Saturday, July 08, 2006

திரையில் பிடித்த ஆறு காட்சிகள்

இது ஆறு திரைப்படங்களின் லிஸ்ட் இல்லை. மனதில் நின்ற திரைப்படஙகளின் தொகுப்பு அல்ல. ஆனால் அழுத்தமாக பதிந்த 6 காட்சிகளின் தொகுப்பு.

1. சண்டை கோழி: அண்ணே, நீங்க பையனை ஒண்ணும் கை வைச்சிரலில என்று மதுரையில் இருந்து பதில் வரும் இடம்.

2. தேவர் மகன்: போங்கடா, போய் விவசாயத்தை பாருங்கடா என்று கமல் கண்ணீர் வழிய ஊர் மக்களுக்கு அறிவுரை கூறும் இறுதி கட்டம்

3. குருதி புனல்: டி. ஐ.ஜி. நாராயணசாமி என்று பொய்யான பெயரை நாசரிடம் சொல்லி விட்டு, கமல் தடுமாறும் காட்சி. உண்மையில் பார்க்க பாவமாக இருக்கும் இந்த காட்சியில் கமலை பார்ப்பதற்கு.

4. பாட்ஷா: ரஜினி உண்மையை சொல்லும் இடம்.

5.சித்திரம் பேசுதடி: க்ளைமாக்ஸில் வரும் ஃப்ளாஷ் பேக்.

6.காக்க காக்க: ஸ்கூல் மாணவி மீது ஆசிட் ஊத்த போவதாக , ஐந்தாறு பேர் கலாட்ட பண்ண, பின்னாலிருந்து வரும் சூர்யா துப்பாக்கி காட்டி மிரட்டும் இடம். துப்பாக்கி காட்டிய மறு நிமிடம் அந்த ரவுடி அலறுகிற அலறல்!!!. படு அதிரடியான காட்சி.

14 comments:

துளசி கோபால் said...

குருதிப்புனல், காக்க காக்க இந்த ரெண்டுலேயும் நீங்க சொன்ன காட்சிகள் கவனத்துலே வரமாட்டேங்குதே (-:

இன்னொருக்காப் பார்க்கணும்.

பாலசந்தர் கணேசன். said...

கண்டிப்பாக நினைவில் வரும். கொஞ்சம் நினைவு படுத்தி பாருங்கள்.

குருதிபுனலில் அர்ஜூன், கமல் இருவரும் நாசரிடம் மாட்டி கொள்வார்கள். கமல் அர்ஜூன் பெயரை சொல்லி விட கூடாது என்பதற்காக வேண்டுமென்றே வேறு ஒரு பெயர் சொல்வார். கமல் குடும்பம் உயிர் தப்பி விட வேண்டும் என்பதற்காக ,அர்ஜுன் உண்மையை சொல்லி விடுவார். அந்த இடத்தில் கமல் தடுமாறுவதை பார்க்க வேண்டும். திரைப்படம் என்பதை மறந்து கமல் மேல் ஒரு பரிதாபம் வரும். மகாநதி கூட அந்த அளவு உணர்வுகளை தூண்டவில்லை.

காக்க காக்கவில் ஜோதிகா தனது மாணவி ஒருவர் மிரட்டபடுகிறார் என்று சூர்யாவிடம் உதவி கேட்பார். அதை தொடர்ந்து இந்த காட்சி வரும்.
Click here to watch this scene. Choose scene 2

G.Ragavan said...

நீங்க சொல்லீருக்குற ஆறு படங்களையும் பாத்ததில்லையே. ஆனாலும் காட்சிகள நல்லா ரசிச்சிருக்கீங்கன்னு தெரியுது.

Unknown said...

அடடா நீங்களும் குருதிப்புனல் ரசிகரா? (அது நம்மளோட பேவரிட்டுங்க சுமாரா ஒரு 200 தடவ பாத்திருப்பனுங்க) வேணும்னா திரைக்கதை வசனத்த வச்சு ஒரு பதிவு போட்ட்ருவமா?

பாலசந்தர் கணேசன். said...

ராகவன் நீங்க படமே பார்ப்பதில்லையோ?, ஏனெனில் இவற்றில் பெரும்பாலனவை வெற்றி பெற்ற படங்களே.

மகேந்திரன்,
ஆசை இருந்தால் நிறைவேற்றி விட வேண்டும். அது தான் முக்கியம். ஒரு பதிவு போட்டால் போயிற்று. வலைபதிவுகளில் அன்பே சிவம் மிக மிக பிரபலம்.

விழி said...

பாலசந்தர் கணேசன் அவர்களுக்கு, தங்கள் பதிவுகளை பார்வையிட்டேன். (முழுவதுமல்ல, எனினும் விரைவில் முழுவதையும் படித்துவிட முயற்சிக்கிறேன்)

அருமையாக உள்ளன.

எனது வலைப்பூவிற்கு வந்து படித்து பதிலிட்டதற்கு நன்றிகள்.

தங்கள் ஆதரவினை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.

aaradhana said...

மிகவும் கருத்து மிக்க ஆறுகள்.

Anonymous said...

சண்டைகோழி பாட்ஷா ரெண்டுகுத்தும் புரியமாட்டேங்குது
ஆனா எங்கேயோ குத்துறபோல.

பாலசந்தர் கணேசன். said...

ரகு,

சண்டை கோழியில் வில்லன் அடி வாங்கிய பின்னர், தன்னை அடித்த ஹீரோவை தேடுவார். மதுரைக்கு ஃபோன் பண்ணி அவனை தூக்கி வரும் படி சொல்வார்கள். முதலில் வெகு அசால்ட்டாக கட்டி தூக்கி அனுப்பி வைக்கிறேன் என்று பேசும் நபர், சிறிது நேரம் கழித்து ஃபோன் பண்ணி அண்ணே நீங்க பையனை எதுவும் செஞ்சிரலில்ல, இந்த விஷயத்தை இத்தோட விட்டுருங்க. விஷயம் பெரிசாருக்கு என்பார். அதிரடியாக இருக்கும் வில்லனுக்கு.

பாட்ஷாவில், ரஜினியின் தங்கையை அவமானபடுத்துவார் வில்லன். ரஜினி வந்து வெகு அசால்ட்டாக மிரட்டுவார். என் பெயர் மாணிக்கம். எனக்கு இன்னோரு பெயர் இருக்கு ---பாட்ஷா என்று. அவர் பாட்ஷாவாக வெளிக்காட்டும் முதல் காட்சி அது.

கோவி.கண்ணன் said...

1+1, அது எப்படிங்க... உங்கள் பதிவில் எழுதுவதைவிட அடுத்தவர் பதிவில் நீ.......ளமாக பின்னூட்டம் அதுவும் எக்குத்தப்பா ... உள்குத்தோடு பின்னூட்டம் போடுகிறீர்கள் ? :::))
1+1 ன்னா ? என்ன அர்த்தம் ஒரு வெளிக்குத்து ஒரு உள்குத்தா ?
:)))

பாலசந்தர் கணேசன். said...

கோவி கண்ணன் அவர்களே,

அந்த மாதிரி உள்குத்து எண்ணங்கள் எதுவும் அறவே இல்லை. நட்பு நாடியே கை நீட்டுபவன் நான். குறிப்பாக எந்த பின்னூட்டம் என்று கூறினால் நான் விளக்கம் தர தயாரக இருக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//அந்த மாதிரி உள்குத்து எண்ணங்கள் எதுவும் அறவே இல்லை. நட்பு நாடியே கை நீட்டுபவன் நான். குறிப்பாக எந்த பின்னூட்டம் என்று கூறினால் நான் விளக்கம் தர தயாரக இருக்கிறேன்.
//
உங்கள் பின்னூட்டம் சிரிப்பை வரவளைப்பதால் ... நான் கொஞ்சம் தமாஸ் பண்ணினேன்.

sk பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிங்க பாருங்க... அதை வெச்சு நானும் குமரனும் எஸ்கேவை கலாய்த்தோம். :)))

உங்கள் பின்னூட்டத்தை முன் வைத்து குழலி / போனபர்ட் ஒரு பதிவே போட்டு இருக்கிறார்கள் :))

தாமாஸ் தான் :))))

கோவி.கண்ணன் said...

உங்கள் பதிலேயே மறுமொழி கூறியதால் என்பதிவில் நீங்கள் அளித்த அதே பின்னூட்டத்தை நீக்குகிறேன் :))

aaradhana said...

. தேவர் மகன்: போங்கடா, போய் விவசாயத்தை பாருங்கடா என்று கமல் கண்ணீர் வழிய ஊர் மக்களுக்கு அறிவுரை கூறும் இறுதி கட்டம்///

நானும் இதை ரசித்தேன்.