இலங்கையில் இருந்து தென் ஆப்ரிக்கா அணி திரும்ப போகிறது என்பது உறுதியாகி விட்ட நிலையில், இந்த பதிவு எழுதப்படுகிறது. உண்மையில் தென் ஆப்ரிக்கா அணியினர் அதிர்ஷடக்காரர்கள். பாதுகாப்பு பற்றி அச்சம் வந்த உடன் அவர்களால் ஒரு திட்டவட்டமான முடிவு எடுக்கமுடிகிறது. அதை செயல்படுத்தவும் முடிகிறது. அங்கு (வேறு வழியின்றி?) வாழும் பொது மக்கள் நிலைமை தான் மிக பரிதாபம். அகதியாக தமிழகத்திற்கு வருபவர்களை பற்றிய செய்திகள் நெஞ்சை சுடுகின்றன.
கிரிகிஃபோ போட்டிகள் மாற்றி அமைக்கபடுவது பற்றி விரிவாக எழுதி தள்ளுகிறது. ப்ளேயர்கள் மனநிலை பாதிக்கபட்ட பின்னர் அவர்களால் எந்த அளவுக்கு ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும் என்பது பற்றி கேள்விகள் எழுப்பிகிறது. அங்கே இருக்கும் மக்கள் நிலைமையை இரண்டு வரி செய்தியாக ஒதுக்கி விடுகிறோம்.
ஒர் சமுகமாக மக்கள் வெற்றிகரமாக வாழக்கற்று கொள்ளவில்லை. உலகெங்கும் நடக்கும் நாசவேலைகளுக்கு அதுவே மூலகாரணம். ஒட்டு மொத்தமாக வேற்று கிரகத்தினர் யாராவது வந்து படையெடுத்து வந்தால் தான் உலகில் ஒற்றுமை வருமோ?
எளிதாகவே ஆயுதங்கள் கிடைப்பது, தாக்குதல் எண்ணம் கொண்டவர்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற பேருதவியாக இருக்கிறது. க்ளோனிங்கை தடை செய்பவர்கள், ஒரின சேர்க்கையை , புத்தங்களை , பொது கூட்டங்களை தடை செய்பவர்கள், ஆயுதங்கள் தயாரிப்பதை ஒட்டு மொத்தமாக தடைசெய்யலாம்.
இவ்வளவு ஆயுதப் போராட்டங்களும் சண்டைகளும் இழந்த உயிரை மீண்டும் கொண்டு வருமா, அல்லது நாளைய நிலைமையைத்தான் நன்றாக ஆக்குமா?
வெறுப்புணர்ச்சி ஆழமாகவே வேர் விட்டு விட்டது உலகின் பல இடங்களில். அதன் விளைவுகள் இன்னமும் கசப்பான சம்பவங்களையே உண்டு பண்ண போகின்றன. இவ்வளவு ஆண்டு அடித்து கொண்ட்ட பின்னரும் சமாதானம் நோக்கி இவர்கள் திருந்தவில்லை என்றால், இரண்டு தரப்புகளும் கடைசி ஆளை ஆயுதத்தை இழக்கும் வரும் தொடருமோ...
எண்ணி பார்க்கவே பயமாக இருக்கிறது.
No comments:
Post a Comment