நீங்கள் அதிகம் பயன்படுத்த வேண்டிய ஒன்று..
நான் அதிகமாக பயன்படுத்திகிற டூல் ஸ்லிக்ரன். என்னுடைய கம்ப்யூட்டரில் நான் எந்த ஃபோல்டரை திறக்க, எந்த அப்ளிகேஷனையும் லாஞ்ச் பண்ண நான் உபயோகபடுத்துவது ஸ்லிக்ரன். பொதுவாக எல்லாரும் ஸ்டார்ட்-ரன் பயன்படுத்துவீர்கள். இந்த டூல் அதை போன்று பல மடங்கு அட்வான்ஸ்டு ஆனது. காலையில் அலுவலகம் சென்றவுடன், ஸ்லிக்ரன்னில் பிராஜக்ட் என்று டைப் செய்தால் அது உடனடியாக என்னுடைய அவுட்லுக் எக்ஸ்பிரஸ், டோட்(ஆரகிள் டூல்) மற்றும் விபின் அனைத்தையும் லாஞ்ச் செய்யும். உங்களுக்கு தேவை படுகிற அப்ளிகேஷன்களை நீங்கள் இந்த டூலுக்கு காட்டி விடுங்கள். அதன் பின்னர் பாருங்கள் எவ்வளவு உபயோகமாக இருக்கின்றது என்பதை. இதை வைத்து இணையதளங்களையும் லான்ச் செய்ய முடியும். நான் தமிழ் என்று ஸ்லிக்ரன்னில் அடித்தால் , அது உடனடியாக ப்லொக்கர், சுரதா எடிட்டர் என்னுடைய பதிவு அனைத்தையும் ஒப்பன் பண்ணி விடும்.
இது கிடைக்கும் இடம்
http://www.bayden.com/SlickRun/
இதற்கும் சிம்ரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
3 comments:
//காலையில் அலுவலகம் சென்றவுடன், ஸ்லிக்ரன்னில் பிராஜக்ட் என்று டைப் செய்தால் அது உடனடியாக//
கூடவே சூடா ஒரு காப்பியும், ஒரு தமிழ்பதிவும் எழுதி தருமா ?
//சிம்ரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
In a lighter sense,
இது பல யூகங்களுக்கு வழி செய்யும் போல இருக்கே :-)
ரொம்ப லொல்லுய்யா உமக்கு!
Post a Comment