1.செவன் ஸ்பிரிட்சுவல் லாஸ் ஆஃப் சக்சஸ்- தீபக் சோப்ரா

2.சீரங்கந்த்து தேவதைகள்- சுஜாதா.

3.நில்லுங்கள் ராஜாவே- சுஜாதா

4. பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங்- நார்மன் வின்சன்ட் பீலே.

5. கண்ணீர் பூக்கள்- மு. மேத்தா.

6. அப்துல் ரகுமானின் கவிதைகள்.


என்னை பாதித்தவர்கள்.
1. எனது அப்பா.

2. எனது அம்மா

3. எனது அக்கா

4. எனது தம்பி

5. எனது தங்கை

6. எனது சகோதரிகளின் குழந்தைகள்.மச்சான்கள்.


அடிக்கடி உலாவுவது.
1. தி சர்வர் சைட்

2. சோர்ஸ்ஃபோர்ஜ்

3. தட்ஸ்தமிழ்

4. விகடன்

5. கோட்ஃப்ளக்ஸ்

6. என்.டி.டிவி

மன்மோகன் ஏன் இன்னமும் பதவியில் ஒட்டி கொண்டுள்ளார்?

பங்குகள் விற்பனை செய்கின்ற முடிவை நிறுத்தி வைக்கபட்டுள்ளது. கருணாநிதியிம் வெளிப்படையான மிரட்டல் மிகவும் ஆச்சரியத்தை தந்துள்ளது. காங்கிரஸ் மேலிடத்தோடு மிகுந்த நல்ல உறவினை கொண்டுள்ள அவர் , இந்த மாதிரி வெளிப்ப்டையாக எச்சரிக்கை விட்டது , அவர் அவசர பட்டு சொல்லிவிட்டாரா அல்லது உண்மையில் திட்டம் போட்டு தான் செய்தாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.
காங்கிரசின் ஆதரவு கருணாநிதிக்கும் தேவை படத்தான் செய்கின்றது. வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கும் அவர் , அவற்றை நிறைவேற்ற மத்திய அரசின் உதவியை நாடத்தான் செய்ய வேண்டும். இங்கும் அவருக்கு மெஜாரிட்டி இல்லை. எனினும் காங்கிரஸ் தன்னை சம பார்ட்னராக நிலை நாட்ட இயலவில்லை.
ஒரு வேளை கருணாநிதி , சோனியாவிடம் மட்டும் நல்ல உறவு இருந்தால் போதும் என்று நினைத்து விட்டாரோ? மாநில காங்கிரசை அடக்கி வைக்க, மத்திய அரசிடம் கோரிக்கை நிறைவேற்ற சோனியா ஒருவர் மட்டுமே போதும் என்பதால் , மற்றவர்களை கிள்ளு கீரையாக எண்ணுகிறாரோ கருணாநிதி.
இவ்வாறு கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றி , பிரதமர் தன்னுடைய பலவீனத்தை வெளிபடுத்தி விட்டார். அது மட்டும் அல்லாமல், இதனால் தி.மு.க விற்கு ஏதேனும் பலன் இருக்குமா என்று தெரியவில்லை. பிரச்சினை முற்றும் வரை ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு, பின்னர் வெளிப்படையாக எச்சரிக்கை விட்டு காரியம் சாதிப்பது என்பது பிரதமரை அப்செட் செய்கின்ற ஒன்று.
இந்த மாதிரி சூழ்நிலையிலும் மன்மோகன் ஏன் இன்னமும் பதவியில் ஒட்டி கொண்டுள்ளார்?

Wednesday, July 05, 2006

தண்டனை குறைப்பு பேர முறை அமலுக்கு வருகின்றது.

குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு , மன்னிப்பு கோரி, பாதிக்க பட்டவரிடம் பேசி,இழப்பீடு தந்து தனது தண்டனையை குறைக்கும் முறை அமலுக்கு வருகின்றது. இதற்கு பல விதிவிலக்குகள் இருந்தாலும் இந்த முறை எனக்கு சரியென்று படவில்லை.

இதனால் நீதிமன்றங்கள் தண்டனை கொடுத்த பிறகும் கூட, பாதிக்க பட்டவர்கள் மீது குற்றவாளிகள் மற்றும் சம்பந்த பட்டவர்கள் மீது பாய வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னர் மற்றும் சும்மா இருப்பார்களா?, வழக்கு நடக்கும் போது மட்டும் மிரட்டல் இருக்காதா என்று கேட்பவர்கள், தண்டனை கிடைத்த பின்னர் , இவர்கள் மிரட்டல் மிக வலிமையாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும் தண்டனையை குறைக்க இதுவே வழி என்று அவர்கள் கருதும் போது, இந்த மிரட்டல் மிக அதிகமாகலாம்.

இன்னமும் குறிப்பாக , இந்த முறையின் கீழ் ஒரு வழக்கு செட்டில் செய்ய பட்டால், மேல் முறையீடு கிடையாதாம். என்னய்யா நடக்குது நாட்டில? மேல் முறையீடு கிடையாது என்றால் குற்றம் செய்தவர்கள் இன்னமும் வலிமையாக முயல மாட்டார்களா?

1. என்ன தண்டனை என்று நிர்ணயம் செய்வது என்பது நீதிபதியின் , நீதிமன்றத்தின் தனி உரிமை. அதை குறைப்பது என்பது சட்டரீதியான விசாரணையின் படி தான் அமையவேண்டுமே தவிர, மற்றவர்களுக்கு அந்த பொறுப்பு தரபட கூடாது. நீதிபதிகள் ஏற்கனவே கட்ட பஞ்சாயத்து பற்றி கடும் கருத்துக்கள் தெரிவித்த நிலையில் , இந்த மாதிரியான நடைமுறைகள் கட்டபஞ்சாயத்து போன்றவற்றை ஊக்குவிப்பது போல அமைகின்றன.

2. தண்டனை குறைவு என்பது குற்றவாளி இனிமேல் தவறு செய்ய கூடாது என்ற எண்ணத்தினை அடைவதற்கு கிடைக்கும் பரிசு. வெறுமனே மன்னிப்பு கேட்டு விட்டு , காசு கொடுத்து விட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணம் வளர கூடாது. நன்னடத்தையில் பரிசே , தண்டனை குறைப்பு என்பது மாற கூடாது.
என்னுடைய கருத்துக்களை கூறியுள்ளேன். வலைபதிவுகளில் வக்கீல்கள் யாரேனும் இருந்தால் இது பற்றி கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். வலைபதிவுகளில் வக்கீல்கள், டாக்டர்கள் இன்னமும் பல துறை வல்லுனர்கள் இருந்தால் மிக நன்றாக இருக்கும். இவர்கள் தங்கள் துறை சார்ந்த்த அறிவை மற்றவர்களுக்கு வழங்கலாம். எனக்கும் கூட டெக்னாலாஜி சம்பந்த பட்ட பதிவுகள் எழுதலாம் என்ற எண்ணம் வந்துள்ளது. இது ஒரு மாறுதலாக மற்றுமன்றி, உபயோகமாக அமையும். ஆனால் எல்லா பதிவர்களுக்கும் பொதுவானதாக அமையாது.

Tuesday, July 04, 2006

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

கால்பந்து ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாலா என்னவோ, இந்திய அணியின் வெற்றி பதிவர்களை கவரவில்லை. இந்தியா இந்த தொடரில் மிக சிறப்பாகவே ஆடியது. ஒரளவு அதிர்ஷ்டம் இருந்திருந்தால் முதல் ஆட்ட்த்திலேயே வெற்றி பெற்றிருக்கலாம். இரண்டாவது ஆட்டத்தில் மழை பெய்து ஒரு நாள் ஆட்டம் ரத்தானது இந்தியாவிற்கு இடைஞ்சலாக போய்விட்டது. ஆனால் ஒரு வழியாக நான்காவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 35 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்த்திய அணியை இந்தியா அங்கு வைத்து தோற்கடித்துள்ளது. 35 ஆண்டுகளில் மேற்கிந்திய அணி தரம் குறைந்து சொங்கியாக மாறிவிட்டது என்றாலும் கூட இந்திய வெற்றி சந்தோஷமாகவே உள்ளது.
டிராவிட், கும்ப்ளே காலம் காலமாக ஆடினாலும், உலகசாதனை பல புரிந்திருந்தாலும், மீடியா அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கிகாரத்தை தரவில்லை. இன்னமும் சொல்ல போனால் டிராவிட் ஒரு அணி தலைவராக மிகவும் பொறுப்புணர்ச்சியோடு , மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக இருக்கும் வண்ணம் ஆடுகிறார். கும்ப்ளே ஆடும் விதம் அவரை மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் எடிக்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டுகிறது. உலக கோப்பை மேற்கிந்திய தீவுகளில் நடைபெற போவதால் கும்ப்ளேயின் தற்போதைய ஆட்டதிறனை மனதில் வைப்பார்கள் செலக்டர்கள் என்றே நான் கருதுகிறேன்.
மூன்றாவது துவக்க ஆட்டகாரராக கங்குலியும் தேர்வு செய்ய பட வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரையில் கங்குலி , கவுதம் காம்பீர், ராபின் உத்தப்பா போன்றவர்களை ஆடுவார் என்று தோன்றுகிறது.
பந்து வீச்சில் கும்ப்ளேயை தவிர யாரும் குறிப்பாக சோபிக்கவில்லை என்பது சற்றே கவலைக்குரிய விஷயம். அங்கங்கே என்று பிரகாசித்தாலும் , யாரும் தொடர்ச்சியாக அசத்தவில்லை. இந்திய அணி தொடர்ந்து 4 ஒரு நாள் போட்டிகளில் தோற்றது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால் இந்த அணி நல்ல முயற்சி செய்கின்ற அணியாகும். வேகமாக இந்த அணி பாடங்கள் கற்று கொள்ளும் என்றே நம்புகிறேன்.
வருகின்ற உலக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்த அணி உற்சாகமாக போராடுகிற அணி என்பது தான் இந்த நம்பிக்கையை தருகின்றது. இந்த அணியில் மீண்டும் இடம் பெற துடிக்கும் வீரர்கள் : கும்ப்ளே,கங்குலி, லக்ஷ்மண்,ஜாகீர்கான்,ஆஷிஷ் நேரா ஆகியோர்.
தமிழக வீரர் பாலாஜி என்ன ஆனார்? அவரை பற்றி செய்திகள் ஏதும் வருவதில்லையே.?
சற்று முன்னர் கிடைத்த செய்தி. இலங்கை அணி நெதர்லாண்டுக்கு எதிராக நடந்த போட்டியில் 443 ரன்கள் எடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் சாதனையை முறியடித்துள்ளது. இந்த சாதனை ஐசிசியினால் அங்கீகரிக்கபடுகிறது என்றாலும் , கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டை பெறாது என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கை அணியே இதை கொண்டாடியதாக தெரியவில்லை. 5-0 என்று இங்கிலாந்தை இலங்கை அணி தவிடு பொடி செய்துள்ளது. இந்த அணி நெதர்லாந்தோடு வெற்றி பெற்றது ஒரு விஷயமே இல்லை.

Monday, July 03, 2006

படுகொலை செய்தவர்களிடம் விளக்கம் கேட்பது

பிரபாகரனிடம் கொடுத்த தனிப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாதனால் தான், ஏமாற்ற பட்ட விடுதலை புலிகள், ராஜீவ் காந்தியை கொன்று விட்டதாக வர்ணித்துள்ளது சி-என் -என் ஐ-பி-என். இந்த செய்தியில் இந்த நிறுவன வர்ணனையாளர் கொடுக்கின்ற கன்குளுஷன் என்ன தெரியுமா?

ராஜீவ் காந்தி விடுதலை புலிகளிடம் கொடுத்த வாக்குறுதியை மீறியதற்கு கொடுத்த விலை அவருடைய மரணமாம். என்ன கொழுப்பு இந்த நிறுவனத்திற்கு? முதலில் விடுதலை புலிகள் ராஜீவ் படுகொலையை துன்பியல் சம்பவம் என்றார்கள். பின்னர் பாலசிங்கம் அதற்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் அது வருத்தம் மட்டுமே, பொறுப்பு அல்ல என்று விடுதலை புலிகள் விளக்கம் கொடுத்தனர். இப்போது எங்களை ஏமாற்றினார், அதற்கு விலையை கொடுத்தார் என்று ஒரு தரப்பு விளக்கம் மட்டுமே கேட்டு நியாயபடுத்துவது போல ரிப்போர்ட் கொடுத்திறுக்கிறது இந்த நிறுவனம்.

ஒரு முன்னாள் பிரதமரின் படுகொலையை , ஏமாற்றியதற்கு கொடுத்த விலை என்று வர்ணனை கொடுத்திறுக்கும் இந்த நிறுவனத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். விடுதலை புலிகள் இப்போது இருக்கின்ற சூழ்னிலையில் தங்கள் தரப்பினை நியாயபடுத்த என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள் என்பது எல்லாரும் புரிந்து கொள்ள கூடிய ஒன்று. இந்த நிலையில் அவர்கள் தரப்பினை மட்டுமே கேட்டு ராஜீவ் படுகொலையை ஏமாற்றியதற்கான விலை என்று முடிவுரை கூறியிருப்பது அதர்மம் ஆகும்.

செய்தியை பார்க்க