Saturday, August 05, 2006

பிரகாஷ் ராஜ் காதலிக்க கூடாதா?

பிரகாஷ்ராஜ் பாவனாவை காதலிப்பது ரொம்ப டூ மச்சாம். இப்படிதான் பிதற்றி இருக்கிறது ஜூனியர் விகடன். விகடனில் இடம் பெற்றவரிகளை அப்படியே உங்களுக்கு தருகிறேன்.
டைரக்டர் மனோஜ்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ஆரியா படத்தில் மாதவனும் பிரகாஷ்ராஜும் போட்டி போட்டு கொண்டு பாவனாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள். மாதவன் ஒகே.பிரகாஷ்ராஜ் துரத்தி துரத்தி காதலிப்பதேல்லாம் டூ மச் இல்லையோ
ஏற்கனவே பெரும் வெற்றி பெற்ற கில்லை என்ற படத்தில் பிரகாஷ்ராஜ் திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்தார். அவர் ஐ.லவ் யூ என்று திரிஷாவிடம் சொல்லும் காட்சியை பலரும் ரசித்தார்கள். திறமையுள்ள நடிகர்களில் அவரும் ஒருவர். திரிஷாவும் பிரகாஷ்ராஜை விட பல வயது மூத்த ரஜினியோடு நடிக்க போட்டி போட்டார். இறுதியில் ரஜினி ஷ்ரேயோவோடு டூயட் பாடிக்கொண்டு இருக்கிறார். இந்த நடிகை ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கும் திருவிளையாடல் படத்திலும் கதாநாயகியாக (அதாவது ஹீரோவோடு டூயட் பாடுபவராக) நடிக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக திரையில் வயது வித்தியாசம் என்பது கேலியாகி போய் இப்போது இல்லாது போன ஒன்று. ரஜினி அல்லது மற்ற நடிகர்கள் ஹீரோயின் டூயட் பாடுவதை சலனமாக பார்க்கும் விகடன் பிரகாஷ்ராஜை வித்தியாசமாக பார்ப்பது ஏன். இத்தனைக்கும் இவர் ரஜினியை விட பல வயது இளையவர். நடிப்பு திறமை மட்டும் இல்லாமல், பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களை தயாரிக்கிறவர். வில்லனை நேர் வாழ்க்கையில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகனை நிஜவாழ்க்கையிலும் நகைச்சுவை நடிகனாகவும், ஹீரோவை நிஜவாழ்க்கையில் ஹீரோவாகவும் பார்க்கிறதா, விகடன்.

7 comments:

மயிலாடுதுறை சிவா said...

நீங்கள் சொல்வது சரி.

பிரகாஷ் ராஜ் மிகச் சிறந்த நடிகர். சம்பாரிக்கும் பணத்தை சினிமாவிலையே முதலீடு செய்பவர்.

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Unknown said...

கல்கி படத்தில் பிரகாஷ்ராஜை திருமணம் செய்துகொண்டு ஸ்ருதியும்,ரேணுகாவும் கஷ்டப்பட்டார்களே?அதே நிலைமை பாவனாவுக்கும் வரக்கூடாது என்ற அக்கறை காரணமாக விகடன் அப்படி சொல்லி இருக்கலாம்:))))))))))

Anonymous said...

56 வயசு ரஜனி முதல், கமல், சத்தியராஜ், சரத்குமார், விஜயகாந்த் என்று ஐம்பதைத்தாண்டிய தாத்தாக்கள் இருபது வயசுப்பெண்ணைத் துரதத்தித் துரத்திக் காதலிக்கிறார்கள். பிரகாஷ்ராஜுக்கு என்ன குறைச்சல்?
பிரகாஷ்ராஜை தனியே வில்லன் நடிகராகப் பார்ப்பதே தவறு. அவரொரு சிறந்த குணசித்திர நடிகர், நாசர் போல.
பலநேரங்களில் பத்திரிகையாளர்கள் சுவாரசியம் என்ற பேரில் உளறிக்கொட்டி விடுவார்கள்.
இதையே ரஜனிக்குச் சொல்லியிருந்தால் விகடன் கதை கிழிஞ்சுது.

Anonymous said...

கில்லியில் அவர் நடித்ததுகூட சரியான வயசுப் பாத்திரத்துடன்தான். அதாவது திரிசாவைவிட பதினைஞ்சு வயசுப் பெரியவன் என்று சொல்லித்தான் காதலைச் சொல்கிறார். பிரகாஷ்ராஜ் வயதை மறைக்க மேக்கப் போட்டு இளமையாவதில்லை.
ஆனால் நாயகர்கள் எப்போதாவது உண்மை வயசைச் சொல்லி, உண்மைத் தோற்றத்தோடு காதலியோடு நடித்ததுண்டா?

Anonymous said...

யோவ் வெண்ணை, இத்தனை (?!) நடிப்பு திறமைகளை வைத்துள்ள பிரகாஷ் ராஜ் அப்படி ஹீரோயினை துரத்தும் படங்களாக நடிப்பது சரிதானா என்பது தான் அந்த செய்தியின் சாராம்சம். அது தெரியாமல் பிதற்றியிருக்கும் உம்மை என்ன சொல்வது?

சீமாச்சு.. said...

//யோவ் வெண்ணை, இத்தனை (?!) நடிப்பு திறமைகளை வைத்துள்ள பிரகாஷ் ராஜ் .....//

இந்த வெண்ணை கமெண்டை நான் நன்கு ரசித்தேன்.. இதில் ஒரு எழுதியவருக்கும் பா.கணேசனுக்கும் உள்ள ஒரு பெரிய அன்னியோன்யம் வெளிப்படையாகத் தெரிகிறது..

இந்த மாதிரி.."ப்ரகாஷ்ராஜ் ..பாவனாவைக் காதலிக்கக்கூடாதா.. தப்பா.. ஏன் தப்பு.." என்று கேட்கப்படும் கேள்விகள் தான்.. கோவி.கண்ணன்களை முடுக்கி விடுகிறது.. அதன் விளைவாக சீரழியும் கரோலின்களும் அதிகம் தான்..

பாலசந்தர் கணேசன் இந்தக் கோணத்தில் யோசித்தீர்களா?
அன்புடன்,
சீமாச்சு...

பாலசந்தர் கணேசன். said...

இதில் ஒரு எழுதியவருக்கும் பா.கணேசனுக்கும் உள்ள ஒரு பெரிய அன்னியோன்யம் வெளிப்படையாகத் தெரிகிறது

எழுதியவரே யார் என்று தெரியாது. நீங்கள் என்னடான்னா அன்னியோன்யம் வெளிப்படை என்று கூறுகிறீர்கள்.

பாலசந்தர் கணேசன் இந்தக் கோணத்தில் யோசித்தீர்களா?

இல்லை. யோசித்த பின்னர் பார்த்தால் 50+ ஹீரோக்களும் அதை தானே செய்கிறார்கள். அதுவும் இந்த மாதிரி
விஷயங்களை தூண்டத்தானே செய்கிறது.