குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு , மன்னிப்பு கோரி, பாதிக்க பட்டவரிடம் பேசி,இழப்பீடு தந்து தனது தண்டனையை குறைக்கும் முறை அமலுக்கு வருகின்றது. இதற்கு பல விதிவிலக்குகள் இருந்தாலும் இந்த முறை எனக்கு சரியென்று படவில்லை.
இதனால் நீதிமன்றங்கள் தண்டனை கொடுத்த பிறகும் கூட, பாதிக்க பட்டவர்கள் மீது குற்றவாளிகள் மற்றும் சம்பந்த பட்டவர்கள் மீது பாய வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னர் மற்றும் சும்மா இருப்பார்களா?, வழக்கு நடக்கும் போது மட்டும் மிரட்டல் இருக்காதா என்று கேட்பவர்கள், தண்டனை கிடைத்த பின்னர் , இவர்கள் மிரட்டல் மிக வலிமையாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும் தண்டனையை குறைக்க இதுவே வழி என்று அவர்கள் கருதும் போது, இந்த மிரட்டல் மிக அதிகமாகலாம்.
இன்னமும் குறிப்பாக , இந்த முறையின் கீழ் ஒரு வழக்கு செட்டில் செய்ய பட்டால், மேல் முறையீடு கிடையாதாம். என்னய்யா நடக்குது நாட்டில? மேல் முறையீடு கிடையாது என்றால் குற்றம் செய்தவர்கள் இன்னமும் வலிமையாக முயல மாட்டார்களா?
1. என்ன தண்டனை என்று நிர்ணயம் செய்வது என்பது நீதிபதியின் , நீதிமன்றத்தின் தனி உரிமை. அதை குறைப்பது என்பது சட்டரீதியான விசாரணையின் படி தான் அமையவேண்டுமே தவிர, மற்றவர்களுக்கு அந்த பொறுப்பு தரபட கூடாது. நீதிபதிகள் ஏற்கனவே கட்ட பஞ்சாயத்து பற்றி கடும் கருத்துக்கள் தெரிவித்த நிலையில் , இந்த மாதிரியான நடைமுறைகள் கட்டபஞ்சாயத்து போன்றவற்றை ஊக்குவிப்பது போல அமைகின்றன.
2. தண்டனை குறைவு என்பது குற்றவாளி இனிமேல் தவறு செய்ய கூடாது என்ற எண்ணத்தினை அடைவதற்கு கிடைக்கும் பரிசு. வெறுமனே மன்னிப்பு கேட்டு விட்டு , காசு கொடுத்து விட்டு தப்பிக்கலாம் என்ற எண்ணம் வளர கூடாது. நன்னடத்தையில் பரிசே , தண்டனை குறைப்பு என்பது மாற கூடாது.
என்னுடைய கருத்துக்களை கூறியுள்ளேன். வலைபதிவுகளில் வக்கீல்கள் யாரேனும் இருந்தால் இது பற்றி கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். வலைபதிவுகளில் வக்கீல்கள், டாக்டர்கள் இன்னமும் பல துறை வல்லுனர்கள் இருந்தால் மிக நன்றாக இருக்கும். இவர்கள் தங்கள் துறை சார்ந்த்த அறிவை மற்றவர்களுக்கு வழங்கலாம். எனக்கும் கூட டெக்னாலாஜி சம்பந்த பட்ட பதிவுகள் எழுதலாம் என்ற எண்ணம் வந்துள்ளது. இது ஒரு மாறுதலாக மற்றுமன்றி, உபயோகமாக அமையும். ஆனால் எல்லா பதிவர்களுக்கும் பொதுவானதாக அமையாது.
1 comment:
இது கட்டப்பஞ்சாயத்தெ விட மோசமானதூன்னு எனக்கு படுது. இந்த முறையில் யார் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு பிறகு மன்னிப்பு என்னும் போர்வையில் மிரட்டி கூட பணியவைக்க முடியும்.
முக்கியமான கட்டுரை. நன்றி.
Post a Comment