Tuesday, November 15, 2005

"வெடி" காசி

சமீப காலமாக தமிழ் படங்களுக்கு கதை தேவையில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் முதன் முறையாக, படத்துக்கு டைரக்டரே தேவையில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் "வல்லரசு".

இப்படத்தினால் தீபாவளி பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கபட்டதாம்! ஏனென்றால் இப்படத்தின் CD'யை புல் வால்யும் வைத்து கேட்டாலெ ஒரு 10000 வாலா வெடித்த எபெக்ட் கிடைக்கிறதாம்,. அப்படி இறைச்சலில் நம்மை செவிடாக்குகிறார் தேவாவின் புதல்வர்.

உலக திரைபட வரிசையிலேயெ முதன் முறையாக, கதானயகனை காட்டும் முன்பெ அவன் செய்யும் தொழில் தெரிந்து விடுகிறது. கதானயகன் ஷ்ட்டரை வெல்டிங் கன் மூலமாக அறுத்து கொன்டு வெளிவருகிறார்!

டைரக்டர் பழமைவாதி என்பதற்காக "மனோகரா" லெவெலுக்கு போயிருக்க தேவையில்லை. படத்தின் பல காட்சிகள் 1978ஐ நினைவு படுத்துகின்றன. சில காட்சிகள் 1977ஐ நினைவு படுத்துகின்றன. பிரகாசமான ராஜ் அவர்கள் நன்றி கடனுக்காக பன்றியை விட கேவலமாக உபயோகபடுத்தபட்டுள்ளார்.

வழக்கம்போல ஒரு "எழுச்சி" ஊட்டும் டைட்டில் சாங்.(பாதி பேரு எழுந்து போய் விட்டதால்!). அட்லீஸ்ட் அதை இப்படி மாத்தி இருந்தால் மக்கள் உட்கார்ந்து பாத்து இருப்பார்கள்!

வாடா வாடா வாடா வாடா தோழா!
வந்து படத்த பாரு படத்த பாரு ரசிகா!
நீயும் கூட என் படத்த பாக்காட்டி
வேற எந்த நாயும் பாக்காதுடா ரசிகா!

ஒன்னோட உயர்வுக்கு ஒன்னொட வேர்வை
என்னோட உயர்வுக்கு "எங்கப்பனோட" வேர்வை
நம்ப எல்லாரோட வியர்வையும் ஒன்னா சேர்ந்தா...!
ஹை
ஹை
ஹை...

நாத்தம் தாங்காதுடா... மூக்க பொத்துங்கடா....
கோரஸ் : நாத்தம் தாங்காதுடா... மூக்க பொத்துங்கடா....

4 comments:

ஏஜண்ட் NJ said...

//ஒன்னோட உயர்வுக்கு ஒன்னொட வேர்வை//

This line tells the truth;
I agree with you.

Your blog is nice; visit my blog if you have time.

NambikkaiRAMA said...

படம் நல்லா ஓடுதுன்னுதான் கேள்வி பட்டேன். நீங்க இப்படி சொல்றீங்க ?

பாலசந்தர் கணேசன். said...

anparee,

padam nallaa ooduvathaRkum, nallaa iruppathaRkum viththiyaasam uLLathu enpathu en thaazmaiyaana karuththu, eninum thanggaL karuththukku nanRi.

பாலசந்தர் கணேசன். said...

அன்பரே,

படம் நல்லா ஓடுவதற்கும், நல்லா இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பது என் தாழ்மையான கருத்து, எனினும் தங்கள் கருத்துக்கு நன்றி.