Thursday, April 13, 2006

தேர்தல் கருத்து கணிப்புகள்.

1.முன்பை காட்டிலும் ஜெயலலிதாவிற்கு ஆதரவு கூடியுள்ளது கண்கூடாக தெரிகிறது.

2.எல்லா கட்சிகளுக்கும் எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் அதற்கு மட்டுமே ஒட்டு போடும் மக்கள் இருக்கிறார்கள். எனவே கூட்டணியின் பலம் அ.தி.மு.கவை விட பலமாகவே உள்ளது.


இதனால் தான் குமுதத்தின் கணிப்பினை அப்படியே எடுத்து கொள்வதில் சிரமம் உள்ளது. அ.தி.மு.க 43 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்த கருத்து கணிப்பு சொல்கிறது. இது வரை குமுதம் 60 இடங்களில் சர்வே நடத்தி உள்ளது.



கருத்து கணிப்புகளை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். எப்போது தெளிவான, வெளிப்படையான ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை வீசியுள்ளதோ , அப்போதெல்லாம், கருத்து கணிப்புகள் சரியாக அமைந்துள்ளன. உதாரணம் 1996 சட்டமன்ற தேர்தல், 2004 பாராளுமன்ற தேர்தல்(தமிழகத்தை பொறுத்தவரை). ஆனால் தெளிவாக சொல்கின்ற மாதிரி அலை எதுவும் வீசாத தேர்தலில் கருத்து கணிப்புகள் தவறாக சென்றுள்ளன. உதாரணம் 2001 சட்டமன்ற தேர்தல்,2004 நாடாளுமன்ற தேர்தல்(அகில இந்திய அளவில்) தவறாகவே அமைந்தன.



தெளிவான அலை வீசாத தேர்தலில் சர்வேயின் சாம்பிள்கள் ஒட்டு மொத்த மாநிலத்தை அல்லது மாநிலங்களை பிரதிபளிப்பதில்லை. ஆனால் அலை ஒரு பக்கம் வீசும் போது சாம்பிள்கள் ட்ரெண்டை தெளிவாக காட்டுகின்றன. எனவே சாம்பிள்களின் அளவினை மிக அதிக அளவில் உயர்த்தினால் மட்டுமே துல்லியம் அதிகரிக்கும். என்னை பொறுத்தவரையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த பட்ட சர்வே சைஸை விட இந்த முறை சர்வே சைஸ் மிக கிக அதிகமாக இருக்க வேண்டும். 117 தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் 5000 பேரை நேர்காணல் செய்வதன் மூலமே முடிவுகளை கணிக்க இயலும்.



இது தான் கருத்து கணிப்புகளை பற்றி எனது கணிப்பு.


இது ஒரு புறம் இருக்க இந்த முறை பலரும் ஆச்சரியபடும் வகையில் ஜெயலலிதா பட்டியலில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது.இந்த மாதிரி தலைமையின் முடிவை எதிர்க்கும் தைரியம் எங்கிருந்து வந்தது அ.தி.மு.க வினருக்கு? தலைமை என்ன செய்தாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பது தவறோ? ஜெயலலிதாவிற்கும் விதிவிலக்குகள் உண்டோ?



பிரசார ரீதியாக அ.தி.மு.க மிகவும் ஆரோக்கியமாக செயல்படுவதாக தோன்றுகிறது. தி.மு.க வின் பெயரை கெடுக்க சன் டிவியும், தயாநிதியும் போதும். இரண்டையும் கட்டி வைப்பது தி.மு.க விற்கு நல்லது. இவர்கள் தி.மு.க விற்கு ஒட்டை குறைக்கிறார்கள்.



நான் எதிர்பாராதது கட்டுபாட்டிற்கு பெயர் போன ம.தி.மு.க மேடையில் வைகோ கேள்வி கேட்க பட்டது? 40 கோடி வாங்கி விட்டீர்களாமே என்ற அந்த சத்தமான கேள்விக்கு வைகோ சாமர்த்தியாமாக பதில் கூறினாலும் நெருடலாகவே இருந்தது. ஆனால் அ.தி.மு.கவை ஆதரித்தால் அம்மா கஜானாவை கொட்டுவார் என்பதும் தி.மு.க வோடு இணைந்தால் பைசா தேறாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தானே.

2 comments:

Anonymous said...

i dont have any opinion about kumudam election predictions. but after seeing this weeks edition, it seems they are completely biased.

for example, they've told admk is going to win in madurai(central). to the best of my knowledge, admk is going to get the 3rd place. dmks vote bank, sourashtra vote bank, marxist vote bank...so many pluses for dmk.

லக்கிலுக் said...

i think mugamoodi is better than you. you are more biased than mugamoodi.