Tuesday, April 11, 2006

போலி டோண்டுவை பற்றிய குமுதம் ரிப்போர்ட்டரின் கட்டுரை.

முதலில் கட்டுரையை பதித்த இட்லிவடைக்கு, இதை பற்றி குறிப்பிட்ட டோண்டு அவர்களுக்கும் நன்றி. கட்டுரை ஏமாற்றமாக அமைந்திருந்தது. போலி டோண்டுவை பற்றி அறியாதவர்களுக்கு கட்டுரை தெளிவாக புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அடிப்படையான அம்சமான ஒரு நபரின் பேர், புகைப்படத்தினை எடுத்து மற்றொருவர் கருத்துகள் எழுதுகிறார் என்பது அழுத்தமாக வரவில்லை.

போலி டோண்டு திறமைசாலி என்பது போல கட்டுரை அமைந்திருந்தது. உண்மையில் முகமூடி முன்பு காட்டியது போல ஒரு நபரினை செராக்ஸ் எடுப்பது மிக எளிமையான ஒன்று. இது ஏன் பெரிதாக பாரட்டபட்டது என்று தெரியவில்லை.

நாராயணன் தான் கூறியது தெளிவாக வரவில்லை என்று புலம்பி தள்ளி, தங்கள் கம்ப்ளேயிண்ட் சரியான முறையில் விசாரிக்க படவில்லை என்பது பற்றி குறை கூறியுள்ளார், இவர் முதலில் தெளிவாக கூறினாரா?.இந்த கேள்வியினை நாராயணனும் அல்லது மற்ற பதிவர்களும் தவறாக புரிந்து கொள்ள கூடாது.பத்திரிக்கையாளர்களுக்கும் இத்தகைய டெக்னிகல் சமாசரங்கள் தெளிவாக தெரிந்தவர்களாகவோ அல்லது நாம் கூறியவுடன் சரியான முறையில் புரிந்து கொள்ள கூடிய நேர்த்தி உடையவர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயாம் இல்லை. எனவே இந்த மாதிரியான பிரச்சினைகளை கட்டுரையில் பிரசுரிக்க கோரி பத்திரிக்கைகாரர்களை அணுகும் போது அது தெளிவாக வெளி இட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வது நம்முடைய கடமை.

நாராயணன் தன்னுடைய கருத்துக்களை வெளியிட மீடியா தயங்குகிறது என்கிற வண்ணன் கருத்து கூறி இருப்பது ஏற்கும் படியாக இல்லை. அண்மையில் கூட கலாட்டாவிற்கு பெயர் போன பா.ம.க கட்சியின் மத்திய அமைச்சர் அன்பு மணி சுனாமிற்கு திரட்ட பட்ட செஞ்சிலுவை சங்க நிதி முறை கேடாக பயன்படுத்தினார் என்று ஒருவர் கூறிய குற்றசாட்டினை குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டது.எனவே பயத்தின் காரணமாக வெளியிடவில்லை என்று கூறுவது சரியான ஜட்ஜ்மெண்ட் ஆக இல்லை. உண்மையில் இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டியதற்கு ஒரு சின்ன நன்றி கூறியிருக்கலாம் -டோண்டு போல.

நான் எதிர்பார்த்தது போலவே போலி டோண்டுவும் குமுதம் ரிப்போர்ட்டரின் கட்டுரை,டோண்டுவின் கட்டுரை,மற்ற பல கட்டுரைகளையும் படித்து விட்டார்கள். வழக்கம் போல அதனை கிண்டல் செய்து பதிவும் இட்டு விட்டார்கள், ஆம் விட்டார்கள், விட்டார்"கள்".

12 comments:

G.Ragavan said...

இந்தப் போலி விஷயத்தில் everybody is beating around the bushes. ஒரு நடவடிக்கை எடுப்பது சரியென்று இருக்கும் நேரத்தில் அதை எடுக்காமல் தாமதிப்பதும் ஒருவகைத் தவறே என்பது எனது கருத்து.

PKS said...

A thought provoking post from a common man's point of view.

Thanks and regards, PK Sivakumar

ilavanji said...

பாலசந்தர்,

//கட்டுரை ஏமாற்றமாக அமைந்திருந்தது. போலி டோண்டுவை பற்றி அறியாதவர்களுக்கு கட்டுரை தெளிவாக புரிந்திருக்குமா என்பது சந்தேகமே // மிகச்சரி!

// பத்திரிக்கையாளர்களுக்கும் இத்தகைய டெக்னிகல் சமாசரங்கள் தெளிவாக தெரிந்தவர்களாகவோ அல்லது நாம் கூறியவுடன் சரியான முறையில் புரிந்து கொள்ள கூடிய நேர்த்தி உடையவர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயாம் இல்லை. // இதுவும் சரி!

நல்லதொரு பதிவு!

ilavanji said...

மேலும் ஒரு சிறிய விண்ணப்பம்!

எழுதும் பதிவுகளை பத்தி பிரித்து எழுதினால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும்!
("பதிவே ஒரே ஒரு பத்திதானே" ன்னு ஜோ இங்க வர்றதுக்குள்ள நான் ஜூட்டு! :) )

பாலசந்தர் கணேசன். said...

அறிவுரைக்கு நன்றி இளவஞ்சி அவர்களே,

ஜோவின் கருத்து கொஞ்சம் மாறி இருக்கும் என்றே நம்புகிறேன். என்னுடைய பதிவினைன் பற்றி முதன் முறையாக பாராட்டியும் பின்னூட்டம் இட்டுள்ளார் அவர்.

http://bunksparty.blogspot.com/2006/04/blog-post_07.html

முகமூடி said...

// பத்திரிக்கையாளர்களுக்கும் இத்தகைய டெக்னிகல் சமாசரங்கள் தெளிவாக தெரிந்தவர்களாகவோ அல்லது நாம் கூறியவுடன் சரியான முறையில் புரிந்து கொள்ள கூடிய நேர்த்தி உடையவர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயாம் இல்லை. // இது சரியே. மேலும் நிருபர்கள் மனநல மருத்துவரிடம் பேட்டி கண்டதை விட காவல்துறையிடம் பேட்டி கண்டு எழுதியிருக்கலாம். (போலி மனநலம் குன்றியவன் என்பதுதான் அனைவரும் அறிந்த ஒன்றே)

*

// ஒரு நடவடிக்கை எடுப்பது சரியென்று இருக்கும் நேரத்தில் அதை எடுக்காமல் தாமதிப்பதும் ஒருவகைத் தவறே என்பது எனது கருத்து // ராகவன், இது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, பல நாட்டு காவல்துறை எல்லைகளில் கீழ் வரும் விஷயம். ஆகவே தாமதம் தவிர்க்கப்பட முடியாதது.

பாலசந்தர் கணேசன். said...

ரொம்ப நாள் கழித்து இந்த பக்கம் வந்த முகமூடிக்கு நன்றி.

பாலசந்தர் கணேசன். said...
This comment has been removed by a blog administrator.
பாலசந்தர் கணேசன். said...

A censored comment:

இந்த ப்ரச்னை எதனால் ஏற்பட்டது என்று சொல்லுவார்களா? மதமா சோறு போடுகிறது? ஜாதியா சோறு போடுகிறது? முகமூடி என்ற பெயரில் எழுதும் இங்கே கருத்து கூறி இருப்பது நகைக்கத் தோன்றுகிறது.

Anonymous said...

பாலசந்தர் ஐயா, மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

'உருப்படாதது' நாராயணின் பதிவைவிட அதில்வந்துள்ள பெயரிலியின் பின்னூட்டம் அதிக கவனம் கொள்ளப்பட வேண்டியது.

%%%%
அதெல்லாம் சரி. இண்டர்வியூ எடுக்கவந்த ஆசாரபத்ரிகை குமுதம் ரிப்போட்டரே வாசிச்சு நொந்து நூடில்ஸாபோட்டாராமே? மெய்யாலுமா??
#உருப்படியா எழுதினது: -/பெயரிலி. : 10:38 PM
%%%%

இணையத்தில் பாதிக்கப்பட்ட ஆண்/பெண்களுக்கான இவரது நிலைப்பாடு, திமிர், அலட்சியம், கிண்டல், உள்ளூர ஊறும் மகிழ்ச்சி மிக நன்றாகவே தெரிகிறது. இவர்களால் இதற்கு இவ்வளவுதான் ரியாக்ட் செய்யமுடியும் என்பதும் செய்தியல்ல. முகத்தைப் பொதுவிலும் காண்பித்ததற்கு பெயரிலிக்கு நன்றி.

மனநோய்க் கூறு உள்ள போலி டோண்டூவைக் கூட மன்னிக்கலாம். இவர்களைப் போன்றவர்களின் மன அழுக்குகளைத்தான் மன்னிக்கவோ நிராகரிக்கவோ முடிவதில்லை. :(

//
வழக்கம் போல அதனை கிண்டல் செய்து பதிவும் இட்டு விட்டார்கள், ஆம் விட்டார்கள், விட்டார்"கள்".
//

மிகச் சரியாகப் பிடித்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவராவது இவர் பின்னால் ஒரு கூட்டம் இருப்பதைப் புரிந்துகொண்டதற்கு நன்றி.

ஜோ/Joe said...

பாலசந்தர்,
நன்றாக எழுதக்கூடியவர் ஓரிரு வரிகளில் எழுதிய போது அக்கரையில் சுட்டிக்காட்டினேன் .மற்றபடி நன்றாக எழுதும் போது பாராட்டுவதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை .இந்த பதுவும் பாராட்டுக்குரிய கோணத்தில் எழுதப்பட்டுள்ளது..வாழ்த்துக்கள்!

-/பெயரிலி. said...

%%%%
அதெல்லாம் சரி. இண்டர்வியூ எடுக்கவந்த ஆசாரபத்ரிகை குமுதம் ரிப்போட்டரே வாசிச்சு நொந்து நூடில்ஸாபோட்டாராமே? மெய்யாலுமா??
#உருப்படியா எழுதினது: -/பெயரிலி. : 10:38 PM
%%%%

இணையத்தில் பாதிக்கப்பட்ட ஆண்/பெண்களுக்கான இவரது நிலைப்பாடு, திமிர், அலட்சியம், கிண்டல், உள்ளூர ஊறும் மகிழ்ச்சி மிக நன்றாகவே தெரிகிறது. இவர்களால் இதற்கு இவ்வளவுதான் ரியாக்ட் செய்யமுடியும் என்பதும் செய்தியல்ல. முகத்தைப் பொதுவிலும் காண்பித்ததற்கு பெயரிலிக்கு நன்றி.
-------

அநாமதேயப்பின்னூட்டம் சுவையானதுதான். விடாது கறுப்பு பதிவிலும் இதே அர்த்தத்தோடு பின்னூட்டியிருந்தேன் என்பதை அநாமதேயம் மறந்துவிட்டதாலே இந்தப்பதிவிலே சுட்ட வந்திருக்கிறேன்.

டோண்டுக்கு வாழ்த்து சொன்னதற்கு "நீ என்ன பார்ப்பனர்களின் ***தாங்கியா?" என்று போலிடோண்டு -/பெயரிலி.க்கும் 'அன்பாகக்' கேள்வி அனுப்பியிருந்தார்.

இதிலே போலி டோண்டுவின் ஆசாரம் அநாசாரம் மேலெ மகிழ்வதும் வருந்துவதுமானதல்ல -/பெயரிலி.யின் கருத்து. டோண்டு நரசிம்மன் ராகவன் "குமுதம் ரிப்போட்டர் நிருபரே வாசித்து நொந்துபோய்விட்டார்" என்று தன் பதிவிலே எழுதியிருக்கின்றார். அவ்வரிகளே முரண்நகையாகவிருந்தன. 'ஒரு நடிகையின் கதை', 'ப்ராவுக்கு கொழுக்கி போடுவது', 'பால(ச்)சந்தர்-குஷ்பு திருமணம்' போன்ற பண்பான அலைவரிசைக்கதைகளினையும் செய்திகளையும் வெளியிடும் ஒரு ஆசார_சஞ்சிகைக்குடும்பநிருபருக்குப் போலிடோண்டு எழுதியது குறித்து நெஞ்சுநோ ஏற்படுகின்றதென்றால் அந்த பகிடியை யாரிடம் சொல்லிச் சிரிப்பது. நாராயணனின் பதிவும் அதேபோன்ற ஒரு முரண்நகையையும் கருத்துவளைப்புவனைப்பினையும் சுட்டியதாலேயே -/பெயரிலி.யின் பின்னூட்டமிருந்தது. இஃதின்றி மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, புகழ்ச்சி, இகழ்ச்சி, சீ, சூ எந்த கச்சடாசரக்கும் கலந்து காயாஷம் செய்து -/பெயரிலி.யும் பருகி மற்றோருக்கும் கொடுக்கும் தேவையில்லை.

வரவர பதிவு எழுதச் சங்கதியில்லாவிட்டால், தேர்தல், தெய்வம், போலிடோண்டு ஆகியமுச்சங்கதிகளிலே ஒன்றை எடுத்துவைத்துக்கொண்டு உள்ளே சரக்கேதுமின்றி நாலு பந்தி திட்டுவதும் புலம்புவதும் பாதிவலைப்பதிவிகளின் பாரியதொழிலாகிப்போனதும் தனிப்பட எரிச்சலூட்டுவதும் இன்னொரு காரணமென்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

-/பெயரிலி.க்கு முன்னாளிலே போலிடோண்டு பார்ப்பனர்கள் என்று பார்த்துப்பார்த்துத் தாக்கமுன்னாலே, இதே அலைவரிசையிலே பின்னூட்டம் பதிவுகளிலே இட்டவர்களைக் குறித்தும் அநாமதேயம் விமர்சித்திருக்கலாம் ;-)

இவ்வளவினையும் "இணையத்தில் பாதிக்கப்பட்ட ஆண்/பெண்களுக்கான இவரது நிலைப்பாடு, திமிர், அலட்சியம், கிண்டல், உள்ளூர ஊறும் மகிழ்ச்சி மிக நன்றாகவே தெரிகிறது" என்றே அநாமதேயம் சுருக்கமுடியுமானால், அப்படியே ஆகட்டும்; so be it; தாதாஸ்து.