Thursday, April 13, 2006

தி.மு.க வை சாடும் முகமூடியின் பதிவு.

http://mugamoodi.blogspot.com/
கலர் (டிவி) கனவுகள்




முகமூடி ஒரு சாராருக்கு எதிராக எழுதுகிறார் என்கிற ரீதியில் சில பின்னூட்டங்கள் அங்கே உள்ளன. கலர் டீவி கொடுப்பது என்பது உலக மகா கேணத்தனம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்ன காரணங்கள் கூறியும் இதனை நியாயபடுத்த முயல்வது தவறானதும் மட்டுமில்லை. மிக அபாயமான ஒன்றும் கூட.


http://mahendranmahesh.blogspot.com/2006/04/blog-post_05.html




மகேஷ் மிக எளிமையாக , ரசிக்கும் வண்ணம் இந்த திட்டத்தை குறை கூறி எழுதி உள்ளார்.




மகேஷின் பதிவினை படிக்கும் போது நமக்கு தோன்றுகிற கருத்து: மகேஷ் நடுநிலைமையாகவே இதனை விமர்சித்துள்ளார். ஆனால் அதே கருத்து நமக்கு முகமூடியின் பதிவை காணும் போது தோன்றவில்லை. இன்னமும் சொல்ல போனால் பல பதிவர்கள் உள்நோக்கத்தோடு தி.மு.க வை விமர்சிக்கின்றார்கள் என்றே தோன்றுகிறது.






இதே திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருந்தால் மகேஷ் அதனை கண்டிப்பாக விமர்சனம் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.ஆனால் முகமூடி அதனை விமர்சனம் செய்திருப்பாரா? இரசிக்கும் வண்ணம் எழுதுகிறவர்களில் ஒருவரானா முகமூடி நடுநிலைமையோடு தான் எழுதுகிறாரா?




ஜெயலலிதாவின் ஆட்சியின் முரட்டு தனங்களை மறக்க முடியுமா? யார் மீது வேண்டுமானாலும் கஞ்சா வழக்கு, அடி உதை வழக்கு இதெல்லாம் அதிகார துஷ்பிரயோகங்களின் உச்சகட்டம். அடிப்படையில் ஜெயலலிதாவின் குண நலன்கள் மாறவே இல்லை. தனக்கு தோன்றுவது எதுவாக இருந்தாலும் அதனை செய்வது என்கின்ற ஜெயலலிதாவின் குணம் அனைவருக்கும் தெரிந்த போது ஏன் அதை பற்றி முகமூடி எழுதுவது இல்லை.




பலர் கூறியது போல இது இரண்டு மோசமான சாய்ஸ்களில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பது என்கின்ற நிலைமையில் இந்த தேர்தல் உள்ளது. அப்போது நாம் நாட்டின் நலன் கருதி நடுநிலைமையோடு ஒன்றை தேர்வு செய்வது பற்றி ஆராயாமல் ஒன்றை மட்டுமே குறை கூறி கொண்டிருப்பது நல்லது தானா? இந்த இடத்தில் சாத்தியமே இல்லை( குறைந்த பட்சம் தேர்தலில் ஆவது) என்றாலும் விஜயகாந்தை ஆதரிக்கும் எஸ்கே மற்றும் ஒ போடு என்று பிரசாரம் செய்ய்ம் -ஞானி அவர்களை பற்றி முகமூடி யோசித்து பார்க்க வேண்டும்.



முகமூடி இதற்கு பதில் கூறவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அவர் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். தயவு செய்து இதனை யாரும் தவறாக அல்லது தனிப்பட்ட விமர்சனம் ஆகவோ எடுத்து கொள்ள கூடாது.

3 comments:

முகமூடி said...

பாலசந்தர் கணேசன், உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் அப்படி ஒரு தோற்றம் வருவது உண்மைதான். அதற்கு காரணம் கருணாநிதி அளவு ஜெயலலிதாவை நான் விமர்சனம் செய்வதில்லை என்ற எண்ணமே. இது குறித்த எனது எண்ணங்களை பலமுறை நான் அங்கங்கே பேசி வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் திமுக & அதிமுக குறித்த எனது நிலைப்பாடு புரிய வரும். இப்போதைக்கு "கலர் டீவி கொடுப்பது என்பது உலக மகா கேணத்தனம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்ன காரணங்கள் கூறியும் இதனை நியாயபடுத்த முயல்வது தவறானதும் மட்டுமில்லை. மிக அபாயமான ஒன்றும் கூட" என்பதை மட்டும் பார்ப்போம். தற்போதைய வேலைப்பளு குறைந்த பிறகு ஒரு 15 நாட்கள் கழித்து - தேவைப்படின் - உங்கள் பார்வை குறித்து விரிவாக பேசுவோம்... (இப்பதிவுக்கு என் சார்பில் ஒரு + ஓட்டு)

VSK said...

எனக்கென்னவோ, வழ, வழ , கொழ, கொழ என்று எழுதாமல், ஒரு நிச்சயமான நோக்குடனே முகமூடி எழுதியதாகத்தான் படுகிறது.
'ஜெ' யை மக்கள் நிச்சயம் மன்னிக்கப் போவதில்லை.
அவர் செய்த அநியாயங்களால் பதிக்கப்பட்ட மக்கள் அதை இன்னும் மறக்கவில்லை மறக்கவும் போவதில்லை என்பதுதான் நடக்கப் போகும் உண்மை.
அந்த நிலையில், தப்பித் தவறி, மீண்டும் மந்தை ஆடு கணக்காய், 'சூரியனுக்குக் குத்து' என்று மக்கள் கிளம்பிவிடக்கூடாதே என்ற அச்ச உணர்வின் காரணமாய்த்தான் அவர் அப்படி எழுதி வருகிறார் என நான் கருதுகிறேன்.
'கண்ணை மூடிக்கொண்டு' ஒரே ஒரு தடவை கேப்டனுக்கு ஓட்டுப் போடுங்கள்!
இந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்தும், அநியாய அரசியலிலிருந்தும் விடை பெற இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் வாய்க்காது என்றே,-- 'ஜெ' வேண்டாம் என்று, 'க' வை கொண்டு வர வேண்டாம்,-- என்பதுதான் அவர் கருத்தாய் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

இன்னும் 35% மக்கள் ஒரு கருத்தும் கொள்ளவில்லை என்பது, 'வீசப் போகும் விஜய்காந்த் அலை'யின் ஆரம்பம் எனக் கொள்ளுவோம்!

'சட்டச்சட, சட்டச்சட சடா!'

VSK said...

யானை தன் தலையில் தானெ மண்னை அள்ளிப் போடும் கதையாக, இன்று 'கக' பேஇயதைப் பாருங்கள்!

"வள்ளலார் பாதையில், அண்ணா தலைமையில் உருவானதே தி.மு.க."

சிரிக்க மாட்டார்களா மக்கள்!?

சிந்திக்கத் தெரியாத ஜடங்கள் என நினைத்தால் மட்டுமே இவ்வாறு பேச முடியும் ஒருவரால்!

அதே நேரம், கேப்டன் பேசுகிறார்::
" எப்படியாவது ஜெயித்துவிட மாட்டோமா என்று இரு கழகங்களும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார்கள்.
உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தனித்துப் போட்டியிடுங்கள் பார்ப்போம்.
ஒரு கட்சியோ குடும்ப அரசியல்!
இன்னொன்று நண்பர்[தோழி] அரசியல்!
மக்கள் அரசியல் நடத்த யார் இருக்கிறார்கள்?
வாய்ப்பு கொடுங்கள்!
சாதித்துக் காட்டுகிறேன்!"

வாய்ப்பு கொடுப்போம்!
சாதித்துக் காட்டுவோம்!