Friday, December 30, 2005

நல்வாழ்த்துக்கள்

ஒரு புதிய யுகம் பிறக்கட்டும்...
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு- பங்க்சு பார்ட்டி சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


உங்கள் ஆதரவுக்கு நன்றி.....

சுதந்திர நாட்டின் அடிமை மக்கள்

மீண்டும் மீண்டும் அரசியல் பற்றி எழுதுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழக அரசியல்வாதிகளில் மிக கடுமையாக விமர்சிக்க படும் ராமதாசு மற்றும் திருமா வளவன் பற்றிய கட்டுரை இது.
1.தான் சார்ந்த சாதி அமைப்புகளை வலிமை படுத்தி அரசியலில் நுழைந்தவர்கள் இருவரும்.
2. அரசியலில் நுழைந்த பொழுது யாருமே அறிவிக்காத சத்தியங்களை ராமதாசு செய்தார். அதை முற்றிலுமாக கடைபிடித்தார். உண்மையிலேயே பொது வாழ்வில், பா.ம.க. கட்சி ஒரு வித்தியாசமாக காட்சி அளித்தது. அதே போன்று, திருமா வளவன் மாவட்டம் தோறும் தாழ்த்த பட்ட மக்களுக்காக போரட்டம் நடத்தினார். அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கின்ற சலுகைகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தினார். அவர்கள் சாணி அள்ளுவதற்கும் மலம் அள்ளுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்கள் மனித உரிமைகள் பற்றியும் கல்வி அறிவு பற்றியும் அறிந்து கொள்ள வைத்தார். இந்த மாதிரி நல்ல நடைமுறைகளை பயன்படுத்திய போது அவர்கள் வெற்றி பெறவில்லை.
3.இந்த இரண்டு பேரையும் குறை கூறுகிற மக்கள் அனைவரும் கவனிக்காத ஒன்று. இவர்கள் இருவரும் கொள்கையாவது கொளுக்கட்டையாவது என்று அனைத்தையும் புறக்கணித்து விட்டு, சுயநலமாக செயல் பட ஆரம்பித்த பின்னர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.ராமதாசு அனைத்து சத்தியங்களையும் தாரை வார்த்தார். இன்று பா.ம.க. ஒரு தவிர்க்க முடியாத( தவிர்க்க பட வேண்டிய கட்சியாக இருந்தாலும்) கட்சியாக மாறிவிட்டது. உருப்படியாக எத்தனையோ காரியங்கள் திருமா செய்த போது வராத கூட்டம் , இன்று அவர் தமிழக பெண்கள் கற்பை குஷ்பூ வீட்டு காக்கா தூக்கி விட்டு சென்று விட்டது என்று குரல் கொடுக்கிறார். தனக்கு எந்த பிரயோஜனமும் கிடைக்காது என்பதை உணராமல் இந்த கூட்டம் விளக்குமாறு எடுத்து கொண்டு ஒடுகிறது.
அரசியல் வாதிகளை மற்றும் குறை சொல்லி பயனில்லை. மக்கள் தலைவனுக்கு அடிமையாக இருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த கூட்டம் சுயமாக சிந்திக்க வக்கில்லாமல் அடிமையாக வளரும் கூட்டம். அதனால் தான் காலில் விழுவது, பச்சை குத்துவது, போஸ்டர் அடிப்பது என்று தமிழக அரசியல் சாக்கடை ஆகிவிட்டது. அ.தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதா என்று பெயர் சொல்ல முடியாது. தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதி என்று பெயர் சொல்ல முடியாது.அ.தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதியை ஒற்றை கண்ணன் என்று சொல்லலாம். தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதாவை இதை காட்டிலும் மிக கேவலமாக விமர்சிக்கலாம்.ஜெயலலிதா கட்சியில் இருப்பவர்களை அடிமைகளை விட கேவலமாக நடத்துவார். கருணாநிதி தன் வாரிசுகளுக்கு இணையாக யாரையும் வளர விட மாட்டார். இது இப்போது ராமதாசுக்கும் பொறுந்தும்.ஆனால் இதையெல்லாம் உணராத இந்தகூட்டம் இவர்கள் என்ன சொன்னாலும் தலையாட்டி கொண்டிருக்கிறது.இவர்களோடு கூத்தாடி பயல்களுக்கு போஸ்டர் அடிப்பவர்களையும் சேர்த்து கொள்ளலாம். வாய்ப்பு கிடைத்தால் இந்த கூத்தாடி பயல்கள் அரசியல் வாதிகளை விட மோசமாக ஆட்சி செய்வார்கள்.


தனக்கு என்று ஒரு சுய புத்தியில்லாமல் கட்சி தலைவன் என்ன செய்தாலும் அதை குருட்டு தனமாக பின் பற்றும் மக்கள், சுதந்திரமான நாட்டினிலும் அடிமைகளாகவே இருப்பார்கள்.

இப்படி அடிமையாக இருப்பது விசுவாசமகவே கருத படுகிறது. நான் தான் பெரிய அடிமை, என்னை காட்டிலும் பெரிய அடிமை யாருமில்லை என்று காட்ட ஒவ்வொரு கட்சியிலும் ஒரு போராட்டமே நடைபெறுகிறது. இந்த அடிமை புத்தி சுதந்திரம் வாங்கியதை அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது.

Wednesday, December 28, 2005

தண்டனை மிக குறைவு

ஒரு வழியாக 11 MPக்கள் பதவி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள். இந்த தண்டனை மிகவும் குறைவு. சாதரணமாக 50,100 என்று லஞ்சம் வாங்குகிறவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.(செய்யப் பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.) அதே போன்று இவர்களும் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பது சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்பது ஒரு வெறும் பேச்சு என்பதை காட்டுகிறது.. ஆனாலும் கூட தண்டனை கிடைத்திருக்கிறது என்பது ஒரு ஆறுதலான விஷயம்.

பில்கேட்ஸ் வருகை மர்மம் என்ன..? - ஞாநி


டெல்லியில் பில்கேட்ஸ் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்திய தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் பேசியதை மீடியாக்கள் பெரிய அளவில் சித்திரிக்கவில்லை. இந்தியாவுக்கு பில்கேட்ஸை விட முக்கியமானவர் பஜாஜ். டூவீலர், த்ரீ&வீலர் (ஆட்டோ) துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பஜாஜ், பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஓர் இந்திய நிறுவனம் வெற்றிகரமாக இயங்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். பஜாஜ் இந்தக் கூட்டத்தில் பில்கேட்ஸை கலாய்த்தார். ‘‘இன்னும் ஐயாயிரம் பேருக்கு வேலை, இத்தனை கோடி ரூபாய் முதலீடு என்பதெல்லாம் சரி, ஆனால் இந்தியாவின் ஜி.டி.பி&யில் (கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் & மொத்த உள்நாட்டு உற்பத்தி) அது என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது? ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வியில் பொறியியல் நிர்வாகம் ஆகியவற்றை கற்பிப்பதில் நாம் பெரும் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஆரம்பக் கல்வியும் பள்ளிக்கல்வியும் படுமோசமான நிலையில் இருக்கும்போது, ஒரு சில உயர்மட்ட நிறுவனங்களின் சாதனையால் பெருவாரியான மக்களுக்கு என்ன லாபம்?’’ என்று நறுக்குத் தெரித்தாற்போல் கேட்டார் பஜாஜ். அவர் மட்டுமல்ல பல பொருளாதார அறிஞர்கள் & நோபல் வென்ற அமர்த்தியா சென் உட்பட & சுட்டிக் காட்டுவது, தேசத்தில் பொருட்களின் உற்பத்தி பெருகினால் தான் நிஜமான செல்வப் பெருக்கம் (வெல்த்) ஏற்பட முடியும் என்பதாகும். கம்ப்யூட்டர் துறையை பொறுத்தமட்டில் இன்னமும் அதன் பயன்பாடு சுமார் 20% அளவில்தான் தயாரிப்புத் துறைக்கு இருக்கிறது. 80 சதவிகித பயன்பாடு சேவைத்துறையில்தான். எடுத்துக்காட்டு, ரயில் டிக்கெட் பதிவு, டெலிபோன் பில் போன்றவை. கம்ப்யூட்டரின் பயனைத் தயாரிப்புத் துறைக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் விதத்தில் முதலீடுகள் செய்யப்படுவதில்லை. சேவைத் துறையில் கூட ஒயிட் காலர் சேவைகளில் மட்டுமே கருவிகளும், கம்ப்யூட்டர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன. நகர சாக்கடைகளின் கழிவுகளை அகற்றுவது, சுத்தப்படுத்துவது போன்ற அழுக்கான சேவைப் பணிகளில் இயந்திரங்கள், கம்ப்யூட்டர்கள் பங்களிப்பு இல்லை. இப்படிப்பட்ட சூழலில் பில்கேட்ஸ் இந்தியாவில் செய்யப்போகும் முதலீட்டின் நடைமுறை விளைவுகள் என்ன? அவரே சொன்னது போல் புத்திசாலியான நிறைய கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களைத் தங்களுக்குப் பயன்படும் விதத்தில் உருவாக்குவது. அவர் சொல்லாதது மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தயாரிக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் மென்பொருளை இன்னும் அதிகமாக விற்பது. இதற்கான ஒரு வியாபார உத்தியாகத்தான் தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் கிராமப்புறங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர மைக்ரோ சாஃப்ட் முன் வந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் எம்.எஸ் மென்பொருளை ரூபாய் 1200/& விலையில் விற்கவும் முன் வந்திருக்கிறது. இந்தத் திட்டத்தை அரசாங்கத்துறை மூலம் செய்ய முற்படுவதன் உள்நோக்கம் என்ன? இதே கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்ட மென்பொருளான லினக்ஸ் (Linux), இலவச மென்பொருளாகும். இதனை பல அரசாங்கங்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. அரசின் பொதுத் துறையிலும், கல்வித்துறையிலும் லினக்ஸ் வேரூன்றி விட்டால் அங்கே மைக்ரோ சாஃப்ட் மார்க்கெட்டை இழந்துவிடும். எனவே, லினக்ஸ் பரவும் முன்பாக மைக்ரோ சாஃப்ட் நுழைய விரும்புகிறது. உலக அளவில் இதுவரை மைக்ரோ சாஃப்ட், தன் வர்த்தக போட்டியாளர்களை பல வகைகளில் வீழ்த்தி இருக்கிறது. ஆனாலும் அதன் பிரதான விற்பனைப்பொருள் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் தான். விண்டோஸின் உதவி இல்லாமலே பல கணிணி செயல்பாடுகளைச் செய்து விட முடியுமெனில் விண்டோஸ் அடி வாங்கத் தொடங்கும். இந்த ஆபத்தும் இப்போது வந்துவிட்டது. இணையத்தில் பிரதான தேடல் வாகனமான (சேர்ச் இன்ஜின்) கூகிள், தன் பிகாசா மென்பொருள் மூலம் விண்டோஸ் இல்லாமலே பல செயல்களை இணையத்தில் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. கணிணியே தேவைப்படாமல் செல்போன், டெலிபோன், கீ&போர்ட் மட்டும் கொண்டு பல இணைய வேலைகளைச் செய்துவிடும் அளவிற்கு கூகிள் வளர்ந்துவிட்டது. கூகிளின் மென்பொருள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இன்று இணையத்தின் தேடல் கருவிகளில் முதலிடத்தில் இருக்கும் கூகிள், இப்படி மென்பொருள் துறையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால் பதித்ததில், மைக்ரோ சாஃப்டின் வியாபரத்திற்கு சிக்கல் வந்துவிட்டது. கூகிளை முறியடிக்க தானும் ஒரு தேடல் வாகனத்தை களத்தில் இறக்கலாம் என்று கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ‘அன்டர் டாக்’ என்ற பெயரில் மைக்ரோ சாஃப்ட் அறிமுகப்படுத்தியது. ஆனால் இது வெற்றிபெறவில்லை. இப்போது புரிகிறதா பில்கேட்ஸ் சென்னை வருகையின் மர்மம்?

Sunday, December 18, 2005

என்ன மாறி என்ன?

பவார் டால்மியாவை தோற்கடித்து விட்டார். இனிமேல் வெட்டி அரசியல் இருக்காது என்று எதிர்பாத்தேன். ஆனால் அனைத்து எதிர்பார்ப்பும் உடனடியாக பொய் ஆகிவிட்டாது.முன்பு கொல்கட்டா க்ரூப் டாமினேட் செய்தது . இனிமேல் மும்பாய் க்ரூப் இந்த வேலயை செய்யும்.
ஒரள்வு நன்கே ஆடிய சவுரவ் நீக்கம் செய்யப் பட்டார். அஜித் அகர்கர் தொடருகிறார். வாசிம் ஜாபருக்கு மீண்டும் வாய்ப்பு. விட்டால் வினோத் காம்ப்ளி வருவார் போலிருக்கிறது. பாலாஜி , சடகோபன் ரமேஷ் போன்றவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஒரு முன்னாள் கேப்டன் திட்டமிட்டு அவமான படுத்த படுகிறார். ஆயிரம் குறை கூறினாலும், இன்றைய டீமின் முக்கிய வீரர்கள் அனைவரையும் உருவாக்கியவர் அவரே. சேவாக், பதான்,ஜகீர்கான், கைஃப், யுவராஜ் என்று ஒரு புதிய அணியை உருவாக்கிய பங்கு அவருக்கு உண்டு. சித்து, மஞ்ரேகர், அசார், ராபின் சிங், ஜடேஜா என்ற முந்தைய அணியை விட இப்போதைய அணி எவ்வளவோ வலிமை மிக்கது என்பதில் சந்தேகமில்லை.
நடக்கின்ற காரியங்கள் யாவும் இந்திய கிரிக்கெட் பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தை உருவாக்கவில்லை.

Sunday, December 11, 2005

சச்சின் சாதனை

ஒரு வழியாக சச்சின் தனது 35 ஆவது சதம் அடித்து காவஸ்கர் சாதனையை தாண்டி விட்டார். ஆனால் எத்தனை முறை சச்சின் தனது ஆட்டத் திறமையால் வெற்றி தேடி தந்திருக்கிறார் என்பது ஒரு முக்கியமான கேள்வி. சச்சின் ஒரு தலைசிறந்த பேட்ஸ்மன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சச்சின் ஒரு மேட்ச் இன்னிங்க்ஸ் இன்னமும் ஆடவில்லை.எனினும் ஓண்ணும் ஓண்ணும் ரெண்டு சார்பில் நான் அவருக்கு பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, December 05, 2005

ஜெயா TVயில் தோன்றுவது எப்படி...

சன் TVயில் தோன்றுவது எப்படி என்ற ப்லொக் ஏற்கனவே பாத்திருப்பீர்கள்...இப்போழுது ஜெயா TVயில் தோன்றும் வழிகள்.
1. உங்களுடைய அம்மாவை புகழுங்கள். கண்டிப்பாக அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும்.
2. உங்கள் பையனுடய குறைகளை சொல்லுங்கள். முக்கியமாக பையன் என்று சொல்லாமல், சன் என்று சொல்லுங்கள்.
ஜெயா TV காரர்கள் பொதுமக்கள், அம்மாவை புகழ்ந்தும், சன் TV யை குறை சொல்லியும் பேட்டி அளிக்கிறார்கள் என்று போடுவர்.

தமிழ் கக்கூசு கட்டுங்கள்...

தமிழ் நாட்டிலேயெ தமிழின் மதிப்பு தரம் தாழ்ந்து போய் கொண்டிருக்கிறது. தமிழ் மொழி கூவம் சாக்கடை ஆகி விட்டது மட்டும் இல்லாமல், தாய் மொழியின் அவசியத்தை வலியிருத்துவோர் மீது மக்களுக்கு வெறுப்புணர்வே அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் இங்கே

1. அறிவியல் படிப்பதற்கு அல்லது எந்த ஒரு புதிய தொழில் படிப்பு படிப்பதற்கோ தமிழ் தகுதி இழந்து விட்டது. கலை சொற்கள் என்ற பெயரில் செல் போனுக்கு தமிழ் சொல் உருவாக்குவது வீண். இதை மக்களிடம் கொண்டு சென்றால் எந்த வரவேற்பும் கிட்டாது. இந்த உண்மையை உணர அறிவு தேவை

2. இலக்கியம் என்றாலே புரியாத படி எழுதுவது, யாருக்கும் தெரியாத அயல் நாட்டு எழுத்தாளரை புகழ்வது என்று ஒரு கூட்டம் கிளம்பி மக்களிடம் இருந்து இலக்கியத்தை அப்புற படுத்தி விட்டது. மக்களிடம் செல்லாத எந்த ஒரு வடிவமும் இலக்கியம் ஆகாது. மக்கள் ஆதரித்தால் அது இலக்கியம் ஆகாது என்பது ஒரு வித அறிவு(?)ஜீவி மிரட்டலாகி விட்டது. இந்த கூட்டம் தான் பாரதியாரை இன்னமும் புகழ்ந்து கொண்டிருக்கிறது. விடுதலையை பற்றி எழுதி விட்டதனால் பாரதியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகி விட மாட்டார். கலைஞரும் வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான்,மீரா, போன்றவர்கள் பாரதியை கடந்து வெகு தூரம் சென்று விட்டார்கள். (கலைஞர் எழுதியது இலக்கியமே இல்லை என்று இன்றைய இலக்கிய வாதிகள் கூறலாம். அது வடிகட்டிய பொய். தங்கள் எழுத்து விற்க வில்லை என்கிற ஆதங்கம்).

3. எல்லாவற்றிகும் மேலாக அரசியல். தமிழ் , தமிழ் என்று மேடயில் முழங்கும் அரசியல் வாதிகள், BEST KANNA BEST , SUN TV, JEYA TV,KTV என்று பட்டைய கிளப்புவதும், அவர்கள் பிள்ளைகள் கான்வென்டில் படிப்பதும், மொழியின் அவசியத்தை நேர்மையாக வழியிருத்துகிறவர்களயும் சேர்ந்தே பாதிக்கிறது.ஊருக்கு தான் உபதேசம் என்கிற எந்த ஒரு கொள்கையும் எடுபடாது. இந்த அரசியல் வாதிகளிம் கடைந்தெடுத்த இரட்டை வேடம் , உண்மையா மொழியை நேசிக்கிற, வளர்க்க விரும்புகிற தமிழர்களை வெகுவாக பாதிக்கிறது. தமிழ் வளர்ச்சி என்றாலே மக்கள் ஒடுவதற்கு நேர்மையற்ற பிரசாரம் காரணம்.


தமிழை அறிவு பூர்வமாக நேசிக்கலாம்.அது நமது தாய் மொழி.