Monday, May 08, 2006

இட்லி வடையில் நான் இட்ட பின்னூட்டம்

பொதுவாகவே நல்ல ஆட்சி அமைப்பது , அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்துவது என்பது கடினமான காரியமாகவே உள்ளது. இதற்கு காரணம் சட்டமன்ற உறுப்பினர்களின் மோசமான செயல்பாடு. ஜெயலலிதா அரசு நிர்வாகத்தை ஒரளவு வெற்றி கரமாக முடுக்கி விட்டது போல, சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒரு விரட்டு விரட்டி இருந்தால் மிக எளிதாகவே ஆட்சியை பிடித்து இருக்கலாம். யானைக்கு செலவிட்ட காசை மக்களுக்கு அவர் பயன்படுத்தி இருக்கலாம்.

கருணாநிதி இந்த முறை வெற்றி பெற்றாலும், தேர்தல் அறிக்கையில் அவர் விட்ட வாக்குறுதிகள் தி.மு.கவை மிக கடுமையாக பாதிக்கும். இவற்றை நிறைவேற்றாமல் போனால் தி.மு.க விற்கு நிரந்தரமாக பாதிப்பு உண்டு. எப்படி பார்த்தாலும் அ.தி.மு.க வின் எதிர்காலம், தி.மு.கவை விட பிரகாசமாகவே உள்ளது.

இந்த தேர்தலின் பலியாடு ம.தி.மு.க ஆக இருக்கலாம். பா.ம.க இரண்டு தரப்பு மாறி மாறி சென்றாலும், இரண்டு தரப்புக்கும் அது இயற்கையான சாய்ஸ் ஆக உள்ளது. காரணம் அது சீட் மட்டுமே அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைக்கின்றது. அதை ராமதாஸ் வெளிப்படையாகவுன் கூறுகிறார். ஆனால் கொள்கை முழக்கம் விட்டு பின்னர் தாவும் வைகோவின் நிலைமை மிக பரிதாபம்.


தி.மு.க வின் வெறுப்பை சம்பாதித்து விட்டார். அ.தி.மு.கவோ , ம.தி.மு.க வினால் பிரயோஜனம் இல்லை என்ற நிலைமையை அடைந்து விட்டது. இனிமேல் ம.தி.மு.க விற்கு 23 சீட் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனால் இந்த முறை தனித்து போட்டியிட்டு ஸ்டார் அந்தஸ்து பெறுபவர் விஜயகாந்த் அவர்கள்.

இவர் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றால் , அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் மீது மீடியா தனியாக கவனம் செலுத்தும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. சுயேச்சைகள் அல்லது சிறு கட்சிகள் வெற்றி பெறுவது இது முதல் முறையாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இல்லாத ஒரு அட்வான்டேஜ் விஜயகாந்திற்கு உள்ளது. திருனாவுக்கரசர், தாமரைக்கனி , அப்பாவு, வெங்கடசாலம் போன்றவர்கள் தமிழக அளவில் பாப்புலாரிட்டி இல்லாதவர்கள். ஆனால் விஜயகாந்திற்கு அப்படி இல்லை. தமிழக அளவில் அவருக்கு அறிமுகம் உள்ளது. (இது தான் மற்ற அ.தி.மு.க தலைவர்களிடம் இல்லை. ஜெயலலிதாவிடம் இருந்தது எனவே தான் அவர் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் விஸ்வரூபம் எடுக்க முடிந்தது.) அதனை அவர் நன்கு பயன்படுத்த கூடும். இது வரை அவர் செயல் பட்ட விதம் த.மா.க வை மூப்பனார் கையாண்ட விதத்தை விட சிறப்பாக இருந்தது. ஆனால் அவர் இந்த முறை வெற்றி பெறுவாரா?. விருத்தாசலம் அவர் எடுத்த ஒரு சற்று அதிக படியான ரிஸ்க் என்றே தோன்றுகிறது. ஒரு நல்ல வாய்ப்பினை விஜயகாந்த் இழந்து விட்டாரோ என்றே தோன்றுகிறது.

9 comments:

VSK said...

அவனை அழைத்து வந்து
டிவியில் நிறுத்தி வைத்து
சொல்லடா சொல்லடா என்று
சொல்லி வைத்து
கேட்க வைப்பேன்

கேட்பான்,
துடித்திடுவான்,
பட்டதே போது,மென்பான்,
பாவியவன்
என்னுயிரைமுடித்திடவே
பலபேரை
அனுப்பி வைப்பான்

அவனை அனுப்பி வைத்தீர்!
இனியென்றும் அழுதிடுவீர்
பாவியவனை
அனுப்பாமலே
இருந்திருக்கலாம் என!
வெற்றிக் களிப்பில்[????] பேசும் பேச்சை
பதினொன்றாம் தேதிக்குப் பின்
வைத்துக் கொள்ளலாமே!

'ஓட்டளிப்புக்குப் பின்' கணிப்புகள்
ஆளும் கட்சிக்கு இல்லை என்று மட்டுமே சொல்கிறது1
இது நான் எதிர் பார்த்ததுதான்!

அது திமுகவிற்குப் போயிற்றா, இல்லை,
எங்களுக்கு வந்ததா என 11-ம் தேதி வரை காத்திருக்கவும்!
:-)))))))

Anonymous said...

நீங்கள் விஜயகாந்த் அவர்களைப் பற்றி கணித்தது முற்றிலும் சரி.

Anonymous said...

இந்த தேர்தலில் விஜயகாந்த் ஒரு இடம் பெருவது கூட மிகக்கடிணம். அவர் இன்னும் ஒரு அல்லது இரு தோல்விகளை சந்தித்தால் பிறகு அவரது அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது என்னுடைய சுவாரசியமான எதிர்பார்ப்பு. தற்போதைய அவரது பலமே அவர் தனித்து நிற்கிறார் என்பதுதான். தொடர் தோல்வி கிடைக்கும் நிலையில் அவர் அல்லது அவரை சார்ந்தவர்கள், ஏதாவது ஒரு கழகத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பலாம். அந்த நிலை வந்தால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-விற்கு மாற்றாக பார்க்கப்படும் அவரது நிலை கவலைக்கிடமே!
அ.தி.மு.க-விற்கு வை.கோ-வும், வை.கோ-விற்கு அ.தி.மு.க-வும் அவசியம். ஆதலால் அவர்கள் தோல்வியை சந்திப்பினும் ஒன்றாகவே இருக்கக் கூடும்.ம.தி.மு.க-வின் நிலை, தி.மு.க-வில் இருந்ததை விட அ.தி.மு.க-வில் பாதுகாப்பாகவே நான் உணர்கிறேன்.

Sivabalan said...

பாலசந்தர் கணேசன்,

அருமையான அலசல்!! நல்ல பதிவு!!

நன்றி!!

ஜோ/Joe said...

பாலசந்தர்,
நல்ல வெளிப்படையான கருத்துக்கள்..பிடியுங்கள் பாராட்டுக்களை!

பாலசந்தர் கணேசன். said...

கடற்புரத்தானுக்கு நன்றி. எஸ்கே அவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்றார்.விருத்தாசாலத்தில் இருந்து அவருக்கு நல்ல செய்தி வருமா?

Muthu said...

பாலு,

உங்கள் எழுத்து மெருகேறி கொண்டே வருகிறது.ரகசியம் என்ன?

அருமையாக கட்டுரைக்கு வாழ்த்துக்கள்.

பாலசந்தர் கணேசன். said...

நன்றி முத்து அவர்களே,

இந்த வார நட்சத்திரமாக உண்மையில் ஜொலித்தீர்கள். அனைத்து பதிவுகளையும் படித்தேன். பாராட்டுகிறேன்.

Anonymous said...

A good analysis - as you rightly said Vaiko would have bleak days ahead.

Sarathkumar's film career is a big question mark now, as SUN TV supported him to the hilt.

But I don't agree with your view that DMK will not have a bright future as AIADMK. If they do well and if Stalin proves himself as a good replacement to MK, then I don't see any reason why they would not be force to reckon with! It would be interesting to see how Jaya reacts to the defeat, would she distance herself from Sasikala again as she did last time, perhaps this time it would be Vaiko:)-

Wait wait..... the results are not out yet!!