Monday, August 07, 2006

குமுதமும் அடுத்த படியாக கட்டண தளமாக மாறுகிறது.

இவ்வளவு நாள் குமுதத்தை இணையதளத்தில் பார்க்கும் போது எனக்குள் இருந்த ஆச்சரியம் எவ்வாறு குமுதம் பத்திரிக்கைகள் இலவசமாக இணையத்தில் வழங்கபடுகின்றன என்பது. என்றாவது ஒர் நாள் கட்டண தளமாக இது மாறும் என்ற எண்ணம் இருந்தது. தற்போது விரைவில் கட்டணதளமாக மாற போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

தினமலர், தினகரன் இன்னும் பல தமிழ் ஆங்கில நாளிதழ்கள் இன்னமும் இலவசமாகவே தொடர்கின்றன என்றாலும் எவ்வளவு நாள் இது தொடரும் என்பது சந்தேகமே. இலவசமாக வழங்கி வாசகர் வட்டம் உருவாக்கி, ரெகுலராக படிக்கும் பழக்கம் கொண்டு வந்து பின்னர் கட்டணம் வாங்க துவங்குகிறார்கள் என்று தோன்றுகிறது. தினகரன் நாளிதழ் முதலில் ஒரு ரூபாய்க்கு விற்றார்கள். பின்னர் சிறிது காலம் கழித்து இரண்டு ரூபாய்க்கு வந்து விட்டது. இதே போன்று தான் ஸ்டார், இயெஸ்பின் போன்றவையும் துவக்கத்தில் இலவசமாக வந்து பின்னர் கட்டணம் வாங்க துவங்கின.

இணையத்திலும் பல இலவச மென்பொருட்கள், திறந்த மூலங்கள் உள்ளன. நாளடைவில் அவையும் கட்டண மூலங்களாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வெறும் ஆர்வத்தினாலும், பலர் இணைவதனாலும் மட்டும் எந்த அமைப்பும் தொடரமுடியாது. இறுதியில் பணம் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும்.

No comments: