Thursday, June 08, 2006

விகடன் உண்மையில் யார் கையில் உள்ளது?

தேர்தலுக்கு முன்னர் விகடன் பத்திரிக்கைகளை சன் டீவி நிறுவனத்தினர் வாங்கி விட்டதாக வைகோ குற்றம் சாட்டினார். விகடன் இதனை முற்றிலுமாக மறுத்தது. விகடனை தி.மு.க வினர் சமீபத்தில் கொளுத்திய போது அதை ஜெயா டீவி நாடகம் என்று வர்ணித்துள்ளது. இதற்கும் விகடன் விளக்கம் கொடுத்துள்ளது.

விகடன் கை மாறியிருந்தால் அதுவும் சன் நிறுவனத்திடன் சென்றிருந்தால் அது உண்மையில் தமிழ் பத்திரிக்கை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு.சன் நிறுவனத்தினால் எதையும் இலாபகரமாக நடத்த முடியும். ஆனால் அவர்களுடைய நடுநிலைமையும் தரமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. விகடன் பத்திரிக்கையை வாங்கியது வெளியில் தெரிந்தால் அதனுடைய நடுநிலைமை இமேஜ் பறி போய்விடும் என்பதால் சன் நிறுவனம் இதனை இரகசியமாக வைத்துள்ளது என்பது ஜெயா டீவில் வைக்க பட்ட குற்றசாட்டு.

சன் டீவி இதுவரை தாங்கள் வாங்கிய அல்லது துவங்கியஎதையும் வெளிப்படையாக செய்துள்ளனர் என்றாலும் என்னை சந்தேகபட வைப்பது தி.மு.க நடத்திய போராட்டம். விகடனை எரிக்கும் அளவிற்கு விகடனில் தி.மு.கவை அல்லது கருணாநிதியை தாக்கி செய்தி வெளி வரவில்லை.இதுவரை சன் நிறுவனமும் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

9 comments:

மாயவரத்தான் said...

குமுதத்தை ஜெ. வாங்கிவிட்டார் என்று கருணாநிதி & கோ.வினர் தேர்தலுக்கு முன்பு சொன்னது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவுக்கு விகடனை சன் குழுமம் வாங்கி விட்டது என்பதும் உண்மையே.

ஜெயக்குமார் said...

எனக்கு தெரிந்த ஒரு தினமலர் நிருபரிடம் விசாரித்த வரையில், விகடன் (ஜூவி) சன் குழுமத்தின் கைக்கு போய்விட்டதாகத்தான் தெரிகிறது.

தேர்தல் சமயத்தில் கட்சி சாரா பல பெரிய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் திமுக கூட்டணி சுமார் 150 தொகுதிகளில் வெல்லும் என்று கூறியபோது விகடன் மட்டும் 200 இடங்களுக்கு மேல் கூறியது நினைவிருக்கலாம்.

கார்த்திக் பிரபு said...

hello sir namma kannagiyai pattri nyani eludhi andha kkaturai - kgaga than andha aarpaatamum..pattirikkai erippum..anandha vikatan-i 10 rubai koduthu vaangi padikka mattum tham mudiyum dmk-vaal ...veru ondrum seiya mudiyaadhu..

Ram.K said...

//ஆனால் அவர்களுடைய நடுநிலைமையும் தரமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.//

இந்த வாசகம் சன் நிறுவனத்தைத் தானே சுட்டுகிறது ?

அல்லது விகடனைச் சொல்கிறீரா ?

:))

லக்கிலுக் said...

விகடன் பத்திரிகையில் கரடி பொம்மையையும், கண்ணகியையும் ஒப்பிட்டு ஞானி எழுதினார்.... இதை கலைஞரும் காட்டமாக கண்ணகி சிலை திறப்பு விழாவில் விகனை விமர்சித்தார்....

திமுக இந்தப் பிரச்சினையில் தான் விகடனை கொளுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்....

பாலசந்தர் கணேசன். said...

chameleon

அது சன் நிறுவனத்தின் நடுநிலைமையை(?) மற்றும் தரத்தினை பற்றிய வரி.


மாயவரத்தான் வருகைக்கு நன்றி.

பாலசந்தர் கணேசன். said...

லக்கி லுக் அவர்களே,

-ஞானியின் கட்டுரைக்காக விகடனை எரித்தது ஒரு ஒவர் ரியாக்ஷனாக தெரிகின்றது. நடப்பது ஒரு நாடகமாக இருக்கின்றதோ என்ற எண்ணத்தை இதுவே உண்டு பண்ணுகிறது.

லக்கிலுக் said...

பாலசந்தர் கணேசன் சன் குழுமம் எதையாவது வாங்கியிருந்தால் அதை மறைக்க மாட்டார்கள்...

காமெடியன் வைகோ தேர்தலுக்கு முன்னரே ஜூ.வியை திமுகவினர் வாங்கி விட்டார்கள் என்றார்... ஆனால் தேர்தல் முடிவு வந்த உடனேயே திமுகவுக்கும், ஜூ.விக்கும் பி.டி.ஆர். விவகாரத்தில் பிரச்சினை வந்ததா இல்லையா? விகடன் சன் குழுமத்தின் பத்திரிகை என்றால் திமுகவின் இமேஜ் கெடும் வகையில் செய்தி வெளியிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?

நண்பர் ஜெயக்குமார் உங்களுக்கு தெரிந்த தினமலர் நிருபரின் பெயரும் ஜெயக்குமாரா :-)

அருண்மொழி said...

இதை பற்றி இந்த வாரம் விகடனில் செய்தி வந்துள்ளது. சன் குழுமம் பற்றிய செய்தி உண்மை இல்லை என கூறியுள்ளனர்.

//குமுதத்தை ஜெ. வாங்கிவிட்டார் என்று கருணாநிதி & கோ.வினர் தேர்தலுக்கு முன்பு சொன்னது எந்த அளவிற்கு உண்மையோ ...//

மாயவரத்தாரே, கருணாநிதி குமுத விழியாள் பெட்டிவாங்கிவிட்டாள் என்றுதான் சொன்னார். குமுதத்தை ஜெ வாங்கிவிட்டதாக சொல்லவில்லை.