Thursday, June 29, 2006

வந்தாச்சு...

விடுமுறை முடிந்து சென்ற வாரம் மான்ட்ரியால் திரும்ப வந்துவிட்டேன். இந்த முறை 3- 5 மாதங்கள் வரை இங்கு இருப்பேன். இதனால் தான் ரெகுலராக எழுதாமல் இருந்தேன். நிறைய பதிவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனாலும் குழலி, டோண்டு , முத்து(தமிழினி) போன்றவர்கள் தான் இன்னமும் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறார்கள்.

முடிவடைந்திருக்கும் என்று நான் கருதிய போலி டோண்டு சீரியல் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. காசி தமிழ்மணத்திற்கு புதிய பொறுப்பாளர் தேடி கொண்டிருக்கும் நேரத்தில் அவர் செய்த சேவையை பாராட்டி எழுதுவது , தமிழ்மணத்தின் பயன்களை பெற்றவன் என்கிற முறையில் ஒரு முக்கிய கடமையாகி விடுகிறது. என்ன காரணத்தினால் இந்த முடிவிற்கு அவர் வந்திருந்தாலும், தமிழ்மணம் அவருக்கு முழு திருப்தி அளித்திருக்கும். அவருடைய பங்களிப்பு ஒரு பதிவராக தொடரும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும் அரசியல் மாற்றம் எதையும் காண முடியவில்லை. எஸ்கே என்ன தான் நம்பிக்கை தெரிவித்தாலும் விஜயகாந்த் கட்சி ஒரு மாற்றாக எனக்கு தோணவில்லை. மற்றொரு அ.தி.மு.க, பா.ம.க, தி.மு.கவாக மட்டுமே அது காட்சி அளிக்கின்றது. ஆனாலும் விஜயகாந்த் கட்சியை நடத்தும் விதத்தில் ஒரு நேர்த்தியான திட்டமிடல், தைரியம் , விடாமுயற்சி தெரிகின்றது. கலைஞருக்கு அப்புறம் ஒரு கடுமையான உழைப்பாளியை தமிழகம் காண்கின்றது.


ரஜினி ரசிகர் மன்றத்தில் மீண்டும் சலசலப்பு எழுந்த்துள்ளது. ரசிகர்கள் நடிகர்களை நம்பினால் என்ன ஆகும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டுள்ளனர். அஜீத் மிரட்ட பட்டதும் அதற்கு அவர் எதிர்ப்பு முறையாக தெரிவிக்காததும், நடிகர்கள் நிஜவாழ்க்கையில் எந்த அளவு தைரியமாக உள்ளனர் என்பதை காட்டுகிறது.

மேலும் சந்திப்போம்.

5 comments:

Santhosh said...

வாங்க நாலடியாரே :))

பாலசந்தர் கணேசன். said...

சும்மா நச்சுன்னு இருக்கு...

துளசி கோபால் said...

அங்கே மாண்ட்ரியல்லெ நிறைய வலைஞர்கள் இருக்காங்களே. அவர்களோடு சந்திப்புக்கு
வழி இருக்குங்களா?

மூணு மாசம்ன்னா மூணுமாசம். அங்கே புது சூழல் பத்தியெல்லாம் எழுதுங்க.

கோவி.கண்ணன் said...

ஆள்கொணர்வு மனு போடலாம்னு சங்கத்து ஆளுங்க முடிவெடுத்து முடிக்கறத்துக் குள்ளேயே வந்திட்டிங்களே...

அப்புறம் சந்தோஸ்
... விரைவில் 'சந்தோஸ் என்ன சொன்னார்' என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுத தூண்டுவிட்டதற்காக சங்கத்து ஆளுங்க உங்க மேல கோவமா இருக்காங்க.

Muthu said...

பாலச்சந்தர்,

வலைவீசி தேடிட்டு இருந்தேன். வந்துட்டீங்க.கலக்குங்க.