Sunday, April 09, 2006

வாய்ப்பு கிடைப்பதால் எழுதுகிறோமோ?

அல்லது எழுதுவதில் உண்மையில் ஆர்வம் உள்ளதா?

பதிவுகள் உண்மையில் எழுதி குமிக்க படுகின்றன. உடனடியாக மனதை குடைகிற கேள்வி. எழுதும் வாய்ப்பு நம்க்கு எளிதாக கிடைத்து விட்டதால் எழுதிகிறோமா? அல்லது உண்மையில் நம் அனைவருக்கும் எழுதுவதில் ஆர்வம் உள்ளதா?(தனிப்பட்ட முறையில் நான் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு முன்னதாகவே நடத்தி வந்தேன். வெப் வடிவம் அடைந்தது பின்னர் வந்த மாற்றமே.)
பதிவு எழுதுகிற வாய்ப்பு எளிதாக கிடைப்பதும் அதற்கு 100- 500 வரை வாசகர்கள் கிடைப்பதும் நமக்கு ஆர்வத்தை இன்னமும் தூண்டுகின்றன. ஆனால் இந்த எளிய காரணங்கள் மறைந்து விட்டால் நம்மில் எத்தனை பேர் தொடருவோம்?. உண்மையான , அளவு கடந்த ஆர்வம் இருந்தால் உண்மையில் தொடருவோம் . இல்லாவிட்டால் ஒரளவுக்கு ஆர்வம் உள்ளது. இணையம் அதற்கு தூண்டுகோலாக அமைகின்றது. அவ்வளவுதான்.
இதில் எத்தனை பேர் மிக உயர்ந்த குறிக்கோள்களோடு எழுதுகிறோம்? எனக்கு தனிப்பட்ட வகையில் வேலையில் பல குறிக்கோள்கள் உள்ளன. வாழ்க்கையில் குறிக்கோள்கள் உள்ளன. ஆனால் வலைபதிவினை ஒரு பொழுது போக்காக தான் கருதுகிறேன். ( மாற்றங்கள் செய்யவேண்டும் என்ற சில சின்ன எளிமையான குறிக்கோள்கள் மட்டுமே உண்டு.) ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே நல்ல எழுதுபவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உண்மையில் வலைபதிவினில் நிறைய பேர் நன்றாகவே எழுதுபவர்கள் உண்டு. அருமையான கற்பனை வளம் கொண்டவர்களையும் காண முடிகிறது.(உதாரணம்: பெனாத்தல் சுரேஷ்)
ஆர்வம் இருப்பவர்கள் நல்ல எழுத்தாளர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனால் பொழுது போக்காக எழுதுகிற வகையில் பெரும்பான்மையானவர்கள் இருக்கும் போது, இத்தனை தலைப்புகள், வித்தியாசமான கோணங்கள் வருவது ஆச்சரியமே. இவை அனைத்தையும் தாண்டி ஜாதி இங்கும் இருப்பது ஒரு பெரிய குறைபாடு.

1 comment:

ஐயர் said...

எல்லோரும் நல்ல நல்ல பதிவாக எழுதுவதற்குத்தான் வருகின்றனர். ஆனால் இங்கு வந்தபின் 'எஞ்சாதிதான் பெர்சு, உன்ஜாதிதான் பெரிசு' என்ற சண்டையில் காணாமல் போகிறார்கள். தமிழ்மணத்தில் இருக்கும் பல பதிவர்களும் தத்ததமது ஜாதியை வளர்க்கவே விரும்புகின்றனர் அரசியல்வாதிகளைப் போலவே!