ஒரு ஊர்லெ ஒரு அம்மா அப்பா, அவிங்களுக்கு ஒரு வேல வெட்டி இல்லாத வயசு பையன். ஊட்டாண்ட ஒரு வயசான வேலக்கார அம்மா இருக்கு. அப்பனும் ஆத்தாளும் ஒரு வாரம் வெளியூர் போயிடுராங்க. அந்த நேரம் பார்த்து வேலகார அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமா போயிடுது. தன்னோட வயசு பொண்ண வேலைக்கு அனுப்புது. நம்ம வயசு பையனும்(தனுஷ்), வயசு பொண்ணும்(ப்ரியா மணி) 7 நாலு ஒரே வீட்டுல தனியா இருக்காங்க.......
ஹலோ!, நான் மருதம் கதை சொல்லவில்லை, இது நம்ம பாலு மகேந்திரா சாரோட கதை. தனுஸ் ஏற்கனவே தனக்கு தானே குழியை தோண்டி மூடிகொண்டவர் என்பது தெரியும், இப்படத்தின் மூலம் பாலு மூடின குழியின் மேல் ஒரு பாரங்கல்லை வைத்து விடுகிறார்.
தியேட்டரில் என்னோட சேத்து 4 பேரு இருந்தார்கள்! (நாலாவது ஆளின் கையில் டார்ச் லைட் இருந்தது!).
இந்த கதைய கேட்டுட்டு குஜால் படம் என்று நினைபவர்களுக்கு. அந்த 7 நாளும் என்ன நடந்ததுன்னு இப்ப, இப்ப சொல்கிறேன்!
பாரா 4
======
முதல் நாள் காலையில் 7 மணிக்கு காலிங் பெல் அடிக்கிறது, பிரியா மணி கதவை திறந்து பாலை எடுக்கிறார். கதவை திரும்பவும் சாத்துகிறார், மெதுவாக கிட்சனுக்கு செல்கிறார். கேஸ் பற்ற வைக்கிறார். சட்டியில் பாலை ஊத்துகிறார். ஹாலுக்கு வந்து தனுஷ் தூங்கும் அலங்கோலத்தை பார்கிறார். புன்னகை பூத்தபடி தனுஷின் அழுக்கு ஜீன்சை எடுக்கிறார். அழுக்கு டி-ஷர்ட்டை எடுத்து முகர்ந்து பார்கிறார். திடீரென்று பால் கொதிப்பது ஞாபகம் வருகிறது (வீட்டில் பால் கொதிக்க எவ்வளவு நேரம் ஆகுமொ, அதெ நேரம் படத்திலும் ஆகிறது!). ஓடி சென்று பாலை அப்படியெ தூக்கிகிறார். கை சுட்டு விடுகிறது. தன்ஷ் ஓடி வந்து பர்னால் போடுகிறார். இருவரும் காபி குடிக்கிறார்கள்.காலை டிபன் தோசை சாப்பிடுகிறார்கள்., மதியம் முருங்கை காய் சாம்பார் சாதம் சாபிடுகிறார்கள். சாயங்காலம் திரும்பவும் காபி குடிகிறார்கள், டின்னருக்கு காலையில் செய்த தோசையை, மதியம் செய்த முருங்கை காய் சாம்பாரில் தொட்டு சாப்பிடுகிறார்கள். இப்படியாக நைட் நைட் லாம்ப் போடும் வரை செல்கிறது முதல் நாள்.
அதற்குபின் விளக்கமாக "காட்டி" இருந்தால் பரவாயில்லை. திரும்பவும் மறுநாள் காலிங் பெல் அடிக்கிறது. இதன் பிறகு நான் சொன்னால் என்னை அடி போடுவீர்கள் என்பதால் ஒரு ப்ரொக்ராம் போட்டு விடுகிறேன்.
for i = 1 to 7
read பாரா 4
next
இந்த ப்ரொக்ராம் எக்ஸிக்கியூட் ஆகி முடியும் போது எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த இடை வேலை வந்து விடுகிறது. தியேட்டரில் இருந்த 4 பேரில் இரண்டு பேரை காண வில்லை!
இடைவேளைக்கு பிறகு தனுஷ் காதலியை தேடி ஊட்டிக்கு போகிறார்... போகிறார்... போயிகிட்டே இருக்கார்...... ஊட்டி ரோடு மேப் உங்ககிட்ட இல்லாட்டி இந்த படத்தை பாருங்க. ஊட்டிக்கு உங்கள நடந்தே அலைச்சிகிட்டு போறாங்க.அதற்குபின் வரும் அபத்தமான கிளைமாக்ஸ் பற்றி சொல்ல விரும்பவில்லை.
முடிவில் ஒரு விசயம். பாலு சார்,
நீங்க மூன்றாம் பிறை, மூடுபனி போன்ற அருமையான படங்களை எடுத்தவர் தான்.
"அது ஒரு பொற்காலம்".
ஆனால் இப்போதெல்லாம் முதல் இரண்டு ரீலிலேயெ ஹீரோ ஹீரோயினுக்கு
கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்து, கிளைமேக்ஸில் அப்பனும் மகனும்
சேந்து வில்லனை அடிக்கிறார்கள்.
இது ஒரு "பாஸ்ட் புட்" காலம்.
ஒங்களை குறை சொல்லவில்லை, ரசிகர்கள் மாறி விட்டர்கள்,
அது திரையுலகின் "போறாத" காலம்.
தலைப்பிற்கேற்ப, ரசிகர்கள் தியேட்டரில் தூங்கிவிடுவதால்
அது ஒரு "கனா" காலம்
2 comments:
படம் அருமையா,. அறுவையா என எனக்கு தெரியாது.. ஆனால் உங்களின் நக்கலை ரசித்தேன் .
;-)))
Post a Comment