நான் மான்ட்ரியாலில் இருக்கிறேன். கனடா வலைபதிவர்களே, நான் சந்தித்து உரையாடலாமா?
சென்னையிலும், பெங்களூரிலும் சக்கை போடு போடுகிறார்கள். இங்கே நாம் சந்தித்தால் என்ன?. உள்ளபடியே, நான் வலைபதிவர்களில் திரு. கால்கேரி சிவா அவர்களிடம் மட்டுமே தொலைபேசியில் பேசி இருக்கிறேன். வலைபதிவர்கள் சந்திப்பு பற்றி பதிவுகள் இப்போது ஆசையை தூண்டி விட்டுள்ளன.
வலைபதிவு என்பது நம்முடைய ஒரு பரிணாமம் மட்டுமே. வலைபதிவாளர்கள் சந்திப்பு நமக்கு மற்ற பதிவர்களின் பல முகங்களையும் காட்டும். பலர் கூடி கலந்து பேசினால், உபயோகமான கருத்து பரிமாற்றங்கள் கூட நடக்க நிறைய வாய்ப்பு உண்டு.
கனடா பதிவர்கள் சந்திப்புக்கு முயற்சித்தால் என்ன? கனடா வலைபதிவர்களே, உங்கள் கருத்துக்களை தெரிவிங்கள். தினத்தையும் இடத்தையும் திட்டமிடலாம்.
ஆவலோடு உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
4 comments:
// இங்கே நான் சந்தித்தால் என்ன?.//
முதலில் "நாம் சந்தித்தால் என்ன?"ன்னு எழுதுங்க. அப்பறம் அழைப்பு விடுக்கலாம் :)
திருத்தி விட்டேன்.
பாலசந்தர், நான் ஆகஸ்ட் இறுதியில் டோராண்டோ வருகிறேன். டோராண்டோ ஒரு பெரிய நகரமாகையால் அங்கே சந்திப்பது நலம்
நன்றி சிவா அவர்களே.
Post a Comment