பிரபாகரனிடம் கொடுத்த தனிப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாதனால் தான், ஏமாற்ற பட்ட விடுதலை புலிகள், ராஜீவ் காந்தியை கொன்று விட்டதாக வர்ணித்துள்ளது சி-என் -என் ஐ-பி-என். இந்த செய்தியில் இந்த நிறுவன வர்ணனையாளர் கொடுக்கின்ற கன்குளுஷன் என்ன தெரியுமா?
ராஜீவ் காந்தி விடுதலை புலிகளிடம் கொடுத்த வாக்குறுதியை மீறியதற்கு கொடுத்த விலை அவருடைய மரணமாம். என்ன கொழுப்பு இந்த நிறுவனத்திற்கு? முதலில் விடுதலை புலிகள் ராஜீவ் படுகொலையை துன்பியல் சம்பவம் என்றார்கள். பின்னர் பாலசிங்கம் அதற்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் அது வருத்தம் மட்டுமே, பொறுப்பு அல்ல என்று விடுதலை புலிகள் விளக்கம் கொடுத்தனர். இப்போது எங்களை ஏமாற்றினார், அதற்கு விலையை கொடுத்தார் என்று ஒரு தரப்பு விளக்கம் மட்டுமே கேட்டு நியாயபடுத்துவது போல ரிப்போர்ட் கொடுத்திறுக்கிறது இந்த நிறுவனம்.
ஒரு முன்னாள் பிரதமரின் படுகொலையை , ஏமாற்றியதற்கு கொடுத்த விலை என்று வர்ணனை கொடுத்திறுக்கும் இந்த நிறுவனத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். விடுதலை புலிகள் இப்போது இருக்கின்ற சூழ்னிலையில் தங்கள் தரப்பினை நியாயபடுத்த என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள் என்பது எல்லாரும் புரிந்து கொள்ள கூடிய ஒன்று. இந்த நிலையில் அவர்கள் தரப்பினை மட்டுமே கேட்டு ராஜீவ் படுகொலையை ஏமாற்றியதற்கான விலை என்று முடிவுரை கூறியிருப்பது அதர்மம் ஆகும்.
செய்தியை பார்க்க
11 comments:
//இந்த நிலையில் அவர்கள் தரப்பினை மட்டுமே கேட்டு ராஜீவ் படுகொலையை ஏமாற்றியதற்கான விலை என்று முடிவுரை கூறியிருப்பது அதர்மம் ஆகும்.//
உண்மை தான் .அது போலவே இந்திய ராணுவம் என்ற அமைப்பு அமைதி காப்பு என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்றது ,பெண்களின் கற்பை சூறையாடியது போன்ற பிரச்சனையின் மறு பக்கத்தையும் (உங்களைப் போன்றவர்கள்)கண்டு கொள்ளாமல் இருப்பது எத்தனை அதர்மமோ அந்த அலவுக்கு
கடற்புரத்தான் ஜோ அவர்களே,
இராணுவம் செய்ததையோ அல்லது தமிழ் மக்கள் படும் கஷ்டத்தையோ உணராலாமலோ அல்லது மறந்து விட்டோ இதனை எழுதவில்லை. இலங்கை தமிழர்கள் படும் துன்பத்தினை, அகதிகளின் கஷ்டத்தினை பற்றி ஏற்கனவே சில பதிவுகளில் எழுதியுள்ளேன். ஆனால் இந்த பதிவு ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வந்திருப்பதை நீங்கள் உணர வேண்டும்.
பிரபாகரன் தரப்பு விளக்கத்தினை வைத்து ராஜீவ் ஏமாற்றியதற்கு கொடுத்த விலை அவருடைய மரணம் என்று முடிவுரை அளித்திருப்பது அதர்மம் மற்றும் பொறுப்பற்ற தனம் என்பது என்பது உறுதியான கருத்து.
மகாபாரதத்தில் கண்ண பரமாத்வாவே கூறுகிறார் தர்மம் வாழவேண்டுமென்றால் எதிரில் இருப்பதை யார் என்றுபாராதே, நன்மை தீமை என்னையே சேரும். என்கிறார் ராஜிவ்காந்தி கொடுத்தவாக்கை காப்பாற்றவில்லை என்றால் இது தர்மமே, அதற்காக கொலையை நான் ஆதரிக்கவில்லை, அதேபோன்று இந்தியராணுவம் செய்த கொலைகளையும்தான். மறப்போம் மன்னிப்போம் இதுதான் எனது கீதை.
LTTE take Responsibility of Rajiv Murder. Who takes RESPONSIBILITY
of Massacar of 5000 Inocent Tamils?
dear thamil
u r right. both parties did wrong.
lady of justice
புலிகள் செய்தது சரியா பிழையா அல்ல இப்போதைய பிரச்சனை. இந்தியா புலிகளுக்கு எதிராக வேலை செய்து ஈழத்தமிழர்களை அழிப்பதா அல்லது புலிகளை பெருந்தன்மையுடன் அரவணைத்து மிச்சமிருக்கும் ஈழத்தமிழர்களை பாதுகாக்குமா என்பதுதான்.
புலிகள் செய்தது சரியா பிழையா அல்ல இப்போதைய பிரச்சனை. இந்தியா புலிகளுக்கு எதிராக வேலை செய்து ஈழத்தமிழர்களை அழிப்பதா அல்லது புலிகளை பெருந்தன்மையுடன் அரவணைத்து மிச்சமிருக்கும் ஈழத்தமிழர்களை பாதுகாக்குமா என்பதுதான்.
ஜோவிற்கு நான் கொடுத்த விளக்கத்தை மீண்டும் எலபொரேட் செய்கிறேன். புலிகள் செய்த்தது சரியா, இராணுவம் செய்த்தது என்பதை பற்றிய பதிவல்ல இது. ஒரு தரப்பை மட்டும் கேட்டு விட்டு இந்த செய்தி நிறுவனம் தீர்ப்பு எழுதுகிறது - ஏமாற்றியதற்கு ராஜீவ் கொடுத்த விலை என்று. என்ன மாதிரியான விஷய்ங்கள் விவாதிக்க பட்டன என்பதற்கான முழு முயற்சியாக, உண்மையான முயற்சியாக இது இல்லை. எனவே தான் இதை கண்டித்து பதிவு எழுதினேன்.
Rajiv met that fate for several reasons.CNN &IPN gave only one reason thats all.Rajiv was the Supreme Commander of the Indian Army.Whatever the IPKF did in Srilankan Tamil Provinces was the reponsibility of the Supreme Commander.Anyone to be punished it should be the Supreme Commander
கணேசன்,
புலிகளுக்கும் ராஜீவுக்குமிடையிலான ஒப்பந்தம் என்ற செய்தி நம்பகத்தன்மையற்றது என்கிறீர்கள்? அல்லது ஏமாற்றியதற்காகக் கொலை செய்தது தவறு என்கிறீர்களா?
செய்தியின் நம்பகத்தன்மை பற்றியதுதான் உங்கள் சிக்கல் என்றால் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பண்ருட்டி இராமச்சந்திரன் இன்னும் இருக்கிறார் தானே?
அதைவிட இந்தச் செய்தி இப்போதுதான் வெளியிடப்பட்டது என்றில்லை. அந்தச் செய்தி நிறுவனத்துக்கு இப்போதுதான் கண்ணில் பட்டிருக்கிறது. அதன்மூலம் உங்களுக்கும் இப்போதுதான் தெரியவந்துள்ளது.
பாலசிங்கம் அவர்கள் இந்தச் செய்தியை வெளியிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. எப்போதோ ஆறிப்போன விசயம்.
இதுவரை பேசாமலேயே இருந்தவர்கள் இப்போது தான் ஏதோ புதையலைக் கண்டவர்கள்போல் புலனாய்வு செய்கிறார்கள்.
பாலசிங்கம் அவர்களின் ராஜீவ் கொலை பற்றிய அண்மைய கருத்துக்குப்பின் இச்செய்தி நிறுவனம் இதை வெளியிட்டதால் அதிகளவு குழப்பம் வந்துள்ளதென்று நினைக்கிறேன்.
ராஜீவுக்கும் பிரபாகரனுக்குமிடையில் நடந்த உரையாடல்கள் பற்றி இன்னும் நிறைய எழுதியுள்ளார். ஆயுத ஒப்படைப்பை இந்தியா வலியுறுத்தியதையும் அதை பிரபாகரன் வன்மையாக எதிர்த்தையும் எழுதியுள்ளார். இறுதியில் ராஜீவ் ஒரு சமரசத்துக்கு வந்தார்.
"ஆயுத ஒப்படைப்பு பற்றி நாம் ஒப்பந்தத்தில் எழுதிவிட்டோம். இனி மாற்ற முடியாது. எனவே ஒப்படைப்பு என்ற பேருக்கு நீங்கள் சில பழைய ஆயுதங்களை ஒப்படையுங்கள். முழுவதையும் ஒப்படைக்க வேண்டாம்" என்று ராஜீவ் பிரபாகரனுக்குச் சொல்லியுள்ளார்.
அதற்கு பிரபா, "நீங்கள் தந்த ஆயுதங்களே பழையவை தானே, அவற்றையே திருப்பித் தருகிறோம்" என்று பதிலளித்துள்ளார். இவ்வகையில் ஆயுத ஒப்படைப்பு பற்றிய சமரசத்துக்கு இரு தரப்பும் வந்தன.
மேலும் பல தகவல்கள் அப்புத்தகத்தில் உள்ளன.
இவ்வளவு வருடமும் அதை வாசிக்காமலா இந்தச் செய்தி நிறுவனம் இருந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது.
கணேசன்,புலிகளுக்கும் ராஜீவுக்குமிடையிலான ஒப்பந்தம் என்ற செய்தி நம்பகத்தன்மையற்றது என்கிறீர்கள்?
இது இரு தரப்பு விபரமும் தெரியவில்லை.
அல்லது ஏமாற்றியதற்காகக் கொலை செய்தது தவறு என்கிறீர்களா?
ஏமாற்றினார் என்று உறுதியாக ஒரு தரப்பை மட்டும் கேட்டு கூற முடியுமா?
செய்தியின் நம்பகத்தன்மை பற்றியதுதான் உங்கள் சிக்கல் என்றால் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பண்ருட்டி இராமச்சந்திரன் இன்னும் இருக்கிறார் தானே?
இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசியல்வாதிகளின் நேரிடையான பஙக்ளிப்பு மிகவும் கம்மி. உண்மையான அனைத்து தகவல்களும் அவருக்கு தெரியுமா?
மேலும் பல தகவல்கள் அப்புத்தகத்தில் உள்ளன.
ஒரு தரப்பு வாதமாகவெ அது உள்ளது.
ஆர்வத்திற்கு நன்றி. உண்மையில் இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் ராஜீவ் இதை முயன்றிருக்கிறார். ஆனால் பொறுமையின்மையாலும், திசை திருப்புவர்களிலாலும் இந்த முய்ற்சி தோல்வி அடைந்தது. ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட உடன் பிரச்சினை தீர்ந்து விடும் என்று ராஜீவ் மிக தவறாக கருதியுள்ளார்.
Post a Comment