Wednesday, July 26, 2006

குழலியை கிண்டல் பண்ணுகிறார் மாயவரத்தான்

http://kuzhali.blogspot.com/2006/07/blog-post_24.html

http://mayavarathaan.blogspot.com/2006/07/369.html

குழலியை கிண்டல் பண்ணுகிறார் மாயவரத்தான்(அதாவது அப்படின்னு நினைத்து கொண்டிருக்கிறார்.)

ஏன் இப்படி கூட கிண்டல் அடிங்களேன்,
பஸ்ஸில்,
இந்த சீட்ல உக்காராதீங்க
ஏங்க,
இது டிரைவர் சீட்,
டிரைவருக்கு மட்டும் தனி சீட்டா? என்னய்யா அநியாயம் இது... எல்லாருக்கும் டிரைவர் சீட் கொடுங்க


அப்படின்னு!!!

வெறுமனே மரபுகள் கடைப்பிடிக்க பட்டால் என்ன ஆகியிருக்கும் என்பது குழலியின் பதிவில் வெளிப்படுகிறது. சரியில்லாத மரபுகள் மாற்றபட வேண்டியவே என்பதில் சந்தேகமில்லை. அதை தான் குழலி வலியிறுத்தி உள்ளார். மாயவரத்தான் அதனை கிண்டலடிக்க இன்னமும் சிறந்த வழி கண்டு பிடிக்க வேண்டும். ( அதாவது அவரால் முடிந்தால்)


இது மாயவரத்தான் பதிவில் பின்னூட்டமாகவும் இடபட்டுள்ளது. மற்றவர்களின் பின்னூட்டம் பார்த்தேன். கடற்புரத்தான் அதனை நியாயமாக விமர்சனம் செய்துள்ளார் . ஜயராமன் , எஸ்கே பாராட்டி உள்ளனர் எதிர்பார்த்தது போலவே. தமிழ்பதிவர்களில் பலர் பதிவிற்காக பின்னூட்டம் இடுகிறார்களா அல்லது பதிவர்களுக்காக பின்னூட்டம் இடுகிறார்களா.ப்ரிடிக்டபிளாகவே உள்ளது பலரின் கருத்துக்களும் பின்னூட்டங்களும். சர்ச்சை சண்டை தவிர்க்க விரும்பினாலும் சில இடங்களில் இந்த மாதிரி பின்னூட்டங்களையும் , பதிவுகளையும் நான் இட வேண்டியுள்ளது.

13 comments:

Anonymous said...

// குழலியை கிண்டல் பண்ணுகிறார் மாயவரத்தான்(அதாவது அப்படின்னு நினைத்து கொண்டிருக்கிறார்.) //

குழலி யாரை கிண்டல் பண்றதா நினச்சிகிட்டு அந்த பதிவு போட்டார்...

நிறுத்துமய்யா உங்கள் நாட்டமை வேலய

பாலசந்தர் கணேசன். said...

குழலி செய்தது விமர்சனம். அதை தாங்க முடியாமல் அதே தொனியில் சம்பந்தமில்லா விஷயங்களை பேசி இருக்கிறார் மாயவரத்தான்.

Anonymous said...

நீங்க ரொம்ப ஒழுங்கோ?. முதல்ல இந்த நாட்டாமை பண்ணுறதையெல்லாம் நிறுத்திட்டு, உருப்படியா எதாவது பதிவு வெளியிட முடியுமான்னு பாருங்க.

கசி said...
This comment has been removed by a blog administrator.
கோவி.கண்ணன் said...

//தமிழ்பதிவர்களில் பலர் பதிவிற்காக பின்னூட்டம் இடுகிறார்களா அல்லது பதிவர்களுக்காக பின்னூட்டம் இடுகிறார்களா//

இந்த கருத்தின் அடிப்படையில் 'சார்பு நிலை வலை அரசியல்' என்ற பதிவு எழுதியிருந்தேன். :))
பிகு : பின்னூட்டம் மேற்கண்ட கருத்துக்கு மட்டும் தான் மொத்தப்பதிவுகளுக்கும் அல்ல :))

ஜயராமன் said...

அபத்தமான பதிவு. அபத்தமான குற்றச்சாட்டு.

நான் போட்ட நீளமான அந்த பின்னூட்டத்தை தாங்கள் சரியாக படிக்கவில்லையா இல்லை புரியவில்லையா?

நான் பாராட்டி பின்னூட்டம் இட்டேன் என்று நீங்கள் சொல்வது சரியல்ல.

ஏற்றத்தாழ்வுகள் (மனிதன் கற்பித்த செயற்கை ஏற்றத்தாழ்வுகள்) எங்கெங்கும் எப்போதும் இருக்கிறது. என்று சொல்லியிருந்தேன்.

அதற்கு உதாரணங்களும் சொல்லியிருக்கிறேன். (டிரைவர் மாதிரி அபத்த உதாரணம் இல்லை)

முடிந்தால் படித்துப்பார்க்கவும், மறுமுறை.

முடிவாக நான் அங்கு ஆரம்பத்தில் போட்ட கருத்தையே இங்கும் தங்களுக்கு... பின்னூட்டம் இடுகிறேன்.

///இந்த மாதிரி தர்க்கம் பண்ணிக்கொண்டிருந்தால் விஷயம் எங்கெங்கோ போகும்.///

இந்த அர்த்தமில்லாத பேச்சை மேலும் தொடர எனக்கு ஆர்வமில்லை.

வந்தே மாதரம்

குழலி / Kuzhali said...

பாலச்சந்தர் எல்லா கோமாளித்தனங்களையும் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அந்த பதிவில் ஸ்மைலியில் ஆரம்பித்து நீண்ட பின்னூட்டம் போட்டவர்கள் வரை...

//வந்தே மாதரம்
//
அது சரி ஜெயராமன் வந்தே மாதரத்திற்கும் இந்த பதிவிற்கு என்ன சம்பந்தம்னு நான் கேட்பேன் அடுத்து நீங்க ஜெய்ஹிந்த்ன்னுவிங்க, அப்புறம் அதையும் கேட்பேன், உடனே நான்கு பேர் வந்துடுவாங்க மொத்தறதுக்கு... அப்படியே பாலச்சந்தர் சொல்ல வந்தது மறைந்துவிடும், இப்படி தானே 'சோ'பற்றிய பதிவில் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கின்றது... ம்... பார்ப்போம் இந்த பதிவாவது தப்பிக்கிறதா என்று...

மாயவரத்தான் said...

அப்பாடா.. ஒருவழியா 'சங்கத்திலே' இடம் கிடைச்சிடுச்சா கணேசன் (நம்ம புண்ணியத்திலே?!).. வாழ்க..வளர்க.

ஆம்..குழலி.. .'எல்லா' கோமாளித்தனங்களையும் எல்லாரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜயராமன் said...

குழலி சார்,

வம்பிலே மாட்டி வுட்டுடாதீங்க.

வேற ஒன்னு புக் படிச்சு ரொம்ப ஆக்கிரமிச்சி இப்படி வந்தே மாதரம் எழுதிப்பிட்டேன். அம்புட்டுதான். மத்தபடி சோ பத்தில்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது

ஜயராமன் said...

பா.க

இங்கு சோம்பேறி பையன்கிற பேர்ல போலி பின்னூட்டம். தூக்கிடுங்க ப்ளீஸ்

பாலசந்தர் கணேசன். said...

அட போங்க மாயவரத்தான் அவர்களே!!!

ஜயராமன் என் வரிகள் தங்களை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். மன்னித்து விடுங்கள்.

உங்களுடைய வரிகள்: நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான்,
இந்த மாதிரி தர்க்கம் பண்ணிக்கொண்டிருந்தால் விஷயம் எங்கெங்கோ பாகும்.இந்த 'சமத்துவம்' எல்லாம் சரியான பம்மாத்து வேலை. இங்கு மா.ம. (மாயவரத்தான் இல்லை. மாங்காய் மடையர்கள்) நாமெல்லோரும் என்பதால் இப்படி பைசா பெறாத விஷயங்களை உசுப்பேத்தி இந்த திராவிட குஞ்சுகள் பொழைப்பு நடத்துகிறார்கள்.

என்பது மாயவரத்தானின் கருத்தோடு ஒத்து போவதாகவே அமைகிறது... நீங்கள் அவ்வாறு கூறவில்லை என்று சொன்னால் பின்னூட்டத்திற்கு திருத்தம் கொடுப்பது நல்லது என்று சிபாரிசு செய்கிறேன்.

நீங்கள் சொன்னபடி பின்னூட்டத்தை நீக்கி விட்டேன்.

Unknown said...

//சங்கத்தில சேந்தாச்சா?// மாயவரத்தான் அதெப்பிடிங்க? நீங்க ஒன்னா சேர்ந்தா அது பதிவர் வட்டம் பாலச்சந்தர் கணேசன் சேர்ந்தா அது சங்கம். அப்ப உங்களுக்கு ஆதரவா எழுதுற எல்லாரும் உங்க சங்கத்த சேந்தவங்களா? இருக்கும் எல்லாரும் மாபியா சங்கம்தானே?

Unknown said...

http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_115401563253581707.html