இவை உயர்ந்த நன்கு பெயர் பெற்ற கல்வி நிறுவனங்கள் என்றாலும் இட ஒதுக்கீடு என்பது நாடெங்கிலும் இருக்கின்ற நிலையில், இந்த நிறுவனங்களை மட்டுமே விவாதிக்க காரணம் என்ன?. மற்ற கல்வி நிறுவனங்கள் உண்மையில் இந்த நிறுவனங்களை காட்டிலும் கூடுதலான இந்தியர்களுக்கு கல்வி அறிவு கொடுக்கின்றன. தகுதி மட்டுமே அளவுகோலாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற அனைத்து பதிவர்களுக்கும் என்னிடைய கேள்வி, அந்த தகுதி ஒரு மனிதனுக்கு எப்போது வரும்? ஒரு மாணவன் அந்த தகுதியை எவ்வாறு அடைவான்? பீ அள்ள வருகிறார் சுஜாதா என்ற ஒரு காரசாராமான பதிவை முத்து குமரன் பதிவில் பார்த்தேன். பீ அள்ளி கொண்டிருப்பவர்கள் எந்த காலத்தில் அந்த தகுதியை பெறுவார்கள் இட ஒதுக்கீடு இல்லா விட்டால்?
மதிப்பெண்கள் பெற்றும் இடம் கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு இருந்தும் சீட் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள். எல்லா இடத்திலும் போட்டி கடுமையாக இருக்கவே செய்கிறது.
எல்லா இடத்திலும் இட ஒதுக்கீடு இருக்கும் போது இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டுமே குறிப்பாக விவாதிக்க படுவதன் காரணம் என்ன? எழுத விருப்பம் இல்லாமல் இதை எழுதுகிறேன்.: மற்றவர்கள் இட ஒதுக்கீடு காரணமாக இவ்வளவு உயர்ந்த நிறுவனங்களில் தங்களுக்கு சமமாக படிக்க வருவதை தாங்க முடியவில்லையா? காலம் காலமாக புறக்கணிக்க பட்டவர்கள் ஐ.ஐ.டிக்கு , ஐ.ஐ.முக்கு வருவது சாதனையே.
மீண்டும் மீண்டும் சலுகை பெற்றவர்களே பெறுகிறார்கள். மற்றவர்களுக்கு அது கிடைக்கவில்லை என்ற முனகல்களுக்கு என்னுடைய பதில்: அது நடைமுறையில் உள்ள கோளாறு. அவர்களுக்கும் சலுகை கிடைக்கும் வண்ணம் அது மாற்ற படவேண்டும். அதற்காக ஒட்டு மொத்த இட ஒதுக்கீட்டு அமைப்பை எதிர்ப்பது தவறு. என்னை போல நீங்களும் உங்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மேல் படிப்பை பற்றி அறிவுரை கூறுங்கள். நான் இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை சென்றுள்ளேன். அதை விட்டு விட்டு ஐ.ஐ.ம், ஐ.ஐ.டி பற்றி புலம்பாதீர்கள். ஆரம்ப கல்வி பற்றி கொஞ்சமாவது அக்கறை காட்டுவோம்.
பீ அள்ளும் மக்களை மனதில் வைத்து கொண்டு இட ஒதுக்கீடு பற்றி எழுதுங்கள்.
1 comment:
பொருளாதாரம் மற்றும் குடும்பத்தின் கல்வி முன்னேற்றம் என்ற அளவுகோலை உபயோகப்படுத்தலாம். இதனால் பீயள்ளுபவர் பயன் பெறுவது மட்டுமல்ல- கல்வி பொருளாதாரத்தில் மேல் தட்டில் இருந்தாலும் பீயள்ளுபவர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு சாதி அடிப்படையில் சலுகைகளுக்குக் கை நீட்டும் போலிகளை வடிகட்டவும் உதவும்.
Post a Comment