Saturday, March 11, 2006

வோட்டு போடுவதை கட்டாயம் ஆக்கினால் என்ன?

சென்ற முறை ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்து போட்டியிட்ட கட்சிகள் அனைத்தும் இந்த முறை கலைஞரோடு இணைந்து போட்டியிட போகின்றன. 5 வருடத்தில் மக்கள் வாழ்க்கை தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ இல்லையோ, அரசியலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கலைஞர் சென்ற முறை செய்த தவறு அனைத்து முக்கிய கட்சிகளையும் கழட்டி விட்டது. அதே தவறினை கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஜெயலலிதா செய்தார். விளைவு இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சரியான டிமாண்ட். வைகோ போனதினால் எந்த அளவிற்கு பாதிப்பு என்பது போக போக தெரியும். ஆனால் தற்போதைக்கு அது தி.மு.க விற்கு சீட் பிரிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்க்க உதவி செய்துள்ளது. கிட்ட தட்ட அணிகள் உறுதியாகி விட்ட நிலையில், இந்த தேர்தல் தமிழகத்தை எங்கே கொண்டு செல்லும்?
வைகோ ஆனந்த விகடனில் கொடுத்த பேட்டியில் என்ன சொல்லியுள்ளார் பாருங்கள். ஒரு இயக்கம் வளர்ச்சி காணவேண்டுமாம். அப்போது தான் கொள்கையை பரப்ப முடியுமாம். அதனால் கொள்கையை கை விட்டு வளர்ச்சி அடைவார்களாம். அதன் பின்னர் கொள்கையை பரப்புவார்களாம். வைகோ ஜெயலலிதா, கலைஞருக்கு மாற்றான தலைவர் அல்ல. அவர்களை காட்டிலும் மோசமானாவர் என்பதை இது காட்டுகிறது.
வளர்ச்சிக்காக கொள்கையை விடுவது. பின்னர் கொள்கையை பரப்புவது என்பது ஒரு போதும் நடவாத ஒன்று. தற்போது 35 சீட்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்த வளர்ச்சி மட்டும் இவர்களுக்கு போதுமா? ஒரு போதும் இல்லை. அடுத்த முறை 70 வேண்டும் என்பார்கள். அதற்கு அடுத்த ஆளுங்கட்சியாக வேண்டும் என்பார்கள். ஆளுங்கட்சி ஆன பின்னர் அதை தக்கவைப்பதிலேயே கவனம் போய் விடும். கொள்கை நிரந்தரமாக மறக்க பட்டு விடும். இதற்காக அரசியல் தலைவர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. என்னுடைய முந்தய பதிவு சுதந்திர நாட்டின் அடிமைகள் காண்க.
இந்த தேர்தல் தமிழகத்தின் மோசமான அரசியல் மாற்றங்களை கொண்டு வர போகிறதோ? இரண்டு கட்சிகளுக்கிடேயே உள்ள பகைமை உச்சகட்டத்தில் இருக்கின்ற நிலையை மற்ற சாதா குட்டி கட்சிகள் எக்ஸ்ப்ளாயிட் செய்கின்றன. இரண்டு தேர்தல்கள் அனைத்து கட்சியும் தனித்து போட்டியிட்டால் இந்த குட்டி கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விடும். நடந்து முடிந்த தி.மு.க மாநாட்டில் கவனிக்க பட வேண்டிய ஒன்று ஸ்டாலின் முன்னிறுத்த பட்டாலும் அத்தைகைய வலிமை தலைவர் பதவிக்கு தேவையான வலிமை அவருக்கு உள்ளதா என்பது. தி.மு.க தெளிவாகவே கலைஞரை தான் இன்னமும் நம்பி இருக்கிறது. கலைஞருக்கு அப்புறம் உள்ள சூழ்நிலை இதை காட்டிலும் மோசமாகவே இருக்கும். வைகோ அணி மாறிவிட்ட நிலையில் இனிமேல் தி.மு.க தொண்டர்களை ஈர்ப்பாரா?
இரண்டு கட்சிகளின் சண்டையில் , மற்ற கட்சிகள் பிடி இறுகுகின்றது. ஏற்கனவே பா.ம.க. ஒரு 30 சீட் கட்சியாக வளர்ந்து விட்டது. இந்த தேர்தலோடு ம.தி.மு.கவும் அந்த இடத்தை பிடித்து விட்டது. ராமதாஸ் ஏற்கனவே வன்முறையாளராக காட்சி அளிக்கிறார். வைகோ கொள்கை என்பது வளர்ச்சிக்காக கை விட பட வேண்டிய ஒன்று என்பதில் தெளிவாகி விட்டார். தமிழகத்தின் 2011 தற்போதைய நிலைமையை விட மோசமாக இருக்கும் மக்கள் 100 சதவிகிதம் ஒட்டு போடுவதே இந்த நல்ல எதிர்காலத்தை கொண்டு வரும். வோட்டு போடுவதை கட்டாயம் ஆக்கினால் என்ன?

3 comments:

VSK said...

ஏதோ இந்த இரண்டு கழகங்களுக்கும் 'கொள்கை' என்று ஒன்று இருக்கிறது போலவும், அவர்களிடம் 'வன்முறை' என்பதே கிடையாது என்பது போலவும் நீங்கள் 'கருப்பு-வெள்ளை'யில் [படிக்க ரொம்பவும் கஷ்டமாக இருந்தது!] எழுதி இருப்பதைக் கண்டு, சிரிப்பதா, இல்லை அழுவதா என்று புரியவில்லை.

தைரியமாக, இந்த 'கழக' ஆட்சிகளுக்கு ஒரு முடிவு கட்டவாவது, இந்த இரண்டு கூட்டணியையும் தவிர்த்து வேறு எந்த கட்சி/கூட்டணிக்கு ஓட்டளிப்பதே சரியான தீர்வாய் இருக்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன்.

தமிழக மக்கள் இந்த முறை ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என ஆண்டவனை வேண்டுகிறேன்!

பாலசந்தர் கணேசன். said...

அன்புள்ள எஸ்.கே அவர்களே,
உங்களுடைய கருத்துக்கள் நியாயமானவை. ஆனால் நடைமுறையானவை அல்ல. இரண்டு கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி வைக்கின்ற கட்சிகள் இவர்களுக்கு மாற்று அல்ல. இவர்களை விட மட்டமானவை.
வைகோ கூறுவதை பாருங்கள். வளர்ச்சிக்காக கொள்கையை கை விடுகிறாராம். 35 சீட் வளர்ச்சி இவர்களுக்கு போதுமா? மீண்டும் அதிகமாக வளர முயல்வார்கள். கொள்கை ஒட்டு மொத்தமாக கை விட பட்டது. இந்த கட்சிகளுக்கு மாற்று இந்த தேர்தலில் வராது. ஆசை என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. நீங்கள் நல்ல கருத்துக்களை, ஆசைகளை வெளி படுத்தியுள்ளீர்கள். ஆனால் என்னுடைய கருத்து நடைமுறையான ஒன்று. இரண்டு கழகங்கள் இங்கு உள்ள கட்சிகளை விட எவ்வளவோ மேல். ஜெயலலிதா,கலைஞர் இரண்டு பேரும் மற்ற தலைவர்களை விட எவ்வளவோ மேல். இது தான் உண்மை.

VSK said...

தமிழகத்தில் இதுவரை இருந்த முதலமைச்சர்கள்:
ராஜாஜி
ஓமந்தூரார்
காமராஜ்
பக்தவத்சலம்
அண்ணதுரை
கலைஞர்
செல்வி
பன்னீர்செலவம்

இவர்களில், நீங்கள் குறிப்பிட்ட 'இருவரை'த் தவிர, வேறு யார் மீதாவது 'பெருமளவில்' [பக்தவத்சலம் இதில் இருப்பதால்] ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டா?

எப்படி இவர்கள் சிறந்தவர்கள் எனக் கூறுகிறீர்கள்?

இப்போது இருக்கும் தலைவர்கள் என சப்பைக்கட்டு கூறுவீர்களே ஆனால், விஜய்காந்த் மேல் , இல. கணேசன் மேல், என்ன பழி சுமத்த முடியும்?

நடைமுறைக்கு ஒவ்வாது என முடிவு செய்ய நீங்களும் நானும் யார்?

முடிவு செய்ய வேண்டியது தமிழக மக்கள்தான்!

அவர்களுக்கு அறைகூவல் நான் விடுப்பதை எப்படி நீங்கள் ஒவ்வாததுஎனக் கூற இயலும்?