Thursday, July 27, 2006

விகடன் ஃபான்ட் கொண்டு எழுதப்பட்டது.

இந்த வரி வழக்கம் போல யுனிகோட் கொண்டு எழுதப்பட்டது.
கழுகார் உள்ளே
கீழே உள்ள வரி விகடன் ஃபான்ட் கொண்டு எழுதப்பட்டது.

è¿è£˜ àœ«÷

6 comments:

மு. மயூரன் said...

விகடன் எழுத்துருவை சோதிக்கும் ரகசியம் என்னவோ?

வலைஞன் said...

விகடன் எழுத்துரு tam என்கோடிங்கில் அமைந்தது. எந்த தாம் எழுத்துரு கொண்டும் இதைப் படிக்கலாம். படிப்பவர்களின் கணினியில் உள்ள தாம் எழுத்துரு வடிவில் தான் இதைப் படிக்க இயலும். வலைப்பதிவுகள் யூனிகோடில் அமைந்தது என்பதால் யூனிகோடு என்கோடிங்கில் படிக்க இயலாது. பின் எதற்காக வலைப்பதிவில் இந்த சோதனையோ?

பாலசந்தர் கணேசன். said...

சுரதா யாழ்வாணனின் எழுத்துருவை விகடன் ஃபான்டை பயன்படுத்துவது போல மாற்றியமைத்து கொண்டு இருக்கிறேன். அதை டெஸ்ட் பண்ணவும், விகடன் ஃபான்டை வலைப்பதிவுகளில் பயன்படுத்தினால் என்ன மாதிரி வரவேற்பு இருக்கும் என்று தெரிந்த்து கொள்ளவுமே இந்த சோதனை.

மு. மயூரன் said...

ஐயா

நீங்கள் விகடன் எழுத்துருவில் தட்டச்சி, அதை யுனிகோடுக்கு மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறீர்களா?

அப்படியாகவே இருக்கட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். :-0

இல்லையெனில்,

நீங்கள் விகடன் எழுத்துருவை பயன்படுத்தும்போது உங்களுக்கு கிடைக்கும் பலத்த வரவேற்புக்கள் வருமாறு,


1. காசி முதல் வேலையாக உங்களை தமிழ் மணத்திலிருந்து தூக்கிவிடுவார்.
(இங்கே யுனிகோடுக்கு மட்டுமே அனுமதி)


2. தமிழ் நாட்டின் வாசகர்கள் சிலரைத்தவிர மற்றவர்கள் பெரும்பாலானவர்களுக்கு விகடன் எழுத்துருவில் இருக்கும் உங்கள் வலைப்பதிவை படிக்க முடியாது. எழுத்துரு நிறுவி எல்லாம் படிப்பார்கள் என்றில்லை. எனவே உங்களுக்கான வருகையாளர்கள் சடாரென குறையும்.

3. கூகிளில் உங்கள் ஆக்கங்கள் தேடலின்போது அகப்படாது. தமிழ் யுனிகோடை பயன்படுத்தி மட்டுமே கூகிளில் தமிழில் தேடலாம். விகடனில் தேடினீர்கள் என்றால், லத்தீன் உருது எல்லாம் வரும்.

4. நான் மெனக்கட்டு ஒன்றுக்கும் உதவாத விகடன் எழுத்துருவெல்லாம் நிறுவி உங்கள் தளத்துக்கு வரமாட்டேன் ;-)(சும்மாவே ரொம்ப சிரமப்பட்டு ஃபயர் ஃபாக்சில் படித்துக்கொண்டிருக்கிறேன்.)



யுனிகோடு என்பது ஒரு ஃபான்ட் அல்ல. அது ஒரு என்கோடிங்.

அதனால் தான் அது மிக பயனுள்ளதாக அமைகிறது.

விகடன் ஃபான்டை எல்லாம் பயன்படுத்தி வலைபதியாதீர்கள். பிறகு விகடன் தளத்தை போலவே உங்கள் தளமும் எதிர்காலத்துக்கு பிரயோசனமில்லாமல் போய்விடும்.

பாலசந்தர் கணேசன். said...

மயூரன் அவர்களே,
மிக பொறுமையாக பதில்/அறிவுரை கூறியதற்கு நன்றி.

யுனிகோடின் பலன்கள் தெரிந்ததே. விகடனை நிறைய பேர் இணையதளத்தில் படிப்பதால் , அவர்களிடம் இந்த ஃபான்ட ஏற்கனவே இருக்கும் என்பது தான் எனது ஜட்ஜ்மெண்டாக இருந்தது. பார்ப்பதற்கு விகடன் ஃபான்ட் நன்றாக இருப்பதால் சுரதா யாழ்வாணானின் தமிழ் எழுத்துருவை எடுத்து அதில் இருந்த ஜாவா ஸ்கிரிப்டை நோண்டி அதில் தமிங்கிளிஷ் தேர்வு செய்தால் விகடன் டெக்ஸ்ட் வரும்படி செய்து மாற்றி அமைத்தேன். மிக வெற்றிகரமாக , பெரும்பான்மையாக பயன்படுத்த படுகிற எழுத்துக்கள் வந்து விட்டன. என்னுடைய முயற்சி வெற்றி கரமாக முடிந்தால் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் செய்தேன். இப்போது உங்களின் பின்னூட்டம் பார்த்த பின்னர் , என்னுடைய முயற்சியை ரீ-கன்சிடர் பண்ணுகிறேன்.

வலைஞன் said...

உங்கள் கணினியில் சோதனைக்காகவும், tam-encoding லேயே படிக்கவும் சேமிக்கவும் விகடன் எழுத்துரு உதவக்கூடும். நீங்கள் மாற்றி அமைத்துள்ள கருவியும் அதற்கு துணை நிற்கும்.

ஆனால் எழுத்துரு வடிவம் வேறு என்கோடிங் வேறு என்பதால் tam என்கோடிங்கில் அமைந்த விகடன் எழுத்துரு யூனிகோடு என்கோடிங்கில் அமைந்த வலைப்பதிவுகளுக்கு உதவாது. எனக்கு டாம் என்கோடிங் மற்றும் தமிழ்99 தட்டச்சு முறை பிடித்து இருந்தது. ஆனால் டாம் என்கோடிங் இனி வலைப்பதிவுகளுக்கோ வலையகங்களுக்கோ (விகடன் தளம் மற்றும் சில தமிழக வலைத்தளங்கள் தவிர) அதிகம் பலனளிக்காது என்பதால் பொதுவாக அதை விட்டு விட்டேன். ஆனாலும் இன்னும் யூனிகோடு பயன்படுத்தமுடியாத சில இடங்களில் பலரும் பாமினியை பயன்படுத்தும்போது நான் tam என்கோடிங் (விகடன் உள்ளிட்ட எழுத்துருக்கள்) பயன்படுத்துகிறேன்.

எனினும் தட்டச்சு முறைக்கு எப்போதுமே தமிழ்99 தான் பயன்படுத்துகிறேன். எகலப்பையிலும் தமிழ்99 யூனிகோடு தட்டச்சு இருக்கிறது. மேலும் அழகி, குறள் தமிழ்ச்செயலிகள் மூலமாகவும் தமிழ்99 யூனிகோடில் தட்டச்ச முடிகிறது.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.