Friday, July 14, 2006

தமிழ்மணம் சிறு நாட்களாக சற்றே சூடாக உள்ளது.

தமிழ்மணம் கடந்த சிறு நாட்களாக சற்றே சூடாக உள்ளது. கொஞ்சம் கவனம் திருப்ப இந்த பதிவு. மிக, மிக, அவசரமாக எழுத பட்டது. பிடித்த தமிழ் வரிகளை இங்கே தந்துள்ளேன்.
1. குரங்கென்று அதன் வாலில் தீ வைத்தானே

அது கொளுத்தியதோ அவன் ஆண்ட தீவைத்தானே,
2. கலவரம் அது இங்கே தினம் வரும்
அது வரும்போதெல்லாம் வெறுமனே

நிற்கும் சிலைகளின்
உயிரும் பிடுங்கப்படும்"
3. நினைக்கத் தெரிந்த மனமே

உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே -
உனக்கு விலகத் தெரியாதா?
4 . காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால்போல் சிரிப்பதில் பிள்ளை

பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை -
அவள் கவிஞனாக்கினாள் என்னை
5. செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

இதே போன்று உங்களுக்கு பிடித்த வரிகளின் தொகுப்பை வெளியிட்டு கொஞ்சம் தமிழ்மணம் பரப்பும் படி அனைத்து பதிவர்களையும் கேட்டு கொள்கிறேன். குறிப்பாக
1. முத்து தமிழினி.

2. குழலி.
3. பெனாத்தல் சுரேஷ்
4. கடற்புரத்தான் ஜோ.
5. தமிழ் சசி.
6. கோவி. கண்ணன்
7. மாயவரத்தான்.
மேற்சொன்ன 7 பேரையும்.

எல்லாரையும் அழைத்து விட்டு எதற்கு 7 பேர் மட்டும் தனியாக என்று நீங்கள் நினைக்கலாம். பொதுப்ப்டையான அழைப்பு அனைவராலும் மறக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே தான் இந்த 7 பேரையும் தனியாக குறிப்பிட்டுள்ளேன். சூடு தணிந்தால் சரி.

13 comments:

மாயவரத்தான் said...

அவங்கள (அந்த 6 பேரையும்) எழுத சொல்லுங்க.. நான் எழுதுறேன். (நாயகன் ஸ்டைலில் படிக்கவும்)

புதுமை விரும்பி said...

பாலசந்தர் கணேசன்.

தங்கள் செய்திக்கு நன்றி. இதோ, தேவையானதைச் செய்துவிடுகிறேன்.

பாலசந்தர் கணேசன். said...

பாராட்டுகிறேன். புதுமை விரும்பி அவர்களே.

கோவி.கண்ணன் said...

நீங்கள் சொன்னா கேட்கமாட்டோமோ ? எழுதிட்ட போவுது... இன்னிக்கு என்ன எழுதாலாம்னு யோசிச்சிகிட்டே இருந்தேன்.. நீங்கள் தலைப்பில் எழுதியுள்ள அதே உணர்வில், முன்பே குழலியின் இன்றைய பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளேன்.

ஆனால் என்பெயரை என் தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரியவில்லை.

Anonymous said...

//சூடு தணிந்தால் சரி.//
அதுக்கு என்னங்க, அடுப்ப ஆப் பண்ணிட்டா போச்சு.

நாகை சிவா said...

//ஆனால் என்பெயரை என் தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரியவில்லை. //
அதானா?

பரவாயில்லை, உங்களா சூடு தணியுமுணா நல்லது தானே, எழுதுங்க கண்ணன்.

மாயவரத்தாரே, குசும்பு ரொம்பவே ஜாஸ்தியா தான் இருக்கு

குமரன் (Kumaran) said...

கிளம்பிட்டாய்ங்கையா கிளம்பிட்டாய்ங்க. இனிமே 7 பதிவுன்னு ஒன்னு ஒரு சுற்று வருமா? :-)))

தீ வைத்தானே; தீவைத் தானே - இதனை நன்கு ரசித்தேன் பாலச்சந்தர் கணேசன்.

முகமூடி said...

பகுதி 1) உங்கள் பதிவில் நான் கண்ட பிழைகள் (நீங்கள் அவசரமாக எழுதியதால் இருக்கலாம்) ::

அ) தமிழ் வலையுலகம் சூடாக உள்ளது என்று இருக்க வேண்டியது தமிழ்மணம் சூடாக உள்ளது என்று உள்ளது (தமிழ்மணத்தை அவதூறு பரப்புகிறீர்கள் என்று யாராவது பின்னூட்டம் போட்டு அப்புறம் அதை ஒரு பதிவாகவும் போட்டு அதற்கு பதில் சொல்ல சில பின்னூட்டங்கள் பதிவுகள் என்று சங்கிலித்தொடர் சூடு பரவுவதை தடுக்கவே இந்த யோசனை)

ஆ) உங்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்ட முதல் ஐந்து பேருக்கு மட்டும் பொருத்தமான வரிகளை மேலே தந்துவிட்டு இரண்டு பேரை டீலில் விடுவதன் மூலம் பாரபட்சம், பாகுபாடு காண்பித்து அவர்களிடம் சூட்டை கிளப்ப நீங்களே முயல்கிறீர்கள்

**

பகுதி 2) குறிப்பாக ஒரு ஏழு பேர் பெயரை மட்டும் பட்டியலில் சொல்லக்காரணம் ::

அ) இவர்கள் ஏழு பேரால்தான் தமிழ் வலையுலகம் சூடாக உள்ளது
ஆ) இவர்கள் நல்ல முறையில் தமிழ்மணம் பரப்பினாலே எல்லா ப்ரச்னையும் தீர்ந்துவிடும்
இ) All of the above

**

தேவையான இடங்களில் இந்த ஸ்மைலிக்களை தூவிக்கொள்ளவும் :) :) :) :) :) :) :) :) :)

பாலசந்தர் கணேசன். said...

தமிழ் வலையுலகம் சூடாக உள்ளது என்ற அர்த்தத்தில் தான் எழுதி உள்ளேன்.
"உங்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்ட முதல் ஐந்து பேருக்கு மட்டும் பொருத்தமான வரிகளை "

கோவி.கண்ணன் ஏற்கனவே எழுதி சூடு தணித்து விட்டார். போஸ்டான் பாலாவும் தன் பங்குக்கு ஏ.சி யை ஆன் பண்ணி விட்டார்.

2) குறிப்பாக ஒரு ஏழு பேர் பெயரை மட்டும் பட்டியலில் சொல்லக்காரணம் ::

ஈ. மேற் கொண்ட காரணம் எதுவும் இல்லை.

ஸ்மைலிகளை எல்லா இடத்திலும் தூவுவோம்.

கோவி.கண்ணன் said...

//ஸ்மைலிகளை எல்லா இடத்திலும் தூவுவோம்.//
சூப்பர் ஒரே வரியில் நச்சின்னு சொல்லிட்டிங்க :))))

கால்கரி சிவா said...

காலெஜ் ஜூனியர்,

அப்ப நான் எத்துறது...

அதெல்லாம் சூடு இல்லையா

அல்லது சீனியர் என்பதால் கண்டுக்காமே விட்டீங்களா

எனக்கு சூடு எறிடிச்சி :)

பிடிங்க ஒரு ஜிகர்தண்டா :)

பாலசந்தர் கணேசன். said...

சீனியர்,

ஆறு போட அழைத்த சீனியரை நான் மறப்பேனா? அடிக்கிறேன் நான் உங்களுக்கு ஒரு எம்.ஐ.டி சல்யூட்.

நன்றி சீனியர்.

Anonymous said...

டேய் டேய் டேய் பேச்சக் கொறைடா.