Sunday, April 26, 2009

வெகு நாட்கள் கழித்து மீண்டும்

வெகு நாட்கள் கழித்து மீண்டும் எழுத வந்துள்ளேன். உண்மையில் சொல்ல போனால் சென்னை வந்த பின்னர் நிறைய எழுத முடியும் என்று நினைத்தேன். ஆனால் நடந்தது அதற்கு முற்றிலும் மாறானது.


இந்த இரண்டு கால இடைவெளியில் பதிவர் உலகம் மிகவும் விரிவடைந்துள்ளது. முன்னர் அதிகமாக விவாதிக்கபட்ட குழலி, முத்து தமிழினி, முகமூடி, மாயவரத்தான், கடற்புரத்தான் போன்றவர்கள் எழுதுவதை மிகவுமே குறைத்து விட்டனர். டோண்டு இன்னமும் பீக் ஃபார்மில் இருக்கிறார்.காசியிடமிருந்து தமிழ்மண நிர்வாகம் கை மாறியுள்ளது.


புதியவர்கள் நிறையவே உள்ளனர். பழைய பதிவர்களில் எத்தனை பேருக்கு என்னை நினைவிருக்கும் என்று தெரியவில்லை. புதியவர்களுக்கோ என்னை சுத்தமாக தெரிந்திருக்காது.


என்னுடைய பல பதிவுகளின் அளவை பற்றி பலர் கிண்டலடித்ததுண்டு. சும்மா ரீவைண்டு பண்ணி இரு பதிவுகளின் இணைப்பை கொடுத்துள்ளேன்.

http://bunksparty.blogspot.com/2006/03/blog-post_08.html

http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_09.html

போன சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்மணம் மிக பரபரப்பாக காணப்பட்டது. நானும் அப்போது ரெகுலராக எழுதி கொண்டிருந்தேன். தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழ்நிலையில் மீண்டும் தொடங்குகிறேன். இனிமேல் வாரவிடுமுறையின் போது எழுத திட்டமிட்டுள்ளேன்.

1 comment:

கோவி.கண்ணன் said...

//புதியவர்கள் நிறையவே உள்ளனர். பழைய பதிவர்களில் எத்தனை பேருக்கு என்னை நினைவிருக்கும் என்று தெரியவில்லை.//

புதிய பதிவர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டது, அதில் பலர் கலக்கு கலக்கென்று கலக்குகின்றனர்.

நீங்க எழுத ஆரம்பித்தால் அறிந்து கொள்வார்கள்.

உங்களைப் பற்றி புதியவர்கள் அறிந்து கொள்ள இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்