Monday, December 05, 2005

தமிழ் கக்கூசு கட்டுங்கள்...

தமிழ் நாட்டிலேயெ தமிழின் மதிப்பு தரம் தாழ்ந்து போய் கொண்டிருக்கிறது. தமிழ் மொழி கூவம் சாக்கடை ஆகி விட்டது மட்டும் இல்லாமல், தாய் மொழியின் அவசியத்தை வலியிருத்துவோர் மீது மக்களுக்கு வெறுப்புணர்வே அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் இங்கே

1. அறிவியல் படிப்பதற்கு அல்லது எந்த ஒரு புதிய தொழில் படிப்பு படிப்பதற்கோ தமிழ் தகுதி இழந்து விட்டது. கலை சொற்கள் என்ற பெயரில் செல் போனுக்கு தமிழ் சொல் உருவாக்குவது வீண். இதை மக்களிடம் கொண்டு சென்றால் எந்த வரவேற்பும் கிட்டாது. இந்த உண்மையை உணர அறிவு தேவை

2. இலக்கியம் என்றாலே புரியாத படி எழுதுவது, யாருக்கும் தெரியாத அயல் நாட்டு எழுத்தாளரை புகழ்வது என்று ஒரு கூட்டம் கிளம்பி மக்களிடம் இருந்து இலக்கியத்தை அப்புற படுத்தி விட்டது. மக்களிடம் செல்லாத எந்த ஒரு வடிவமும் இலக்கியம் ஆகாது. மக்கள் ஆதரித்தால் அது இலக்கியம் ஆகாது என்பது ஒரு வித அறிவு(?)ஜீவி மிரட்டலாகி விட்டது. இந்த கூட்டம் தான் பாரதியாரை இன்னமும் புகழ்ந்து கொண்டிருக்கிறது. விடுதலையை பற்றி எழுதி விட்டதனால் பாரதியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகி விட மாட்டார். கலைஞரும் வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான்,மீரா, போன்றவர்கள் பாரதியை கடந்து வெகு தூரம் சென்று விட்டார்கள். (கலைஞர் எழுதியது இலக்கியமே இல்லை என்று இன்றைய இலக்கிய வாதிகள் கூறலாம். அது வடிகட்டிய பொய். தங்கள் எழுத்து விற்க வில்லை என்கிற ஆதங்கம்).

3. எல்லாவற்றிகும் மேலாக அரசியல். தமிழ் , தமிழ் என்று மேடயில் முழங்கும் அரசியல் வாதிகள், BEST KANNA BEST , SUN TV, JEYA TV,KTV என்று பட்டைய கிளப்புவதும், அவர்கள் பிள்ளைகள் கான்வென்டில் படிப்பதும், மொழியின் அவசியத்தை நேர்மையாக வழியிருத்துகிறவர்களயும் சேர்ந்தே பாதிக்கிறது.ஊருக்கு தான் உபதேசம் என்கிற எந்த ஒரு கொள்கையும் எடுபடாது. இந்த அரசியல் வாதிகளிம் கடைந்தெடுத்த இரட்டை வேடம் , உண்மையா மொழியை நேசிக்கிற, வளர்க்க விரும்புகிற தமிழர்களை வெகுவாக பாதிக்கிறது. தமிழ் வளர்ச்சி என்றாலே மக்கள் ஒடுவதற்கு நேர்மையற்ற பிரசாரம் காரணம்.


தமிழை அறிவு பூர்வமாக நேசிக்கலாம்.அது நமது தாய் மொழி.

2 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இலக்கியம் என்றாலே புரியாத படி எழுதுவது, யாருக்கும் தெரியாத அயல் நாட்டு எழுத்தாளரை புகழ்வது என்று ஒரு கூட்டம் கிளம்பி மக்களிடம் இருந்து இலக்கியத்தை அப்புற படுத்தி விட்டது. மக்களிடம் செல்லாத எந்த ஒரு வடிவமும் இலக்கியம் ஆகாது. மக்கள் ஆதரித்தால் அது இலக்கியம் ஆகாது என்பது ஒரு வித அறிவு(?)ஜீவி மிரட்டலாகி விட்டது. இந்த கூட்டம் தான் பாரதியாரை இன்னமும் புகழ்ந்து கொண்டிருக்கிறது. விடுதலையை பற்றி எழுதி விட்டதனால் பாரதியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகி விட மாட்டார். கலைஞரும் வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான்,மீரா, போன்றவர்கள் பாரதியை கடந்து வெகு தூரம் சென்று விட்டார்கள். (கலைஞர் எழுதியது இலக்கியமே இல்லை என்று இன்றைய இலக்கிய வாதிகள் கூறலாம். அது வடிகட்டிய பொய். தங்கள் எழுத்து விற்க வில்லை என்கிற ஆதங்கம்).

Dont bother about Tamil. You better
update your knowledge

பாலசந்தர் கணேசன். said...

ரவி அவர்களே,
பொதுப்படையாக ஒரு கருத்தை(You better update your knowledge
) சொல்லி விட்டால் விமர்சனம் முழுமையாகி விடாது. நீங்கள் சொல்லிய வார்த்தைகளை எந்த உருவகத்திற்கும் எதிராக பயன்படுத்தலாம். குறிப்பாக ஏதெனும் கருத்துக்கள் கூறினால் அதனை நான் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். என்னுடைய ப்லொக் வந்தமைக்கும் , விம்ர்சனம் செய்ததற்கும் மிக்க நன்றி.