Tuesday, March 28, 2006

இதற்கு மேல் ஏதேனும் ஒரு திருப்தி உண்டா?

பிறந்தால் அண்ணன் தம்பி தங்கைகளோடு பிறக்க வேண்டும். அது தான் உயர்ந்த சுகம். சிறு வயதில் ஒண்ணும் இல்லாத விஷயத்திற்கு எல்லாம் சண்டை போட்டு , வயது வளர ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது, கைடன்ஸ் கொடுப்பது என்று மாறுவது ஒரு அபாரமான அனுபவம்.
அக்கா, தங்கை திருமணம் ஆகி வெளியூர் சென்ற பின்னரும் நெருக்கம் அதிகமாத்தான் செய்த்ததே தவிர குறையவில்லை. படிப்பிற்காகவும், வேலைக்காகவும் பல இடங்கள் சென்ற பின்னரும், பல நெருக்கமான நண்பர்கள் இருந்த போதிலும், வாழ்க்கையில் முழுமையான திருப்தி என்பது ஒரு நல்ல குடும்பத்தில் தான் வருகிறது. என்னுடைய பெற்றொர்கள், சகோதர சகோதரிகள் எனக்கு ஒரு கனவு குடும்பத்தை கொடுத்திறுக்கிறார்கள்.
இந்த திருப்தி அனைவருக்கும் இருக்கும். முக்கியமாக இந்தியர்களுக்கு இருக்கும்.

2 comments:

Unknown said...

100% true Ganesan.Getting a good family is a boon given by god

VSK said...

இங்கே எங்கள் ஊரில்[அமெரிக்கா], இது போன்ற பதிவுக்கு, அண்ணன் -தம்பிகளுடன் பிறக்காத சில பேர், இப்பதிவின் மூலம் தங்கள் மனநிலையும் அமைதியும் பெரிதும் பாதிக்கப் பட்டதாகச் சொல்லி கேஸ் போட்டாலும் போடுவார்கள்!! :-)

நல்ல பதிவு!!

இல்லாதவர்களுக்கு என் அனுதாபங்கள்!