Thursday, March 30, 2006

சேவாக்கின் தடுமாற்றம்.

இரண்டு ஒப்பனர்களும் மோசமான ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு ஒரு கவலை தரும் விஷயமே. உலக கோப்பை வெல்லும் நோக்கத்தோடு இந்த இந்திய அணி செயல்படுவது திருப்தி கரமாக இருப்பினும் , சில விஷயங்களில் தேர்வாளர்களும், சாப்பலும் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ என்றே தோன்றுகிறது.
காம்பீர் துவக்க ஆட்டகாரர் என்ற வகையில் பார்க்கும்போது கங்குலியை விட சிறப்பானவராக தெரியவில்லை. கங்குலியை இவர்கள் ஒரேடியாக மட்டம் தட்டுவது போல தோன்றுகிறது. மூன்றாவது துவக்க ஆட்டகாரர் என்ற நிலையில் கங்குலியை காம்பீருக்கு பதிலாக வைத்திருக்கலாம். டெண்டுல்கர் அல்லது சேவாக் ஆட இயலாத நிலையில் கங்குலி ஆடலாம். அவர் முன்னை விட சிறப்பாக ஆட முனைகிறார்.
இனிமேல் எடுக்கவே கூடாது என்று ஒரு ஆட்டகாரரை ஒதுக்கி வைப்பது நல்லது அல்ல. ட்ராவிட், டெண்டுல்கர்,சேவாக் போன்றவர்களில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு ஆடமுடியாமல் போனால் அது நமது அணியினை கடுமையாக பாதிக்கும். இதனை மனதில் கொண்டு கங்குலியை அணியில் வைத்திருப்பது நல்லது. இதனை சொல்வதனால் உடனடியாக நான் கங்குலியின் ஆதரவாளன் என்று கருத வேண்டாம். டெண்டுல்கர் உடல் நிலை முன்பு போல இல்லாத நிலையில் கங்குலி இருப்பது நன்றே என நான் கருதுகிறேன்.

தி.மு.க இருக்காது.

தி.மு.க விற்கு இதுவே கடைசி தேர்தல் என்று ஜெயலலிதா கூறியிருப்பது அவருடைய ஆணவத்தின் உச்சகட்டமா அல்லது ஒரு மனரீதியான தாக்குதலா? அவர் ஆணவத்தில் கூறியிருந்தாலும் கூட அது ஒரு மனரீதியான தாக்குதலாக அமைகின்றது.
குமுதத்தின் கருத்து கணிப்புகள் அவருக்கு சாதகமாக அமைந்த்துள்ளது. முதல் 2 ரவுண்டுகளில் பெருவாரியான தொகுதிகளில் அ.தி.மு.க விற்கு சாதகமாக அமைந்துள்ளது. கூட்டணி கணக்குகளை மீறி அவர் வெற்றி பெற்றால் அது சாதனை தான். ஆனால் 1991 தி.மு.க அடைந்த படுதோல்வியின் போதும் இந்த மாதிரிதான் அனைவரும் நினைத்தார்கள். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1996 இல் அ.தி.மு.க அடிவாங்கிய போது அனைவரும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முற்றுபுள்ளி வைக்க பட்டது என்றே கருதினார்கள். அந்த அளவுக்கு அவருடைய இமேஜ் காலியாகி இருந்தது. ஆனால் அதனையும் தாண்டி 5 வருடத்தில் ஆட்சியை பிடித்தார்.
என்ன அடி வாங்கினாலும் இந்த இரண்டும் மீண்டும் மீண்டும் வந்து விடும். காரணம் அடுத்தவர்கள் செய்கின்ற தவறுகள். எனவே ஜெயித்தாலும் தோற்றாலும் இந்த கட்சிகள் மீண்டும் மீண்டும் தொடரும்.
தி.மு.க இருக்காது என்று ஜெயலலிதா விட்ட அறிக்கைக்கு சூடான பதில் எதுவும் வரவில்லையே!... தி.மு.க பயந்து விட்டதா?. ரன் படத்தில் வில்லனிடம் மாதவன் இறுதியில் சவால் விடும் காட்சியையும் அதன் பின்னர் வில்லன் காட்டும் ரியாக்ஷனையும் நினைத்து பாருங்கள். பொருத்தமாக இருக்கும்.

Tuesday, March 28, 2006

இதற்கு மேல் ஏதேனும் ஒரு திருப்தி உண்டா?

பிறந்தால் அண்ணன் தம்பி தங்கைகளோடு பிறக்க வேண்டும். அது தான் உயர்ந்த சுகம். சிறு வயதில் ஒண்ணும் இல்லாத விஷயத்திற்கு எல்லாம் சண்டை போட்டு , வயது வளர ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது, கைடன்ஸ் கொடுப்பது என்று மாறுவது ஒரு அபாரமான அனுபவம்.
அக்கா, தங்கை திருமணம் ஆகி வெளியூர் சென்ற பின்னரும் நெருக்கம் அதிகமாத்தான் செய்த்ததே தவிர குறையவில்லை. படிப்பிற்காகவும், வேலைக்காகவும் பல இடங்கள் சென்ற பின்னரும், பல நெருக்கமான நண்பர்கள் இருந்த போதிலும், வாழ்க்கையில் முழுமையான திருப்தி என்பது ஒரு நல்ல குடும்பத்தில் தான் வருகிறது. என்னுடைய பெற்றொர்கள், சகோதர சகோதரிகள் எனக்கு ஒரு கனவு குடும்பத்தை கொடுத்திறுக்கிறார்கள்.
இந்த திருப்தி அனைவருக்கும் இருக்கும். முக்கியமாக இந்தியர்களுக்கு இருக்கும்.

Wednesday, March 22, 2006

மகேஸ்வரிக்கு மீண்டும் ட்ரான்ஸ்ஃபர்.

சமீபத்தில் நான் எழுதிய பதிவு : தலித் மக்களே ஒன்று படுங்கள் என்பது.
http://bunksparty.blogspot.com/2006/03/blog-post_21.html
அந்த பதிவிற்கு மூல காரணம் தீண்டாமை இன்னமும் தொடர்கிறது. இதனால் தலித் மக்கள் இன்னமும் பல இடங்களில் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவிற்கு துன்பம் அனுபவிக்கிறார்கள். இந்த செய்தி(கொடுமையை) பாருங்கள்.


இதற்கெல்லாம் என்னதான் தீர்வு. வெறும் பேச்சுவார்த்தை என்று வெட்டியாக நாள் கடத்த கூடாது. அதனால் என்ன பயனுன் வரபோவதில்லை. எனவே கடுமையான நடவடிக்கை மட்டுமே பலன் தரும். பிள்ளைகள் வகுப்புக்கு வராவிட்டால் அவர்களை நீக்கம் செய்ய வேண்டும். இந்த வயதிலியே அவர்கள் சாதி வெறியை ஊட்டும் பெற்றோர்களுக்கு அதுவே ஒரு சரியான பாடமாக அமையும். அந்த பெற்றோர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் பணி நீக்கம் செய்ய படவேண்டும். அதை விட்டு விட்டு, வெறுமே பேச்சு வார்த்தை நடத்தினால் இந்த கொடுமைகள் வேறு யாருக்காவது நடந்தே தீரும். மகேஸ்வரியினை இடம் மாற்றுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

இளையராஜாவின் மீது அதிர்ச்சி தரும் குற்றசாட்டு.

http://epaper.tamilmurasu.in/2006/mar/22/disp.asp?i=3_3

இந்த குற்றசாட்டினை பற்றி கேட்ட போது என்னால் நம்ப முடியவில்லை. சிம்போனி இயற்றியதாக இளையராஜா கூறுவது பொய் என்று கூறுகிற பேராசிரியர்கள் இதுவரை எந்த ஆதாரமும் காட்டவில்லை. எளிதாகவே கண்டுபிடிக்க கூடிய ஒரு விஷயத்தை செய்ய யாரும் தயங்குவார்கள். ஏற்கனவே பெரும் புகழ் பெற்ற இளையராஜா , அது அனைத்தையும் கெடுக்க கூடிய ஒரு சாதாரண காரியத்தை செய்ய வாய்ப்புகள் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
அந்த சிம்போனி இசை வெளியிடபடாததே அனைத்திற்கும் மூல காரணம். எழுத்தாளர் ஞானி கூட இது பற்றி எழுதி உள்ளார்.
http://www.charuonline.com/kp153.html
இளையராஜா இந்த விமர்சனங்களுக்கு பின்னரும் அமைதியாக இருப்பது இந்த விமர்சனங்கள் வலிமை பெற உதவும்.ஏன் அந்த இசை தொகுப்பு வெளி இட படவில்லை என்ற கேள்விக்கு அவர் நேரடியாக இதுவரை பதில் கூறவில்லை.
ஆனால் இப்போது அவர் மீது வந்திருக்கும் குற்றசாட்டு மிக கடுமையானது. தனக்கு கிடைத்த அழைப்பினை தமிழக மக்களோடு பகிர்ந்து கொண்ட அவர், அது நேர்மையானது என்பதை அவர் மீது அபிமானம் கொண்டவர்களுக்காக நிருபீத்தால் அது இந்த மாதிரியான சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளியாக அமையும்.

தேர்தலை நோக்கி

இந்த தேர்தலின் சரியான ஐயோ பாவம்- திண்டிவனம் ராமமூர்த்தி. வைகோ, திருமா வளவன் வந்த பின்பு , அதிமுக இவரை கண்டு கொள்ளவே இல்லை. இவர் 42 சீட் அதிமுகவிடம் கேட்டதாக தெரிகிறது. கிட்டதட்ட எல்லா லெட்டர் பேடு கட்சிகளும் மாபெரும் ஆதரவு ஜெயலலிதாவிற்கு தெரிவிக்க திண்டிவணம் இப்போது வேண்டாத ஆளாகி விட்டார்.
கடைசி வரை தட்டி பார்த்தும் கதவு திறக்காததால் தனித்து போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளது பார்வர்ட் ப்ளாக் கட்சி.மார்க்கெட் இல்லாத நிலையில் கார்த்திக்குகாக வரும் கூட்டம் மிக அதிகம். இந்த கூட்டம் ஒட்டாகுமா? இந்த கட்சி வாங்கும் ஒவ்வொரு ஒட்டினாலும் பாதிப்பு அம்மாவுக்கே.
இந்த தேர்தலின் சஸ்பென்ஸ் ஹீரொ விஜயகாந்த். குமுதம் நடத்திய கருத்து கணிப்பு இவருக்கு ஆதரவு கணிசமாக இருப்பதாக காட்டுகிறது. இவர் வாங்குகிற ஒட்டு திமுகவின் இழப்பாக இருக்கும்.
விஜயகாந்திற்கு ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவு அமைந்திருக்க காரணம் கருத்து கணிப்பு நடத்த பட்ட விதம். பொதுவாக 3 சாய்ஸ்கள் காட்டினால் கண்டிப்பாக 3 சாய்ஸ்களுக்கும் வாக்கு விழும். நமது ஊரில் கருத்து கணிப்பு எடுக்க சரியான வழி, சாய்ஸ் இல்லாத நேரடி கேள்வி: யாருக்கு ஒட்டு போடுவீர்கள். வருகின்ற பதிலை குறித்து கொள்ளவும். 5 சாய்ஸ் கொடுக்க பட்டால் 5 பேருக்கும் வாக்கு விழும் என்பதை கருத்து கணிப்பு நடத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தேர்தல் எப்படி அமைந்தாலும், கலைஞருக்கு அப்புறம் தமிழக அரசியல் எப்படி இருக்கும் என்று ஊகிக்க எளிதாகவே உள்ளது. தற்போது தோற்றாலும் ஜெயலலிதா வலிமையாகவே தொடர்வார்.(சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு எதிராக அமையாத பட்சத்தில்).ஆனால் வெற்றி பெற்றாலும் தி.மு.க வலிமையோடு தொடருமா?. கலைஞருக்கு அப்புறம் மற்ற கட்சிகளின் பிடி திமுகவின் மீது இறுக்கமாகும். வாக்கு விகிதம் குறைந்து கொண்டே போக திமுகவின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை.
எல்லாரும் மறந்து போன முக்கியமான கேள்வி: மேம்பாலம் வழக்கு என்ன ஆனது? கலைஞரை கைது செய்த முகமது அலி இப்போது சிறையில் இருக்கிறாரா அல்லது வெளியே வந்து விட்டாரா?

Tuesday, March 21, 2006

தமிழ்மணம் -ஓப்பன் சோர்ஸ் ஆகுமா?

தமிழ்மணம் ஒப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட் ஆக மாறினால் என்ன? தற்போது தமிழ்மணம் மிக நன்றாகவே செய்ல்படுகிறது. எனினும் ஒப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட் ஆக மாறினாம் மேலும் பல நன்மைகள் கிடைக்குமே. பலரும் அதில் செயல் பட வருவார்கள். மேலும் பல புதிய சிந்தனைகள் வரும். அதன் காரணமாக தமிழ்மணம் இன்னும் வேகமாக வளர வாய்ப்பு உள்ளது. காசி இது பற்றி யோசிப்பாரா?

தலித் மக்களே ஒன்று படுங்கள்.

குமுதம் ரிப்போர்ட்டரில் சோலை எழுதுகிற பக்கங்களை ரெகுலராக படிப்பவன் நான். இந்த வாரம் அவர் எழுதிய கட்டுரை என்னுடைய சிந்தனையை தூண்டியது. அதன் விளைவை இந்த பதிவு.

1. தலித் என்று அழைக்க படுகிற தாழ்த்த பட்ட மக்களின் நிலைமை இன்றும் மிக கொடுமையே. சமுதாயத்தின் கழிவுகளை அப்புறபடுத்துபுவர்களை சமுதாயம் அந்த கழிவை விட கேவலமாக பார்க்கிறது. அவர்களுக்கான உரிமைகள் காலம் காலமாக மறுக்க பட்டு வருகின்றன. அவர்களுக்காக ஒதுக்க பட்ட பஞ்சாயத்தில் கூட அவர்களால் போட்டியிட முடியவில்லை.

2. தலித் மக்கள் இயக்கங்கள் என்று ஒரு கூட்டமே உள்ளது. குறைந்த பட்சம் ஒரு 15 இயக்கங்களாவது பரபரப்பாக செயல்படுகின்றன. இவர்கள் ஒன்றாக செயல்படாததற்கு காரணம் தலைவர்களிடேயே உள்ள பல்வேறு கருத்து வேறுபாடுகள். ஒற்றுமையின் அவசியத்தை இந்த தாழ்ந்த சமுதாயம் என்று உணர போகிறது?

3. ஒரு ஜனநாயக நாட்டிலே ஜாதியின் பெயராலே மக்கள் இழிவு படுத்த படுவதும், அவர்கள் தங்களுடைய மிக சாதாரணமான விஷயங்களுக்காக போராடுவதும் சுதந்திரத்தை அர்த்தமற்றதாக்கி விடுகின்றன.

4. மதுரையில் எத்தனையோ கோயில்கள் ஆக்ரமிப்புகள் என்று சொல்ல பட்டு இடித்து தள்ள பட்டன.ஆனால் முத்துராமலிங்கம் என்ற தலைவரின் சிலைகள் கை வைக்க படவில்லை. இதில் ஆச்சரியம் இதனை கண்டித்து பத்திரிக்கைகள் கூட எழுதுவதில்லை. அந்த சமுதாயத்தினைரை பார்த்து அவ்வளவு பயமா? இந்த பயம் தான் அவர்களின் பலமா? தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பதினாலேயே தலித்கள் வெட்ட படுகிறார்கள். இவர்களை சமுதாயத்தினர் கூலி கார நாய்கள் என்றே அழைக்கிறார்கள். கூலி ஒன்றும் சும்மாக கொடுக்க படுவதில்லை என்பதை இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

ஒன்றாக இருப்பதை தலித்கள் கற்று கொள்ள வேண்டும். அவர்களுக்கு இழைக்க படும் கொடுமையை கண்டிக்க அவர்களிடையே இன்னமும் ஒற்றுமை தேவை. முதலில் அவர்களை அவர்களே ஏற்று கொள்ளட்டும். பின்னர் தான் சமுதாயம் அவர்களே ஏற்கும்.

Sunday, March 19, 2006

தாடியும் அரட்டை அரங்கமும்.

வேலைக்கு வந்த நாளில் இருந்து ரெகுலராக சவரம் செய்வது வழக்கமாகி விட்டது. எனது மேன்ஷனில் இருந்த மேனேஜர் ஒருவர் தினந்தோறும் முக சவரம் செய்வது கண்டவுடன், நான் உடனடியாக அதனை கடை பிடிக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆனால் தாடி வைத்திருப்பவர்கள் மீது தனி கவனம் செலுத்துவது உண்டு. அலுவலக நண்பர்களில் சிலர் தாடி ரெகுலராக வைத்திருப்பது உண்டு. சிலர் ப்ரென்ஞ் பியர்டு, சிலர் சாதாரண தாடி, மற்றும் சிலர் திரைபட நடிகர்கள் வைத்திருப்பது போல தாடி வைத்திருப்பது உண்டு.

எதனால் தாடி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது, சிலர் தனி அடையாளம் என்று, சிலர் அது தான் சிறப்பான தோற்றத்தை கொடுக்கிறது என்றும் , சிலர் லேட்டஸ்ட் ஃபாஷன் என்றும் கூறினார்கள்.

தாடி ஒரு சில இடங்களில் தனி அந்தஸ்தாக கருத படுகிறது. கிரியேடிவ் உலகத்தில் இன்டெலெக்சுவல் க்ரூப் ஜோல்னா பையுடன் தாடியையும் அடையாளமாக வைத்திருக்கிறார்கள். ஆன்மிக உலகத்தில் தாடி மிக பரவலாக பயன்படுத்த படுகிறது. ஜேசுதாஸ் போன்று தாடி வைத்து கொண்டு திரிந்த பாடகர்களை நான் பார்த்துள்ளேன். இவர்களுக்கு தாடி என்பது தங்களுடைய விருப்பமாக இல்லாமல் , செயற்கையாக வைத்து கொண்டு திரிவதாக எனக்கு பட்டது.

மீசையை போல அல்லாமல் தாடி தினசரி எடுத்து விட வேண்டிய ஒன்றாக எனக்கு தோன்றுகிறது. தாடி இல்லாமல் இருப்பது சுறுசுறுப்பின் அடையாளம். வேண்டுமேன்றே தாடி வைத்து கொண்டு திரிவது அரட்டை அரங்கத்தில் உணர்ச்சி வசப்படுவர்கள் போல எனக்கு பார்க்கவே சகிக்கவில்லை. .(சில பேர் வேண்டுமேன்றே கே.பி.என்னில் ஆங்கிலத்தில் பேசுவது போல)

எனக்கு பிடிக்காத, பிடிக்காத என்றால் சற்றும் பிடிக்காத, ஒரு நொடி கூட பார்க்க பிடிக்காத விஷயங்கள் இரண்டு : தாடி, அரட்டை அரங்கம்.

தாடி,அரட்டை அரங்கத்தை ரசிப்பவர்கள் இங்கே உண்டா?

Saturday, March 18, 2006

கானா உலகநாதன்

கானா உலகநாதன்

சித்திரம் பேசுதடி புகழ் கானா உலகநாதன் பற்றி சில பதிவுகள் தமிழ்மணத்தில் பார்த்தேன். அதில் பலரும் ஆர்வம் காட்டியதால் இந்த லிங்குகளை தந்துள்ளேன். சித்திரம் பேசுதடி பட விழா சமீபத்தில் ஒரு சினிமா தியேட்டரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் விடியோவை இந்தியாகிளிட்ஸில் காணலாம்.

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/9330.html


சன் டிவி நேர்காணலில் மிக சாதாரணமாக பேசிய இயக்குனர் இந்த நிகழ்ச்சியில் மிக செயற்கையாக இருந்தது. நரேனை சாகடிச்சிருவேன் என்று டயலாக் பேசி காட்ட சொல்லி ரசிகர்கள் வேடிக்கை பார்த்தது ரசிக்கும் படி இருந்தது. நிறைய பேர் சுருக்கமாக பேசினார்கள்.

இந்த விழா கூட எளிமையாக மிகவும் ரசிக்கும் வண்ணம் இருந்தது. பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.உலகநாதன் பாடினார் . கண்ணாடி இல்லாமல் அவரை பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. அவரை காட்டிலும் மைக் பிடிக்கும் பையன் மிக்க சந்தோஷமாக காணபட்டார். வெற்றி இந்த மாதிரி கலைஞர்களுக்கு கொடிக்கும் சந்தோஷம் நம்மை நெகிழ வைக்கிறது. ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித் என்று குப்பையான நடிகர்களுக்கு பதிலாக இந்த மாதிரியான சிந்தனையை நம்புகிற இயக்குனர்கள் வந்தால் நன்றாக இருக்கும்.

Friday, March 17, 2006

ஸ்டேட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் ரஜினி.

பல்வேறு புத்திசாலிகள் காசுக்காக அதிரடி வசனங்கள் எழுதி கொடுக்க,அதை வாழ்க்கையை ஒட்டி வந்த ரஜினி இடையில் அரசியலிலும் வெளிப்படையாக 1996 இல் ஜெயலலிதா எதிர்ப்பு நிலை எடுத்தார். அது உண்மையில் பாராட்ட பட வேண்டிய விஷயம். ஆனால் ஜெயலலிதா தோற்றதே அதனால் தான் என்று நம்பும் வண்ணம் மீடியா பில்ட்-அப் செய்தது.

அவரை சீண்ட ஆளே இல்லாமல் இருந்த போது, ராமதாஸ் மிக தைரியமாக அநாகரிகமான வார்த்தைகளோடு அவரை மிக வன்மையாக கண்டித்தார். பாராளுமன்ற தேர்தலில் ஆழம் தெரியாமல் ரஜினி காலை விட , அவருடைய ஆதரவு நிலை கேலி கூத்தானது.

இப்போதும் ரஜினி ஒரு அறிக்கை விட்டுள்ளார். நீங்க எக்கேடு வேணா கெட்டு போங்க, என்னுடைய அடித்த படம் சிவாஜி நன்றாக வெளி வந்தா போதும் என்கிற ரீதியில் போகிறது அந்த ஸ்டேட்மெண்ட். முள்ளும் மலரும் படத்தில் இடம் பெற்ற ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்கிற பாடல ஞாபகத்திற்கு வருகிறது.

ரஜினி முதலில் அரசியலில் ஆர்வம் இழந்து விட்டால் தனது நிலையை தெளிவு படுத்தி இருக்கலாம். நடிகன் நாட்டுக்கு சமூகத்திற்கு கண்டிப்பாக பயன்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவது என்று முடிவை அவர் எடுத்து விட்டதாகவே தெரிகிறது. அதை அவர் இரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் ரசிகர் மன்றம் மூலமாகவே தெரிவித்து விடலாம். கமல் அரசியலில் இருந்து விலகி இருக்கவில்லையா?. தனது ரசிகர்கள் மூலம் நல்ல காரியங்கள் செய்யவில்லையா? அந்த பாதையை தேர்ந்தெடுந்தால் என்ன? திட்ட வட்டமாக ரஜினி தனது முடிவை கூறுவதனால் தன்னுடயை ரசிகர்கள் மீது தான் கொண்டிருக்கும் பிடி தளர்ந்து விடும் என்கிற நினைப்பில் இருக்கிறா? அதற்காக தான் இந்த மாதிரி சிறு துளி, சிறு துளியாக அறிக்கை விட்டு காலம் கடத்துகிறாரா?


குமுதத்தில் ஒரு முறை அரசு பதில்களில் ரஜினியிடம் கேட்க விரும்புவதாக இந்த கேள்வியினை கூறியிருந்தார்கள்: அரசியலுக்கு வரவே போவதில்லை என்கிற முடிவை எப்போது அறிவிக்க போகிறீர்கள் என்று?

ரஜினி 1996 இல் அறிக்கை விட்ட போது அவர் தைரியமான , சமூக அக்கறை உள்ள நடிகராக தெரிந்தார். அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் அவரை அனுபவமில்லாத, அரசியல் தெரியாத, குழப்பவாதியாக சித்தரிக்கின்றன. ஆனால் தற்போது அவர் பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ள, சுயநலம் பிடித்த நடிகராக காட்சி அளிக்கிறார்.

Tuesday, March 14, 2006

ட்ரேய்லர் பதிவு-நாமும் பேசுவோம் பஞ்ச் டயலாக்.

சினிமா கதாநாயகர்களும், அரசியல்வாதிகளும் தான் பன்ச் டயாலாக் பேசனுமா?. வலை பதிவர்கள் பேசினால் என்ன. வாருங்கள் பஞ்ச் டயலாக் லிஸ்டை எக்ஸ்பன்ட் பண்ணுங்கள். தயவு செய்து நகைச்சுவை உணர்வோடு எடுத்து கொள்ளவும். இந்த வார இறுதியில் வெளியாக போகும் பதிவிற்கான ட்ரேய்லர் பதிவு இது.சினிமாவிற்கு மட்டும் தான் ட்ரெய்லர் உண்டா?

1.முகத்தை காட்டி பதிவு போடுறவங்க பலபேரு. முகத்தை மூடி அவார்டு வாங்குறவுங்க சில பேரு.(முகமூடி)

2. பேரோட பின்னூட்டம் போடுறவங்கள் பலபேரு. நம்பரையும் சேர்த்து போடுறவங்க சில பேரு(டோண்டு).

3. பதிவு எழுதி பின்னூட்டம் வாங்குறவங்க பல பேரு. பின்னூட்டம் வாங்க பதிவு எழுதுதறவுங்க சில பேரு (குமரன்)

4. பதிவு எழுதறதுக்காக ப்ரொஃபைல் கிரியேட் பண்ணுறவுங்க பல பேரு. பின்னூட்டம் போடவே பல ப்ரொஃபைல் கிரியேட் பண்ணுறவுங்க சில பேரு ( வேறு யார்? போலி டோண்டு.)

5.பாலசந்தர் கணேசன் பதிவுக்கு நான் பின்னூட்டம் போட மாட்டேன். ஆனா என் பின்னூட்டத்திற்கு பாலசந்தர் கணேசன் பதிவே போடுவார்...(குமரன்)

Saturday, March 11, 2006

வோட்டு போடுவதை கட்டாயம் ஆக்கினால் என்ன?

சென்ற முறை ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்து போட்டியிட்ட கட்சிகள் அனைத்தும் இந்த முறை கலைஞரோடு இணைந்து போட்டியிட போகின்றன. 5 வருடத்தில் மக்கள் வாழ்க்கை தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ இல்லையோ, அரசியலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கலைஞர் சென்ற முறை செய்த தவறு அனைத்து முக்கிய கட்சிகளையும் கழட்டி விட்டது. அதே தவறினை கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஜெயலலிதா செய்தார். விளைவு இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சரியான டிமாண்ட். வைகோ போனதினால் எந்த அளவிற்கு பாதிப்பு என்பது போக போக தெரியும். ஆனால் தற்போதைக்கு அது தி.மு.க விற்கு சீட் பிரிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்க்க உதவி செய்துள்ளது. கிட்ட தட்ட அணிகள் உறுதியாகி விட்ட நிலையில், இந்த தேர்தல் தமிழகத்தை எங்கே கொண்டு செல்லும்?
வைகோ ஆனந்த விகடனில் கொடுத்த பேட்டியில் என்ன சொல்லியுள்ளார் பாருங்கள். ஒரு இயக்கம் வளர்ச்சி காணவேண்டுமாம். அப்போது தான் கொள்கையை பரப்ப முடியுமாம். அதனால் கொள்கையை கை விட்டு வளர்ச்சி அடைவார்களாம். அதன் பின்னர் கொள்கையை பரப்புவார்களாம். வைகோ ஜெயலலிதா, கலைஞருக்கு மாற்றான தலைவர் அல்ல. அவர்களை காட்டிலும் மோசமானாவர் என்பதை இது காட்டுகிறது.
வளர்ச்சிக்காக கொள்கையை விடுவது. பின்னர் கொள்கையை பரப்புவது என்பது ஒரு போதும் நடவாத ஒன்று. தற்போது 35 சீட்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்த வளர்ச்சி மட்டும் இவர்களுக்கு போதுமா? ஒரு போதும் இல்லை. அடுத்த முறை 70 வேண்டும் என்பார்கள். அதற்கு அடுத்த ஆளுங்கட்சியாக வேண்டும் என்பார்கள். ஆளுங்கட்சி ஆன பின்னர் அதை தக்கவைப்பதிலேயே கவனம் போய் விடும். கொள்கை நிரந்தரமாக மறக்க பட்டு விடும். இதற்காக அரசியல் தலைவர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. என்னுடைய முந்தய பதிவு சுதந்திர நாட்டின் அடிமைகள் காண்க.
இந்த தேர்தல் தமிழகத்தின் மோசமான அரசியல் மாற்றங்களை கொண்டு வர போகிறதோ? இரண்டு கட்சிகளுக்கிடேயே உள்ள பகைமை உச்சகட்டத்தில் இருக்கின்ற நிலையை மற்ற சாதா குட்டி கட்சிகள் எக்ஸ்ப்ளாயிட் செய்கின்றன. இரண்டு தேர்தல்கள் அனைத்து கட்சியும் தனித்து போட்டியிட்டால் இந்த குட்டி கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விடும். நடந்து முடிந்த தி.மு.க மாநாட்டில் கவனிக்க பட வேண்டிய ஒன்று ஸ்டாலின் முன்னிறுத்த பட்டாலும் அத்தைகைய வலிமை தலைவர் பதவிக்கு தேவையான வலிமை அவருக்கு உள்ளதா என்பது. தி.மு.க தெளிவாகவே கலைஞரை தான் இன்னமும் நம்பி இருக்கிறது. கலைஞருக்கு அப்புறம் உள்ள சூழ்நிலை இதை காட்டிலும் மோசமாகவே இருக்கும். வைகோ அணி மாறிவிட்ட நிலையில் இனிமேல் தி.மு.க தொண்டர்களை ஈர்ப்பாரா?
இரண்டு கட்சிகளின் சண்டையில் , மற்ற கட்சிகள் பிடி இறுகுகின்றது. ஏற்கனவே பா.ம.க. ஒரு 30 சீட் கட்சியாக வளர்ந்து விட்டது. இந்த தேர்தலோடு ம.தி.மு.கவும் அந்த இடத்தை பிடித்து விட்டது. ராமதாஸ் ஏற்கனவே வன்முறையாளராக காட்சி அளிக்கிறார். வைகோ கொள்கை என்பது வளர்ச்சிக்காக கை விட பட வேண்டிய ஒன்று என்பதில் தெளிவாகி விட்டார். தமிழகத்தின் 2011 தற்போதைய நிலைமையை விட மோசமாக இருக்கும் மக்கள் 100 சதவிகிதம் ஒட்டு போடுவதே இந்த நல்ல எதிர்காலத்தை கொண்டு வரும். வோட்டு போடுவதை கட்டாயம் ஆக்கினால் என்ன?

Wednesday, March 08, 2006

மான்ட்ரியாலில் தமிழ் சாப்பாடு

கடந்த ஆறு மாதமாக கனடா-மான்ட்ரியாலில் வேலை செய்து கொண்டு வருகிறேன். இதற்கு முன்னர் இரண்டு முறை வெளிநாடு சென்று வந்திருக்கிறேன். நிறைய இந்திய உணவங்கள் உண்டு என்றாலும் 99% சதவிகிதம் வட இந்திய உணவகங்கள்.
மான்ட்ரியாலில் தோசை, இட்லி கிடைத்தாலும், அவை இலங்கை தமிழர்களால் நடத்தபடுகிறவை. இங்கு கூட தென் இந்திய உணவகங்களை பார்க்க முடிவதில்லை.இத்தனைக்கும் இந்த உணவங்களுக்கு தென் இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டினர் தான் வருகின்றனர்.ஆனாலும் வட இந்திய உணவுகளே கிடைக்கின்றன. நடத்துகிறவர்கள் வட இந்தியர்கள். ஏன் நம்மூர் காரர்கள் வெளிநாடுகளில் உணவங்கள் துவங்க கூடாது? பலத்த வரவேற்பு அதற்கு கண்டிப்பாக கிடைக்கும்.

நான் சைவம் மட்டுமே என்று சொன்னவுடன் என்னை பலர் அதிசயமாக பார்த்தனர். இந்திய உணவங்களுக்கு என்னை அழைத்து சென்றனர். ஆசை ஆசையாக போனேன். ஏமாற்றம் அடைந்தேன்.போன மாதம் எனது மனைவி வந்து சேர்ந்தவுடன் இந்த ஏமாற்றங்கள் காணாமல் போய் விட்டன.
தென் இந்தியர்கள் பொதுவாகவே தொழில் வெளி இடங்களில் துவங்க தயங்குவார்கள் என்ற கருத்து உண்டு. அது தான் தென் இந்திய உணவகங்கள் குறைவாக இருக்கவும் காரணமாக இருக்கின்றனவோ?

குமரன் என்ன சொல்கிறார்?

வர வர உங்கள் பதிவுகளும் பாலசந்தர் கணேசன் பதிவுகள் அளவுக்கு சைஸ் குறைந்து கொண்டு வருவதையும் கவனித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இந்த நிலையில் போனால் அவருடைய பதிவுகளுக்கு ஏற்படும் கதி தான் உங்கள் பதிவுகளுக்கும் ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் கொடுக்க விரும்புகிறேன்.

இது குமரன் (http://www.blogger.com/profile/13762040) நாமக்கல் சிபி(http://www.blogger.com/profile/15516963)க்கு விட்ட செல்ல எச்சரிக்கை.
என்னுடைய பதிவுகள் அளவில் சின்னவைதான். ஆனால் அவருடைய பதிவிற்கு ஏற்பட்ட கதி தான் உங்களுக்கும் என்று குமரன் எதை கூறுகிறார்?.குமரன் விளக்குவாரா?

உண்மையில் எனது பதிவிற்கு பலர் படிக்கதான் செய்கிறார்கள். வெகு சிலர் பின்னூட்டம் இடவும் செய்கிறார்கள். ஆனால் அவர் பதிவிற்கு ஏற்பட்ட கதி என்று சொல்லும் வண்ணம் இங்கே என்ன நடந்து விட்டது? அல்லது சிபிக்கு என்ன நடக்க போகிறது.

அளவை பற்றி குமரன் கூறியதை நான் சரியான முறையில் தான் எடுத்து கொண்டேன்.ஆனால் அடுத்த சில வரிகள் தான் அவர் தெளிவாக இல்லை.

Tuesday, March 07, 2006

இந்திய பா.ஜ.க தலைவர் தமிழகத்திற்கு வந்தால்.

இந்திய பா.ஜ.க தமிழகத்திற்கு வந்து தெரு தெருவாக பிரசாரம் செய்தால் அவரை ஒருவருக்கும் அடையாளம் தெரியாது. யோவ் ஒரமாக நில்லுய்யா என்று பொது ஜனம் அவரை அதட்டும். இவர்கல் கூட கூட்டணி வைக்க விஜயகாந்த் கூட விருப்பமாக இல்லை. காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது.

தற்போதைய நிலமை மட்டுமல்ல எதிர்காலமும் பா.ஜ.கவிற்கு பிரகாசமாக இல்லை. கட்சிகள் வளரும் வேகத்தை பார்க்கும் போது பா.ஜ.க காணோமல் போன(போய் விட்ட?)கட்சியாகி விடும் என்றே தோன்றுகிறது.

இன்று பா.ஜ.க தனித்து போட்டியிடும் என்று வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். இதனையடுத்து ஊரே விழுந்து விழுந்து சிரித்து சிரித்து கொண்டிருக்கிறது. வெங்கையா நாயுடு வெற்றி பெற்றால் யார் முதலமைச்சர் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Monday, March 06, 2006

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுவின் டெம்ப்ளேட்

இன்னும் சில நாட்களில் புதிய டெம்ப்ளேட் உருவாக்க போகிறேன். என்னுடைய தற்போதைய டெம்ப்ளேட் இங்கே உள்ளது. நீங்கள் கொஞ்சம் தேடி கண்டு பிடித்து வெட்ட ஒட்ட வேண்டியிருக்கும். அதனால் என்ன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கொள்ளுங்கள்.

தமிழக வீரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக வீரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

முரளிதரனை பாராட்டி கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார். இந்த செய்தியினை பாருங்கள்.

மற்ற தமிழக தலைவர்களோடு ஒப்பிடும் போது விளையாட்டில் ஆர்வம் கொண்ட கருணாநிதி, வைகோ போன்றவர்கள் தமிழக ஆட்டகாரர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும். விளையாட்டில் அரசியல் புக கூடாது என்று நீங்கள் மறுத்தால் ஒன்றை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பாவிட்டாலும் விளையாட்டில் அரசியல் புகுந்து விட்டது. எனவே இடம் கிடைக்க அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தால் தப்பில்லை. தமிழக வீரர்கள் உண்மையில் நியாயமான முறையில் பரீசிலிக்க படுகிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே அரசியல் தலைவர்கள் குரல் கொடுப்பது கவனத்தை தமிழக வீரர்கள் நோக்கி திருப்பும்.

திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு ஒட்டு போடுங்கள்.

ஜெயலலிதா எப்படி பட்ட தலைவராக உள்ளார்?
1. மற்றவர்களை எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் நடத்துவார். அருணாசலத்தை ஒரு முறை விமானத்தில் இருந்து இறக்கி விட்டார். மணி சங்கர் அய்யரை பொது மேடையில் அவமான படுத்தினார்.

2. எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் ஏசி அறிக்கை விடுவார்.சென்னா ரெட்டி பற்றி அவர் விட்ட அறிக்கை கீழ்தரத்தின் உச்சகட்டம். நாவலரை உதிர்ந்த ரோமம் என்றார்.

3.கட்சி காரர்களை அவர் நடத்துகிற விதம் சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். ஒட்டுமொத்த கூட்டமும் அவரை அம்மா தாயே என்று கும்பிடுகிறது. அவரோ அந்த கூட்டத்தை மனிதர்களாகவே மதிப்பதில்லை.(அந்த கூட்டம் அதை பொருட் படுத்துவதாகவே தெரிவதில்லை.)

இத்தைகைய பல மோசமான குணங்கள் இருந்தாலும் அதை மீறி அவர் வெல்வது ஒரு பெரிய ஆச்சரியமே. சென்ற முறையை விட இந்த ஆட்சி பரவாயில்லை என்பது ஒரு கேனத்தனமான ஸ்டெட்மென்ட். அவர் போன முறை செய்தது ஆட்சியே இல்லை. காட்டுமிராண்டிதனத்தின் உச்சகட்டம். ஒரு ஜனநாயக நாட்டில் அவர் 5 வருடம் ஆட்சியை மக்கள் அனுபவித்தது நமது ஜனநாயக அமைப்பில் உள்ள் குளறுபடிகள், பலவீனங்களின் எடுத்து காட்டு. எனவே அந்த முறையை விட இந்த முறை பெட்டர் என்பது (உண்மையானாலும்) கேனத்தனமே. அதை காட்டிலும் ஒரு மோசமான ஆட்சி இருக்க முடியாது.

இந்த முறையுமே அவர் மோசமான, சுயநலம் உள்ள ஆட்சியாளராகவே காட்சி அளித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவர் கொண்டு வந்த கட்டுபாடுகள் சீர்திருத்தங்கள் அல்ல, வேறு வழியில்லாமல் எடுக்க பட்ட முடிவுகள். தன்னை மக்கள் கண்டிப்பாக மக்கள் ஆதரிப்பார்கள் என்பது அவருடைய குருட்டுதனமான நம்பிக்கை. அதனால் தான் அவர் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தன. அதற்கு அப்புறம் அவர் சலுகைகளை வாரி இறைத்தார். ஒரு பாலன்ஸ்ட் ஆன லீடராகவே அவர் காட்சி அளிக்கவில்லை.

அவர் ஆட்சியில் அவருடைய எதிரிகள் கூட குறை கூற முடியாத அம்சம் : தீவிரவாத எதிர்ப்பில் அவர் காட்டும் கண்டிப்பு. இவருடைய ஆட்சியின் ஒரே சிறப்பம்சம் இதுவே. இவர் இல்லாவிட்டால் வீரப்பன் போன்றவர்கள் இயற்கை மரணம் மட்டுமே அடைந்திருப்பார்கள்.

இவ்வளவு மத்தியிலும் இவர் இன்னமும் சக்கை போடு போட காரணம் 1. கருணாநிதி, 2. மக்களிடையே உள்ள் ஆர்வமின்மை. தமிழகத்தில் உள்ள அனைவரும் வோட்டு போட்டால் தி.மு.க , அ.தி.மு.க வை முந்தி விடும். காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் இருக்காது. பா.ம.க, , ம.தி.மு.க போன்றவையும் அடிவாங்கும்.

நாடு விட்டு நாடு வந்தவர்கள், அல்லது மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் ஒட்டு போடாதது தவிர்க்க முடியாதது. ஆனால் சும்மா வீட்டில் இருந்து கொண்டே இதனை தவிர்ப்பவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றி கொள்ளவேண்டும்.

எல்லோரும் வாருங்கள் . ஒட்டு போடுங்கள். இந்த முறை வாய்ப்பினை தி.மு.க விற்கு வழங்குங்கள். தொடர்ச்சியாக இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தால் (அ.தி.மு.க ஆனாலும் தி.மு.க ஆனாலும் சரி) அவர்கள் ஆட்டம் தாங்கமுடியாது. வெளிப்படையாக இவ்வாறு எழுதுவது எனது நம்பகத்தன்மையை,நடுநிலைமையை பற்றி சந்தேகங்களை எழுப்பலாம். ஆனால் நாட்டிற்கு இதனால் நன்மை உண்டு என்று நான் கருதும் போது அந்த எண்ணத்தை வெளி படுத்துவது தவறில்லை என்றெ நான் கருதுகிறேன்.

Sunday, March 05, 2006

கங்குலியை மீண்டும் அவமானபடுத்துகிறார்கள்.

சமீபத்தில் சாப்பல் கொடுத்த ஒரு பேட்டியில் கங்குலியை மீண்டும் குறை கூறியிருந்தார். இந்த முறை ஆட்டத்தில் உள்ள் குறைபாடுகள் மட்டுமின்றி, கங்குலியை தனிப்பட்ட முறையிலும் மிக அநாகரிகமான முறையில் விமர்சித்துள்ளார் சாப்பல்.

சாப்பல் பல விஷயங்களில் செயல்படுகின்ற விஷயங்கள் அளவு மீறி செயல்படுவதாகவே உள்ளன. உண்மையில் கிரிக்கெட்டில் வீரர்களின் திறன், கேப்டனின் புத்திசாலித்தனம் தாண்டி பயிற்சியாளர் எதையும் பெரிதாக சாதிக்க முடியும் என்று நான் கருதவில்லை.

இது என்னுடைய கருத்து மட்டுமில்லை. சாப்பலில் சகோதரரும் கூட இதே கருத்தையே தெரிவித்துள்ளார். சாப்பலின் சகோதரர் சொல்லி இருக்கும் கருத்தை பாருங்கள்: வீரர்கள் சொந்தமாகவே வெற்றி அடைவதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். அத்தகைய அணிகள் மட்டுமே
மிக சிறப்பாக ஆடமுடியும்.

எனது கருத்தும் அதுவே. சர்வதேச அளவில் வீரர்களின் ஆட்டதிறன், கேப்டனின் சமயோசித புத்தி மட்டுமே அணியின் தரத்தினை நிர்ணயிக்கும்.

ராமதாஸின் மதிப்பு பெரிதும் உயர்ந்தது.

தாவுவதில் வல்லவரான ராமதாஸ் மீது தி.மு.க காரர்களுக்கு எப்போதும் ஒரு சந்தேகம், கோபம் இருக்கும். ஆனால் இப்போது அவர்களே ராமதாஸ் எவ்வளவோ மேல் என்று நினைக்கும் வண்ணம் அவர்களிடம் கெட்ட பெயர் மற்றும் கோபம் சம்பாதித்து விட்டார் வைகோ.

ஜெயலலிதாவோடு அவர் நிற்பதை பார்க்கும் போது, மிக கஷ்டபட்டு முகத்தில் உணர்வுகளை மறைத்து கொண்டு சிரிப்பதை பார்க்கும் போது நமக்கே தர்ம சங்கடமாக உள்ளது. மேடைக்கு மேடை சுயமரியாதை பற்றி முழங்கும் வைகோ, சுதந்திர உணர்வினை பற்றி குரல் கொடுக்கும் வைகோ, உயரம் தாழ்ந்து தரம் குறைந்து நிற்கிறார். மிகுந்த மெல்லிய குரலில் அரசியல் கூட்டணி கொள்கை ரீதியானது அல்ல, தொகுதிகள் ரீதியானது என்கிறார். ஏற்கனவே அவர் ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தவரே.


சென்ற தேர்தலிலும் அவர் தனித்து போட்டியிட்டது அவருக்கு உதவாவிட்டாலும், ஜெயலலிதாவிற்கு சாதகமாகவே முடிந்தது. காங்கிரஸ், பா.ம.க மற்றும் கம்யூனிஸ்ட்கள் இல்லாததால் தி.மு.க. வைகோ இழப்பினால் பாதிக்க பட்டது. ஆனால் இந்த முறை வைகோ வெளியேறுவது மற்ற கட்சிகளால் சமன்பட்டு செய்யபட்டு விடும். அணி மாறியதால் வைகோ பெற்றதை விட இழப்பதே அதிகம். ஒரு விதத்தில் தி.மு.க. அணியில் உள்ள சீட் பிரிக்கும் சிக்கலை வைகோ தீர்த்து வைத்துள்ளார். கண்டிப்பாக தோல்வி அடைந்தால் ஜெயலலிதாவோ, கலைஞரோ சட்டசபைக்கு வரமாட்டார்கள். அதனால் சட்டமன்றத்தில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று நினைக்கிறாரோ வைகோ.

என்ன காரணங்கள் அவர் மனதில் அணி மாறுவதை தூண்டினவோ?

நேற்றும் ஆதரித்தேன் , இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று முழங்கியவர் இன்று காட்டும் பவ்யத்தை பாருங்கள். எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்.

ஜெயலலிதாவிற்கு ஒரு ராசி அவரை மிக கடுமையாக எதிர்த்தவர்கள் எல்லோரும் இறுதியில் அவரிடம் கும்பிடு போடுவது, புகழ்வது. இதற்கு ஆர்.எம்.வீ, ரஜினி, பி.எச்.பாண்டியன், வைகோ என்று பல நபர்களை உதாரணமாக சொல்லலாம்.

நாங்கள் பா.ம.கவை விட பெரிய கட்சி என்று முழங்கிய இவர்கள் இன்று பா.ம.கவிற்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துள்ளனர். ராமதாசு எவ்வளவு உழைத்தாலும் இந்த நல்ல பெயர் இவருக்கு கிடைத்திருக்காது. இன்று தி.மு.க வின் மிக பெரிய எதிரி : வைகோ.

Saturday, March 04, 2006

கூட்டணி மாற்றம்

கூட்டணி மாற்றம்
இந்த தேர்தலில் வெற்றி பெற போவது யார்?
தி.மு.க கூட்டணி
அ.தி.மு.க கூட்டணி

என்ன தான் சாப்பிடுகிறார் கலைஞர்?

வெள்ளை பனியாரம், கவுன் அரிசி, சாம்பார், தயிர்சாதம்: இது தான் கலைஞரின் மெனு. எப்படி தெரியும் என்கிறார்களா? எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் இருந்து தான் அவருக்கு சாப்பாடு போகிறது.
எந்த நேரம் படுக்கைக்கு சென்றாலும் அதிகாலையிலேயே எழுந்து விடும் பழக்கம் கொண்ட கலைஞரின் தினசரி வாழ்க்கை படு சுறுசுறுப்பாகவே இருக்கிறது. அவருடைய வேகம் பிரமிக்க வைக்கிறது.ஒய்வு என்பது அவருக்கு அரிதாகவே கிடைக்கிறது. சில நாட்களில் அவர் படுக்கைக்கு செல்ல இரவு மணி 1 ஆகிவிடுகிறது என்று கட்சிகாரர்கள் கூறுகிறார்கள்.
ஆயிரம் குறை சொன்னாலும் , அரசியல்வாதிகளிம் ஊக்கம் பாரட்ட தக்கது. இந்த அளவு ஊக்கத்தோடு கடுமையாக உழைத்தால் எந்த துறையிலும் முன்னேறிவிடலாம்.

தரம் தாழ்ந்தார் வைகோ.

தமிழக அரசியலில் ஒழிக்க பட வேண்டிய தலைவராக நான் கருதுவது வைகோ அவர்களை. அவருடைய முதன்மையான குறைபாடு விடுதலை புலிகளின் ஆதரவாளராக இருப்பது. பொடோவில் சிறையில் சென்று பல மாதங்கள் வாடிய பின்னரும் நெஞ்சு வலி, குற்ற பத்திரிக்கை எனக்கு புரியாத மொழியில் எழுதபட்டுள்ளது என்றெல்லாம் நாடகம் ஆடாமல் சட்டரீதியாக போராடினார் என்ற மரியாதை பரவலாக வளர்ந்துள்ள நிலையில் அவர் அ.தி.மு.க தாவியிருப்பது அவர் மீதான தனிப்பட்ட மரியாதையை கடுமையாக குறைத்துள்ளது.
தி.மு.க தொண்டர்கள் கண்டிப்பாக ஜெயலலிதாவை வேண்டுமானாலும் ஏற்பார்கள் ஆனால் இனிமேல் வைகோவை ஏற்க மாட்டார்கள்.வைகோ இனிமேல் துரோகியாகவே கருதபடுவார். இவ்வளவு நாட்கள் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் வைகோவிற்கு கிடைத்த கைதட்டல்கள், ஆரவாரங்கள், ஸ்டாலினுக்கு கூட கிடைக்கவில்லை. அத்தகைய அளவு தொண்டர்களை வசியம் பண்ணிய வைகோ இன்று ஒரே நொடியில் அவர்களின் பரம எதிரியாக மாறிவிட்டார்.கலைஞருக்கு அப்புறம் யார் என்ற கேள்விக்கு பதில் கண்டிப்பாக வைகோ இல்லை.அவருக்கு கிடைக்கும் 35 சீட்களில் எத்தனையில் அவர் வெற்றி பெறுவார்? கண்டிப்பாக அவர் தி.மு.க வுடன் தொடர்ந்திருந்தால் 22 சீட்களில் 18 சீட்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.ஆனால் இன்று அதிமுகவுடன் அவர் 35 தொகுதிகள் போட்டியிட்டாலும் எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் அவருக்கு?
இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த வைகோ கடைசி நிமிடத்தில் அணி மாறி தன்னுடைய தனிப்பட்ட இமேஜ் எதிர்காலம் அனைத்தையும் கெடுத்து கொண்டார்.