Sunday, April 02, 2006

சிறப்பாக செயல்படுவது எப்படி?

1. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை (அல்லது வேறு ஒரு நாள்) ஒரு மணி நேரம் எப்படி இம்ப்ரூவ்மென்ட் செய்வது என்று சிந்தியுங்கள். அது உங்களுக்கு நிறைய ஐடியாக்களை கொடுக்கும். புதிய சிந்தனைகள் வருவதன் மூலமே, வேலை, மற்றும் உங்கள் திறன் மேம்படுகிறது. நிறுவனம் கருதி இல்லாவிட்டாலும் உங்கள் நலன் கருதி இதனை செய்யுங்கள். வேலை இலகுவாக இருப்பது உங்களுக்கு தானே நல்லது.
2. தரம்,தரம், தரம், தரம். இது தான் வெற்றியின் தாரக மந்திரம். வேலை உயர்ந்த தரமாக அமையவேண்டும் என்பதில் ஆவலும் காதலும் கொள்ளுங்கள். தரத்தினை உயர்த்துவது பற்றி சிந்தியுங்கள்.
மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி செய்து கொண்டிருந்தால் அதே பயன்களே நம்மை வந்து அடையும். மேலும் தேவைபடும்போது புதிய யோசனைகள் அத்தியாவசம் ஆகின்றன.
என்ன பதிவு இரண்டு யோசனைகளோடு முடிந்து விட்டது என்று கருதாதீர்கள். இந்த இரண்டு யோசனைகளும் போதுமானவை.வாழ்க்கையில் எல்லா அம்சத்திற்கும் இதனை பயன்படுத்துங்கள். எல்லா விதத்திலும் வெற்றி காண்பீர்கள்.

No comments: