1.சட்டமன்ற இருக்கை அமைப்பு விஷயத்தை பற்றி எதிர்கட்சிகளிடம் ஆலோசனை கேட்கபடவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறார்.
2. சசிகலா வந்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்தாரே. அப்போது எதிர்கட்சிகளிடம் ஆலோசனை கேட்கபட்டதா என்று வழக்கம் போல நீங்கள் மட்டும் ஒழுங்கா என்ற ரீதீயில் -ஞாபகதிறனை வைத்து கலைஞர் பதில் கொடுத்தார். அ.தி.மு.க அடங்கி விடும் என்று தான் எதிர்பார்த்தேன்.
3. ஜெயலலிதா அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இப்போது தி.மு.க வில் இருக்கும் சேடபட்டி முத்தையா செய்த காரியம் அது என்று குத்தலாக கூறியுள்ளார். மேலும் தான் நினைத்தால் சசிகலாவை சட்ட சபையில் அமர்த்த முடியும் என்று சூழுரைத்துள்ளார்.
வழக்கமாக ஜெயலலிதா அறிக்கையில் ஒரு மண்ணும் இருக்காது. ஆனால் இந்த முறை எதிர்கட்சியானதிலிருந்து கொஞ்சம் சுவாரசியம் கூடியிருக்கிறது.ஆனால் வெட்டியாக எல்லா விஷயத்திலும் சண்டை போடுவது என்பதை தி.மு.க, அ.தி.மு.க இருவரும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறார்கள்.
இனி அடுத்த படியாக சேடபட்டி முத்தையா அறிக்கை விடுவார் என எதிர்பார்க்கலாம்.
3 comments:
ஜெயலலிதாவின் இன்றைய அறிக்கை கொஞ்சம் லாஜிக்கலாக தான் இருந்தது.
கலைஞர், ஏதாவது கேள்வி கேட்டால், உடனே அதிமுக ஆட்சியில் நடந்தை சுட்டி காட்டுகிறார். திமுக=அதிமுக என்பதை அடிக்கடி சுட்டி காட்டுகிறார் இந்த 60 வருட அரசியல்வாதி.
பாலசந்தர் கணேசன்,
"வழக்கமாக ஜெயலலிதா அறிக்கையில் ஒரு மண்ணும் இருக்காது"
அம்மா ஆதரவாளர்கள் எல்லாம் எங்கப்பா போயிட்டிங்க?
இந்தியாவை பொருத்தவரைக்கும் எதிர்கட்சி என்பது எதிரிகட்சிதான். இருந்தாலும் அம்மா பண்றது கொஞ்சம் ஓவர்தான். சட்டசபைல எந்தளவுக்கு அராஜகம் பண்றமோ அந்த அளவுக்கு அம்மாகிட்ட நல்ல பேர் கிடைக்கும்னு அம்மாவின் அடிபொடிகளின் எண்ணம்.
அன்புடன்
தம்பி
இந்த லாவணி அரசியல் ஒன்றும் நமக்கெல்லாம் புதிதல்லவே!
பார்த்து, பழகிப், புளித்தும் போய்விட்டது!
மக்களும் இந்த கோமாளித்தனங்களைத்தானே விரும்புகிறார்கள் போலிருக்கிறது!
வெரை ஒண்ணு போட்டா சுரை ஒண்ண முளைக்க்கும்!!
Post a Comment