விஜய் TVயும் இப்போது தெரிகின்றது.
ஏற்கனவே நான் சன் மற்றும் கே TV பார்த்து வந்தேன். இப்போது ஸ்ட்ரீம்பாக்ஸில் விஜய் TVயும் வர போகின்றது.
http://streambox.tv
இவர்கள் ஜெயா TVயும் வழங்குகிறார்கள். தேர்தல் நடக்க போகின்ற சமயத்தில் தமிழகத்திற்கு வெளியே இருக்கின்ற என்னை போன்றவர்களுக்கு இணையத்தில் கிடைக்கின்ற பத்திரிக்கைகளும் , தொலைகாட்சி சானல்கள் மட்டுமே பொழுது போக்கு.
விஜய் TVயில் முன்னர் செய்திகள் வந்து கொண்டிருந்தது. என்ன காரணத்தினாலோ அது நின்று விட்டது. அது வந்து கொண்டிருந்த போது சன் மற்றும் ஜெயாவிற்கு மாற்றாக விளங்கியது. தமிழகத்திற்கு தேவையாக இருந்த நடுநிலைமை சானலாக அது காட்சி அளித்தது. அது நின்று போனது துரதிர்ஷ்ட வசமே.
சீரியல்கள் மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணியிடம் இப்படி ஒரே மாதிரியான சீரியல்களை பார்க்க போரடிக்கவில்லையா என்று நான் கேட்ட போது அவர் நீங்கள் கிரிக்கெட் பார்ப்பது இல்லையா? அது உங்களுக்கு போரடிக்கவில்லையா? அதை எவ்வளவு நேரம் பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்றார். அது வரை அவரை நன்கு மடக்கியதாக நினைத்து கொண்டிருந்தேன்.(உண்மையில் இரண்டு சீரியல்களுக்கு இடையே 6 வித்தியாசம் கூறுவது அவ்வளவு கடினம்.) அவர் கேட்ட கேள்விக்கு என்னால் உடனடியாக பதில் கூற இயலவில்லை.
No comments:
Post a Comment