Wednesday, August 16, 2006

நம்பிக்கை இல்லாத ஒர் பதிவு.

இலங்கையில் இருந்து தென் ஆப்ரிக்கா அணி திரும்ப போகிறது என்பது உறுதியாகி விட்ட நிலையில், இந்த பதிவு எழுதப்படுகிறது. உண்மையில் தென் ஆப்ரிக்கா அணியினர் அதிர்ஷடக்காரர்கள். பாதுகாப்பு பற்றி அச்சம் வந்த உடன் அவர்களால் ஒரு திட்டவட்டமான முடிவு எடுக்கமுடிகிறது. அதை செயல்படுத்தவும் முடிகிறது. அங்கு (வேறு வழியின்றி?) வாழும் பொது மக்கள் நிலைமை தான் மிக பரிதாபம். அகதியாக தமிழகத்திற்கு வருபவர்களை பற்றிய செய்திகள் நெஞ்சை சுடுகின்றன.

கிரிகிஃபோ போட்டிகள் மாற்றி அமைக்கபடுவது பற்றி விரிவாக எழுதி தள்ளுகிறது. ப்ளேயர்கள் மனநிலை பாதிக்கபட்ட பின்னர் அவர்களால் எந்த அளவுக்கு ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும் என்பது பற்றி கேள்விகள் எழுப்பிகிறது. அங்கே இருக்கும் மக்கள் நிலைமையை இரண்டு வரி செய்தியாக ஒதுக்கி விடுகிறோம்.

ஒர் சமுகமாக மக்கள் வெற்றிகரமாக வாழக்கற்று கொள்ளவில்லை. உலகெங்கும் நடக்கும் நாசவேலைகளுக்கு அதுவே மூலகாரணம். ஒட்டு மொத்தமாக வேற்று கிரகத்தினர் யாராவது வந்து படையெடுத்து வந்தால் தான் உலகில் ஒற்றுமை வருமோ?

எளிதாகவே ஆயுதங்கள் கிடைப்பது, தாக்குதல் எண்ணம் கொண்டவர்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற பேருதவியாக இருக்கிறது. க்ளோனிங்கை தடை செய்பவர்கள், ஒரின சேர்க்கையை , புத்தங்களை , பொது கூட்டங்களை தடை செய்பவர்கள், ஆயுதங்கள் தயாரிப்பதை ஒட்டு மொத்தமாக தடைசெய்யலாம்.

இவ்வளவு ஆயுதப் போராட்டங்களும் சண்டைகளும் இழந்த உயிரை மீண்டும் கொண்டு வருமா, அல்லது நாளைய நிலைமையைத்தான் நன்றாக ஆக்குமா?

வெறுப்புணர்ச்சி ஆழமாகவே வேர் விட்டு விட்டது உலகின் பல இடங்களில். அதன் விளைவுகள் இன்னமும் கசப்பான சம்பவங்களையே உண்டு பண்ண போகின்றன. இவ்வளவு ஆண்டு அடித்து கொண்ட்ட பின்னரும் சமாதானம் நோக்கி இவர்கள் திருந்தவில்லை என்றால், இரண்டு தரப்புகளும் கடைசி ஆளை ஆயுதத்தை இழக்கும் வரும் தொடருமோ...

எண்ணி பார்க்கவே பயமாக இருக்கிறது.

Sunday, August 13, 2006

அவன்ட் இணைய உலாவி.

அவன்ட் இணைய உலாவி.

இன்று தான் டவுன்லோடு செய்து பயன்படுத்த ஆரம்ப்பித்தேன். சில மணி நேரங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்து விட்டது இந்த அவன்ட் இணைய உலாவி. பிரபலமாக இல்லாதது ஏனென்று தெரியவில்லை. ஆனால் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை விட இது மிக திருப்திகரமாக, வசதியாக உள்ளது.

பொதுவாக என் வேலையின் காரணமாக இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை விட வேறு ஏதேனையும் நான் பயன்படுத்துவதில்லை. காரணம் என்னுடைய ப்ராஜக்ட் செட்டிங்க்ஸ் , டெக்னாலாஜி அனைத்தும் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரருக்காக உருவாக்க பட்டவை.

சில காலமாக இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை கொண்டு வீடியோ பார்க்கும் போது பல பிரச்சினைகள் வந்தது. அதன் காரணமாக மற்றொரு இணைய உலாவி தேடினேன். நான் எந்த மென்பொருள் தேவைப்பட்டாலும் போகும் முதல் இடம் கூகுள் அல்ல.டவுன்லோட்ஸ்.காம்.

அங்கு தான் இந்த இணைய உலாவியின் லிங்க் கிடைத்தது. பல மற்ற உலாவிகள் இருந்த போதிலும் , இந்க மென்பொருளின் சைஸ் 2 எம்பிக்கு குறைவாகவே இருந்தது உடனடியாக டவுன்லோடு செய்ய தூண்டியது. உபயோகித்து பார்த்ததில் எனக்கு தோதுவானதாக இருந்தது.

லிங்குகள் விபரம்.
Avant Browser
Downloads

Saturday, August 12, 2006

பின்னூட்டங்களை பிரசுரம் செய்வது...

சிவஞானம் என்ற சகபதிவருக்கு கேள்விகள் என்று பல கேள்விகள் எனது பதிவிற்கு பின்னூட்டமாக வந்திருக்கிறது. இன்னமும் பல பதிவர்களுக்கு இந்த பின்னூட்டங்கள் இடபட்டுள்ளன. எல்லாருக்கும் அனுப்பினால் யாராவது ஒன்றிரண்டு பேராவது பதிவு செய்வார்கள் என்ற எண்ணத்தோடு தான் இந்த பின்னூட்டங்கள் இட பட்டுள்ளன. அது போலவே இந்த பின்னூட்டம் வெளி இட பட்டுள்ளது. சில வரிகள் எடிட் செய்யபட்டுள்ளன.

உண்மையில் ஒர் பதிவருக்கு கேள்விகள் அனுப்பட வேண்டுமானால், அதை அவர் பதிவில் பின்னூட்டமாக இடுங்கள். அல்லது உங்கள் வலைப்பூவில் இன்னாருக்கு கேள்விகள் என்று பதிவாக இடுங்கள். அதை விட்டு விட்டு சகட்டுமேனிக்கு எல்லா பதிவுகளிலும் பின்னூட்டம் இடுவது என்பது சரியான முறையன்று.இதை ஊக்குவிக்காதீர்கள் என்று சகபதிவர்களை வேண்டி கொள்கிறேன். எந்த பின்னூட்டம் வெளி இட படவேண்டும் என்பது உங்களுடைய தனிபட்ட சுதந்திரமே. உங்கள் சுதந்திரத்தை இன்னொருவர் முறைகேடாக பயன்படுத்த விடலாமா?

Wednesday, August 09, 2006

புத்தகம் வெளியிட ஆசையா?


உங்களுக்கு மின்வடிவத்தில் புத்தகங்கள் வெளியிட ஆசை உள்ளதா?. இதற்கு லூலூ இணையதளம் உதவுகிறது. உங்கள் புத்தகங்களை இந்த தளத்தில் விற்பனை செய்யலாம். புத்தக விலையில் ஒர் பங்கு இந்த நிறுவனத்திற்கு போய் சேரும்.

மேற்கொண்டு பல வசதிகள் பெற வேண்டுமானால், நீங்கள் சிறிய தொகை கட்ட வேண்டியிருக்கும். இந்த தளம் ஒரளவு பிரபலமாகவே உள்ளது. புத்தகங்கள் விற்பதற்கு வாய்ப்புகள் மற்ற தளங்களை விட, அதிகமாகவே உள்ளது.பல்வேறு துறையினரும் இங்கு புத்தகங்கள் வெளியிட்டாலும் இங்கு கணிப்பொறி துறை புத்தகங்கள் அதிகமாக உள்ளது. புத்தகத்தில் இருந்து ஒரு சாப்டரை சாம்பிளாக வெளியிடலாம். விற்பனை விலை என்ன என்பதை நிர்ணயம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு.என்னுடைய தனிப்பட்ட அனுபவம் திருப்திகரமாகவே உள்ளது. எனவே நம்பிக்கையோடு சிபாரிசு செய்கிறேன்.

Monday, August 07, 2006

குமுதமும் அடுத்த படியாக கட்டண தளமாக மாறுகிறது.

இவ்வளவு நாள் குமுதத்தை இணையதளத்தில் பார்க்கும் போது எனக்குள் இருந்த ஆச்சரியம் எவ்வாறு குமுதம் பத்திரிக்கைகள் இலவசமாக இணையத்தில் வழங்கபடுகின்றன என்பது. என்றாவது ஒர் நாள் கட்டண தளமாக இது மாறும் என்ற எண்ணம் இருந்தது. தற்போது விரைவில் கட்டணதளமாக மாற போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

தினமலர், தினகரன் இன்னும் பல தமிழ் ஆங்கில நாளிதழ்கள் இன்னமும் இலவசமாகவே தொடர்கின்றன என்றாலும் எவ்வளவு நாள் இது தொடரும் என்பது சந்தேகமே. இலவசமாக வழங்கி வாசகர் வட்டம் உருவாக்கி, ரெகுலராக படிக்கும் பழக்கம் கொண்டு வந்து பின்னர் கட்டணம் வாங்க துவங்குகிறார்கள் என்று தோன்றுகிறது. தினகரன் நாளிதழ் முதலில் ஒரு ரூபாய்க்கு விற்றார்கள். பின்னர் சிறிது காலம் கழித்து இரண்டு ரூபாய்க்கு வந்து விட்டது. இதே போன்று தான் ஸ்டார், இயெஸ்பின் போன்றவையும் துவக்கத்தில் இலவசமாக வந்து பின்னர் கட்டணம் வாங்க துவங்கின.

இணையத்திலும் பல இலவச மென்பொருட்கள், திறந்த மூலங்கள் உள்ளன. நாளடைவில் அவையும் கட்டண மூலங்களாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வெறும் ஆர்வத்தினாலும், பலர் இணைவதனாலும் மட்டும் எந்த அமைப்பும் தொடரமுடியாது. இறுதியில் பணம் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும்.

Saturday, August 05, 2006

பிரகாஷ் ராஜ் காதலிக்க கூடாதா?

பிரகாஷ்ராஜ் பாவனாவை காதலிப்பது ரொம்ப டூ மச்சாம். இப்படிதான் பிதற்றி இருக்கிறது ஜூனியர் விகடன். விகடனில் இடம் பெற்றவரிகளை அப்படியே உங்களுக்கு தருகிறேன்.
டைரக்டர் மனோஜ்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ஆரியா படத்தில் மாதவனும் பிரகாஷ்ராஜும் போட்டி போட்டு கொண்டு பாவனாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள். மாதவன் ஒகே.பிரகாஷ்ராஜ் துரத்தி துரத்தி காதலிப்பதேல்லாம் டூ மச் இல்லையோ
ஏற்கனவே பெரும் வெற்றி பெற்ற கில்லை என்ற படத்தில் பிரகாஷ்ராஜ் திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்தார். அவர் ஐ.லவ் யூ என்று திரிஷாவிடம் சொல்லும் காட்சியை பலரும் ரசித்தார்கள். திறமையுள்ள நடிகர்களில் அவரும் ஒருவர். திரிஷாவும் பிரகாஷ்ராஜை விட பல வயது மூத்த ரஜினியோடு நடிக்க போட்டி போட்டார். இறுதியில் ரஜினி ஷ்ரேயோவோடு டூயட் பாடிக்கொண்டு இருக்கிறார். இந்த நடிகை ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கும் திருவிளையாடல் படத்திலும் கதாநாயகியாக (அதாவது ஹீரோவோடு டூயட் பாடுபவராக) நடிக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக திரையில் வயது வித்தியாசம் என்பது கேலியாகி போய் இப்போது இல்லாது போன ஒன்று. ரஜினி அல்லது மற்ற நடிகர்கள் ஹீரோயின் டூயட் பாடுவதை சலனமாக பார்க்கும் விகடன் பிரகாஷ்ராஜை வித்தியாசமாக பார்ப்பது ஏன். இத்தனைக்கும் இவர் ரஜினியை விட பல வயது இளையவர். நடிப்பு திறமை மட்டும் இல்லாமல், பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களை தயாரிக்கிறவர். வில்லனை நேர் வாழ்க்கையில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகனை நிஜவாழ்க்கையிலும் நகைச்சுவை நடிகனாகவும், ஹீரோவை நிஜவாழ்க்கையில் ஹீரோவாகவும் பார்க்கிறதா, விகடன்.

Wednesday, August 02, 2006

Ebrary

இ-பேப்பர் வடிவத்தில் பார்ப்பதற்கு , தினமலர் தினகரனை விட நன்றாக உள்ளது. டெக்னாலாஜி அடிப்படையில் இரண்டும் ஒரே மாதிரியானவை. அச்சடிப்பதற்கு முன்னர் தற்போது , பேஜ்மேக்கர் அல்லது வேறு ஏதேனும் மென்பொருளை கொண்டு அடோப் பி.டி.ஃப் ஃபார்மட்டில் கொண்டுவருவார்கள். பி.டி.ஃப் வடிவத்தில் இருக்கும் இந்த டாகுமெண்ட்களை வெப் வடிவத்தில் கொண்டு வர பல நிறுவனங்கள் மென்பொருட்கள் உருவாக்கி உள்ளன. பார்ப்பதற்கு பேப்பரை ஸ்கேன் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்ற எண்ணத்தை இவை உண்டு பண்ணும்.

அவற்றில் ஒன்று போத் ட்ரீ(http://www.bodhtree.com/) எனப்படும் நிறுவனத்தின் மென்பொருளைத்தான் தினமலர் பயன்படுத்துகிறது. இது தரத்தில் தினகரன் பயன்படுத்தும் மென்பொருளை(ePaper solution by 4cplus & cadgraf digital ) விட மேலாக உள்ளது.

இது இரண்டு தளங்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இது போலவே பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை ஆன்லைனில் படிப்பதற்கு தோதுவாக இப்ரேரி (http://shop.ebrary.com/ )உள்ளது. 5$ பணம் கட்டி நீங்கள் எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் ப்ரிண்ட் செய்தாலோ அல்லது காப்பி செய்தாலோ அதற்கு பணம் கட்ட வேண்டும். இதில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தேடுவதும் மிகவும் எளிதாக இருக்கிறது.

புத்தகங்களை பார்வையிட இப்ரேரி ரீடரை பயன்படுத்த வேண்டும். இதை மிக எளிதாகவே நிறுவிக் கொள்ளலாம். பல்வேறு விதமான புத்தகங்கள் வாங்கி படிப்பதை விட ஆன்லைனில் 5$ கட்டி எக்கசக்கமாக லாபகரமான முறையில் நான் பயன்படுத்தி விட்டேன்.

உயிர் படத்திற்கு எதிர்ப்பு..

இந்த படத்தில் ஆபாசமான வசனங்களோ, நடிகையின் உடலை வெளிச்சம் போடும் காட்சிகளோ இல்லை. ஆனால் படம் வெளியாவதற்கு முன்னர் வந்த வசனம் வக்கிரத்தின் உச்சகட்டம். படத்தினை வடிவேலு வெளிப்படையாகவே எதிர்த்திருக்கிறார். அவர் விட்ட வார்த்தைகளும் அதற்கு பதிலாக பட இயக்குனர் விட்ட வார்த்தைகளும் மிகவும் அதிகம். அடிப்பேன், அரை வேக்காடு என்பது விமர்சனமே அல்ல.

ஒரு ஆண் தன் துணையை இழந்த பின்னர் மற்றொருவருடன் அல்லது மனைவியின் தங்கையுடன் வாழ்க்கை தொடரும் போது, ஒர் பெண் செய்ய கூடாதா என்ற நியாயமான கேள்வியை இயக்குனர் தந்திரமாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே தோன்றுகிறது. பதிவுலகில் சிறிது நாட்களுக்கு முன்னர் விதவைகள் இல்லாத கிராமம் என்று ஒரு பதிவு வந்தது இங்கு குறிப்பிட தக்கது.

மரணம் என்கின்ற தலைப்பில் போட்டி நடந்து முடிந்திருக்கிற நேரம், இப்போது மரணம் பற்றி பேச வேண்டியுள்ளது. வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒர் துணை தேவைப்படத்தான் செய்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு துணையுடன் வாழும் பாக்கியம் கிடைப்பதில்லை. துணை மறைந்து விட்டதால் வாழ்க்கை வரண்டு விட வேண்டுமா?. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இன்னோர் துணை தேடி கொண்டால் என்ன?மணல் கயிறு படத்தில் எஸ்.வி.சேகர் இதனை ஒரு நிபந்தனையாக வைப்பார் அவருக்கு பெண் தேடும் போது.

துணையுடன் இருக்கும் போது யார் மீது கவனம் திரும்பினாலும் அது தவறு தான். ஆனால் அதற்காக வாழ்க்கையை வீணாக்கி கொள்ள வேண்டுமா ஒர் துர்சம்பவம் நடந்து விட்டால். இந்த சமூகம் பெண்ணிற்கு மறு வாழ்வு தர தயங்கதான் செய்கிறது. என்னுடைய பெரியப்பா மகள் கணவனை இழந்த போது நடந்த சடங்குகளை கண்டிக்கவோ, தடுக்கவோ என்னாலோ, எனது அண்ணலோ முடியவில்லை. இதில் இவை கட்டாயம் நடக்க வேண்டும் என்று கணவன் வீட்டு மக்கள் வற்புருத்தல் வேறு. வருடம் பல ஓடியும், அக்கா மனம் மாறவில்லை. இந்த சடங்குகளை எப்படி தான் தாங்குகிறார்களோ பெண்கள்.

பெண்களுக்கும் உணர்வு உண்டு, அவர்களுக்கும் வாழ்க்கையில் துணை மறைந்தால் மற்றோர் துணை தேவை என்ற ஒன்றை பாசிட்டிவாக காட்ட வழிகள் பல இருக்கின்றன. அதாவது எதிர்பாராத சூழ்னிலையில் அண்ணன் மறைந்து விட தம்பி, அண்ணியின் மீதும் குழந்தைகள் மீதும் கொண்ட ஆர்வத்தினால் காதலை தியாகம் செய்து அண்ணியை மனைவியாக ஏற்று கொள்கிறார். இதற்கு காதலியும், பெற்றொர்களும் துணையாக இருக்கிறார்கள் என்று கூட கதை கற்பனை செய்யலாம். முயற்சி செய்தால் இந்த கதைக்கும் விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கலாம். ஆனால் உயிர் கொஞ்சம் நெகடிவ்வாக அமைந்து விட்டதோ என்று தோன்றுகிறது.