என் ப்லொக்கிற்கு வருகை தந்ததற்கு நன்றி. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது நானும் என் நண்பர்களும் நடத்தி வந்த மாத பத்திரிக்கை. இப்பொது வெப் வடிவம் பெற்றுள்ளது.
Sunday, May 08, 2011
உதவியாக இருந்தவை இந்த போதனைகள்.
Wednesday, March 03, 2010
ஒவர் ரியாக்ஷன்
இந்த செய்தி வெளிவந்ததில் இருந்து நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் இருவருக்கிடையே நெருக்கம் இருந்தால் அதனால் என்ன தவறு.தேவையே இல்லாமல் இந்த நிகழ்ச்சி பெரிது படுத்த படுகிறது.
Sunday, April 26, 2009
வெகு நாட்கள் கழித்து மீண்டும்
வெகு நாட்கள் கழித்து மீண்டும் எழுத வந்துள்ளேன். உண்மையில் சொல்ல போனால் சென்னை வந்த பின்னர் நிறைய எழுத முடியும் என்று நினைத்தேன். ஆனால் நடந்தது அதற்கு முற்றிலும் மாறானது.
இந்த இரண்டு கால இடைவெளியில் பதிவர் உலகம் மிகவும் விரிவடைந்துள்ளது. முன்னர் அதிகமாக விவாதிக்கபட்ட குழலி, முத்து தமிழினி, முகமூடி, மாயவரத்தான், கடற்புரத்தான் போன்றவர்கள் எழுதுவதை மிகவுமே குறைத்து விட்டனர். டோண்டு இன்னமும் பீக் ஃபார்மில் இருக்கிறார்.காசியிடமிருந்து தமிழ்மண நிர்வாகம் கை மாறியுள்ளது.
புதியவர்கள் நிறையவே உள்ளனர். பழைய பதிவர்களில் எத்தனை பேருக்கு என்னை நினைவிருக்கும் என்று தெரியவில்லை. புதியவர்களுக்கோ என்னை சுத்தமாக தெரிந்திருக்காது.
என்னுடைய பல பதிவுகளின் அளவை பற்றி பலர் கிண்டலடித்ததுண்டு. சும்மா ரீவைண்டு பண்ணி இரு பதிவுகளின் இணைப்பை கொடுத்துள்ளேன்.
http://bunksparty.blogspot.com/2006/03/blog-post_08.html
http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_09.html
போன சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்மணம் மிக பரபரப்பாக காணப்பட்டது. நானும் அப்போது ரெகுலராக எழுதி கொண்டிருந்தேன். தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழ்நிலையில் மீண்டும் தொடங்குகிறேன். இனிமேல் வாரவிடுமுறையின் போது எழுத திட்டமிட்டுள்ளேன்.
Wednesday, April 15, 2009
Sunday, September 09, 2007
Datawarehousing professionals required
I do have urgent openings for datawarehousing (Informatica,Webfocus, BO or any other tool) with 2-7 years of experience. Please share the news with as many people as you can. Please send the resume to balachandarg@hotmail.com
Thanks and Regards
Balachandar Ganesan.
Saturday, June 16, 2007
ஜாவா டெவலப்பர்கள் தேவை.
Please contact me at balachandarg@hotmail.com
Friday, May 18, 2007
சென்னைக்கு குடியேறுகிறேன்.
வாழ்க்கையில் நமக்காக எவ்வளவோ செய்த பெற்றோர்களுக்கு, நாம் என்ன திருப்பி செய்கிறோம் என்பது ஒவ்வொருவரும் எண்ணி பார்க்க வேண்டிய ஒன்று. நானே மிக தாமதமாக முடிவெடுத்தாகவே கருதுகிறேன். வாழ்க்கையில் எதிர்காலத்தை பற்றி நிறையவே ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். பணம் , வேலை, சொத்து சேர்ப்பது மட்டுமில்லாமல், பெற்றோர்களை பற்றியும் ஒவ்வொருவரும் திட்டமிட வேண்டும்.
Thursday, March 08, 2007
இலவசமாக கிடைக்கும் கமர்ஷியல் மென்பொருள்கள்.
http://www.giveawayoftheday.com
ஒவ்வொரு நாளும் ஒரு மென்பொருளை இந்த தளம் இலவசமாக தருகின்றது. முக்கியமாக அன்றைய தினமே நீங்கள் டவுன்லோடு செய்து , இன்ஸ்டால் செய்து விட வேண்டும்.
Tuesday, September 26, 2006
மேலும் ஒர் மென்பொருள்
இதோ அதற்கான லிங்க்.
http://sourceforge.net/projects/ptm
Wednesday, August 16, 2006
நம்பிக்கை இல்லாத ஒர் பதிவு.
கிரிகிஃபோ போட்டிகள் மாற்றி அமைக்கபடுவது பற்றி விரிவாக எழுதி தள்ளுகிறது. ப்ளேயர்கள் மனநிலை பாதிக்கபட்ட பின்னர் அவர்களால் எந்த அளவுக்கு ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும் என்பது பற்றி கேள்விகள் எழுப்பிகிறது. அங்கே இருக்கும் மக்கள் நிலைமையை இரண்டு வரி செய்தியாக ஒதுக்கி விடுகிறோம்.
ஒர் சமுகமாக மக்கள் வெற்றிகரமாக வாழக்கற்று கொள்ளவில்லை. உலகெங்கும் நடக்கும் நாசவேலைகளுக்கு அதுவே மூலகாரணம். ஒட்டு மொத்தமாக வேற்று கிரகத்தினர் யாராவது வந்து படையெடுத்து வந்தால் தான் உலகில் ஒற்றுமை வருமோ?
எளிதாகவே ஆயுதங்கள் கிடைப்பது, தாக்குதல் எண்ணம் கொண்டவர்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற பேருதவியாக இருக்கிறது. க்ளோனிங்கை தடை செய்பவர்கள், ஒரின சேர்க்கையை , புத்தங்களை , பொது கூட்டங்களை தடை செய்பவர்கள், ஆயுதங்கள் தயாரிப்பதை ஒட்டு மொத்தமாக தடைசெய்யலாம்.
இவ்வளவு ஆயுதப் போராட்டங்களும் சண்டைகளும் இழந்த உயிரை மீண்டும் கொண்டு வருமா, அல்லது நாளைய நிலைமையைத்தான் நன்றாக ஆக்குமா?
வெறுப்புணர்ச்சி ஆழமாகவே வேர் விட்டு விட்டது உலகின் பல இடங்களில். அதன் விளைவுகள் இன்னமும் கசப்பான சம்பவங்களையே உண்டு பண்ண போகின்றன. இவ்வளவு ஆண்டு அடித்து கொண்ட்ட பின்னரும் சமாதானம் நோக்கி இவர்கள் திருந்தவில்லை என்றால், இரண்டு தரப்புகளும் கடைசி ஆளை ஆயுதத்தை இழக்கும் வரும் தொடருமோ...
எண்ணி பார்க்கவே பயமாக இருக்கிறது.
Sunday, August 13, 2006
அவன்ட் இணைய உலாவி.
இன்று தான் டவுன்லோடு செய்து பயன்படுத்த ஆரம்ப்பித்தேன். சில மணி நேரங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்து விட்டது இந்த அவன்ட் இணைய உலாவி. பிரபலமாக இல்லாதது ஏனென்று தெரியவில்லை. ஆனால் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை விட இது மிக திருப்திகரமாக, வசதியாக உள்ளது.
பொதுவாக என் வேலையின் காரணமாக இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை விட வேறு ஏதேனையும் நான் பயன்படுத்துவதில்லை. காரணம் என்னுடைய ப்ராஜக்ட் செட்டிங்க்ஸ் , டெக்னாலாஜி அனைத்தும் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரருக்காக உருவாக்க பட்டவை.
சில காலமாக இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை கொண்டு வீடியோ பார்க்கும் போது பல பிரச்சினைகள் வந்தது. அதன் காரணமாக மற்றொரு இணைய உலாவி தேடினேன். நான் எந்த மென்பொருள் தேவைப்பட்டாலும் போகும் முதல் இடம் கூகுள் அல்ல.டவுன்லோட்ஸ்.காம்.
அங்கு தான் இந்த இணைய உலாவியின் லிங்க் கிடைத்தது. பல மற்ற உலாவிகள் இருந்த போதிலும் , இந்க மென்பொருளின் சைஸ் 2 எம்பிக்கு குறைவாகவே இருந்தது உடனடியாக டவுன்லோடு செய்ய தூண்டியது. உபயோகித்து பார்த்ததில் எனக்கு தோதுவானதாக இருந்தது.
லிங்குகள் விபரம்.
Avant Browser
Downloads
Saturday, August 12, 2006
பின்னூட்டங்களை பிரசுரம் செய்வது...
உண்மையில் ஒர் பதிவருக்கு கேள்விகள் அனுப்பட வேண்டுமானால், அதை அவர் பதிவில் பின்னூட்டமாக இடுங்கள். அல்லது உங்கள் வலைப்பூவில் இன்னாருக்கு கேள்விகள் என்று பதிவாக இடுங்கள். அதை விட்டு விட்டு சகட்டுமேனிக்கு எல்லா பதிவுகளிலும் பின்னூட்டம் இடுவது என்பது சரியான முறையன்று.இதை ஊக்குவிக்காதீர்கள் என்று சகபதிவர்களை வேண்டி கொள்கிறேன். எந்த பின்னூட்டம் வெளி இட படவேண்டும் என்பது உங்களுடைய தனிபட்ட சுதந்திரமே. உங்கள் சுதந்திரத்தை இன்னொருவர் முறைகேடாக பயன்படுத்த விடலாமா?
Thursday, August 10, 2006
Wednesday, August 09, 2006
புத்தகம் வெளியிட ஆசையா?
உங்களுக்கு மின்வடிவத்தில் புத்தகங்கள் வெளியிட ஆசை உள்ளதா?. இதற்கு லூலூ இணையதளம் உதவுகிறது. உங்கள் புத்தகங்களை இந்த தளத்தில் விற்பனை செய்யலாம். புத்தக விலையில் ஒர் பங்கு இந்த நிறுவனத்திற்கு போய் சேரும்.
மேற்கொண்டு பல வசதிகள் பெற வேண்டுமானால், நீங்கள் சிறிய தொகை கட்ட வேண்டியிருக்கும். இந்த தளம் ஒரளவு பிரபலமாகவே உள்ளது. புத்தகங்கள் விற்பதற்கு வாய்ப்புகள் மற்ற தளங்களை விட, அதிகமாகவே உள்ளது.பல்வேறு துறையினரும் இங்கு புத்தகங்கள் வெளியிட்டாலும் இங்கு கணிப்பொறி துறை புத்தகங்கள் அதிகமாக உள்ளது. புத்தகத்தில் இருந்து ஒரு சாப்டரை சாம்பிளாக வெளியிடலாம். விற்பனை விலை என்ன என்பதை நிர்ணயம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு.என்னுடைய தனிப்பட்ட அனுபவம் திருப்திகரமாகவே உள்ளது. எனவே நம்பிக்கையோடு சிபாரிசு செய்கிறேன்.
Monday, August 07, 2006
குமுதமும் அடுத்த படியாக கட்டண தளமாக மாறுகிறது.
தினமலர், தினகரன் இன்னும் பல தமிழ் ஆங்கில நாளிதழ்கள் இன்னமும் இலவசமாகவே தொடர்கின்றன என்றாலும் எவ்வளவு நாள் இது தொடரும் என்பது சந்தேகமே. இலவசமாக வழங்கி வாசகர் வட்டம் உருவாக்கி, ரெகுலராக படிக்கும் பழக்கம் கொண்டு வந்து பின்னர் கட்டணம் வாங்க துவங்குகிறார்கள் என்று தோன்றுகிறது. தினகரன் நாளிதழ் முதலில் ஒரு ரூபாய்க்கு விற்றார்கள். பின்னர் சிறிது காலம் கழித்து இரண்டு ரூபாய்க்கு வந்து விட்டது. இதே போன்று தான் ஸ்டார், இயெஸ்பின் போன்றவையும் துவக்கத்தில் இலவசமாக வந்து பின்னர் கட்டணம் வாங்க துவங்கின.
இணையத்திலும் பல இலவச மென்பொருட்கள், திறந்த மூலங்கள் உள்ளன. நாளடைவில் அவையும் கட்டண மூலங்களாக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வெறும் ஆர்வத்தினாலும், பலர் இணைவதனாலும் மட்டும் எந்த அமைப்பும் தொடரமுடியாது. இறுதியில் பணம் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும்.
Sunday, August 06, 2006
Saturday, August 05, 2006
பிரகாஷ் ராஜ் காதலிக்க கூடாதா?
டைரக்டர் மனோஜ்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ஆரியா படத்தில் மாதவனும் பிரகாஷ்ராஜும் போட்டி போட்டு கொண்டு பாவனாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள். மாதவன் ஒகே.பிரகாஷ்ராஜ் துரத்தி துரத்தி காதலிப்பதேல்லாம் டூ மச் இல்லையோ
ஏற்கனவே பெரும் வெற்றி பெற்ற கில்லை என்ற படத்தில் பிரகாஷ்ராஜ் திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்தார். அவர் ஐ.லவ் யூ என்று திரிஷாவிடம் சொல்லும் காட்சியை பலரும் ரசித்தார்கள். திறமையுள்ள நடிகர்களில் அவரும் ஒருவர். திரிஷாவும் பிரகாஷ்ராஜை விட பல வயது மூத்த ரஜினியோடு நடிக்க போட்டி போட்டார். இறுதியில் ரஜினி ஷ்ரேயோவோடு டூயட் பாடிக்கொண்டு இருக்கிறார். இந்த நடிகை ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கும் திருவிளையாடல் படத்திலும் கதாநாயகியாக (அதாவது ஹீரோவோடு டூயட் பாடுபவராக) நடிக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக திரையில் வயது வித்தியாசம் என்பது கேலியாகி போய் இப்போது இல்லாது போன ஒன்று. ரஜினி அல்லது மற்ற நடிகர்கள் ஹீரோயின் டூயட் பாடுவதை சலனமாக பார்க்கும் விகடன் பிரகாஷ்ராஜை வித்தியாசமாக பார்ப்பது ஏன். இத்தனைக்கும் இவர் ரஜினியை விட பல வயது இளையவர். நடிப்பு திறமை மட்டும் இல்லாமல், பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களை தயாரிக்கிறவர். வில்லனை நேர் வாழ்க்கையில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகனை நிஜவாழ்க்கையிலும் நகைச்சுவை நடிகனாகவும், ஹீரோவை நிஜவாழ்க்கையில் ஹீரோவாகவும் பார்க்கிறதா, விகடன்.
Wednesday, August 02, 2006
Ebrary
அவற்றில் ஒன்று போத் ட்ரீ(http://www.bodhtree.com/) எனப்படும் நிறுவனத்தின் மென்பொருளைத்தான் தினமலர் பயன்படுத்துகிறது. இது தரத்தில் தினகரன் பயன்படுத்தும் மென்பொருளை(ePaper solution by 4cplus & cadgraf digital ) விட மேலாக உள்ளது.
இது இரண்டு தளங்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இது போலவே பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை ஆன்லைனில் படிப்பதற்கு தோதுவாக இப்ரேரி (http://shop.ebrary.com/ )உள்ளது. 5$ பணம் கட்டி நீங்கள் எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் ப்ரிண்ட் செய்தாலோ அல்லது காப்பி செய்தாலோ அதற்கு பணம் கட்ட வேண்டும். இதில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தேடுவதும் மிகவும் எளிதாக இருக்கிறது.
புத்தகங்களை பார்வையிட இப்ரேரி ரீடரை பயன்படுத்த வேண்டும். இதை மிக எளிதாகவே நிறுவிக் கொள்ளலாம். பல்வேறு விதமான புத்தகங்கள் வாங்கி படிப்பதை விட ஆன்லைனில் 5$ கட்டி எக்கசக்கமாக லாபகரமான முறையில் நான் பயன்படுத்தி விட்டேன்.
உயிர் படத்திற்கு எதிர்ப்பு..
ஒரு ஆண் தன் துணையை இழந்த பின்னர் மற்றொருவருடன் அல்லது மனைவியின் தங்கையுடன் வாழ்க்கை தொடரும் போது, ஒர் பெண் செய்ய கூடாதா என்ற நியாயமான கேள்வியை இயக்குனர் தந்திரமாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே தோன்றுகிறது. பதிவுலகில் சிறிது நாட்களுக்கு முன்னர் விதவைகள் இல்லாத கிராமம் என்று ஒரு பதிவு வந்தது இங்கு குறிப்பிட தக்கது.
மரணம் என்கின்ற தலைப்பில் போட்டி நடந்து முடிந்திருக்கிற நேரம், இப்போது மரணம் பற்றி பேச வேண்டியுள்ளது. வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒர் துணை தேவைப்படத்தான் செய்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு துணையுடன் வாழும் பாக்கியம் கிடைப்பதில்லை. துணை மறைந்து விட்டதால் வாழ்க்கை வரண்டு விட வேண்டுமா?. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இன்னோர் துணை தேடி கொண்டால் என்ன?மணல் கயிறு படத்தில் எஸ்.வி.சேகர் இதனை ஒரு நிபந்தனையாக வைப்பார் அவருக்கு பெண் தேடும் போது.
துணையுடன் இருக்கும் போது யார் மீது கவனம் திரும்பினாலும் அது தவறு தான். ஆனால் அதற்காக வாழ்க்கையை வீணாக்கி கொள்ள வேண்டுமா ஒர் துர்சம்பவம் நடந்து விட்டால். இந்த சமூகம் பெண்ணிற்கு மறு வாழ்வு தர தயங்கதான் செய்கிறது. என்னுடைய பெரியப்பா மகள் கணவனை இழந்த போது நடந்த சடங்குகளை கண்டிக்கவோ, தடுக்கவோ என்னாலோ, எனது அண்ணலோ முடியவில்லை. இதில் இவை கட்டாயம் நடக்க வேண்டும் என்று கணவன் வீட்டு மக்கள் வற்புருத்தல் வேறு. வருடம் பல ஓடியும், அக்கா மனம் மாறவில்லை. இந்த சடங்குகளை எப்படி தான் தாங்குகிறார்களோ பெண்கள்.
பெண்களுக்கும் உணர்வு உண்டு, அவர்களுக்கும் வாழ்க்கையில் துணை மறைந்தால் மற்றோர் துணை தேவை என்ற ஒன்றை பாசிட்டிவாக காட்ட வழிகள் பல இருக்கின்றன. அதாவது எதிர்பாராத சூழ்னிலையில் அண்ணன் மறைந்து விட தம்பி, அண்ணியின் மீதும் குழந்தைகள் மீதும் கொண்ட ஆர்வத்தினால் காதலை தியாகம் செய்து அண்ணியை மனைவியாக ஏற்று கொள்கிறார். இதற்கு காதலியும், பெற்றொர்களும் துணையாக இருக்கிறார்கள் என்று கூட கதை கற்பனை செய்யலாம். முயற்சி செய்தால் இந்த கதைக்கும் விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கலாம். ஆனால் உயிர் கொஞ்சம் நெகடிவ்வாக அமைந்து விட்டதோ என்று தோன்றுகிறது.
