இன்று காலையில் சொன்னது போல , சூடு தணிக்கவே இந்த பதிவு. தய்வு செய்து சீரியசாக எடுத்து கொள்ளாதீர்கள்.
தலைப்பு: பதிவிற்கு பின்னூட்டம் போடுவது கடினமா, அல்லது பின்னூட்டத்திற்கு பதிவு போடுவது கடினமா
நடுவர் திண்டுக்கல் லியோனி:
அந்த காலத்தில எங்களுக்கெல்லாம் புது புத்தகம் கூட கிடைக்காது. எங்க அப்பா அவரோட அண்ணன் புத்தகத்தை வைச்சி படிச்சாரு. நான் அவர் புத்தகத்த வைச்சு தான் படிச்சேன். பாருங்க எந்த அளவுக்கு கவர்மெண்ட் லேட்டஸ் சிலபஸ் வைச்சு சொல்லி கொடுக்க்குதுன்னு.. இதில பெரிய காமெடி என்னன்னா , நான், எங்கப்பா, என் பெரியப்பா எல்லாரும் ஒரே வாத்தியார்ட்ட தான் படிச்சோம். படிச்சோம்னா என்ன . ஸ்கூலுக்கு போவாம் காலையில, ஒரு சிலேட்டு, குச்சி, உள்ள எங்க பெரியப்பா எல்லாரும் யூஸ் பண்ண புத்தகம். போய் நின்னா, வாத்தியார் வருவாரு. வந்தவுன்னே இரண்டு பேரை போட்டு அடிப்பாரு. அதுக்கப்புறம் தான் அவர் அட்டெண்டன்ஸே எடுப்பாரு.
அதுக்கடுத்து டீச்சர் வரும். டீச்சர் வந்த உடனே அடுத்த கிளாஸ் டீச்சர்ரும் வந்துரும். இரண்டு பெரும் பேச ஆரம்பிச்சிரும். நடுல நடுல " டேய் யாரும் பேசகூடாது" என்று சவுண்டு. நொந்து நூலாயிடுவோம். இந்த லட்சணம் தான் படிப்பு. படிச்சு முடிச்சு வேலைக்கு வந்தா, நாங்கள்ளாம் எழுத முடியுமா, என்னத்த எழுத, எழுதி எங்க கொண்டு போய் காட்ட.
அது தான் அன்னைய நிலைமை. ஆனா இன்னைக்கு பாருங்க, பிள்ளைக்கு பர்த் சர்டிஃபிகேட் வாங்குறதுக்கு முன்னாடியே, டொமைன் நேம் வாங்கிற்றான். பதிவில்ல இன்னைக்கு போட ஒரு நியுஸ் வந்துருச்சு அப்படின்னு அவனுக முகத்துல அப்படி ஒரு குஷி.
என்னடா இப்படி குதிக்கிறானேன்னு பார்த்தா, இவர் பதிவு போட்டா, எப்படியும் ஒரு 30 பின்னூட்டம் வரும். அத 40 இல இருந்து 60 ஆக்கிறலாம். அதுல என் பிள்ளைக்கு நியூமரலாஜி பார்க்கமா தான் பேர் வைப்பேன் அப்படின்னு ஒரு வரி போட்டா அதுக்காக ஒரு இரண்டு எக்ஸ்ட்ராவா வரும் அப்படின்னு கணக்கு போடுறான். யோசிக்கிறான் பாருங்க அப்பாடி அப்படி ஒரு யோசனை. தீவிரவாததை தடுத்து நிறுத்த வழி கண்டு பிடிக்கிற மாறி ஒரு யோசனை.
அப்புறம் கண்டு பிடிக்கிறான் பாருங்க வழி.. தமிழில் தான் சினிமாவிற்கு பேர் வைக்க வேண்டும் என்கின்ற தலைவர்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வெளிநாட்டினர் பேர், சம்ஸ்கிருதத்தில் பேர் வைக்கிறார்கள். நான் அவர்களை போல அல்ல அப்படின்னு ஒரு லைன் சேத்திரணும்னு.
குஷின்னா குஷி. ஒரு நல்ல சூப்பர் ஹிட் சண்டை வந்துரும்டா இன்னைக்கு. எப்படியும் ஒரு பின்னூட்டம் வரும் நான் கிண்டலடிச்சதை பாராட்டி, அங்கிட்டு உண்மை தெரியாமல் உளராதீர்கள் என்று இன்னோனு வரும் எப்படியும் இன்னைக்கு விடிய விடிய பின்னூட்டம் வரும் அப்படின்னு ஒரு சந்தோஷம். பார்க்குறவங்க, பாருயா மனுஷனா பிள்ளை பொறந்தவுன்னே என்னா குஷியாகிட்டாரு. உடனே குழந்தைன்னா சாதாரணமா , என்னயா கொண்ட்டாட்டும்யா அப்படின்னு ஒருத்தர். அவர் மேட்டர் தெரியாம உளராறு. இவர் அவரை ஆமாதிக்கிறாரு. இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் யாரு எப்ப எங்க பின்னூட்டம் விடுவாங்க அப்படின்னு பாத்துக்கிட்டு ஒரு கோஷ்டி.இவங்க நேர போறது பின்னூட்டத்துக்கு தான். என்னடா பதிவையே பார்க்க மாட்டேங்குறன்னா, ... அவன் முறைப்பான் பாரு ஒரு முறைப்பு...என்னாத்துக்கு...
இவங்க யார் மாதிரி தெரியுமா, ஊர்ல இருப்பங்கா இரண்டு பேரு. எல்லா படத்தையும் திட்டுவான், ஏலே பாத்திட்டியாடா படத்தை அப்படின்னு கேட்டா , இதெயெல்லாம் பார்த்துட்டு தான் பேசுனுமா, பார்த்தவுக சொன்னக ... எல்லா பத்திரிக்கையும் குறை சொல்லுவான், ஏலே படிச்சிட்டுயாடா, அப்படின்னா இதையெல்லாம் படிக்கணுமா, சொன்னாங்க அப்படிம்பாம்.
அந்த மாதிரி செட்கள் தான் இன்னைக்கு நேரா பின்னூட்டம் போகுது. யார் என்ன சொல்றாங்க அப்படின்னு பார்த்துட்டு ஒரு பதிவே போட்டுறும். இதை பற்றி இவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் அப்படின்னு லிங்க் அது ஒரு நாலு. அதுக்கு கீழ விகடன் குமுதத்துக்கு 2 லிங்க். அப்படியே பக்கத்தில இங்கே நமீதா படம் சூப்பர் அப்படின்னு ஒரு சிறு குறிப்பு. மேல இரண்டு வரி எப்படியாவது எழுத வேண்டியது. என்னடா பதிவு எழுதிட்டான் அப்படின்னு நமக்கு ஒரு குழப்பமே வந்துரும். அங்கே இங்கே கட் பண்ணான் , பேஸ்ட் பண்ணான். கடைசியில பதிவுங்கிறானே. இது எடுபடுமா அப்படின்னு எட்டி பாப்போம். அங்க பாருங்க கடைசியில ஒரு வேலை பண்ணுறான்.
பதிவர்களை எந்த அளவுக்கு நல்லா புரிஞ்சு வச்சிருக்கான் பாருங்க. தலைப்பு கொடுக்கிறான். திரிஷா ரசிகர்களுக்கு கண் குருடா அப்படின்னு.
ஆரம்பிக்குது பாருங்க சண்டை.
முத பின்னூட்டம் என்ன எழுதுறாங்க பாருஙக: முதல்ல நீ உனக்கு கண் இருக்குன்னு நிருபிய்யா. அப்புறம் பேசு அடுத்தவன் கண்ணை பத்தி. அங்கே இருந்து ஒருத்தன் ஒடி வாரான் அடுத்க பின்னூட்டம் போட, தனி மனிதர்களை தாக்குவது தவிர்க்க பட வேண்டும். வேற்று கருத்துக்கள் இருந்தால் மென்மையாக எழுத வேண்டும் . அப்படின்னு எழுதிட்டு ஒடிர்ரான். இன்னொருத்தான் வாரான் , திரிஷா ரசிகர்களை பற்றி எழுதிய் நீங்கள் ஏன் மற்ற நடிகைகளை பற்றி எழுதவில்லை?. அதுக்கப்புறம் பாருங்க சூப்பர் காமேடி. தமிழ் பெண்கள் க்ற்பை பற்றி பேசிய குஷ்புவை விட திரிஷா மேல். அதை தாண்டி இன்னோனு தங்கர் பச்சான் பேசியது மட்டும் கரெக்டா அப்படின்ன் .. ஒரு ஆறு மாசத்துக்கு சண்டை நடக்கும்..
இன்னோரு செட் இருக்கு பதிவிற்கு தலைப்பு கிடைக்காவிட்டால், வலை பதிவர்களே சந்திப்போம் என்று கிளம்பும் . அதை வைச்சு இரண்டு பதிவு. சந்திச்சிட்டு இரண்டு பதிவு. அதை பார்த்துட்டு இன்னமும் இரண்டும் கோஷ்டி நாங்களும் சந்திக்கிறொம் அப்படின்னு கிளம்பும். என்ன பதியறதுக்கு ஒண்ணமும் கிடைக்கல்...
இடையில் இன்னொரு சமாசாரம்.. யாராவது ஒருத்தர் எனக்கு பிடிச்ச நாலு டீ கடை, நாலு பஜ்ஜி கடை அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டுட்டு ஒரு நாலு பேரை கூப்பிட்டு இந்த மாதிரி லிஸ்ட் போடுங்க அப்படின்னு. 4,16 ஆகி,16 64,ஆகி கடைசியில ஒருத்தர் கூப்பிட பதிவர் இல்லாம, மாமா, மச்சான் , சித்தப்பா, பெரியப்பா எல்லாருக்கும் தந்தி அடிச்சு வலைபதிவு ஆரம்பிக்க சொல்லிட்டாரு. என்னா இவர்கிட்ட எழுத மேட்டருல்ல.ஆனா லிஸ்ட் இருக்கு. பாருங்க கடைசியில அது போயி முடியுதுன்னு..
இந்த நிலைமையில் நாம இங்க பேச போறோம். பதிவிற்கு பின்னூட்டம் போடுவது கடினமா, அல்லது பின்னூட்டத்திற்கு பதிவு போடுவது கடினமா அப்படின்னு
தொடரும்.
19 comments:
டேய் மாப்ள... நல்லாதனடா இருந்த? இப்ப என்ன ஆச்சி உனக்கு? காத்து கருப்பு ஏதும் அண்டிச்சா?
ரெண்டுமே கடினமுன்னு தீர்ப்பு சொல்லிரலாமுங்களா? :-))))
//பதிவிற்கு பின்னூட்டம் போடுவது கடினமா, அல்லது பின்னூட்டத்திற்கு பதிவு போடுவது கடினமா அப்படின்னு//
அட என்னங்க இது சிறுபிள்ளைத்தனமால்ல இருக்கு. பின்னூட்டத்துக்கு பதில் போடறதுதான் கஷ்டமுன்னு தீர்ப்ப சொல்லுங்கய்யா! :D
கொத்தனார்
பின்னூட்டத்துக்கு பதில் போடறதுதான் கஷ்டமுன்னு தீர்ப்ப சொல்லுங்கய்யா
உங்க கவலை உங்களுக்கு . தீர்ப்பு சொல்லும் போது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க்லாம்.
பா க, சூப்பர் பதிவு!
ஆனா, அன்னிக்கே கண்ணதாஸன் சொன்னாரு:
"வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி"
ஆனா இன்னிக்கு புலமைப்பித்தன் என்ன சொல்றாருன்னு பாருங்க:
"பஞ்சு மெத்தைக்காரியே
பஞ்சவர்ணக்கிளியே
பஞ்சணையில் நெஞ்சனைக்க வா!"
அதனால, பதிவிற்கு பின்னூட்டம் போடுவது கடினமா, அல்லது பின்னூட்டத்திற்கு பதிவு போடுவது கடினமா எல்லாம் பிரிச்சுப் பாக்க முடியாது, வலைப்பதிவுல காலம் தள்ரதே கஷ்டம்னு ஒரு தீர்ப்பு தன் வழக்கமான ஸ்டைல்ல தரப்போறாரு பாருங்க லியோனி.
பி கு: உங்க ரெக்வஸ்ட இப்போதன் பார்த்தேன். இன்னிக்கு எப்படியும் செய்துடறேன்.
மிக்க நன்றி சுரேஷ் அவர்களே.
தல கலக்குறீர்கள்,
இவ்வளவு நீளப் பதிவை இப்பதான் உங்கள வலையில் பார்க்கிறேன். :))))
நீங்கள் எழுதிய இந்த பதிவு நகைச் சுவையாக இருக்கிறது ... குறிப்பாக வலைபதிவாளர்கள் சந்திப்பு ... சூப்பர்.
எனக்கு தெரிந்து பதிவு எழுதுவதும் , பின்னூட்டமிடுவதும் கடினம் அல்ல, உகு இல்லாமல் பின்னூட்டமோ,பதிவோ போடுவது தான் கடினம். :))))
வாத்தியரா இருக்கிறது கஷ்டமா ... படுத்துற வாத்தியாருக்கிட்ட மாணவரா இருக்கிறது கஷ்டமா ... ? :)))
பாலு,
கலக்கல் பதிவு.நல்லா இருக்கு.
லியோனி தமிழ்மணத்தை ரொம்பவே கூர்மையா கவனிக்கிறார் போல இருக்கே? :-)
என்னமோ போங்க :)
பாடல்களில் சிறந்தது பழைய பாட்டா புதிய பாட்டா லியோனி வலைப்பதிவுலகிலும் வந்தாச்சா?
அது சரி.
பதிவிற்குப் பின்னூட்டம் இது "பழைய ட்ரண்டு" ஆச்சே! ஆனா இப்ப "லேட்டஸ்ட் ட்ரண்டு" "பின்னூட்டத்திற்குப் பதிவு(கள்) தாங்க பாலச்ந்தர்!
போட்டுத் தாக்கிட்டீங்க! உங்க தீர்ப்பை வைச்சுத்தான் சூடு தணியுதா இல்லை திரும்பக் கெளம்புதான்னு தெரியும்.
கோவி கண்ணன் அவர்களே,
தல கலக்குறீர்கள்,
இவ்வளவு நீளப் பதிவை இப்பதான் உங்கள வலையில் பார்க்கிறேன்
ஆமாம் என்னுடைய பதிவுகளின் வழக்கமான அளவிலிருந்து இது மாறு பட்டிருக்கிறது. இந்த முறை பதிவு தமிழ்மணத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் கிளம்பியுள்ள சூட்டை தணிக்க எழுதப்பட்டது. இந்த மாதிரி எழுதுவது எனக்கு இயற்கையாக வருவதல்ல. முயற்சி செய்து தான் தேத்தினேன்.
//பதிவிற்கு பின்னூட்டம் போடுவது கடினமா, அல்லது பின்னூட்டத்திற்கு பதிவு போடுவது கடினமா//
இ.கொ. பதிவை லியோனியை படித்து பாக்க சொல்லுங்கள். அத மட்டும் அவர் படிச்சுட்டாருனா, தீர்ப்பை நானே சொல்லுறேன். பின்னூட்டத்துக்கு பதிவு போடுவது தான் கஷ்டம்.
//யோசிக்கிறான் பாருங்க அப்பாடி அப்படி ஒரு யோசனை. தீவிரவாததை தடுத்து நிறுத்த வழி கண்டு பிடிக்கிற மாறி ஒரு யோசனை. //
ஆமாங்க, அநியாயத்துக்கு யோசிக்க வேண்டியது இருக்க. என்ன பண்ணுறது. நீங்க கூட பாருங்க இந்த பதிவ போடுவதற்கு உர்கார்ந்து யோசிச்சி இருக்கீங்க என்பது உங்களின் உகு,வெகு,நேகு,சைகு எல்லாத்தையும் பாக்கும் போது தெரியுது.
பாக,
அருமையான Parody. தமிழ்மண அவலங்களை இவ்வளவு அழகாக நகைச்சுவையாக வரைந்திருக்கிறீர்கள்.
ரசித்துப்படித்தேன். நடுவரின் ஆரம்ப உரையே இப்படி என்றால் .....
நன்றி
நன்றி ஜயராமன் அவர்களே
rendum illai.
indha pinnootangalai padikkaradhu dhan kadinam
நல்லா இருக்கு.
குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். நன்றி. இன்னும் இரு தரப்பு வாதங்களையும் தொடருங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
"பதிவுக்கு பின்னூட்டம் போடுறது கடமை
பின்னூட்டத்திற்கு பதிவு போடுறது கொடுமை"
அதுதாங்க நடக்குது தமிழ்மணத்தில.
அதுசரி உண்மையாவே பட்டிமன்றம் நடக்குதா?
அன்புடன்
தம்பி
Post a Comment