உங்களுக்கு ஒருத்தர் மேல் எப்போது வெறுப்பு வரும். அவர் செய்வதை அல்லாது சொல்வதை எதிர்த்து நீங்கள் எதுவும் செய்ய இயலாத போது. பெரும்பாலும் இந்த "இயலாமை" என்பது தாழ்வு மனப்பான்மையாலும் , தைரிய குறைவினாலும் தான் வருகின்றது. மனித மனம் ஒரு அற்புதமான கருவி. மன அளவில் உங்கள் வாழ்க்கையை பற்றி உங்களுக்கு என்ன கருத்து இருக்கிறதோ அதுவே உங்கள் வாழ்வாகவும் மாறுகின்றது. இதை புத்தர் சுருக்கமாக எண்ணமே செயல் என்று கூறினார்.
தாழ்வு மனப்பான்மையும், தைரியம் இல்லாமையும் தான் மிக பலர் திருப்தி இல்லாத, மோசமான வாழ்க்கையோடு வாழ்வதற்கு காரணம். வாழ்க்கையில் மோசமானது அவமானபட்டு எதை எண்ணி குமுறி ,முனகி ,வெறுப்புணர்வோடு வாழ்வது.
மனிதன் சுதந்திரமாக , ஆனந்த்தமாக வாழ படைக்க பட்டவன். உங்களை சுற்றி ஏதேனும் தயக்க, தாழ்வு மனப்பான்மை மிக்க வலை பின்னி இருந்தீர்கள் என்றால் அதனை உடனடியாக கலைந்து எறிந்து விடுங்கள். நீங்கள் எல்லையற்ற வலிமை கொண்டவர்கள். நீங்கள் விலை கொடுக்க தயாராக இருந்தால் எத்தகைய உயர்ந்த வாழ்வையும் வாழ முடியும்.
என்னுடைய வேலையிலும், தனிப்பட்ட வாழ்விலும் நான் கடைபிடிக்கின்ற ஒன்று யாரையும் சாராமல் செயல் படுவது என்பது. இதனை நீங்கள் தவறாக அர்த்தம் செய்ய கூடாது. எப்போதும் இவரை விட்டால் நமக்கு ஆளில்லை , இதை விட்டால் நமக்கு வருமானம் இல்லை என்ற சூழ்னிலையில் வாழ கூடாது.
உங்களை சுற்றியுள்ள் தடைகளை உடையுங்கள். ஒரு முறை முறைத்தாலே பாதி உடைந்து விடும். வாழ்ந்தால் சிங்கமாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த உணர்வோடு வாழுங்கள். அந்த எண்ணம் வாழ்ந்தாலே எல்லா வெறுப்பும் மறைந்துவிடும்.
வெறுப்பு உங்களுக்கு எப்போது வருகின்றது? உங்கள் தன்மானம், சுயகௌரவம் பாதிக்க படும் போது,அந்த நிலைமையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் உங்களுக்கு மிக தைரியம் தேவை. உங்கள் வெறுப்பு அதிகம் இருக்கிறது என்றால் , தாழ்வு மனப்பான்மையும், தைரியமின்மையும் நிறைய இருக்கின்றது என்று தான் அர்த்தம்.
முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை. இன்னமும் சொல்ல போனால் நிறைய விஷயங்கள் நீங்கள் நினைக்கின்ற அளவுக்கு கடினமும் இல்லை. எனவே உங்கள் மனதில் வெறுப்புணர்வு இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியவை இவை.
1. எப்போதும் உங்கள் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் விட்டு கொடுக்காதீர்கள்.2. எதையும் தைரியமாக நேர் கொள்ளுங்கள்.3. நடந்தது உங்கள் பலவீனத்தை உங்களுக்கு உணர்த்துவதற்காக வாழ்க்கை கொடுத்த பாடம் என்று நினைத்து மறந்து விடுங்கள்.
ஏனெனில் வெறுப்பு உங்கள் வாழ்க்கையில் எளிமையான, அமைதியை தூக்கத்தை கெடுத்து விடும். மன புழுக்கம் தான் உச்ச கட்ட கொடுமை. எனவே அதனை நீக்கி விடுங்கள். மற்றவர்கள் உங்களை இழிவு படுத்தினால் என்ன செய்வீர்கள் என்று என்னை நண்பர் கேட்டார். அதற்கு நான் சொன்ன பதில் இனிமேல் அவர்கள் மற்றவர்களை ஒரு போதும் மரியாதை இன்றி நடத்தாத அளவிற்கு வலிமையாக பதிலடி கொடுப்பேன் என்றேன். அத்தகைய வலிமை உங்களிடத்திலும் உள்ளது என்பதே உணர்த்தவே இந்த பதிவு..
10 comments:
பாலசந்தர்,
அருமையான பதிவு.
உங்களின் தன்னம்பிக்கை என்னை அசரவைக்கிறது. ஒரு வாத்தியார் பாடல் என் நினைவிற்கு வருகிறது. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணஙகாமல் நீ வாழலாம்
தொடரட்டும் இது போன்ற பதிவுகள்
அன்புடன்
கால்கரி சிவா
மிக நல்ல கருத்துக்கள். நீங்கள் கூறியவை 200% உண்மை. தன்னை நேசிக்காதவன் மற்றவரிடம் உண்மையான அன்பு செலுத்துவது மிக கடினம். பதிவுக்கு நன்றி.
Please concentrate on topics like this, instead Politics. Wonderful post. Keep going....
-Ram
அருமையான பதிவு
Balachandar,
very well written post.....keep writing
Radha
சீனியர் கால்கரி சிவா அவர்களே...
பாராட்டுகளுக்கு நன்றி.
ராம், சந்திரவதனா, ராதா ஸ்றீராம் அனைவருக்கும் நன்றி.
பாலசந்தர்,
வாழ்த்துக்கள் .இது போல கருத்தாழமுள்ள பதிவுகளை எழுதுங்கள்.
பாலசந்தர் கணேசன்,
மிக அருமை. நான் பேச நினைத்ததெல்லாம் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்!
அன்புடன்,
சரவணன்
கடற்புரத்தானிடம் பாராட்டு பெறுவது பெரிய விஷயம்தான் . நன்றி ஜோ அவர்களே.
Post a Comment