Monday, November 28, 2005

டாஸ் .....

டாஸ் .....
தற்போது முடிந்த ஒரு நாள் போட்டிகளில் அனைத்து போட்டியுலும் டாஸ் ஜெயித்த அணி வெற்றி பெற்றுள்ளது. முந்தியெல்லாம் டாஸ் யார் முதலில் ஆடுவார்கள் என்பதை டிசைட் செய்த்து. இப்போழுது யார் ஜெயிப்பார்கள் என்பதையே டிசைட் செய்கிறது. ஏனெனில் இப்போது முதலில் ஆடுகிற அணி தோறு விடுகிறது.

என்னை தொடர்பு கொள்ளுங்கள்...

முழுக்க முழுக்க ஆர்வத்தினாலேயே என்னுடைய முயற்சி ஆரம்பிக்க பட்டுள்ளது. பணம் கொடுக்க விரும்புவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். நான் தற்போது கனடாவில் இருக்கிறேன். நானும் அலுவலக நண்பர்களும் இணைந்து செயல்பட்டு இந்த பணத்தினை தமிழக அரசுக்கு அளிக்க இருக்கிறோம்.

Sunday, November 27, 2005

உங்கள் உதவியை எதிர்பார்க்கும் மக்களுக்கு

தமிழ் நண்பர்களே,
கடும் மழையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உள்ளதா?. கடுமையான பாதிப்புக்குள்ளாயிர்க்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். இது மிக அவசரம். அவசியமும் கூட.

contact me at balachandarg@hotmail.com

Friday, November 25, 2005

உதவும் விருப்பம் உண்டா?என்னை தொடர்பு கொள்ளவும்.

அம்மா பாட்டுக்கு இலவசமா வாரி இரைக்க, இன்னைக்கு நிவாரணம் கொடுக்க நிதி இல்லை.உண்மையிலேயே சமுகத்தில் கீழ் நிலைமையில் இருப்பவர்களின் நிலைமை ரொம்ப மோசம். இயற்கை சீறும் போது அதை கொஞ்சம் கூட பாதுகாப்பின்றி மேற்கொள்பவர்கள் பற்றி சமூகம் கொன்Jஅம் கூட அக்கறையின்றி இருப்பது வருத்ததிற்குரியது.

கூத்தாடி பயல்கள் பின்னாடியும், ஜாதி காரர்கள் பின்னாடியும் ஓடினாதல் வந்த வினை இது. ஒருவனுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஊரே எதிர்த்து நிற்கும் ஓற்றுமை வந்தால் இந்த அவலம் போகும். வெப் பிலாக் செய்யும் மக்களே, உங்களுக்கு உதவும் எண்ணம் இருந்தால்

balachandarg@hotmail.com தொடர்பு கொள்ளவும்.


இந்தியாவின் வெற்றி தொடருமா

இந்தியா இந்த போட்டியின் போது எடுத்த முடிவுகள் ஆச்சரிய பட வைத்தன.
1. தென் ஆப்பிரிக்காவின் பலமான பந்து வீச்சிற்கு எதிராக ஆடும் அளவுக்கு இர்ஃபான் நல்ல ஆட்டக் காரரா?
2. ப்ரதாப் சிங் 4 ஒவர் மட்டுமே வீசினார்.ஏன்?
3.சூழ்நிலைக்கு தக்கவாறு சில முடிவுகள் மாற்றப் படலாம். ஆனால் அதற்காக இந்த அளவுக்கு மாற்றங்கள் தேவையா?.விட்டால் சாப்பல் அவரே ஒப்பன் பண்ணுவார் போலிருக்கு?
நான் ஏற்கனவே எழுதிய ப்லொக் பார்க்கவும்.
http://bunksparty.blogspot.com/2005/11/blog-post_18.html

Thursday, November 24, 2005

ஒரு வேளை வாயை மூடியிருந்தால்...

ரொம்ப சிரமத்திற்கு இடையே, டெஸ்ட் அணியில் மட்டும் கங்குலிக்கு இடம் கிடைத்திருக்கிறது.உண்மையிலேயே, கங்குலி டெஸ்டை விட நன்றாக ஒன்டே மாட்சுகளில் ஆடுபவர். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது அவருக்கு ஒன்டே அணியில் இடம் கிடைத்திருக்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டால், இரண்டு அணியிலும் கிடைத்திருக்க கூடாது.
இந்த அளவுக்கு நிலைமை மோசமாக போனதற்கு கங்குலி மிக முக்கிய காரணம். ஒரு வேளை ஜிம்பாப்வேயில் அவர் வாயை மூடியிருந்தால், இன்னமும் கூட அவர் பதவியில் நீடித்திருந்திருக்கலாம்.அவர் இடம், பதவி இரண்டையும் இழந்ததற்கு இந்த பிரச்சினையே காரணம். (மோசமான ஆட்டம் காரணம் என்றால் அவர் எப்பொழுதோ இவற்றை இழந்திருக்க வேண்டும்.) தேவையே இல்லாமல் பிரச்சினையை கிளறி விட்டு , இப்போது அவஸ்தை படுகிறார்.

Tuesday, November 22, 2005

இது தான் அரசியல்.

15 வருஷம் கழிச்சு பீகார் மக்களுக்கு கொஞ்சம் அறிவு வந்திருக்கு. எந்த அளவுக்கு?. லாலு வேணாம் அப்படிங்கிற அளவுக்கு. இதுக்கே இவ்வளவு நாள். இனிமே எப்ப அவங்க முன்னேற?.

லாலு தோத்ததில , அவரை எதிர்த்து நின்ன B.J.P ய விட, அவர் கூட கூட்டணி வைச்சிருக்க காங்கிரசுக்கு ரொம்ப குஷி... இது தான் சூப்பர் அரசியல்....

Sunday, November 20, 2005

சொன்னாலும் சொல்வார்கள்......

இந்தியன் எக்ஸ்ப்ரஸ், ஹிந்து பத்திரிக்கைகள் தமிழில் வெளியிட பட வேண்டும். தமிழன் செய்தியை தமிழில் சொன்னால் படிக்க மாட்டானா?.(ராமதாசு).


அம்மாவின் உயர்ந்த குணத்தினால் தான் இன்று இந்தியா தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து நன்றாக ஆட முடிகிறது.(பொன்னையன்).


சென்னை நகர் தண்ணிரீல் மூழ்கி சீரழிவதை தடுக்கும் யோசனைகளை நிபுணர்களுடன் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அது முடிந்தவுடன் சென்னை திரும்புவேன்.(கராத்தே தியாகராஜன்).


நான் குஷ்புவை தான் ஆதரித்தேன். குஷ்புவின் கருத்தையல்ல. தமிழர்களின் கருத்தை தான் எதிர்த்தேன் தமிழர்களை அல்ல.(சுகாசினி).


நூறு கோடி மக்களையும் சோதித்து பார்த்து அதிலிருந்து சிறந்த வீரர்களை கொண்டு 2007 உலக கோப்பை அணியை உருவாக்க வேண்டும்.(சாப்பல்)


மழை நிறைய பெய்ததால் மட்டும் ஊர் நிறையவில்லை. மக்கள் கண்ணீரினால் நிறைந்திருக்கிறது என்பதை இந்த அரசு அறியுமா.(கருணாநிதி).

Saturday, November 19, 2005

சிவகாசியின் மிக பெரிய வெற்றி

மிக சாதாரணமான கதை. நடு நடுவே சண்டை, பாட்டு,இன்டர்வெல், முருக்கு, சண்டை, பாட்டு.இப்படியாக வரிசையாக விஜய் படம் எடுத்துக் கொண்டு வருகிறார். வரிசையாக அந்த படங்களும் ஓடுகிறது.
இன்னும் 10,15 வருடங்களில் விஜய் டிவியில் எந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று அறிவுரை கூறி ஆதரவு தெரிவிப்பர். சொந்த புத்தியில்லாத ரசிகர்களும் அதை கேட்டுக் கொண்டு நாயாக அலைந்து பிரசாரம் செய்வார்கள். இல்லாவிட்டால் விஜயே ஒரு கட்சி அமைப்பார். அதில் சங்கவி, திரிஷா மற்றும் அசின் பிரசார பீரங்கிகளாக மாறி தமிழ் நாட்டை இன்னும் சீரழிப்பார்கள்.


தமிழ் நாட்டின் மோசமான ஒரு அம்சம், கலைஞர், ஜெயலலிதா விட்டால் நாதி இல்லை என்பது.முற்றிலும் ஒழிக்கல் பட வேண்டிய அம்சங்கள் பா,ம.க., ம.தி,மு.க.
இந்த ரெண்டு கட்சிகளை விட விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் ரொம்பவே பெட்டர்.

மாற வேண்டிய குணங்கள்.

தமிழனிடம் இருந்து ஒழிய வேண்டிய குணங்கள்.
1. கூத்தாடி பயல்களுக்கு கொடுக்க ப்படும் அதிகப் படியான முக்கியத்துவம்.
2. இளிச்ச வாயனை போட்டு மிதிப்பது.
3. தவற்றை கண்டிக்கும் குணம் அற்று இருப்பது.
4. தி.மு.க வை இன்னும் நம்புவது.
5. அ.தி.மு.க. வை இன்னும் நம்புவது.
6. சற்றும் மறையாத ஜாதி வெறி.
7. தனி மனித ஆராதனை.
8. இன்னும் மாறாத அரசியல் கலாச்சாரம்.

தைரியமா சிந்திக்க வேண்டும்.

குஷ்பு மேல 25 கேசு. சுகாசினி மேல இப்ப புதுசா ஒரு கேசு. விஜய்,ரத்னம்,அசின்(?) மேல கேசு.நாட்டுல ஏற்கனவே இருக்குற கேசு பத்தாதுண்ணு புதுசா இத்தனை கேசு, ஜனநாயக நாட்டில இளிச்சவாயனைத்தான் எல்லாரும் விரட்டுவாங்க என்பதற்கு இது எல்லாம் எடுத்துக் காட்டு.

இதே கருத்தை கருணாநிதி , ஜெயலலிதா சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பாங்க.. எல்லாரும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருந்திருப்பாங்க... கூத்தாடி பயல்கள கோயில் கட்டி கொண்டாடுவதும் தப்பு. இந்த மாதிரி ஊரே ஒண்ணா சேந்து அடிக்கிறதும் தப்பு.
உங்க ஊருக்கு எந்த நல்லதும் பண்ணாத சட்ட மன்ற உறுப்பினரையோ. நாடளு மன்ற உறுப்பினரையோ கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கா? எவ்வளவோ நல்லது செஞ்ச உறுப்பினர் செழியனை விட்டுட்டு ஒரு கூத்தாடி பொம்பளைய (வைஜயந்திமாலா) அனுப்பிச்ச ஊர் தான் இது.மண்டையில் மூளை இல்லாத தமிழனை இந்த ஜென்மத்துக்கும் மாத்த முடியாது... இனிமேயாவது தமிழன் தைரியமா சிந்திக்க கத்துக்க வேண்டும்.

Friday, November 18, 2005

இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா சமீப காலமாக நன்றாக ஆடி வருவது போல் ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. ஆனால் உண்மையில் இலங்கை மிக மோசமாக ஆடியது. சொல்லப் போனால் இந்த தொடரை இந்தியா 7 மேட்சிலும் ஜெயித்திருக்க வேண்டும்.
முதல் ஆட்டத்தில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா எளிதாகவே வென்றது. இந்த தொடர் இந்தியாவின் உண்மையான பலத்தை வெளியெ கொண்டு வரும். நிறைய வீரர்கள் இருப்பது மிக நன்றாக ஆடியிருப்பது உண்மை என்றாலும் கூட, இந்தியா தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எல்லாரையும் போல எப்பவும் அதிகப் படியாக கருத்துக்கள் உருவாக்க நான் தயாராக இல்லை. இந்த வீரியம் எல்லா நாட்டிற்கு எதிராக வெளிப் பட வ்
கங்குலி மீண்டும் அணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

Thursday, November 17, 2005

அது ஒரு "அறுவை" காலம்

ஒரு ஊர்லெ ஒரு அம்மா அப்பா, அவிங்களுக்கு ஒரு வேல வெட்டி இல்லாத வயசு பையன். ஊட்டாண்ட ஒரு வயசான வேலக்கார அம்மா இருக்கு. அப்பனும் ஆத்தாளும் ஒரு வாரம் வெளியூர் போயிடுராங்க. அந்த நேரம் பார்த்து வேலகார அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமா போயிடுது. தன்னோட வயசு பொண்ண வேலைக்கு அனுப்புது. நம்ம வயசு பையனும்(தனுஷ்), வயசு பொண்ணும்(ப்ரியா மணி) 7 நாலு ஒரே வீட்டுல தனியா இருக்காங்க.......

ஹலோ!, நான் மருதம் கதை சொல்லவில்லை, இது நம்ம பாலு மகேந்திரா சாரோட கதை. தனுஸ் ஏற்கனவே தனக்கு தானே குழியை தோண்டி மூடிகொண்டவர் என்பது தெரியும், இப்படத்தின் மூலம் பாலு மூடின குழியின் மேல் ஒரு பாரங்கல்லை வைத்து விடுகிறார்.

தியேட்டரில் என்னோட சேத்து 4 பேரு இருந்தார்கள்! (நாலாவது ஆளின் கையில் டார்ச் லைட் இருந்தது!).
இந்த கதைய கேட்டுட்டு குஜால் படம் என்று நினைபவர்களுக்கு. அந்த 7 நாளும் என்ன நடந்ததுன்னு இப்ப, இப்ப சொல்கிறேன்!

பாரா 4
======
முதல் நாள் காலையில் 7 மணிக்கு காலிங் பெல் அடிக்கிறது, பிரியா மணி கதவை திறந்து பாலை எடுக்கிறார். கதவை திரும்பவும் சாத்துகிறார், மெதுவாக கிட்சனுக்கு செல்கிறார். கேஸ் பற்ற வைக்கிறார். சட்டியில் பாலை ஊத்துகிறார். ஹாலுக்கு வந்து தனுஷ் தூங்கும் அலங்கோலத்தை பார்கிறார். புன்னகை பூத்தபடி தனுஷின் அழுக்கு ஜீன்சை எடுக்கிறார். அழுக்கு டி-ஷர்ட்டை எடுத்து முகர்ந்து பார்கிறார். திடீரென்று பால் கொதிப்பது ஞாபகம் வருகிறது (வீட்டில் பால் கொதிக்க எவ்வளவு நேரம் ஆகுமொ, அதெ நேரம் படத்திலும் ஆகிறது!). ஓடி சென்று பாலை அப்படியெ தூக்கிகிறார். கை சுட்டு விடுகிறது. தன்ஷ் ஓடி வந்து பர்னால் போடுகிறார். இருவரும் காபி குடிக்கிறார்கள்.காலை டிபன் தோசை சாப்பிடுகிறார்கள்., மதியம் முருங்கை காய் சாம்பார் சாதம் சாபிடுகிறார்கள். சாயங்காலம் திரும்பவும் காபி குடிகிறார்கள், டின்னருக்கு காலையில் செய்த தோசையை, மதியம் செய்த முருங்கை காய் சாம்பாரில் தொட்டு சாப்பிடுகிறார்கள். இப்படியாக நைட் நைட் லாம்ப் போடும் வரை செல்கிறது முதல் நாள்.

அதற்குபின் விளக்கமாக "காட்டி" இருந்தால் பரவாயில்லை. திரும்பவும் மறுநாள் காலிங் பெல் அடிக்கிறது. இதன் பிறகு நான் சொன்னால் என்னை அடி போடுவீர்கள் என்பதால் ஒரு ப்ரொக்ராம் போட்டு விடுகிறேன்.

for i = 1 to 7
read பாரா 4
next


இந்த ப்ரொக்ராம் எக்ஸிக்கியூட் ஆகி முடியும் போது எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த இடை வேலை வந்து விடுகிறது. தியேட்டரில் இருந்த 4 பேரில் இரண்டு பேரை காண வில்லை!

இடைவேளைக்கு பிறகு தனுஷ் காதலியை தேடி ஊட்டிக்கு போகிறார்... போகிறார்... போயிகிட்டே இருக்கார்...... ஊட்டி ரோடு மேப் உங்ககிட்ட இல்லாட்டி இந்த படத்தை பாருங்க. ஊட்டிக்கு உங்கள நடந்தே அலைச்சிகிட்டு போறாங்க.அதற்குபின் வரும் அபத்தமான கிளைமாக்ஸ் பற்றி சொல்ல விரும்பவில்லை.

முடிவில் ஒரு விசயம். பாலு சார்,

நீங்க மூன்றாம் பிறை, மூடுபனி போன்ற அருமையான படங்களை எடுத்தவர் தான்.
"அது ஒரு பொற்காலம்".

ஆனால் இப்போதெல்லாம் முதல் இரண்டு ரீலிலேயெ ஹீரோ ஹீரோயினுக்கு
கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்து, கிளைமேக்ஸில் அப்பனும் மகனும்
சேந்து வில்லனை அடிக்கிறார்கள்.
இது ஒரு "பாஸ்ட் புட்" காலம்.

ஒங்களை குறை சொல்லவில்லை, ரசிகர்கள் மாறி விட்டர்கள்,
அது திரையுலகின் "போறாத" காலம்.

தலைப்பிற்கேற்ப, ரசிகர்கள் தியேட்டரில் தூங்கிவிடுவதால்
அது ஒரு "கனா" காலம்


எதற்கும் அஞ்சாத சிங்கம் மா பெரும் மேதை சோ ராமசாமி.

ஜோதி வழக்கம் போல ஒரு சூடான மெயில தட்டி விட்டார். இந்த ப்லாகில் நான் மட்டுமில்லை, சிவாமற்றும் பல நண்பர்கள் எழுதுகிறார்கள். இந்த ஆர்டிகிள் ஜோதிக்காக சமர்ப்பணம் செய்யப் படுகிறது.

எல்லா விஷயத்திலும் நன்கு அறிவு பூர்வமாக செயல்படும் ,வாதம் புரியும் சிலர், சோ ராமசாமி விஷயத்தில் மிக பெரிய தவறுகள் செய்கிறார்கள். இந்த அளவுக்கு சமூக பொறுப்புணர்ச்சி உள்ள பத்திரிக்கையாளர் இந்த நாட்டில் மிக குறைவு. கோயங்கா, சோ போன்றவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய பங்கு மிக பெரிது. ஜனநாயத்தின் மிக பெரிய தூண் என்று தன்னை தானே அழைத்துக் கொண்டு சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் மீடியா உலகில் சோ போன்றவர்கள் கொள்கை உணர்ச்சியோடு சீரிய முறையில் நடத்தி வருகிறார்கள்.
ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் என்றொ, அல்லது மக்கள் புத்திசாலித் தனமாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை. ஜன நாயகத்தின் ஒரு பெரிய குறை பாடுகளில் இதும் ஓன்று.

காரணம் எதுவும் இன்றி எதிர்ப்பது தவறு.(காரணம் இன்றி ஆதரிப்பதும் தவறு.) என்னுடைய ஆதரவுக்கு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். எதிர்ப்பவர்களால் ஆணித் தரமாக விமர்சிக்க முடிந்தால்(முடியுமா?), அதை ஏற்றுக் கொள்ள நான் தயாரகவே இருக்கிறேன்.

Tuesday, November 15, 2005

"வெடி" காசி

சமீப காலமாக தமிழ் படங்களுக்கு கதை தேவையில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் முதன் முறையாக, படத்துக்கு டைரக்டரே தேவையில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் "வல்லரசு".

இப்படத்தினால் தீபாவளி பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கபட்டதாம்! ஏனென்றால் இப்படத்தின் CD'யை புல் வால்யும் வைத்து கேட்டாலெ ஒரு 10000 வாலா வெடித்த எபெக்ட் கிடைக்கிறதாம்,. அப்படி இறைச்சலில் நம்மை செவிடாக்குகிறார் தேவாவின் புதல்வர்.

உலக திரைபட வரிசையிலேயெ முதன் முறையாக, கதானயகனை காட்டும் முன்பெ அவன் செய்யும் தொழில் தெரிந்து விடுகிறது. கதானயகன் ஷ்ட்டரை வெல்டிங் கன் மூலமாக அறுத்து கொன்டு வெளிவருகிறார்!

டைரக்டர் பழமைவாதி என்பதற்காக "மனோகரா" லெவெலுக்கு போயிருக்க தேவையில்லை. படத்தின் பல காட்சிகள் 1978ஐ நினைவு படுத்துகின்றன. சில காட்சிகள் 1977ஐ நினைவு படுத்துகின்றன. பிரகாசமான ராஜ் அவர்கள் நன்றி கடனுக்காக பன்றியை விட கேவலமாக உபயோகபடுத்தபட்டுள்ளார்.

வழக்கம்போல ஒரு "எழுச்சி" ஊட்டும் டைட்டில் சாங்.(பாதி பேரு எழுந்து போய் விட்டதால்!). அட்லீஸ்ட் அதை இப்படி மாத்தி இருந்தால் மக்கள் உட்கார்ந்து பாத்து இருப்பார்கள்!

வாடா வாடா வாடா வாடா தோழா!
வந்து படத்த பாரு படத்த பாரு ரசிகா!
நீயும் கூட என் படத்த பாக்காட்டி
வேற எந்த நாயும் பாக்காதுடா ரசிகா!

ஒன்னோட உயர்வுக்கு ஒன்னொட வேர்வை
என்னோட உயர்வுக்கு "எங்கப்பனோட" வேர்வை
நம்ப எல்லாரோட வியர்வையும் ஒன்னா சேர்ந்தா...!
ஹை
ஹை
ஹை...

நாத்தம் தாங்காதுடா... மூக்க பொத்துங்கடா....
கோரஸ் : நாத்தம் தாங்காதுடா... மூக்க பொத்துங்கடா....

நீங்களும் T.ராஜேந்தர் மாதிரி கவிதை எழுதலாம்.

டேய்....
நான் சோத்துல போடுவேன் உப்பு.
..பண்ண மாட்டேன் தப்பு.
என் பையன் பேரு சிம்பு...
அவனுக்கு இருக்கு தெம்பு...

எங்கிட்ட வேணாம் வம்பு...
மாட்டுக்கு ரெண்டு கொம்பு..


நான் மட்டும் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு..

ஏ டண்டனக்கர டணக்குனக்கர...
ஏ டண்டனக்கர டணக்குனக்கர...

Monday, November 14, 2005

சன் TVயில் உங்கள் பேட்டி வர வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி.

சன் TVயில் உங்கள் பேட்டி வர வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி.
1. உங்கள் வீட்டு குப்பையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் வெளியில் கொட்டுங்கள்.2. பக்கத்து வீட்ட்க்காரர்களையும் அவ்வாறே செய்யச் சொல்லுங்கள்.3. அதையெல்லாம் கொளுத்தி விட்டு "குஷ்பு ஓழிக , சுகாசினி ஒழிக" என்று கத்துங்கள்.3. சன் TV உடனடியாக வந்து அதை வீடியோ எடுத்துக் கொண்டு போய் TV யில் போடுவார்கள். " கொடும் பாவி கொளுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்ற தலைப்போடு.
வெகு விரைவில் ஜெயா TVயில் தோன்றுவது எப்படி என்ற கட்டுரை வரும்....

விடாது கருத்து...

விடாது கருத்து...
பிரச்சினையெல்லாம் ஆரிப்போன பின்னாடி திருப்பி கிளப்பி விட்டிருக்காங்க ரெண்டு அம்மணிகளும். இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் வேற. மொத்ததுல எல்லாம் பக்கா சினிமா ஸ்டண்ட். முந்தில்லாம் இது மாதிரி எல்லாம் சினிமாவில மட்டும் தான் நடக்கும். இப்ப எல்லாம் நிஜத்திலயே நடக்குது.


தமிழன் ஒரு சிறந்த கலாரசிகன். அவனுக்குத்தான் உயர்ந்த (கூத்தாடி பயல்களையெல்லாம் ஆட்சியில் அமரவைக்கும் அளவுக்கு ரசனை உண்டு. கலையின் விலை அறிந்தவன்(300 ரூபா கொடுத்து படம் பார்க்கும் இளிச்சவாயன்) என்று அறிக்கை விட்டால் பிரச்சினை முடிந்து விடும்.

Saturday, November 12, 2005

பிடிச்சுட்டாங்க....

எல்லாரும் இப்ப பேப்பர்ல பாத்திருப்பிங்க அபு அலீம் மற்றும் மோனிகா ரெண்டு பேரையும் இந்தியாவுக்கு அரஸ்ட் பண்ணி கொண்டு வந்துருக்காங்க..
இதுல புரியாத ஒண்ணு என்னன்னா வேற வழியில்லாததுனால விசாரணை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே மரண தண்டனை கிடையாதுங்குற உறுதி மொழிய கொடுக்க வேண்டியிருக்கு. இப்ப ஒரு போர்ச்சுகல் குடிமகன் இந்தியாவுக்கு குண்டு போட்டு மாட்டுகிட்டா மரண தண்டனை கிடைக்கலாம். அவன காப்பாத்த போர்ச்சுகல் நாடால முடியாது. ஆனா அபு சலீம் மாதிரி இந்திய குடிமகன் குண்டு போட்டுட்டு இந்தியாவில் இருந்து போர்ச்சுகல் ஒடிட்டா அவன போர்ச்சுகல் நாடு மனித உரிமைய காரணம் காட்டி காப்பாத்திரும். செத்து போன அப்பாவி மக்களுக்கெல்லாம் மனித உரிமை கிடையாதா? இந்தியாவில இந்தியன் பண்ண குற்றத்துக்கு என்ன தண்டனை அப்படின்னு நிபந்தனை விதிக்க போர்சுகலுக்கு உரிமை உண்டா?. இந்த மாதிரி நிபந்தனையினால போர்சுகல் தன்ன ஒரு மனித உரிமை டுங்கியா காட்டிக்க பயன் படுமே தவிர ஒரு பிரயோஜனமும் கிடையாது.

Friday, November 11, 2005

முரண்பாடுகள்

குண்டு துளைக்காத மேடையில்...
பிரதமரின் உரை...
சுதந்திரத்தை பற்றி!

Thursday, November 10, 2005

அன்னியன் - கலைஞர்.....

கலைஞர் பிரிச்சிட்டாரு சொத்தை. அதற்கு ஒரு அதிகார பூர்வ அறிவிப்பு வேறு. புதியதாக ஒரு அறக்கட்டளை வேறு. தலைக்கு கொறஞ்சது 5 கோடி கொடுக்கப் பட்டதாக தகவல்.உண்மையிலே பாரட்டப் பட வேண்டிய தலைவர்களில் கலைஞரும் ஒருவர். தொடர்ச்சியாக 13 ஆண்டு காலம் தோல்வி அடைந்த போதும் கட்சியை எஃகு கோட்டையாக கட்டிகாத்த மன வலிமை மிக்க சிங்கம் கருணாநிதி. இப்ப மொத்தமா கட்சியை பையன், பேரன் கையில் கொடுக்க தயாராகி விட்டாலும், அவர்கள் இருவருமே தனித்துவம் இல்லாதவர்கள் என்பதும், தொண்டர்களால் பெரிதும் மதிக்கப் படாதவர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.
அன்னியன் படத்தில் ஒரு டயலாக் வரும். அஞ்சு பைசா திருடினா தப்பா?... அப்படின்னு.. சினிமாவுக்கும் நிஜத்துக்கும் இது தான் வித்தியாசம்.

Tuesday, November 08, 2005

பழைய பேப்பர் கடை..



1. அம்மா நடத்திய கின்னஸ் கல்யாணம்.

கின்னஸ் பத்திரிக்கையிலிருந்து சில வரிகள்- "Jayalalitha Jayaram, a movie star and former chief minister of Tamil Nadu, India, hosted and paid for a luncheon for over 150,000 guests at the wedding of her foster son, V.N.Sudhakaran to N.Sathyalakshmi. The banquet was served by the coast in the state capital, Chennai, on 7 Sept 1995. "
இந்த விஷயம் ஒரு கின்னஸ் ரெக்கார்டு என்பது ஒரு பெரிய கொடுமை. ஆதக் காட்டிலும் பெரிய கொடுமை இந்த விஷயம் ஒரு கின்னஸ் ரெக்கார்டு என்பது ஒரு பெரிய கொடுமை. ஆதக் காட்டிலும் பெரிய கொடுமை
http://www.prideofindia.net/guiness.html வெப்சைட் இதை இந்தியாவின் பெருமையாக கருதுவது.

2.கலைஞரின் படங்களில் சரியான பாப்புலர் படம்.









3.அம்மா அய்யருக்கு வைச்ச ஆப்பு..."தைரியம் இருந்தா இங்க சொல்லுடா.."

ஸ்டேட்மென்ட் கலெக்க்ஷன்.

இந்த பகுதியில் பங்க்ஸ் நண்பர்களின் சொந்த பொன் மொழிகள் மற்றும் பல இடம் பெறும்.
1. ஜெயலலிதா மேல கேசா?(உலக்ஸ் ஊருக்கு சொன்னது)
2. ஒரு தனிப்பட்ட மனிதனை பற்றி அநாகரிமாக எந்த நாயும் சொல்லக்கூடாது(ராமசாமி ராமதாஸ் பற்றி)
3. நாங்கள் தனியாக நின்று ஜெயிக்க் கூடிய தொகுதிகள் 25. எங்கள் ஆதரவோடு ஜெயிக்க கூடிய தொகுதிகள் 40. மொத்ததில் 65 தொகுதிகளில் நாங்கள் தான் டிசைடிங் ஃவாக்டர். எனவே அ.தி.மு.க எங்களுக்கு 2 சீட் கொடுக்க வேண்டும்.(லத்திஃப் அ.தி.மு.க கூட்டணி பற்றி)
4. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அது கட்சியுனடைய கருத்தல்ல.(எல்லா கட்சிகளும்).
5. எனக்கும் பின்லாடனுக்கும் தொடர்பு இருக்கிறது.(வீரப்பனோடு தொடர்பு உண்டு என்ற ஜெயலலிதா குற்றச்சாட்டிற்கு கலைஞரின் பதில்).
6. நான் என்ன அவங்களோட வளர்ப்பு மகனா?(ஜெயலலிதாவுடன் இருப்பது தனிப்பட்ட விரோதமா? என்ற கேள்விக்கு கலைஞரின் பதில்)

Monday, November 07, 2005

சாணி அடிப்பவர்கள் இங்கே அடிக்கவும்.

பங்க்ஸ் ம்க்களே
உங்களுக்கும் எழுதுவதற்கு ஆசையாக இடுந்தால் களத்தில் குதியுங்கள். எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். உஙக்ளுக்கு ஒரு ஐடி உருவாக்கி தருகிறேன்.

விரைந்து வாருங்கள்.

நான் ஒரு முட்டாளுங்க

பந்தா பண்ணிக்கிட்டு பகல் வேசம் போட்டுகிட்டு
ப்ரொஜெக்ட பன்னாம ஊர்வம்பு பேசிக்கிட்டு
ஆணவத்தில் ஆடிக்கிட்டு அடிகுரலில் பேசிக்கிட்டு
அடுத்தவனை எல்லாம் அடிமட்டம் தடிக்கிட்டு

ஊருக்குல்ல பலபேரு திரியிரானுன்க, வெரும்
ஓபீ அடிச்சே பொலைக்கிரானுன்க
தானா எதயும் கிழிக்கமாட்டனுக
அட தள்ளியும் கூட படுக்கமாட்டனுக்

அடுத்தவன் ஏதாவது ஐடியா சொன்னா
அதுலஆயிரும் குறை கண்டுபிடிபானுன்க
அவிஙகிட்ட நாம ஏதும் உதவி கெட்டா சும்மா
அடியில ஒன்ன போட்டெ மிதிப்பானுன்க

இவனுஙக மத்தியில இத்தனகாலம் நான்
இருக்கிறதே பெரிய சாதனை தானுங்க
இவனுன்கெல்லாம் பெரிய புத்திசாலின்னா..............!!!!
.
.
.
.
.
.
நான் ஒரு முட்டாளுங்க!

என்ன ஆச்சு ஆயிரம் கோடி?

கடல் நீரை குடி நீரா மாத்துர திட்டம்னு ஒண்ணு போட்டாங்க... நம்மாளு கணக்குப்பிள்ளை சிதம்பரம் ஆயிரம் கோடி அறிவிச்சாரு.... கலைஞரும் அறிக்கை விட்டாரு நான் தான் காரணமுன்னு.. எங்கய்யா வந்துச்சு காசு?...

அம்மா ஆட்சி நடக்கிற வரைக்கும் ஸ்டேட் கவர்மெண்ட் திட்டத்துக்கு எல்லாம் காசு கொடுக்க வேணாம்னு தமிழர் தலைவர் சொல்லிட்டார்.
அதுனாலதான் சேது சமுத்திர திட்டம் மட்டும் தொடங்கிருச்சு. மத்த திட்டமெல்லாம் சும்மா கிடக்கு..இப்படியா தமிழனுக்கு நல்லது பண்ணாறாரு மஞ்ச துண்டு..

ஊரெல்லாம் மழையில முங்க சன் டீவிகு பயங்கர சந்தோஷம்.. இது தான் சாக்குண்ணு எல்லாத்தையும் வீடியொ எடுத்துட்டு அம்மா ஆட்சியில எல்லாம் முங்கிருச்சுண்ணு பில்ம் காட்டுது.இன்னும் கொஞ்சம் நாசம போயிருந்தா , இன்னும் நல்லா அம்மா ஆட்சிய திட்டலாமுன்னு இன்னும் கொஞ்சம் பெய்யாதன்னு பாத்திட்டு இருக்காங்க போல...


இந்த நல்ல ம்னுஷங்க பண்ணுரது போதாதுண்ணு தன் பங்குக்கு சேது சமுத்திர திட்டத்துக்கு என்வ்ரிரான்மெண்ட் க்ளியரென்ஸ் நிறுத்தி வைச்சிருக்கு பச்ச சேலை..


இப்படி ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு தமிழனுக்கு நல்லது பண்றாங்க..


இவ்வளவுக்கும் நடுவில தமிழன் கோகிலா எங்க போறான்னு பாத்துகிட்டு இருக்கான் ரொம்ப பொறுமையா.

Saturday, November 05, 2005

1 1 =2 ; Onnum Onnum Rendu

1 1 =2 ; Onnum Onnum Rendu

எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்?


நம்ம ஆட்கள் இலங்கைய போட்டு சட்னி ஆக்கிட்டு இருக்கும் போது பழய கேப்டன் கங்குலி ஜிம்பாப்வே போர்டு ப்ரெஸிடண்ட் டீமுக்கு எதிரா ஈஸ்ட் ஸோன் டீமை லீட் பண்ணுகிறார்...

நம்ம ஆட்கள் இலங்கைய போட்டு சட்னி ஆக்கிட்டு இருக்கும் போது பழய கேப்டன் கங்குலி ஜிம்பாப்வே போர்டு ப்ரெஸிடண்ட் டீமுக்கு எதிரா ஈஸ்ட் ஸோன் டீமை லீட் பண்ணுகிறார்...
எதிராளி நோஞ்சானா இருந்தான்னா தூக்கிப் போட்டு மிதிக்கிரது அதுவே நல்ல டீமா இருந்தா வாலை சுருட்டிக்கிட்டு பெவிலியன்ல போய் உக்கார்ரது... எலய் புதுசா எதவது பண்ணுங்கப்பா.


நட்வர் சிங் காசு அடிச்சுட்டாரு.... பதவிய விட்டு தூக்கு.. அப்படிண்ணு ராகம் பாடுது பி.ஜே.பி.. இவங்காளு கை நீட்டி காசு வாங்கினது வீடியாவில் வந்துச்சே ... அப்ப ஏன் இந்த ஆக்க்ஷன் எடுக்கல?


எல்லாம் ஏமாத்திர கூட்டம்... பேசாம திருப்பதி உண்டியல திறந்து நாட்டு ஏழை மக்களுக்கு அர்ப்பணம் செஞ்சிறன்ணும்...

Tuesday, November 01, 2005

என்ன நடக்கும் அடுத்த எலெக்ஷனில்?

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு - முன்னாடி நடத்தின பத்திரிக்கை. டைம் இல்லாம நின்னு போச்சு . இப்ப குக்ல் புண்ணியத்தில வெப்லய இதய்யைல்லாம் எழுத முடியுது.
தமிழ் நாட்டுல இப்ப அம்மா புண்ணியதுல எல்லாம் இலவச மயம். எல்லாம் தேர்தல் வரைக்கும்னு நமக்கு தெரியாதா?. ஆனா இந்த தடவை அம்மாவுக்கு எதிரா கூட்டணி பலமா இருக்கிற மாதிரி தோணுனாலும் ம்.ஜி.ர் ஜெயிச்சதை மறக்ககூடாது.
கூட்டணியை தக்க வச்சா கருணா நிதி ச்டாலினை முதல்வர் ஆக்குவாரு... இப்ப இந்த எலெக்க்ஷனை விட எதிர்காலம் அம்மாவுக்கு சாதகமா இருக்கு...
கலைஞருக்கு அப்புறமா வைகோவோ , ச்டாலினோ, வாசனோ அரசியல் பண்ண முடியாது.இவனுகளுக்கு மக்கள் ஆதரவு கிடையாது.
நாடு இருக்கிறா நிலமையில கூ த்தாடிபயல்க கூட ஜெயிக்கலாம்.
ஒரு புரட்சியும் பண்ணாம தலைவராகிற இந்த தருதலை பயல்கள்... இவனுகலடோ ரசிகர்கள் ஆட்சி அமைச்சா தமிழ் நாடு சட்டசபைல இன்டெர்வல் போட்டு முறுக்கு விக்கிறது எல்லாம் நடக்கும்.

திருப்பி ஆராம்பிச்சாச்சு...

ரொம்ப சாதரணமா கேப்டனை மாத்திட்டாங்க. டீமை விட்டு தூங்கிட்டாங்க. இனிமே கங்குலிக்கு கஷ்ட காலம் தான் போங்க. ஆனா இலங்கை டீம் ஆடற ஆட்டத்தை பாத்தா புது நாட்டாமை சாப்பல் வாழ்க்கை நிம்மதியா ஒடும் போல. ஏலய் ஜிம்பாப்வே பங்களாதேஷ் விட்டுட்டு உருப்படியா எதாவது டீமை ஜெயிககப் பாருங்க...

ந்ம்முர் மேட்டர் : புதுசா ஒரு கூத்தாடி பய கட்சி ஆரம்பிச்சானா.. மக்களுக்கு நல்லது பண்ணப் போறானாம்... ஏலய் நீங்க ஒண்ணும் ... டுஙக வேணாம்... சினிமா எடுக்காம இருஙக... நாடு தானா உருப்படும்.


பங்க்சு மக்களே...உங்களை இனிமே ப்லாக் மூலமா அறுக்கிறேன்.

Life In Montreal

மான்ட்ரியால் குளிரு தாஙகமுடியல சாமி. அப்படின்னு சொல்ல ஆசை. ஆனா இஙக அப்படி ஒன்னும் குளிர் இல்ல.