என் ப்லொக்கிற்கு வருகை தந்ததற்கு நன்றி. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது நானும் என் நண்பர்களும் நடத்தி வந்த மாத பத்திரிக்கை. இப்பொது வெப் வடிவம் பெற்றுள்ளது.
Tuesday, April 25, 2006
இலவச கொத்தனார்.
வீட்டுக்கு வீடு டி.வி.டி ப்ளேயர் வழங்க படும் என்று தி.மு.க அறிவித்தது. இதனை யடுத்து அ.தி.மு.க என்ன செய்வதன்று யோசித்து கொண்டுள்ளது. அந்த கட்சி, தியேட்டர்களை நாட்டுடமையாக்கி, எல்லா ஷோவும் இலவசம் என்று அறிவித்து விடும் என்று தெரிகிறது. இதனிடையே விஜயகாந்த் டி.வி.டி ப்ளேயர் கொடுத்தால் மட்டும் போதுமா? மக்கள் எப்படி படம் பார்ப்பார்கள் ட்.வி.டி இல்லாவிட்டால் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இலசமாக பொருட்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டிய அவர் ஆட்சிக்கு வந்தால் பசுவும் கன்று குட்டியும் வழங்கபடும் என்று உறுதியளித்தார்.பால்காரர் இல்லாமல் மக்கள் பால் எப்படி கறப்பார்கள்?. அனுபவம் இல்லாத விஜயகாந்த் ஏதெதோ உளறுகிறார் என்று பா.ம.க. அறிக்கை விட்டுள்ளது.
இலவச திட்டங்களி பற்றி நிதி அமைச்சரிடம் கேட்ட போது,பணக்காரர்கள் 100 சானல்கள் பார்க்கிறார்கள், ஏழைகள் ஒரு சானல் கூட பார்ப்பதில்லை. பணக்காரர்களிடம் இருந்து 10 சானல்கள் கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுத்தால் ஏழைகள் 100 சானல்கள் பார்க்காவிட்டாலும் 10 சானல்களாவது பார்ப்பார்கள் என்று விபரமாக எடுத்து கூறினார்.
தி.மு.க வில் சீட் கிடைக்காத நடிக, நடிகர்கள் அனைவரும் அ.தி.மு.க வில் சேர்ந்தனர். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு ஒட்டு இருப்பதால் அ.தி.மு.க அவர்களை முழு மனதோடு ஏற்று கொண்டது.இதனையடுத்து திண்டிவனம் ராமமூர்த்தியும் ஏதேனும் சினிமாவில் நடித்து விட்டு அடுத்த எலெக்ஷனில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று திட்டம் போட்டுள்ளார். இதனிடையே தலைவரும் , வேட்பாளர்களும் அடிக்கடி காணாமல் போவதால் என்ன செய்வதன்று தெரியாமல் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் முழித்து கொண்டுள்ள்னர். இதற்கு மேலும் யாரும் காணாமல் போய் விட கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்வதை விட்டு விட்டு கல்யாண மண்டபத்திற்கு சென்று உள்தாள்பாள் போட்டு கொண்டு விட்டனர். உள்ளே இருந்து நாங்கள் சிங்கங்கள் , எங்களை சீண்டாதீர்கள் என்று கோஷம் கேட்கின்றது.
விஜயகாந்த் என்ற பெயரில் உள்ள வேட்பாளர்கள். அனைவரும் நான் தான் விஜயகாந்த் , எனக்கு ஒட்டு போடாதீர்கள் என்று பிரசாரம் செய்வதால் , நான் தான் விஜயகாந்த் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று பிரசாரம் செய்து வரும் விஜயகாந்த் என்ன செய்வதென்று குழம்பியுள்ளார். இந்த் வில்லத்தனத்தினை எப்படி சமாளிப்பது என்று இது வரை தனக்கு கதை எழுதியுள்ளவர்களிடம் கேட்டுள்ளார்.
இன்னமும் பல கூத்துக்களுக்கு காத்திருப்பீர்.
Monday, April 24, 2006
இன்னமும் பல கூத்துக்களுக்கு காத்திருப்பீர்.
இலவச திட்டங்களி பற்றி நிதி அமைச்சரிடம் கேட்ட போது,பணக்காரர்கள் 100 சானல்கள் பார்க்கிறார்கள், ஏழைகள் ஒரு சானல் கூட பார்ப்பதில்லை. பணக்காரர்களிடம் இருந்து 10 சானல்கள் கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுத்தால் ஏழைகள் 100 சானல்கள் பார்க்காவிட்டாலும் 10 சானல்களாவது பார்ப்பார்கள் என்று விபரமாக எடுத்து கூறினார்.
தி.மு.க வில் சீட் கிடைக்காத நடிக, நடிகர்கள் அனைவரும் அ.தி.மு.க வில் சேர்ந்தனர். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு ஒட்டு இருப்பதால் அ.தி.மு.க அவர்களை முழு மனதோடு ஏற்று கொண்டது.இதனையடுத்து திண்டிவனம் ராமமூர்த்தியும் ஏதேனும் சினிமாவில் நடித்து விட்டு அடுத்த எலெக்ஷனில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று திட்டம் போட்டுள்ளார்.
இதனிடையே தலைவரும் , வேட்பாளர்களும் அடிக்கடி காணாமல் போவதால் என்ன செய்வதன்று தெரியாமல் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் முழித்து கொண்டுள்ள்னர். இதற்கு மேலும் யாரும் காணாமல் போய் விட கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்வதை விட்டு விட்டு கல்யாண மண்டபத்திற்கு சென்று உள்தாள்பாள் போட்டு கொண்டு விட்டனர். உள்ளே இருந்து நாங்கள் சிங்கங்கள் , எங்களை சீண்டாதீர்கள் என்று கோஷம் கேட்கின்றது.
விஜயகாந்த் என்ற பெயரில் உள்ள வேட்பாளர்கள். அனைவரும் நான் தான் விஜயகாந்த் , எனக்கு ஒட்டு போடாதீர்கள் என்று பிரசாரம் செய்வதால் , நான் தான் விஜயகாந்த் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று பிரசாரம் செய்து வரும் விஜயகாந்த் என்ன செய்வதென்று குழம்பியுள்ளார். இந்த் வில்லத்தனத்தினை எப்படி சமாளிப்பது என்று இது வரை தனக்கு கதை எழுதியுள்ளவர்களிடம் கேட்டுள்ளார்.
இன்னமும் பல கூத்துக்களுக்கு காத்திருப்பீர்.
Saturday, April 22, 2006
மில்லி மீட்டர் முருகேஷா,
நீங்க போட்ட லிஸ்ட்டில் உங்கள் பெயரை சேர்க்காதது உங்களுடைய தன்னடக்கத்தை காட்டுகிறது. உண்மையில் உங்கள் பக்கத்தில் நிற்கவே தகுதியில்லாத சாதாக்கள் நாங்கள். ஆனாலும் எங்களை மதித்து இடம் கொடுத்த உங்கள் தன்னடக்கத்தை நான் பாராட்டுகிறேன்.
http://metermurugesan.blogspot.com/2006/04/blog-post_114564231862567883.html
எஸ் கே,நான் முதலில் இதை காமேடியாகவே எடுத்து கொண்டேன். ஆனால் அதன் பின்னர் பின்னூட்டங்களில் அவர் எழுதியதை பார்த்தால் அவர் ஒரு ஆரோக்கியமான எண்ணத்தோடு எழுதுவதாகவே தெரியவில்லை. எதுக்கெடுத்தாலும் அண்ணா என்று முடிக்கிறார் என்னத்தையாவது சொல்லி விட்டு. எனவே அவருடைய தன்னடக்கத்தை பாராட்டி விட்டு ஒடி விடலாம்.
Friday, April 21, 2006
டோண்டு இட்ட பின்னூட்டத்திற்கு என் பதில்.
என்னுடைய முந்தைய பதிவில் டோண்டு கீழ்கண்ட பின்னூட்டம் இட்டார்.
http://bunksparty.blogspot.com/2006/04/blog-post_21.html
அதற்கான பதிலை நான் கூறிவிட்டேன். என்றாலும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக இதை தனி பதிவாக விரிவாக இடுகிறேன்.
டோண்டுவின் பின்னூட்டம்.
Yes, I do agree on this. If it is INDIAN institute of technology, then it has high moral duty to send its agenda to its fellow countrymen who are unaware."To whom and where are they? To each and every potential candidate? Talk practically, sir. IIT does have its own Website and it keeps it constantly updated. And advertisements do come in leading dailies. What more does one want? A potential candidate, irrespective of his caste, is supposed to have finished plus 2 level education and given the cost of higher education, he will most probably belong to a familly that can afford his education. He will definitely not be an illiterate.So what or who prevents him from getting information? Fact is, he gets it but only people like you play the ostrich.If you still persist, I challenge you to give an alternative scenario, whereby more information can be made available.Please carry out the first two tests (photo+correct blogger number on mouseover) to check that genuine Dondu has given this comment and then only publish it.Regards,Dondu N.Raghavan
என்னுடைய பதில் மேலும் விரிவாக.
அன்புக்குரிய டோண்டு சார் அவர்களே.
பாட திட்டத்தில் ஒரு பங்காக மேல் கல்வி பற்றி விரிவான செய்திகளை குறிப்பிடலாம். அதுவே போதுமே. வரலாறு என்ற பெயரில் முதலாம் பானிப்பட், இரண்டாம் பானிப்பட் போர் என்று பல வருடங்களுக்கு மாணவர்களை இம்சிப்பதை விட,அவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கிற மேல்கல்வி விபரங்களை குறிப்பிடலாம். உண்மையில் 9ஆம் வகுப்பு வரும் வரை சி.பி.எஸ்.ஐ பள்ளிகள் இருப்பதே தெரியாது. 11 ஆம் வகுப்பு வரை ஐ.ஐ.டி பற்றி தெரியாது.ஆனால் பானிப்பட் போராட்டம் பற்றி எனக்கு தகவல்கள் கொடுக்க பட்டன. நானும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். உண்மையில் நான் படித்த பல பாடங்கள் எனக்கு உபயோகமாகவே இல்லை. எனக்கு உபயோகபடுகிற விஷயங்கள் பாடதிட்டத்திலும் இல்லை. எனவே , பாட திட்டத்தில் மேல்படிப்பு விப்ரங்களை சேர்த்தாலே போதும். இது மட்டுமில்லை, இன்னமும் பலவழிகளை முயன்றால் கண்டுபிடிக்கலாம். தேவை படுவது ஆர்வம் மட்டுமே.
To whom and where are they? To each and every potential candidate? Talk practically, sir
இது நடைமுறையில் சாத்தியமான எளிதாகவே நடைமுறைபடுத்த கூடிய ஒரு காரியமே. மேல் கல்வி பற்றி மிக தாமதமாகவே நிறைய பேர் தெரிந்து கொள்கிறார்கள். இன்னமும் சொல்ல போனால் நான் நான் இவற்றை பற்றி பள்ளி நிறுவனங்கள் மூலமாக தெரிந்து கொள்ளவில்லை. இது துரதிர்ஷ்டம் இல்லையா?. எல்லாருக்கும் தகவல்கள் போக வேண்டும் டோண்டு அவர்களே. நல்ல கல்வி அறிவு மட்டுமே நாட்டின் ஏழ்மையை நீக்கும். இப்போது நீங்களே சொல்லுங்கள், இரண்டு மொழிகளின் கூடுதலாக தெரிந்து இருப்பது உங்களுக்கு உதவியாக இல்லையா? மேற்கொண்டு மேற்கொண்டு கல்வி அமைப்பை புதிப்பித்து கொண்டு இருக்க வேண்டும்.
உரக்க சிரித்து பின்னூட்டம் இடுங்கள்- குழலியின் பதிவில்
வழக்கம் போல குழலி வெட்டு ஒண்ணு , துண்டு ரெண்டு என்ற ஸ்டைலில் ஒரு பதிவை இட்டுள்ளார். அங்கு வந்த ஒர் பின்னூட்டம் , கவனத்தை ஈர்த்தது. அதை கீழே தந்துள்ளேன்.
IIT puts advts in major newspapers and Employment News.It is upto youto read them and apply.Almost all universities have bureaus or cells to help students in choosing career and higher education.If you are a B.Tech student and if you do not even read newspapers or visitwebsites of institutions like IITwhat can IITs do.These days the websites contain updated and latest information.Dont expect IITto contact you and tell that there is something called world wide web :).
ஆணவம் கலந்த நக்கல்களுக்கு மிக ஆணவம் கலந்த பதில் தான் சரியான பதில் என்கிற கட்சி நான். ஐ.ஐ.டி பற்றியும்,இணையம் பற்றியும் தெரிந்திருக்க கூடிய வாய்ப்பு இருந்ததினால் தான் நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அது போன்ற வாய்ப்பு இல்லாதவர்களையும் இந்த விஷயங்கள் சென்றடைய வேண்டும். இந்தியர்களை சகோதரர்களாக கருதுங்கள் முட்டாள்களே. இந்த பின்னூட்டத்திற்கு பதிலாக ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு நாள் வகுப்பு எடுத்து உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கற்று கொடுங்கள். உங்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது பயனுள்ள நாளாக இருக்கட்டும். செருப்பு தைக்கிறவர் குடும்பத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. என்னை சந்தித்த ஒரு நபருக்கு இ-மெயில் ஐடிக்கும் , இணையதள முகவரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. மற்றவர்கள் அவரை பார்த்து சிரித்த போது, நான் அவர்களை சத்தம் போட்டு விட்டு அவருக்கு விளக்கம் கொடுத்தேன். இதை தான் நான் இந்த பின்னூட்டம் இட்ட நபருக்கும் சிபாரிசு செய்கிறேன்.
எனது பள்ளி வாத்தியார் ஒருவர் , வீக்கான மாணவர்களை மிக கவனம் செலுத்தி நடத்துவார். மாணவர்கள் தவறாக பதில் சொல்லும் போது சிரித்த மாணவ மாணவிகளை வகுப்பு நடுவில் நிற்க வைத்து விட்டு, மற்றவர்களை அவர்களை பார்த்து உரக்க சிரிக்க சொல்வார். அதை தான் உங்கள் அனைவரையும் செய்ய சொல்வேன். உரக்க சிரித்து பின்னூட்டம் இடுங்கள் இந்த பின்னூட்டம் இட்ட நபரினை பார்த்து.
ஐ.ஐ.டி பற்றி தெரியாத இந்தியர்களுக்கு , ஐ.ஐ.டியை அறிமுக படுத்த வேண்டியது, ஐ.ஐ.டியின் கடமை.
Thursday, April 20, 2006
ஒ- போட வேண்டாம். ஒட்டு போடுங்கள் அது போதும்.
கேட்பதற்கு மட்டும் நன்றாக இருக்கின்றது இந்த யோசனை. இதை பற்றி -ஞானி கூறியிருப்பதை பாருங்கள்.
ஜனநாயகத்தின் ஆரம்ப கோளாறு வாக்குரிமை பயன்படுத்த படாமல் இருப்பது. அனைவரும் வாக்களிக்க வந்தாலே கட்சிகள் நல்ல வேட்பாளர்களை நிறுத்த நேரிடும். ஒட்டு போட வருபவர்கள் 60 பேர். அதிலும் நடுநிலையானவர்கள் ஒட்டு போடாமல் ஒ போட்டால் 100 க்கு 20 ஒட்டு வாங்கியவர் வெற்றி பெறுவார். (தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட இது கம்மி.). ஒட்டு போட்டதற்கு சான்றிதழ் வழங்க வேண்டும். - அந்த சான்றிதழில் வாக்களாரின் ஜாதி, நேட்டிவிட்டி, லைசன்ஸ் போன்ற விபரங்கள் குறிப்பிட பட வேண்டும். ஒருவர் ஒட்டு போட்டால் மட்டுமே இந்த விபரங்களுக்கு அங்கிகாரம் அளிக்க பட வேண்டும்.மக்கள் தானாகவே ஒட்டு போட முன்வருவார்கள்.
அனைவரும் வந்து ஒட்டு போட்டாலே போதும். யாரும் ஒ போட வேண்டாம்.
ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ம் மற்றும் தனியாக விவாதிப்பது ஏன்?
மதிப்பெண்கள் பெற்றும் இடம் கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு இருந்தும் சீட் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள். எல்லா இடத்திலும் போட்டி கடுமையாக இருக்கவே செய்கிறது.
எல்லா இடத்திலும் இட ஒதுக்கீடு இருக்கும் போது இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டுமே குறிப்பாக விவாதிக்க படுவதன் காரணம் என்ன? எழுத விருப்பம் இல்லாமல் இதை எழுதுகிறேன்.: மற்றவர்கள் இட ஒதுக்கீடு காரணமாக இவ்வளவு உயர்ந்த நிறுவனங்களில் தங்களுக்கு சமமாக படிக்க வருவதை தாங்க முடியவில்லையா? காலம் காலமாக புறக்கணிக்க பட்டவர்கள் ஐ.ஐ.டிக்கு , ஐ.ஐ.முக்கு வருவது சாதனையே.
மீண்டும் மீண்டும் சலுகை பெற்றவர்களே பெறுகிறார்கள். மற்றவர்களுக்கு அது கிடைக்கவில்லை என்ற முனகல்களுக்கு என்னுடைய பதில்: அது நடைமுறையில் உள்ள கோளாறு. அவர்களுக்கும் சலுகை கிடைக்கும் வண்ணம் அது மாற்ற படவேண்டும். அதற்காக ஒட்டு மொத்த இட ஒதுக்கீட்டு அமைப்பை எதிர்ப்பது தவறு. என்னை போல நீங்களும் உங்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மேல் படிப்பை பற்றி அறிவுரை கூறுங்கள். நான் இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை சென்றுள்ளேன். அதை விட்டு விட்டு ஐ.ஐ.ம், ஐ.ஐ.டி பற்றி புலம்பாதீர்கள். ஆரம்ப கல்வி பற்றி கொஞ்சமாவது அக்கறை காட்டுவோம்.
பீ அள்ளும் மக்களை மனதில் வைத்து கொண்டு இட ஒதுக்கீடு பற்றி எழுதுங்கள்.
Monday, April 17, 2006
இணையத்தில் தேடுவதை எளிமை படுத்த...
http://www.rollyo.com/
உடனடியாக நானும் அங்கே சென்று தேட முயற்சித்தேன். நீங்கள் விரும்புகிற 25 தளங்களை மட்டும் செலக்ட் செய்து , அங்கு மட்டும் தேடுகிறது இந்த சர்ச் என்ஞின்.
நான் பயன்படுத்திய வரை சிறப்பாக வந்தது. நீங்கள் குறிப்பிட்ட சில தளங்களை மட்டுமே தேட விரும்பினால் இதனை பயன்படுத்தி கொள்ள சிபாரிசு செய்கிறேன். இந்த ஐடியாவை கூடிய சீக்கிரமே மற்ற தளங்களிலும் காணலான் என்றே கருதுகிறேன்.
அடித்து போட்ட இந்தியன்.
வ்ரெஸ்லிங்க் என்பது இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மூலமாக பிரபலமான ஒன்று. இப்போது டென் ஸ்போர்ட்ஸ் சானலில் வருகிறது என்று கேள்வி பட்டேன். யதேச்சையாக ரெஸ்லிங்க் இணையதளம் சென்ற போது , நான் கண்ட வீடியோ கிளிப்பில் ஒரு புதிய ஆட்டகாரர் திடுதேப்பென்று அன்டர்டேக்கர் ஆடுகின்ற ஆட்டதில் இடயே புகுந்து அவரை புரட்டி எடுத்து விட்டார். மிக உயரமாக , பலசாலியாகவும் காணபட்ட அவர் யாரென்று விசாரித்து பார்த்தால், அவர் இந்தியர். முன்னர் போலீசில் பணிபுரிந்தவர் இன்று வ்ரெஸ்லிங்க் நிறுவனத்தில் இணைந்து விட்டார். அன்டர்டேக்கரே பார்ப்பதற்கு மிக பல்சாலி. அவருடைய உருவமும் மிக பெரியது. அவரே இவரை பார்த்ததும் மிரண்டு விட்டார். உண்மையில் நீங்கள் பார்த்தாலும் மிரண்டு விடுவீர்கள்.
http://www.wwe.com/superstars/smackdown/undertaker/videos/
(Watch the third clip in the first row)
http://en.wikipedia.org/wiki/Dalip_Singh
Thursday, April 13, 2006
தி.மு.க வை சாடும் முகமூடியின் பதிவு.
கலர் (டிவி) கனவுகள்
முகமூடி ஒரு சாராருக்கு எதிராக எழுதுகிறார் என்கிற ரீதியில் சில பின்னூட்டங்கள் அங்கே உள்ளன. கலர் டீவி கொடுப்பது என்பது உலக மகா கேணத்தனம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்ன காரணங்கள் கூறியும் இதனை நியாயபடுத்த முயல்வது தவறானதும் மட்டுமில்லை. மிக அபாயமான ஒன்றும் கூட.
http://mahendranmahesh.blogspot.com/2006/04/blog-post_05.html
மகேஷ் மிக எளிமையாக , ரசிக்கும் வண்ணம் இந்த திட்டத்தை குறை கூறி எழுதி உள்ளார்.
மகேஷின் பதிவினை படிக்கும் போது நமக்கு தோன்றுகிற கருத்து: மகேஷ் நடுநிலைமையாகவே இதனை விமர்சித்துள்ளார். ஆனால் அதே கருத்து நமக்கு முகமூடியின் பதிவை காணும் போது தோன்றவில்லை. இன்னமும் சொல்ல போனால் பல பதிவர்கள் உள்நோக்கத்தோடு தி.மு.க வை விமர்சிக்கின்றார்கள் என்றே தோன்றுகிறது.
இதே திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருந்தால் மகேஷ் அதனை கண்டிப்பாக விமர்சனம் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.ஆனால் முகமூடி அதனை விமர்சனம் செய்திருப்பாரா? இரசிக்கும் வண்ணம் எழுதுகிறவர்களில் ஒருவரானா முகமூடி நடுநிலைமையோடு தான் எழுதுகிறாரா?
ஜெயலலிதாவின் ஆட்சியின் முரட்டு தனங்களை மறக்க முடியுமா? யார் மீது வேண்டுமானாலும் கஞ்சா வழக்கு, அடி உதை வழக்கு இதெல்லாம் அதிகார துஷ்பிரயோகங்களின் உச்சகட்டம். அடிப்படையில் ஜெயலலிதாவின் குண நலன்கள் மாறவே இல்லை. தனக்கு தோன்றுவது எதுவாக இருந்தாலும் அதனை செய்வது என்கின்ற ஜெயலலிதாவின் குணம் அனைவருக்கும் தெரிந்த போது ஏன் அதை பற்றி முகமூடி எழுதுவது இல்லை.
பலர் கூறியது போல இது இரண்டு மோசமான சாய்ஸ்களில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பது என்கின்ற நிலைமையில் இந்த தேர்தல் உள்ளது. அப்போது நாம் நாட்டின் நலன் கருதி நடுநிலைமையோடு ஒன்றை தேர்வு செய்வது பற்றி ஆராயாமல் ஒன்றை மட்டுமே குறை கூறி கொண்டிருப்பது நல்லது தானா? இந்த இடத்தில் சாத்தியமே இல்லை( குறைந்த பட்சம் தேர்தலில் ஆவது) என்றாலும் விஜயகாந்தை ஆதரிக்கும் எஸ்கே மற்றும் ஒ போடு என்று பிரசாரம் செய்ய்ம் -ஞானி அவர்களை பற்றி முகமூடி யோசித்து பார்க்க வேண்டும்.
முகமூடி இதற்கு பதில் கூறவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அவர் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். தயவு செய்து இதனை யாரும் தவறாக அல்லது தனிப்பட்ட விமர்சனம் ஆகவோ எடுத்து கொள்ள கூடாது.
தேர்தல் கருத்து கணிப்புகள்.
2.எல்லா கட்சிகளுக்கும் எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் அதற்கு மட்டுமே ஒட்டு போடும் மக்கள் இருக்கிறார்கள். எனவே கூட்டணியின் பலம் அ.தி.மு.கவை விட பலமாகவே உள்ளது.
இதனால் தான் குமுதத்தின் கணிப்பினை அப்படியே எடுத்து கொள்வதில் சிரமம் உள்ளது. அ.தி.மு.க 43 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்த கருத்து கணிப்பு சொல்கிறது. இது வரை குமுதம் 60 இடங்களில் சர்வே நடத்தி உள்ளது.
கருத்து கணிப்புகளை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். எப்போது தெளிவான, வெளிப்படையான ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை வீசியுள்ளதோ , அப்போதெல்லாம், கருத்து கணிப்புகள் சரியாக அமைந்துள்ளன. உதாரணம் 1996 சட்டமன்ற தேர்தல், 2004 பாராளுமன்ற தேர்தல்(தமிழகத்தை பொறுத்தவரை). ஆனால் தெளிவாக சொல்கின்ற மாதிரி அலை எதுவும் வீசாத தேர்தலில் கருத்து கணிப்புகள் தவறாக சென்றுள்ளன. உதாரணம் 2001 சட்டமன்ற தேர்தல்,2004 நாடாளுமன்ற தேர்தல்(அகில இந்திய அளவில்) தவறாகவே அமைந்தன.
தெளிவான அலை வீசாத தேர்தலில் சர்வேயின் சாம்பிள்கள் ஒட்டு மொத்த மாநிலத்தை அல்லது மாநிலங்களை பிரதிபளிப்பதில்லை. ஆனால் அலை ஒரு பக்கம் வீசும் போது சாம்பிள்கள் ட்ரெண்டை தெளிவாக காட்டுகின்றன. எனவே சாம்பிள்களின் அளவினை மிக அதிக அளவில் உயர்த்தினால் மட்டுமே துல்லியம் அதிகரிக்கும். என்னை பொறுத்தவரையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த பட்ட சர்வே சைஸை விட இந்த முறை சர்வே சைஸ் மிக கிக அதிகமாக இருக்க வேண்டும். 117 தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் 5000 பேரை நேர்காணல் செய்வதன் மூலமே முடிவுகளை கணிக்க இயலும்.
இது தான் கருத்து கணிப்புகளை பற்றி எனது கணிப்பு.
இது ஒரு புறம் இருக்க இந்த முறை பலரும் ஆச்சரியபடும் வகையில் ஜெயலலிதா பட்டியலில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது.இந்த மாதிரி தலைமையின் முடிவை எதிர்க்கும் தைரியம் எங்கிருந்து வந்தது அ.தி.மு.க வினருக்கு? தலைமை என்ன செய்தாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பது தவறோ? ஜெயலலிதாவிற்கும் விதிவிலக்குகள் உண்டோ?
பிரசார ரீதியாக அ.தி.மு.க மிகவும் ஆரோக்கியமாக செயல்படுவதாக தோன்றுகிறது. தி.மு.க வின் பெயரை கெடுக்க சன் டிவியும், தயாநிதியும் போதும். இரண்டையும் கட்டி வைப்பது தி.மு.க விற்கு நல்லது. இவர்கள் தி.மு.க விற்கு ஒட்டை குறைக்கிறார்கள்.
நான் எதிர்பாராதது கட்டுபாட்டிற்கு பெயர் போன ம.தி.மு.க மேடையில் வைகோ கேள்வி கேட்க பட்டது? 40 கோடி வாங்கி விட்டீர்களாமே என்ற அந்த சத்தமான கேள்விக்கு வைகோ சாமர்த்தியாமாக பதில் கூறினாலும் நெருடலாகவே இருந்தது. ஆனால் அ.தி.மு.கவை ஆதரித்தால் அம்மா கஜானாவை கொட்டுவார் என்பதும் தி.மு.க வோடு இணைந்தால் பைசா தேறாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தானே.
இது ஒரு சோதனை பதிவு.
இது ஒரு சோதனை பதிவு. ப்லொக்கர் மூலமாக இல்லாமல் நேரடியாக
பதிய உதவ கூடிய ஒப்பன் சோர்ஸ் டூல் ஒன்றை பயன்படுத்தினேன். அனுபவத்தினை பின்னர்
வெளியிடுகிறேன்.
Wednesday, April 12, 2006
ஆச்சரியமான அறிவிப்புகள்
1.பாகிஸ்தான் வீரரான அஃப்ரிதி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ப்ரேக் எடுக்க போவதாக அறிவித்துள்ளார்.
2. சந்தர்பால் மேற்கிந்திய அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கும் மேற்கிந்திய அணி இப்போது மீண்டும் ஒரு சோதனையை சந்திக்கின்றது.(கங்கூலி அப்ளை பண்ணலாமே)
Test From MS-Word
முதன்முறையாக வேர்டு டாகுமெண்ட் மூலமாக பதிவு செய்கிறேன். டேபிள் மற்றும் இமேஜ் போன்றவை தற்போது சப்போர்ட் பண்ணபடுவதில்லை. இருப்பினும் ஒரு முறை சோதனை செய்து பார்க்கலாம் என்று முயற்சித்தேன். அனுபவம் அந்த அளவுக்கு பிரமாதமாக இல்லை. எனவே நான் உங்களுக்கு சிபாரிசு பண்ண போவதில்லை. ஆனால் மேற்கொண்டு ஏதெனும் மாற்றங்கள் வந்தால் தெரிவிக்கிறேன்.
http://buzz.blogger.com/bloggerforword.html
Tuesday, April 11, 2006
ஸ்லிக்ரன் - சிம்ரன்.
நீங்கள் அதிகம் பயன்படுத்த வேண்டிய ஒன்று..
நான் அதிகமாக பயன்படுத்திகிற டூல் ஸ்லிக்ரன். என்னுடைய கம்ப்யூட்டரில் நான் எந்த ஃபோல்டரை திறக்க, எந்த அப்ளிகேஷனையும் லாஞ்ச் பண்ண நான் உபயோகபடுத்துவது ஸ்லிக்ரன். பொதுவாக எல்லாரும் ஸ்டார்ட்-ரன் பயன்படுத்துவீர்கள். இந்த டூல் அதை போன்று பல மடங்கு அட்வான்ஸ்டு ஆனது. காலையில் அலுவலகம் சென்றவுடன், ஸ்லிக்ரன்னில் பிராஜக்ட் என்று டைப் செய்தால் அது உடனடியாக என்னுடைய அவுட்லுக் எக்ஸ்பிரஸ், டோட்(ஆரகிள் டூல்) மற்றும் விபின் அனைத்தையும் லாஞ்ச் செய்யும். உங்களுக்கு தேவை படுகிற அப்ளிகேஷன்களை நீங்கள் இந்த டூலுக்கு காட்டி விடுங்கள். அதன் பின்னர் பாருங்கள் எவ்வளவு உபயோகமாக இருக்கின்றது என்பதை. இதை வைத்து இணையதளங்களையும் லான்ச் செய்ய முடியும். நான் தமிழ் என்று ஸ்லிக்ரன்னில் அடித்தால் , அது உடனடியாக ப்லொக்கர், சுரதா எடிட்டர் என்னுடைய பதிவு அனைத்தையும் ஒப்பன் பண்ணி விடும்.
இது கிடைக்கும் இடம்
http://www.bayden.com/SlickRun/
இதற்கும் சிம்ரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
போலி டோண்டுவை பற்றிய குமுதம் ரிப்போர்ட்டரின் கட்டுரை.
போலி டோண்டு திறமைசாலி என்பது போல கட்டுரை அமைந்திருந்தது. உண்மையில் முகமூடி முன்பு காட்டியது போல ஒரு நபரினை செராக்ஸ் எடுப்பது மிக எளிமையான ஒன்று. இது ஏன் பெரிதாக பாரட்டபட்டது என்று தெரியவில்லை.
நாராயணன் தான் கூறியது தெளிவாக வரவில்லை என்று புலம்பி தள்ளி, தங்கள் கம்ப்ளேயிண்ட் சரியான முறையில் விசாரிக்க படவில்லை என்பது பற்றி குறை கூறியுள்ளார், இவர் முதலில் தெளிவாக கூறினாரா?.இந்த கேள்வியினை நாராயணனும் அல்லது மற்ற பதிவர்களும் தவறாக புரிந்து கொள்ள கூடாது.பத்திரிக்கையாளர்களுக்கும் இத்தகைய டெக்னிகல் சமாசரங்கள் தெளிவாக தெரிந்தவர்களாகவோ அல்லது நாம் கூறியவுடன் சரியான முறையில் புரிந்து கொள்ள கூடிய நேர்த்தி உடையவர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயாம் இல்லை. எனவே இந்த மாதிரியான பிரச்சினைகளை கட்டுரையில் பிரசுரிக்க கோரி பத்திரிக்கைகாரர்களை அணுகும் போது அது தெளிவாக வெளி இட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வது நம்முடைய கடமை.
நாராயணன் தன்னுடைய கருத்துக்களை வெளியிட மீடியா தயங்குகிறது என்கிற வண்ணன் கருத்து கூறி இருப்பது ஏற்கும் படியாக இல்லை. அண்மையில் கூட கலாட்டாவிற்கு பெயர் போன பா.ம.க கட்சியின் மத்திய அமைச்சர் அன்பு மணி சுனாமிற்கு திரட்ட பட்ட செஞ்சிலுவை சங்க நிதி முறை கேடாக பயன்படுத்தினார் என்று ஒருவர் கூறிய குற்றசாட்டினை குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டது.எனவே பயத்தின் காரணமாக வெளியிடவில்லை என்று கூறுவது சரியான ஜட்ஜ்மெண்ட் ஆக இல்லை. உண்மையில் இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டியதற்கு ஒரு சின்ன நன்றி கூறியிருக்கலாம் -டோண்டு போல.
நான் எதிர்பார்த்தது போலவே போலி டோண்டுவும் குமுதம் ரிப்போர்ட்டரின் கட்டுரை,டோண்டுவின் கட்டுரை,மற்ற பல கட்டுரைகளையும் படித்து விட்டார்கள். வழக்கம் போல அதனை கிண்டல் செய்து பதிவும் இட்டு விட்டார்கள், ஆம் விட்டார்கள், விட்டார்"கள்".
Monday, April 10, 2006
விஜய் TVயும் இப்போது தெரிகின்றது.
ஏற்கனவே நான் சன் மற்றும் கே TV பார்த்து வந்தேன். இப்போது ஸ்ட்ரீம்பாக்ஸில் விஜய் TVயும் வர போகின்றது.
http://streambox.tv
இவர்கள் ஜெயா TVயும் வழங்குகிறார்கள். தேர்தல் நடக்க போகின்ற சமயத்தில் தமிழகத்திற்கு வெளியே இருக்கின்ற என்னை போன்றவர்களுக்கு இணையத்தில் கிடைக்கின்ற பத்திரிக்கைகளும் , தொலைகாட்சி சானல்கள் மட்டுமே பொழுது போக்கு.
விஜய் TVயில் முன்னர் செய்திகள் வந்து கொண்டிருந்தது. என்ன காரணத்தினாலோ அது நின்று விட்டது. அது வந்து கொண்டிருந்த போது சன் மற்றும் ஜெயாவிற்கு மாற்றாக விளங்கியது. தமிழகத்திற்கு தேவையாக இருந்த நடுநிலைமை சானலாக அது காட்சி அளித்தது. அது நின்று போனது துரதிர்ஷ்ட வசமே.
சீரியல்கள் மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணியிடம் இப்படி ஒரே மாதிரியான சீரியல்களை பார்க்க போரடிக்கவில்லையா என்று நான் கேட்ட போது அவர் நீங்கள் கிரிக்கெட் பார்ப்பது இல்லையா? அது உங்களுக்கு போரடிக்கவில்லையா? அதை எவ்வளவு நேரம் பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்றார். அது வரை அவரை நன்கு மடக்கியதாக நினைத்து கொண்டிருந்தேன்.(உண்மையில் இரண்டு சீரியல்களுக்கு இடையே 6 வித்தியாசம் கூறுவது அவ்வளவு கடினம்.) அவர் கேட்ட கேள்விக்கு என்னால் உடனடியாக பதில் கூற இயலவில்லை.
Sunday, April 09, 2006
வாய்ப்பு கிடைப்பதால் எழுதுகிறோமோ?
பதிவுகள் உண்மையில் எழுதி குமிக்க படுகின்றன. உடனடியாக மனதை குடைகிற கேள்வி. எழுதும் வாய்ப்பு நம்க்கு எளிதாக கிடைத்து விட்டதால் எழுதிகிறோமா? அல்லது உண்மையில் நம் அனைவருக்கும் எழுதுவதில் ஆர்வம் உள்ளதா?(தனிப்பட்ட முறையில் நான் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு முன்னதாகவே நடத்தி வந்தேன். வெப் வடிவம் அடைந்தது பின்னர் வந்த மாற்றமே.)
பதிவு எழுதுகிற வாய்ப்பு எளிதாக கிடைப்பதும் அதற்கு 100- 500 வரை வாசகர்கள் கிடைப்பதும் நமக்கு ஆர்வத்தை இன்னமும் தூண்டுகின்றன. ஆனால் இந்த எளிய காரணங்கள் மறைந்து விட்டால் நம்மில் எத்தனை பேர் தொடருவோம்?. உண்மையான , அளவு கடந்த ஆர்வம் இருந்தால் உண்மையில் தொடருவோம் . இல்லாவிட்டால் ஒரளவுக்கு ஆர்வம் உள்ளது. இணையம் அதற்கு தூண்டுகோலாக அமைகின்றது. அவ்வளவுதான்.
இதில் எத்தனை பேர் மிக உயர்ந்த குறிக்கோள்களோடு எழுதுகிறோம்? எனக்கு தனிப்பட்ட வகையில் வேலையில் பல குறிக்கோள்கள் உள்ளன. வாழ்க்கையில் குறிக்கோள்கள் உள்ளன. ஆனால் வலைபதிவினை ஒரு பொழுது போக்காக தான் கருதுகிறேன். ( மாற்றங்கள் செய்யவேண்டும் என்ற சில சின்ன எளிமையான குறிக்கோள்கள் மட்டுமே உண்டு.) ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே நல்ல எழுதுபவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உண்மையில் வலைபதிவினில் நிறைய பேர் நன்றாகவே எழுதுபவர்கள் உண்டு. அருமையான கற்பனை வளம் கொண்டவர்களையும் காண முடிகிறது.(உதாரணம்: பெனாத்தல் சுரேஷ்)
ஆர்வம் இருப்பவர்கள் நல்ல எழுத்தாளர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனால் பொழுது போக்காக எழுதுகிற வகையில் பெரும்பான்மையானவர்கள் இருக்கும் போது, இத்தனை தலைப்புகள், வித்தியாசமான கோணங்கள் வருவது ஆச்சரியமே. இவை அனைத்தையும் தாண்டி ஜாதி இங்கும் இருப்பது ஒரு பெரிய குறைபாடு.
Friday, April 07, 2006
வெறுப்பு உணர்வு எப்போது வருகிறது?
தாழ்வு மனப்பான்மையும், தைரியம் இல்லாமையும் தான் மிக பலர் திருப்தி இல்லாத, மோசமான வாழ்க்கையோடு வாழ்வதற்கு காரணம். வாழ்க்கையில் மோசமானது அவமானபட்டு எதை எண்ணி குமுறி ,முனகி ,வெறுப்புணர்வோடு வாழ்வது.
மனிதன் சுதந்திரமாக , ஆனந்த்தமாக வாழ படைக்க பட்டவன். உங்களை சுற்றி ஏதேனும் தயக்க, தாழ்வு மனப்பான்மை மிக்க வலை பின்னி இருந்தீர்கள் என்றால் அதனை உடனடியாக கலைந்து எறிந்து விடுங்கள். நீங்கள் எல்லையற்ற வலிமை கொண்டவர்கள். நீங்கள் விலை கொடுக்க தயாராக இருந்தால் எத்தகைய உயர்ந்த வாழ்வையும் வாழ முடியும்.
என்னுடைய வேலையிலும், தனிப்பட்ட வாழ்விலும் நான் கடைபிடிக்கின்ற ஒன்று யாரையும் சாராமல் செயல் படுவது என்பது. இதனை நீங்கள் தவறாக அர்த்தம் செய்ய கூடாது. எப்போதும் இவரை விட்டால் நமக்கு ஆளில்லை , இதை விட்டால் நமக்கு வருமானம் இல்லை என்ற சூழ்னிலையில் வாழ கூடாது.
உங்களை சுற்றியுள்ள் தடைகளை உடையுங்கள். ஒரு முறை முறைத்தாலே பாதி உடைந்து விடும். வாழ்ந்தால் சிங்கமாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த உணர்வோடு வாழுங்கள். அந்த எண்ணம் வாழ்ந்தாலே எல்லா வெறுப்பும் மறைந்துவிடும்.
வெறுப்பு உங்களுக்கு எப்போது வருகின்றது? உங்கள் தன்மானம், சுயகௌரவம் பாதிக்க படும் போது,அந்த நிலைமையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் உங்களுக்கு மிக தைரியம் தேவை. உங்கள் வெறுப்பு அதிகம் இருக்கிறது என்றால் , தாழ்வு மனப்பான்மையும், தைரியமின்மையும் நிறைய இருக்கின்றது என்று தான் அர்த்தம்.
முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை. இன்னமும் சொல்ல போனால் நிறைய விஷயங்கள் நீங்கள் நினைக்கின்ற அளவுக்கு கடினமும் இல்லை. எனவே உங்கள் மனதில் வெறுப்புணர்வு இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியவை இவை.
1. எப்போதும் உங்கள் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் விட்டு கொடுக்காதீர்கள்.2. எதையும் தைரியமாக நேர் கொள்ளுங்கள்.3. நடந்தது உங்கள் பலவீனத்தை உங்களுக்கு உணர்த்துவதற்காக வாழ்க்கை கொடுத்த பாடம் என்று நினைத்து மறந்து விடுங்கள்.
ஏனெனில் வெறுப்பு உங்கள் வாழ்க்கையில் எளிமையான, அமைதியை தூக்கத்தை கெடுத்து விடும். மன புழுக்கம் தான் உச்ச கட்ட கொடுமை. எனவே அதனை நீக்கி விடுங்கள். மற்றவர்கள் உங்களை இழிவு படுத்தினால் என்ன செய்வீர்கள் என்று என்னை நண்பர் கேட்டார். அதற்கு நான் சொன்ன பதில் இனிமேல் அவர்கள் மற்றவர்களை ஒரு போதும் மரியாதை இன்றி நடத்தாத அளவிற்கு வலிமையாக பதிலடி கொடுப்பேன் என்றேன். அத்தகைய வலிமை உங்களிடத்திலும் உள்ளது என்பதே உணர்த்தவே இந்த பதிவு..
Sunday, April 02, 2006
சிறப்பாக செயல்படுவது எப்படி?
2. தரம்,தரம், தரம், தரம். இது தான் வெற்றியின் தாரக மந்திரம். வேலை உயர்ந்த தரமாக அமையவேண்டும் என்பதில் ஆவலும் காதலும் கொள்ளுங்கள். தரத்தினை உயர்த்துவது பற்றி சிந்தியுங்கள்.
மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி செய்து கொண்டிருந்தால் அதே பயன்களே நம்மை வந்து அடையும். மேலும் தேவைபடும்போது புதிய யோசனைகள் அத்தியாவசம் ஆகின்றன.
என்ன பதிவு இரண்டு யோசனைகளோடு முடிந்து விட்டது என்று கருதாதீர்கள். இந்த இரண்டு யோசனைகளும் போதுமானவை.வாழ்க்கையில் எல்லா அம்சத்திற்கும் இதனை பயன்படுத்துங்கள். எல்லா விதத்திலும் வெற்றி காண்பீர்கள்.