Sunday, May 08, 2011

உதவியாக இருந்தவை இந்த போதனைகள்.

வாழ்க்கையில் கற்று கொள்ள நிறையவே இருக்கிறது. காலம் காலமாக நல்லவை நம்மிடம் சொல்ல பட்டாலும் தவறுகள்
செய்து பலன்களை அனுபவித்த பின்னரே நாம் திருத்தி கொள்கிறோம். நான் கற்று கொண்ட சில பாடங்களை உங்கள் முன்னர்
வைக்கிறேன். நான் முக்கியமாக கற்று கொண்ட பாடங்கள் விவேகானந்தர் போதனை மற்றும் பைபிள் போதனைகள் இருந்து
கற்றவை

உன்னை போலவே பிறரையும் நேசி
நீ எவ்வாறு அளக்கிறாயோ அவ்வாறே உனக்கு அளக்கபடும்
எதிரிகளை சிநேகிதி. சபிக்கிறவர்களை ஆசிர்வாதம் செய்
நிந்தனை செய்பவர்களுக்கும் துன்பபடுத்தியவர்களுக்கும் பிரார்த்தனை செய்

நீ என்ன வேலை செய்தாலும் உன் உடல் மனம் ஆத்மா முன்றையும் அர்ப்பணித்து செய்.

கடந்த காலத்தில் நானும் நிறைய தவறுகள் செய்து இருக்கிறேன். அவற்றில் இருந்து நான் விடுபட உதவியாக
இருந்தவை இந்த போதனைகள்.

No comments: