Sunday, March 05, 2006

ராமதாஸின் மதிப்பு பெரிதும் உயர்ந்தது.

தாவுவதில் வல்லவரான ராமதாஸ் மீது தி.மு.க காரர்களுக்கு எப்போதும் ஒரு சந்தேகம், கோபம் இருக்கும். ஆனால் இப்போது அவர்களே ராமதாஸ் எவ்வளவோ மேல் என்று நினைக்கும் வண்ணம் அவர்களிடம் கெட்ட பெயர் மற்றும் கோபம் சம்பாதித்து விட்டார் வைகோ.

ஜெயலலிதாவோடு அவர் நிற்பதை பார்க்கும் போது, மிக கஷ்டபட்டு முகத்தில் உணர்வுகளை மறைத்து கொண்டு சிரிப்பதை பார்க்கும் போது நமக்கே தர்ம சங்கடமாக உள்ளது. மேடைக்கு மேடை சுயமரியாதை பற்றி முழங்கும் வைகோ, சுதந்திர உணர்வினை பற்றி குரல் கொடுக்கும் வைகோ, உயரம் தாழ்ந்து தரம் குறைந்து நிற்கிறார். மிகுந்த மெல்லிய குரலில் அரசியல் கூட்டணி கொள்கை ரீதியானது அல்ல, தொகுதிகள் ரீதியானது என்கிறார். ஏற்கனவே அவர் ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தவரே.


சென்ற தேர்தலிலும் அவர் தனித்து போட்டியிட்டது அவருக்கு உதவாவிட்டாலும், ஜெயலலிதாவிற்கு சாதகமாகவே முடிந்தது. காங்கிரஸ், பா.ம.க மற்றும் கம்யூனிஸ்ட்கள் இல்லாததால் தி.மு.க. வைகோ இழப்பினால் பாதிக்க பட்டது. ஆனால் இந்த முறை வைகோ வெளியேறுவது மற்ற கட்சிகளால் சமன்பட்டு செய்யபட்டு விடும். அணி மாறியதால் வைகோ பெற்றதை விட இழப்பதே அதிகம். ஒரு விதத்தில் தி.மு.க. அணியில் உள்ள சீட் பிரிக்கும் சிக்கலை வைகோ தீர்த்து வைத்துள்ளார். கண்டிப்பாக தோல்வி அடைந்தால் ஜெயலலிதாவோ, கலைஞரோ சட்டசபைக்கு வரமாட்டார்கள். அதனால் சட்டமன்றத்தில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று நினைக்கிறாரோ வைகோ.

என்ன காரணங்கள் அவர் மனதில் அணி மாறுவதை தூண்டினவோ?

நேற்றும் ஆதரித்தேன் , இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று முழங்கியவர் இன்று காட்டும் பவ்யத்தை பாருங்கள். எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்.

ஜெயலலிதாவிற்கு ஒரு ராசி அவரை மிக கடுமையாக எதிர்த்தவர்கள் எல்லோரும் இறுதியில் அவரிடம் கும்பிடு போடுவது, புகழ்வது. இதற்கு ஆர்.எம்.வீ, ரஜினி, பி.எச்.பாண்டியன், வைகோ என்று பல நபர்களை உதாரணமாக சொல்லலாம்.

நாங்கள் பா.ம.கவை விட பெரிய கட்சி என்று முழங்கிய இவர்கள் இன்று பா.ம.கவிற்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துள்ளனர். ராமதாசு எவ்வளவு உழைத்தாலும் இந்த நல்ல பெயர் இவருக்கு கிடைத்திருக்காது. இன்று தி.மு.க வின் மிக பெரிய எதிரி : வைகோ.

5 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

vaiko vin mudivu namakku pidikkamal irukkalam.anal thalaivar enra nilayil katchiyai kappatrum kattayam avarukku ulladhe. koottani vaitha endha katchi valarndhdhu-- pmk thavira?
dmk enraikkum yaraiyum veliyetradhu.anal vittal podhum enru odividum nilayai mattume uruvakkum

நற்கீரன் said...

தமிழக கட்சிகளின் உங்கள் பட்டியலை பார்த்தேன்(prior post). பல பரவலாக அறியப்படாத கட்சிகளை பற்றி எல்லாம் பட்டியலிட்டுருக்கின்றீர்கள். அவைகளைப்பற்றி தமிழ் விக்கிபீடியாவில் சிறு குறிப்பு/கட்டுரை எழுதினால் மிகவும் உதவியாக இருக்கும். தமிழ் விக்கிபீடியாவில் தொகுப்பது தொடர்பாக எந்த கேள்விகளையும் அங்கேயோ அல்லது எனக்கோ பகிர்ந்தால் இயன்றவரை உதவ
முயற்சிப்போம். நன்றி.
http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு மாநிலத் தேர்தல், 2006

krishjapan said...

Remember Milk woman story: Mother who gave waterised milk and got bad name told her daughter at her death bed that she wants her daughter to give good name to her. Daughter gave it very simply. How? She gave much more waterised milk and people started telling - her mother was much better compared to her daughter!!?

கொழுவி said...

ம்.
ஜெயலலிதாவுக்கும் வை.கோவுக்கும் என்ன பகை?
ஒன்றுமில்லை. வை.கோ.வின் விடுதலைப்புலி ஆதரவுதான் ஜெவுக்குப்பிரச்சினை. மற்றும்படி வை.கோவுக்கு எதிராகவோ மதிமுக வுக்கு எதிராகவோ ஜெவுக்கு பிரச்சினையில்லை.
ஆனால் கருணாநிதிக்கு?
வை.கோ என்ற தனிநபர் மீதும் மதிமுக என்ற கட்சிமீதும் தீராத வெறுப்பு. எப்படியும் வை.கோவையும் மதிமுகவையும் ஒழித்துக்கட்டவோ சிறுமைப்படுத்தவோ தான் கலைஞர் முயல்கிறார்.
இந்த நிலையில் என்ன கொள்கை வேண்டிக்கிடக்கிறது?
எப்படி கொள்கை ரீதியில் வை.கோ. திமுகவுடன் இருக்க முடியும்?
கருணாநதி வை.கோவுக்குச் செய்ததைவிடவோ செய்துகொண்டிருப்பதை விடவோ ஜெயலலிதா அதிக கொடுமையேதும் செய்துவிடவில்லை. அதுதான் உண்மை.

தன்னையும் தன் கட்சியையும் அழிக்க நினைக்கும் ஒருவருடன் கூட்டணி வைத்து அவருக்காக உழைப்பதைவிட வை.கோ எடுத்த முடிவு சரியானதே.
உங்கள் பதிவுகளிலிருந்து தெரிவதெல்லாம், உங்களுக்கும் கருணாநதிபோல வை.கோ மீது தனிப்பட்ட வெறுப்பு. ஜெ.வைப்போல விடுதலைப்புலிகள் மீது வெறுப்பு.

krishjapan said...

Kozuvi.. I dont understand whats that which MK did. U know, afte Murasoli Maran, only Vaiko got 18 years of Rajyasabha M.P post, nominated by MK. Also, when Vaiko ws inside Vellore jail (taking rest as rightly pointed out by Kalimuthu), he made a blunder of telling that he wont come out in Bail. Nobody cared, not even his own caders (as evidenced by the total forget of their leaders 19 months of hardship in Jail and asking VaiKo to Align with JJ). SO, to come out on bail, he needed a face saving formula. MK, though he did to reap the harvest of his Jail term, bailed him out. Vaiko came out telling that MK wanted him to do and he did accordingly. At that many of second rank leaders of DMK, told MK to leave VaiKo alone and he will become spent force - cant align with JJ as she only put him inside and nobody to align but for small parties. But, MK refused to take that and forced him to come out with a face saving formula.