Thursday, July 06, 2006

மன்மோகன் ஏன் இன்னமும் பதவியில் ஒட்டி கொண்டுள்ளார்?

பங்குகள் விற்பனை செய்கின்ற முடிவை நிறுத்தி வைக்கபட்டுள்ளது. கருணாநிதியிம் வெளிப்படையான மிரட்டல் மிகவும் ஆச்சரியத்தை தந்துள்ளது. காங்கிரஸ் மேலிடத்தோடு மிகுந்த நல்ல உறவினை கொண்டுள்ள அவர் , இந்த மாதிரி வெளிப்ப்டையாக எச்சரிக்கை விட்டது , அவர் அவசர பட்டு சொல்லிவிட்டாரா அல்லது உண்மையில் திட்டம் போட்டு தான் செய்தாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.
காங்கிரசின் ஆதரவு கருணாநிதிக்கும் தேவை படத்தான் செய்கின்றது. வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கும் அவர் , அவற்றை நிறைவேற்ற மத்திய அரசின் உதவியை நாடத்தான் செய்ய வேண்டும். இங்கும் அவருக்கு மெஜாரிட்டி இல்லை. எனினும் காங்கிரஸ் தன்னை சம பார்ட்னராக நிலை நாட்ட இயலவில்லை.
ஒரு வேளை கருணாநிதி , சோனியாவிடம் மட்டும் நல்ல உறவு இருந்தால் போதும் என்று நினைத்து விட்டாரோ? மாநில காங்கிரசை அடக்கி வைக்க, மத்திய அரசிடம் கோரிக்கை நிறைவேற்ற சோனியா ஒருவர் மட்டுமே போதும் என்பதால் , மற்றவர்களை கிள்ளு கீரையாக எண்ணுகிறாரோ கருணாநிதி.
இவ்வாறு கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றி , பிரதமர் தன்னுடைய பலவீனத்தை வெளிபடுத்தி விட்டார். அது மட்டும் அல்லாமல், இதனால் தி.மு.க விற்கு ஏதேனும் பலன் இருக்குமா என்று தெரியவில்லை. பிரச்சினை முற்றும் வரை ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு, பின்னர் வெளிப்படையாக எச்சரிக்கை விட்டு காரியம் சாதிப்பது என்பது பிரதமரை அப்செட் செய்கின்ற ஒன்று.
இந்த மாதிரி சூழ்நிலையிலும் மன்மோகன் ஏன் இன்னமும் பதவியில் ஒட்டி கொண்டுள்ளார்?

No comments: