கால்பந்து ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாலா என்னவோ, இந்திய அணியின் வெற்றி பதிவர்களை கவரவில்லை. இந்தியா இந்த தொடரில் மிக சிறப்பாகவே ஆடியது. ஒரளவு அதிர்ஷ்டம் இருந்திருந்தால் முதல் ஆட்ட்த்திலேயே வெற்றி பெற்றிருக்கலாம். இரண்டாவது ஆட்டத்தில் மழை பெய்து ஒரு நாள் ஆட்டம் ரத்தானது இந்தியாவிற்கு இடைஞ்சலாக போய்விட்டது. ஆனால் ஒரு வழியாக நான்காவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 35 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்த்திய அணியை இந்தியா அங்கு வைத்து தோற்கடித்துள்ளது. 35 ஆண்டுகளில் மேற்கிந்திய அணி தரம் குறைந்து சொங்கியாக மாறிவிட்டது என்றாலும் கூட இந்திய வெற்றி சந்தோஷமாகவே உள்ளது.
டிராவிட், கும்ப்ளே காலம் காலமாக ஆடினாலும், உலகசாதனை பல புரிந்திருந்தாலும், மீடியா அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கிகாரத்தை தரவில்லை. இன்னமும் சொல்ல போனால் டிராவிட் ஒரு அணி தலைவராக மிகவும் பொறுப்புணர்ச்சியோடு , மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக இருக்கும் வண்ணம் ஆடுகிறார். கும்ப்ளே ஆடும் விதம் அவரை மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் எடிக்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டுகிறது. உலக கோப்பை மேற்கிந்திய தீவுகளில் நடைபெற போவதால் கும்ப்ளேயின் தற்போதைய ஆட்டதிறனை மனதில் வைப்பார்கள் செலக்டர்கள் என்றே நான் கருதுகிறேன்.
மூன்றாவது துவக்க ஆட்டகாரராக கங்குலியும் தேர்வு செய்ய பட வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரையில் கங்குலி , கவுதம் காம்பீர், ராபின் உத்தப்பா போன்றவர்களை ஆடுவார் என்று தோன்றுகிறது.
பந்து வீச்சில் கும்ப்ளேயை தவிர யாரும் குறிப்பாக சோபிக்கவில்லை என்பது சற்றே கவலைக்குரிய விஷயம். அங்கங்கே என்று பிரகாசித்தாலும் , யாரும் தொடர்ச்சியாக அசத்தவில்லை. இந்திய அணி தொடர்ந்து 4 ஒரு நாள் போட்டிகளில் தோற்றது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால் இந்த அணி நல்ல முயற்சி செய்கின்ற அணியாகும். வேகமாக இந்த அணி பாடங்கள் கற்று கொள்ளும் என்றே நம்புகிறேன்.
வருகின்ற உலக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்த அணி உற்சாகமாக போராடுகிற அணி என்பது தான் இந்த நம்பிக்கையை தருகின்றது. இந்த அணியில் மீண்டும் இடம் பெற துடிக்கும் வீரர்கள் : கும்ப்ளே,கங்குலி, லக்ஷ்மண்,ஜாகீர்கான்,ஆஷிஷ் நேரா ஆகியோர்.
தமிழக வீரர் பாலாஜி என்ன ஆனார்? அவரை பற்றி செய்திகள் ஏதும் வருவதில்லையே.?
சற்று முன்னர் கிடைத்த செய்தி. இலங்கை அணி நெதர்லாண்டுக்கு எதிராக நடந்த போட்டியில் 443 ரன்கள் எடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் சாதனையை முறியடித்துள்ளது. இந்த சாதனை ஐசிசியினால் அங்கீகரிக்கபடுகிறது என்றாலும் , கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டை பெறாது என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கை அணியே இதை கொண்டாடியதாக தெரியவில்லை. 5-0 என்று இங்கிலாந்தை இலங்கை அணி தவிடு பொடி செய்துள்ளது. இந்த அணி நெதர்லாந்தோடு வெற்றி பெற்றது ஒரு விஷயமே இல்லை.
1 comment:
ஆம் கால்பந்து கால்பந்து என்று வலைஞர்கள் கூட தேசிய விளையாட்டான (?) ! கிரிக்கெட்டை மறந்துபோனார்கள் ஒருவேளை மட்டையடி பிடிக்கவில்லையோ?
Post a Comment