1.தான் சார்ந்த சாதி அமைப்புகளை வலிமை படுத்தி அரசியலில் நுழைந்தவர்கள் இருவரும்.
2. அரசியலில் நுழைந்த பொழுது யாருமே அறிவிக்காத சத்தியங்களை ராமதாசு செய்தார். அதை முற்றிலுமாக கடைபிடித்தார். உண்மையிலேயே பொது வாழ்வில், பா.ம.க. கட்சி ஒரு வித்தியாசமாக காட்சி அளித்தது. அதே போன்று, திருமா வளவன் மாவட்டம் தோறும் தாழ்த்த பட்ட மக்களுக்காக போரட்டம் நடத்தினார். அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கின்ற சலுகைகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தினார். அவர்கள் சாணி அள்ளுவதற்கும் மலம் அள்ளுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்கள் மனித உரிமைகள் பற்றியும் கல்வி அறிவு பற்றியும் அறிந்து கொள்ள வைத்தார். இந்த மாதிரி நல்ல நடைமுறைகளை பயன்படுத்திய போது அவர்கள் வெற்றி பெறவில்லை.
3.இந்த இரண்டு பேரையும் குறை கூறுகிற மக்கள் அனைவரும் கவனிக்காத ஒன்று. இவர்கள் இருவரும் கொள்கையாவது கொளுக்கட்டையாவது என்று அனைத்தையும் புறக்கணித்து விட்டு, சுயநலமாக செயல் பட ஆரம்பித்த பின்னர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.ராமதாசு அனைத்து சத்தியங்களையும் தாரை வார்த்தார். இன்று பா.ம.க. ஒரு தவிர்க்க முடியாத( தவிர்க்க பட வேண்டிய கட்சியாக இருந்தாலும்) கட்சியாக மாறிவிட்டது. உருப்படியாக எத்தனையோ காரியங்கள் திருமா செய்த போது வராத கூட்டம் , இன்று அவர் தமிழக பெண்கள் கற்பை குஷ்பூ வீட்டு காக்கா தூக்கி விட்டு சென்று விட்டது என்று குரல் கொடுக்கிறார். தனக்கு எந்த பிரயோஜனமும் கிடைக்காது என்பதை உணராமல் இந்த கூட்டம் விளக்குமாறு எடுத்து கொண்டு ஒடுகிறது.
அரசியல் வாதிகளை மற்றும் குறை சொல்லி பயனில்லை. மக்கள் தலைவனுக்கு அடிமையாக இருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த கூட்டம் சுயமாக சிந்திக்க வக்கில்லாமல் அடிமையாக வளரும் கூட்டம். அதனால் தான் காலில் விழுவது, பச்சை குத்துவது, போஸ்டர் அடிப்பது என்று தமிழக அரசியல் சாக்கடை ஆகிவிட்டது. அ.தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதா என்று பெயர் சொல்ல முடியாது. தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதி என்று பெயர் சொல்ல முடியாது.அ.தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதியை ஒற்றை கண்ணன் என்று சொல்லலாம். தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதாவை இதை காட்டிலும் மிக கேவலமாக விமர்சிக்கலாம்.ஜெயலலிதா கட்சியில் இருப்பவர்களை அடிமைகளை விட கேவலமாக நடத்துவார். கருணாநிதி தன் வாரிசுகளுக்கு இணையாக யாரையும் வளர விட மாட்டார். இது இப்போது ராமதாசுக்கும் பொறுந்தும்.ஆனால் இதையெல்லாம் உணராத இந்தகூட்டம் இவர்கள் என்ன சொன்னாலும் தலையாட்டி கொண்டிருக்கிறது.இவர்களோடு கூத்தாடி பயல்களுக்கு போஸ்டர் அடிப்பவர்களையும் சேர்த்து கொள்ளலாம். வாய்ப்பு கிடைத்தால் இந்த கூத்தாடி பயல்கள் அரசியல் வாதிகளை விட மோசமாக ஆட்சி செய்வார்கள்.
தனக்கு என்று ஒரு சுய புத்தியில்லாமல் கட்சி தலைவன் என்ன செய்தாலும் அதை குருட்டு தனமாக பின் பற்றும் மக்கள், சுதந்திரமான நாட்டினிலும் அடிமைகளாகவே இருப்பார்கள்.
இப்படி அடிமையாக இருப்பது விசுவாசமகவே கருத படுகிறது. நான் தான் பெரிய அடிமை, என்னை காட்டிலும் பெரிய அடிமை யாருமில்லை என்று காட்ட ஒவ்வொரு கட்சியிலும் ஒரு போராட்டமே நடைபெறுகிறது. இந்த அடிமை புத்தி சுதந்திரம் வாங்கியதை அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது.
2 comments:
Well said.
பாலசந்தர் ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க. அனைத்தும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள். நீங்க பாத்திங்கன்னா எந்த நாட்டிலேயும் ஜனநாயகம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. எல்லா இடத்திலையும் பணக்கரர்களும், corporate தான் ஆட்சிசெய்துக்கொண்டு இருக்கின்றன. இதை பார்க்கும் போது மன்னராட்சியே எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.
Post a Comment