Friday, April 21, 2006

உரக்க சிரித்து பின்னூட்டம் இடுங்கள்- குழலியின் பதிவில்

http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_15.html

வழக்கம் போல குழலி வெட்டு ஒண்ணு , துண்டு ரெண்டு என்ற ஸ்டைலில் ஒரு பதிவை இட்டுள்ளார். அங்கு வந்த ஒர் பின்னூட்டம் , கவனத்தை ஈர்த்தது. அதை கீழே தந்துள்ளேன்.

IIT puts advts in major newspapers and Employment News.It is upto youto read them and apply.Almost all universities have bureaus or cells to help students in choosing career and higher education.If you are a B.Tech student and if you do not even read newspapers or visitwebsites of institutions like IITwhat can IITs do.These days the websites contain updated and latest information.Dont expect IITto contact you and tell that there is something called world wide web :).

ஆணவம் கலந்த நக்கல்களுக்கு மிக ஆணவம் கலந்த பதில் தான் சரியான பதில் என்கிற கட்சி நான். ஐ.ஐ.டி பற்றியும்,இணையம் பற்றியும் தெரிந்திருக்க கூடிய வாய்ப்பு இருந்ததினால் தான் நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அது போன்ற வாய்ப்பு இல்லாதவர்களையும் இந்த விஷயங்கள் சென்றடைய வேண்டும். இந்தியர்களை சகோதரர்களாக கருதுங்கள் முட்டாள்களே. இந்த பின்னூட்டத்திற்கு பதிலாக ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு நாள் வகுப்பு எடுத்து உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கற்று கொடுங்கள். உங்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது பயனுள்ள நாளாக இருக்கட்டும். செருப்பு தைக்கிறவர் குடும்பத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. என்னை சந்தித்த ஒரு நபருக்கு இ-மெயில் ஐடிக்கும் , இணையதள முகவரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. மற்றவர்கள் அவரை பார்த்து சிரித்த போது, நான் அவர்களை சத்தம் போட்டு விட்டு அவருக்கு விளக்கம் கொடுத்தேன். இதை தான் நான் இந்த பின்னூட்டம் இட்ட நபருக்கும் சிபாரிசு செய்கிறேன்.
எனது பள்ளி வாத்தியார் ஒருவர் , வீக்கான மாணவர்களை மிக கவனம் செலுத்தி நடத்துவார். மாணவர்கள் தவறாக பதில் சொல்லும் போது சிரித்த மாணவ மாணவிகளை வகுப்பு நடுவில் நிற்க வைத்து விட்டு, மற்றவர்களை அவர்களை பார்த்து உரக்க சிரிக்க சொல்வார். அதை தான் உங்கள் அனைவரையும் செய்ய சொல்வேன். உரக்க சிரித்து பின்னூட்டம் இடுங்கள் இந்த பின்னூட்டம் இட்ட நபரினை பார்த்து.
ஐ.ஐ.டி பற்றி தெரியாத இந்தியர்களுக்கு , ஐ.ஐ.டியை அறிமுக படுத்த வேண்டியது, ஐ.ஐ.டியின் கடமை.

7 comments:

குழலி / Kuzhali said...

இந்த முறை இடஒதுக்கீட்டு விவாதத்தில் வந்த பின்னூட்டங்கள் நாம் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவு என காண்பிக்கின்றது...

Anonymous said...

பாலசந்திரன்,

மண்ணையை பாக்காம வளர்ந்த பிள்ளைகளுக்கு நம்ம கஷ்டம் தெரியுமா?

இப்படித்தேன் பேத்துவானுங்க..கண்டுக்காதீங்க..

பதிவுக்கு நன்றி

Sivabalan said...

// ஐ.ஐ.டி பற்றி தெரியாத இந்தியர்களுக்கு , ஐ.ஐ.டியை அறிமுக படுத்த வேண்டியது, ஐ.ஐ.டியின் கடமை. //

Yes, I do agree on this. If it is INDIAN institute of technology, then it has high moral duty to send its agenda to its fellow countrymen who are unaware.

I know people will jump in and tell, " They know who the latest cinema star is".

I pledge to all "so called" well-educated people, please do not see the poor persons weakness. We know that "they are victimized by many people".

I request, please let us not do the same to weaker section people.

dondu(#11168674346665545885) said...

"Yes, I do agree on this. If it is INDIAN institute of technology, then it has high moral duty to send its agenda to its fellow countrymen who are unaware."

To whom and where are they? To each and every potential candidate? Talk practically, sir. IIT does have its own Website and it keeps it constantly updated. And advertisements do come in leading dailies. What more does one want?

A potential candidate, irrespective of his caste, is supposed to have finished plus 2 level education and given the cost of higher education, he will most probably belong to a familly that can afford his education. He will definitely not be an illiterate.

So what or who prevents him from getting information? Fact is, he gets it but only people like you play the ostrich.

If you still persist, I challenge you to give an alternative scenario, whereby more information can be made available.

Please carry out the first two tests (photo+correct blogger number on mouseover) to check that genuine Dondu has given this comment and then only publish it.

Regards,
Dondu N.Raghavan

பாலசந்தர் கணேசன். said...

அன்புக்குரிய டோண்டு சார் அவர்களே.

பாட திட்டத்தில் ஒரு பங்காக மேல் கல்வி பற்றி விரிவான செய்திகளை குறிப்பிடலாம். அதுவே போதுமே. வரலாறு என்ற பெயரில் முதலாம் பானிப்பட், இரண்டாம் பானிப்பட் போர் என்று பல வருடங்களுக்கு மாணவர்களை இம்சிப்பதை விட,அவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கிற மேல்கல்வி விபரங்களை குறிப்பிடலாம். உண்மையில் 9ஆம் வகுப்பு வரும் வரை சி.பி.எஸ்.ஐ பள்ளிகள் இருப்பதே தெரியாது. 11 ஆம் வகுப்பு வரை ஐ.ஐ.டி பற்றி தெரியாது.ஆனால் பானிப்பட் போராட்டம் பற்றி எனக்கு தகவல்கள் கொடுக்க பட்டன. நானும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். உண்மையில் நான் படித்த பல பாடங்கள் எனக்கு உபயோகமாகவே இல்லை. எனக்கு உபயோகபடுகிற விஷயங்கள் பாடதிட்டத்திலும் இல்லை. எனவே , பாட திட்டத்தில் மேல்படிப்பு விப்ரங்களை சேர்த்தாலே போதும். இது மட்டுமில்லை, இன்னமும் பலவழிகளை
முயன்றால் கண்டுபிடிக்கலாம். தேவை படுவது ஆர்வம் மட்டுமே.

Anonymous said...

You were lucky to be aware of an institute called IIT by 11th. I heared/knew about it engg 1st yr. for that matter iisc and iim too... nothing else to say.

வெண்பா said...

//A potential candidate, irrespective of his caste, is supposed to have finished plus 2 level education and given the cost of higher education, he will most probably belong to a familly that can afford his education. He will definitely not be an illiterate//

டோண்டு சார் சரியாகச் சொன்னீர்