49-ஒ வினை பயன்படுத்துவது தேர்தல் அடிப்படை நோக்கத்திற்கு நேர்மாறாக உள்ளது. தேர்தல் என்பது ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய. அனைவரையும் நிராகரிக்க அல்ல. அனைவரையும் நிராகரிப்பதால் என்ன பயன் புதிதாக வந்து விட போகிறது.
கேட்பதற்கு மட்டும் நன்றாக இருக்கின்றது இந்த யோசனை. இதை பற்றி -ஞானி கூறியிருப்பதை பாருங்கள்.
ஜனநாயகத்தின் ஆரம்ப கோளாறு வாக்குரிமை பயன்படுத்த படாமல் இருப்பது. அனைவரும் வாக்களிக்க வந்தாலே கட்சிகள் நல்ல வேட்பாளர்களை நிறுத்த நேரிடும். ஒட்டு போட வருபவர்கள் 60 பேர். அதிலும் நடுநிலையானவர்கள் ஒட்டு போடாமல் ஒ போட்டால் 100 க்கு 20 ஒட்டு வாங்கியவர் வெற்றி பெறுவார். (தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட இது கம்மி.). ஒட்டு போட்டதற்கு சான்றிதழ் வழங்க வேண்டும். - அந்த சான்றிதழில் வாக்களாரின் ஜாதி, நேட்டிவிட்டி, லைசன்ஸ் போன்ற விபரங்கள் குறிப்பிட பட வேண்டும். ஒருவர் ஒட்டு போட்டால் மட்டுமே இந்த விபரங்களுக்கு அங்கிகாரம் அளிக்க பட வேண்டும்.மக்கள் தானாகவே ஒட்டு போட முன்வருவார்கள்.
அனைவரும் வந்து ஒட்டு போட்டாலே போதும். யாரும் ஒ போட வேண்டாம்.
3 comments:
Advantage of 49-O is clearly expalined here...
http://www.aaraamthinai.com/arasiyal/states/2006/apr21state.asp
this will force all parties to choose the better candidates to covert 49-Os to valueables Votes
கலைஞர் பாணியில் சொல்வதென்றால்,
"உங்கள் பதிவு.... அறிவிப்பு அல்ல: அலறல்!"
ஆம். அலறல் என்று நீங்கள் நினைத்தால் நினைத்து கொள்ளுங்கள். ஒட்டு போட மக்களை தூண்ட வேண்டும். இன்னமும் நிறைய பேர் ஒட்டு போட வேண்டும்.அதுவே மாற்றத்தை கொண்டு வரும்.
Post a Comment