Thursday, March 30, 2006

சேவாக்கின் தடுமாற்றம்.

இரண்டு ஒப்பனர்களும் மோசமான ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு ஒரு கவலை தரும் விஷயமே. உலக கோப்பை வெல்லும் நோக்கத்தோடு இந்த இந்திய அணி செயல்படுவது திருப்தி கரமாக இருப்பினும் , சில விஷயங்களில் தேர்வாளர்களும், சாப்பலும் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ என்றே தோன்றுகிறது.
காம்பீர் துவக்க ஆட்டகாரர் என்ற வகையில் பார்க்கும்போது கங்குலியை விட சிறப்பானவராக தெரியவில்லை. கங்குலியை இவர்கள் ஒரேடியாக மட்டம் தட்டுவது போல தோன்றுகிறது. மூன்றாவது துவக்க ஆட்டகாரர் என்ற நிலையில் கங்குலியை காம்பீருக்கு பதிலாக வைத்திருக்கலாம். டெண்டுல்கர் அல்லது சேவாக் ஆட இயலாத நிலையில் கங்குலி ஆடலாம். அவர் முன்னை விட சிறப்பாக ஆட முனைகிறார்.
இனிமேல் எடுக்கவே கூடாது என்று ஒரு ஆட்டகாரரை ஒதுக்கி வைப்பது நல்லது அல்ல. ட்ராவிட், டெண்டுல்கர்,சேவாக் போன்றவர்களில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு ஆடமுடியாமல் போனால் அது நமது அணியினை கடுமையாக பாதிக்கும். இதனை மனதில் கொண்டு கங்குலியை அணியில் வைத்திருப்பது நல்லது. இதனை சொல்வதனால் உடனடியாக நான் கங்குலியின் ஆதரவாளன் என்று கருத வேண்டாம். டெண்டுல்கர் உடல் நிலை முன்பு போல இல்லாத நிலையில் கங்குலி இருப்பது நன்றே என நான் கருதுகிறேன்.

2 comments:

Muthu said...

பாலு,

அப்படி அல்ல..sehwag has been sorted out by the bowlers...அவருடைய வீக் பாயிண்ட்டுகள் தெளிவாக இருப்பதால் அவர் சீக்கிரமாக அவுட் ஆகிறார்.

பொதுவாக இந்திய ஆட்டக்காரர்கள் பேட்ஸ்மென்களுக்கு சாதகமான பிட்சில் பட்டையை கிளப்புவார்கள்.(டென்டுல்கரையும் சேர்த்து).

டெக்னிக் அவ்வளவாக இல்லை என்று நினைக்கிறேன்.

(தோனியின் ஆட்டம் ஒரு உதாரணம்)

Selvakumar said...

உண்மையே.. முகமது கைப் போன்றோரின் மோசமான் ஆட்டத்தையும் நாம் இங்கு நினைவில் எடுத்தும் கொள்ள வேண்டும். இவர்களிடன் ஒப்பிடும்போது கங்குலி ஒன்றும் மோசமான வீரர் அல்ல. இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது நல்லதுதான். அதற்காக ஒரு நல்ல விளையாட்டு வீரரை வீணடிப்பதும் நல்லதல்லவே !!

செல்வகுமார்