Tuesday, April 25, 2006

இலவச கொத்தனார்.

நேற்று செய்த பதிவிற்கு இன்னமும் பொருத்தமான தலைப்போடு மீண்டும் பதிவு செய்துள்ளேன்.

வீட்டுக்கு வீடு டி.வி.டி ப்ளேயர் வழங்க படும் என்று தி.மு.க அறிவித்தது. இதனை யடுத்து அ.தி.மு.க என்ன செய்வதன்று யோசித்து கொண்டுள்ளது. அந்த கட்சி, தியேட்டர்களை நாட்டுடமையாக்கி, எல்லா ஷோவும் இலவசம் என்று அறிவித்து விடும் என்று தெரிகிறது. இதனிடையே விஜயகாந்த் டி.வி.டி ப்ளேயர் கொடுத்தால் மட்டும் போதுமா? மக்கள் எப்படி படம் பார்ப்பார்கள் ட்.வி.டி இல்லாவிட்டால் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இலசமாக பொருட்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டிய அவர் ஆட்சிக்கு வந்தால் பசுவும் கன்று குட்டியும் வழங்கபடும் என்று உறுதியளித்தார்.பால்காரர் இல்லாமல் மக்கள் பால் எப்படி கறப்பார்கள்?. அனுபவம் இல்லாத விஜயகாந்த் ஏதெதோ உளறுகிறார் என்று பா.ம.க. அறிக்கை விட்டுள்ளது.

இலவச திட்டங்களி பற்றி நிதி அமைச்சரிடம் கேட்ட போது,பணக்காரர்கள் 100 சானல்கள் பார்க்கிறார்கள், ஏழைகள் ஒரு சானல் கூட பார்ப்பதில்லை. பணக்காரர்களிடம் இருந்து 10 சானல்கள் கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுத்தால் ஏழைகள் 100 சானல்கள் பார்க்காவிட்டாலும் 10 சானல்களாவது பார்ப்பார்கள் என்று விபரமாக எடுத்து கூறினார்.

தி.மு.க வில் சீட் கிடைக்காத நடிக, நடிகர்கள் அனைவரும் அ.தி.மு.க வில் சேர்ந்தனர். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு ஒட்டு இருப்பதால் அ.தி.மு.க அவர்களை முழு மனதோடு ஏற்று கொண்டது.இதனையடுத்து திண்டிவனம் ராமமூர்த்தியும் ஏதேனும் சினிமாவில் நடித்து விட்டு அடுத்த எலெக்ஷனில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று திட்டம் போட்டுள்ளார். இதனிடையே தலைவரும் , வேட்பாளர்களும் அடிக்கடி காணாமல் போவதால் என்ன செய்வதன்று தெரியாமல் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் முழித்து கொண்டுள்ள்னர். இதற்கு மேலும் யாரும் காணாமல் போய் விட கூடாது என்பதற்காக அவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்வதை விட்டு விட்டு கல்யாண மண்டபத்திற்கு சென்று உள்தாள்பாள் போட்டு கொண்டு விட்டனர். உள்ளே இருந்து நாங்கள் சிங்கங்கள் , எங்களை சீண்டாதீர்கள் என்று கோஷம் கேட்கின்றது.


விஜயகாந்த் என்ற பெயரில் உள்ள வேட்பாளர்கள். அனைவரும் நான் தான் விஜயகாந்த் , எனக்கு ஒட்டு போடாதீர்கள் என்று பிரசாரம் செய்வதால் , நான் தான் விஜயகாந்த் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று பிரசாரம் செய்து வரும் விஜயகாந்த் என்ன செய்வதென்று குழம்பியுள்ளார். இந்த் வில்லத்தனத்தினை எப்படி சமாளிப்பது என்று இது வரை தனக்கு கதை எழுதியுள்ளவர்களிடம் கேட்டுள்ளார்.

இன்னமும் பல கூத்துக்களுக்கு காத்திருப்பீர்.